பெத்துயேலின் மகன் யோயேலுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை: அப் 2:16எரே 1:22 பேது 1:21எசேக் 1:3ஓசி 1:1
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு
முதியோரே, இதைக் கேளுங்கள்; யோவே 2:2ஓசி 5:1எரே 30:7யோபு 8:8ஆமோ 3:1ஆமோ 4:1ஆமோ 5:1தானி 12:1
நாட்டில் வாழ்கிறவர்களே, எல்லோரும் செவிகொடுங்கள்.
உங்கள் நாட்களிலோ அல்லது உங்கள் முற்பிதாக்களின் நாட்களிலோ,
இதுபோன்று ஒன்று எப்பொழுதாவது நிகழ்ந்ததுண்டோ?
இதை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்; உபா 6:7சங் 145:4சங் 71:18யாத் 13:14சங் 78:3-8யாத் 10:1-2ஏசா 38:19யோசு 4:21-22
உங்கள் பிள்ளைகள் அதைத் தங்கள் பிள்ளைகளுக்கும்,
அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் அதைச் சொல்லட்டும்.
பச்சைப்புழு விட்டதை, யோவே 2:25ஆமோ 4:9ஆமோ 7:1சங் 78:46உபா 28:38யாத் 10:4ஏசா 33:4சங் 105:34
இளம் வெட்டுக்கிளிகள் தின்றன;
இளம் வெட்டுக்கிளிகள் விட்டதை,
துள்ளும் வெட்டுக்கிளிகள் தின்றன;
துள்ளும் வெட்டுக்கிளிகள் விட்டதை,
வளர்ந்த வெட்டுக்கிளிகள் தின்றன.
குடிவெறியர்களே, விழித்து அழுங்கள்; யாக் 5:1லூக் 21:34-36ஏசா 32:10-12ஆமோ 6:3-7ஏசா 24:7-11எரே 4:8எசேக் 30:2யோவே 1:11
திராட்சை இரசம் குடிப்போரே, நீங்கள் எல்லோரும்
இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்;
ஏனெனில் அது உங்கள் வாயிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
வலிமைமிக்கதும் எண்ணற்றதுமான யோவே 2:25ஏசா 8:8யோவே 2:2-11நீதி 30:14வெளி 9:7-10ஓசி 9:3ஏசா 32:13நீதி 30:25-27
வெட்டுக்கிளிக் கூட்டம் இராணுவம்போல் என் நாட்டின்மேல் படையெடுத்தது.
அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்;
பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்களும் அதற்கு உண்டு.
அது என் திராட்சைக்கொடியைப் பாழாக்கி, ஆமோ 4:9ஏசா 5:6யோவே 1:12யாத் 10:15ஆப 3:17ஓசி 2:12ஏசா 24:7எரே 8:13
என் அத்திமரங்களையும் அழித்துப்போட்டது.
அது அவற்றின் பட்டைகளை
உரித்து எறிந்தது,
அதன் கிளைகள் வெளிறிப் போய்விட்டது.
தன் வாலிப வயதின் கணவனுக்காக துக்கவுடை உடுத்தி ஏசா 22:12மல்கி 2:15யாக் 5:1ஆமோ 8:10ஏசா 24:7-12ஏசா 32:11யாக் 4:8-9எரே 3:4
அழுது புலம்பும் இளம்பெண்ணைப்போல் கதறி அழுங்கள்.
தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் யோவே 2:14யோவே 2:17ஓசி 9:4யோவே 1:13ஏசா 61:6புலம் 1:162 நாளாக 13:10யோவே 1:16
யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து அகன்று போயின.
யெகோவாவுக்குமுன் ஊழியம் செய்கிற ஆசாரியர்கள்
புலம்பி அழுகிறார்கள்.
வயல்வெளிகள் பாழாயின, ஓசி 4:3ஓசி 9:2எரே 12:11யோவே 1:5ஆகா 1:11எரே 12:4எரே 14:2-6எரே 48:33
நிலமும் உலர்ந்துபோயிற்று;
தானியம் அழிந்தது,
புது திராட்சை இரசம் வற்றிப்போயிற்று;
எண்ணெயும் குறைவுபடுகிறது.
விவசாயிகளே, கலங்குங்கள், எரே 14:3-4ஏசா 17:11எரே 9:12ஆமோ 5:16ரோம 5:5
திராட்சைத் தோட்டக்காரரே, புலம்புங்கள்;
கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று;
ஏனெனில் வயலின் விளைச்சல் அழிந்துபோயிற்று.
திராட்சைக்கொடி உலர்ந்துபோயிற்று, ஏசா 16:10ஏசா 24:11ஆப 3:17-18ஓசி 9:1-2யோவே 1:10யோவே 1:16உன்னத 2:3ஆகா 2:19
அத்திமரம் வாடிப்போயிற்று.
மாதுளையும், பேரீச்சையும்,
ஆப்பிள் மரங்களுமான வயல்வெளியின்
எல்லா மரங்களும் வதங்கிப்போயிற்று;
மனுமக்களின் மகிழ்ச்சி மறைந்துபோயிற்று.
மனந்திரும்புதலுக்கு அழைப்பு
ஆசாரியர்களே, துக்கவுடை உடுத்திப் புலம்புங்கள்; எரே 4:8யோவே 1:8-91 இராஜா 21:27எசேக் 7:18எரே 9:10யோவே 2:17யோனா 3:5-81 கொரி 4:1
பலிபீடத்தின்முன் பணி செய்வோரே, அழுங்கள்;
என் இறைவனின்முன் ஊழியம் செய்வோரே,
வாருங்கள், வந்து துக்கவுடை உடுத்தி இரவைக் கழியுங்கள்.
ஏனெனில் உங்கள் இறைவனது ஆலயத்திலிருந்து
தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.
பரிசுத்த உபவாசத்தை நியமியுங்கள்; யோவே 2:15-162 நாளாக 20:132 நாளாக 20:3-4உபா 29:10-11யோனா 3:8லேவி 23:36நெகே 9:2-3நெகே 8:18
பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள்.
முதியோரையும்,
நாட்டில் வாழும் அனைவரையும்
உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்கு அழைப்பித்து,
யெகோவாவை நோக்கிக் கதறுங்கள்.
அது எவ்வளவு பயங்கரமான நாள், ஏசா 13:6-9எரே 30:7செப்ப 1:14-18எசேக் 7:2-12யாக் 5:9யோவே 2:11யோவே 2:31வெளி 6:17
யெகோவாவின் நாள் நெருங்கி வந்திருக்கிறது;
அது எல்லாம் வல்லவரிடமிருந்து ஒரு அழிவுபோல் வரும்.
எங்கள் கண்களுக்கு முன்பாகவே உபா 12:6-7சங் 105:3சங் 43:4ஆமோ 4:6-7உபா 12:11-12உபா 16:10-15ஏசா 3:7ஏசா 62:8-9
உணவும்,
நம் இறைவனின் ஆலயத்திலிருந்து
மகிழ்ச்சியும் சந்தோஷமும் அகற்றப்படவில்லையோ?
மண்கட்டிகளின் அடியில் ஆதி 23:16ஏசா 17:10-11
விதைகள் காய்ந்து போயிருக்கின்றன.
தானியம் அற்றுப்போனதால்
பண்டகசாலைகள் பாழாகி,
தானிய களஞ்சியங்கள் இடிந்துபோயின.
வளர்ப்பு மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கின்றன; ஓசி 4:3எரே 12:4எரே 14:5-61 இராஜா 18:5யோவே 1:20ரோம 8:22
மாட்டு மந்தைகள் மேய்ச்சலின்றி
கலங்குகின்றன;
செம்மறியாட்டு மந்தைகளுங்கூட கஷ்டப்படுகின்றன.
யெகோவாவே, உம்மையே நோக்கி நான் கதறுகிறேன், எரே 9:10சங் 50:15ஆமோ 7:4மீகா 7:7ஆப 3:17-18யோவே 2:3லூக் 18:7சங் 91:15
ஏனெனில் வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது;
வயல்வெளியின் மரங்கள் அனைத்தையும் நெருப்புச் சுவாலைகள் எரித்துப்போட்டன.
காட்டு விலங்குகளுங்கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன; சங் 104:211 இராஜா 17:71 இராஜா 18:5யோபு 38:41சங் 145:15சங் 147:9
நீரோடைகள் வற்றிப்போய்விட்டன,
வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது.