ஏசாயா 12

Isaiah 12

துதியின் கீதங்கள்

அந்த நாளிலே நீ: சங் 30:5ஏசா 25:1ஏசா 54:8சகரி 14:9ஓசி 6:1ஏசா 40:1-2ஏசா 14:3ஏசா 27:1-3

“யெகோவாவே உம்மைத் துதிப்பேன்.

என்னில் கோபமாயிருந்தபோதிலும்,

உமது கோபம் தணிந்து

என்னைத் தேற்றியிருக்கிறீர்.

நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு; யாத் 15:2சங் 118:14சங் 27:1வெளி 7:10ஏசா 26:3-4யோனா 2:9ஏசா 45:17ஏசா 45:22-25

நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்.

யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்;

அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்” என்று சொல்வாய்.

நீ இரட்சிப்பின் கிணறுகளிலிருந்து வெளி 22:1வெளி 22:17எரே 2:13யோவா 4:10-14வெளி 7:17ஏசா 55:1-3யோவா 7:37-39ஏசா 49:10

மகிழ்வுடன் தண்ணீரை மொண்டுகொள்ளுவாய்.

அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது: சங் 105:1சங் 145:4-61 நாளாக 29:11யோவா 17:26சங் 117:1-2பிலி 2:9-11யாத் 15:2யாத் 33:19

“யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்;

அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள்,

அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள்.

யெகோவா மகிமையான காரியங்களைச் செய்தபடியால் அவரைப் போற்றிப்பாடுங்கள்; சங் 98:1யாத் 15:1ஆப 2:14யாத் 15:21ஏசா 40:9வெளி 15:3வெளி 19:1-3சங் 105:2

உலகம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படட்டும்.

சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; சகரி 2:10-11சகரி 2:5சங் 9:11செப்ப 3:14-17ஏசா 41:14எசேக் 48:35ஏசா 40:9ஏசா 41:16

ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர்

மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.”