சங்கீதங்கள் 61

Psalms 61
சங்கீதம் 61

கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

என் இறைவனே, என் கதறுதலைக் கேளும், பிலி 4:6சங் 4:1சங் 86:6சங் 130:2சங் 55:1-2சங் 17:1சங் 28:2சங் 5:1-3

என் மன்றாட்டுக்குச் செவிகொடும்.

பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; சங் 18:2சங் 139:9-10ஏசா 32:2சங் 62:6உபா 4:29சங் 62:2சங் 77:3சங் 18:46

என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்;

என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும்.

நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்; நீதி 18:10சங் 62:7சங் 116:2சங் 140:7சங் 18:22 கொரி 1:10ஏசா 46:3-4சங் 4:6-7

பகைவருக்கு எதிரான பலமுள்ள கோபுரமாய் இருக்கிறீர்.

நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்; சங் 23:6சங் 17:8சங் 27:4சங் 91:4சங் 15:1சங் 57:1சங் 63:7ரூத் 2:12

உமது சிறகுகளின் அடைக்கலத்தில் தஞ்சமடைவேன்.

இறைவனே, நீர் என் நேர்த்திக்கடன்களைக் கேட்டிருக்கிறீர்; மல்கி 3:16-18சங் 56:12சங் 115:13சங் 86:11அப் 10:35சங் 16:5-6சங் 65:1சங் 66:19

உமது பெயருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரிய உரிமைச்சொத்தை

நீர் எனக்குத் தந்திருக்கிறீர்.

அரசனின் வாழ்நாட்களை அதிகமாக்கும்; சங் 21:4சங் 89:36-37சங் 21:6ஏசா 53:10சங் 72:15-17

அவனுடைய வருடங்களை தலைமுறை தலைமுறைகளாக அதிகமாக்கும்.

இறைவனின் சமுகத்தில் அவன் என்றைக்கும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பானாக; சங் 40:11ஆதி 24:27ஏசா 9:6-7லூக் 1:33சங் 41:12சங் 57:3எபி 9:24லூக் 1:54-55

அவனைப் பாதுகாப்பதற்காக உமது உடன்படிக்கையின் அன்பையும்

உண்மையையும் நியமித்தருளும்.

அப்பொழுது நான் என்றென்றைக்கும் உமது பெயருக்குத் துதி பாடுவேன்; சங் 65:1சங் 145:1-2சங் 66:13-16சங் 71:22சங் 79:13சங் 146:2சங் 30:12

நாள்தோறும் எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.