ஏசாயா 49

Isaiah 49

யெகோவாவின் ஊழியன்

தீவுகளே, நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; எரே 1:5கலா 1:15ஏசா 44:2ஏசா 49:5லூக் 1:311 பேது 1:20லூக் 2:10-11மத் 1:20-21

தூரத்திலுள்ள நாடுகளே, நீங்கள் இதைக் கேளுங்கள்:

நான் கர்ப்பத்திலிருந்தபோதே யெகோவா என்னை அழைத்தார்;

என் தாயின் வயிற்றில் இருக்கும்போதே என் பெயரைச் சொல்லி கூப்பிட்டார்.

அவர் எனது வாயை ஒரு கூரிய வாளைப்போல் ஆக்கினார், எபி 4:12வெளி 1:16ஏசா 50:4வெளி 2:12ஏசா 11:4ஏசா 51:16எரே 1:18சங் 91:1

தமது கரத்தின் நிழலிலே என்னை மறைத்தார்;

என்னைக் கூர்மையான அம்பாக்கி,

தமது அம்பாறத் துணியில் மறைத்து வைத்தார்.

“இஸ்ரயேலே, நீ என் ஊழியக்காரன், ஏசா 42:11 பேது 2:9ஏசா 44:23ஏசா 52:13யோவா 17:1யோவா 17:4சகரி 3:8ஏசா 53:10

எனது சிறப்பை உன்னிலே வெளிப்படுத்துவேன்” என்று அவர் என்னிடம் சொன்னார்.

ஆனால் நானோ, “வீணாக உழைக்கிறேன்; ஏசா 35:4கலா 4:112 கொரி 12:152 கொரி 2:15எசேக் 3:19ஏசா 40:10ஏசா 53:10-12ஏசா 62:11

எனது பெலனை பயனற்றவற்றிற்கும் வீணானவற்றிற்கும் செலவழிக்கிறேன்.

அப்படியிருந்தும், எனக்குரியது யெகோவாவின் கையிலே இருக்கிறது;

என்னுடைய வெகுமதியும் எனது இறைவனிடமே இருக்கிறது” என்றேன்.

இப்பொழுது யெகோவா சொல்வதாவது: யோவா 3:35மத் 17:51 பேது 3:22மத் 28:18ரோம 15:81 தெச 2:15-16எபே 1:20-22ஏசா 11:12

யாக்கோபைத் தன்னிடம் திரும்பக் கொண்டுவரும்படியாகவும்,

இஸ்ரயேலர்களைத் தன்னிடம் கூட்டிச் சேர்க்கும்படியாகவும்

அவருடைய பணியாளனாய் இருக்கும்படி என்னைக் கருப்பையில் உருவாக்கியவர் அவரே.

யெகோவாவினுடைய பார்வையில் நான் கனம் பெற்றேன்;

என் இறைவனே என் பெலனாயிருக்கிறார்.

அவர் சொல்வதாவது: அப் 13:47ஏசா 42:6லூக் 2:32சங் 98:2-3ஏசா 52:10ஏசா 60:3லூக் 24:46-47அப் 26:18

“யாக்கோபின் கோத்திரங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்காகவும்,

இஸ்ரயேலில் நான் மீதியாக வைத்திருப்பவர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்காகவும்,

நீர் மட்டும் பணியாளனாய் இருப்பது போதுமானதல்லவே.

ஆகவே நான் உம்மைப் பிற நாட்டு மக்களுக்கும் ஒரு வெளிச்சமாக ஏற்படுத்துவேன்;

எனவே நீர் பூமியின் கடைசியில் இருக்கிறவர்களுக்கெல்லாம்

என் இரட்சிப்பைக் கொண்டுவருவீர்” என்கிறார்.

இஸ்ரயேலரின் பரிசுத்தரும், மீட்பருமான யெகோவா சொல்வது இதுவே: 1 பேது 2:4ஏசா 53:3மத் 26:67ஏசா 48:17சங் 22:6-8சங் 72:10-11ஏசா 49:23ஏசா 49:1

அவமதிக்கப்பட்டு, நாடுகளால் அருவருக்கப்பட்டு,

ஆட்சியாளர்களுக்கு அடிமையாய் இருந்த உனக்குச் சொல்வதாவது,

“அரசர்கள் உன்னைக் காணும்போது அவர்கள் எழுந்து நிற்பார்கள்,

பிரபுக்கள் உன்னைக் கண்டு வணங்குவார்கள்;

யெகோவா உண்மையுள்ளவராய் இருப்பதாலும்,

இஸ்ரயேலின் பரிசுத்தர் உன்னைத் தெரிந்துகொண்டதினாலும்

அவர்கள் இப்படிச் செய்வார்கள்.”

இஸ்ரயேல் புதுப்பிக்கப்படுதல்

யெகோவா சொல்வது இதுவே: 2 கொரி 6:2ஏசா 42:6சங் 69:13எபி 12:24ஏசா 61:4ஏசா 58:12எபே 2:12-19எபி 5:7

“என் தயவின் காலத்திலே நான் உங்களுக்குப் பதிலளிப்பேன்,

இரட்சிப்பின் நாளில் நான் உங்களுக்கு உதவி செய்வேன்;

நான் உங்களைப் பாதுகாத்து,

மக்களிடையே நீங்கள் ஒரு உடன்படிக்கையாக இருக்கும்படி நான் உங்களை ஏற்படுத்துவேன்.

நாட்டைப் புதுப்பித்து பழைய நிலைக்குக் கொண்டுவரவும்,

பாழடைந்த உரிமைச் சொத்துக்களைத் திரும்ப ஒப்படைக்கவும்,

சிறைப்பட்டிருக்கிறவர்களைப் பார்த்து, 1 பேது 2:9ஏசா 42:16ஏசா 42:7லூக் 4:18ஏசா 61:1ஏசா 9:2சங் 102:20சங் 69:33

‘புறப்பட்டுப் போங்கள்’ என்று சொல்லவும்,

இருளில் உள்ளவர்களைப் பார்த்து, ‘வெளிப்படுங்கள்!’

என்றும் சொல்லவும் இப்படிச் செய்வேன்.

“வீதிகளின் ஓரங்களில் அவர்கள் மேய்வார்கள்;

வறண்ட குன்றுகள் ஒவ்வொன்றிலும் அவர்கள் மேய்ச்சல் நிலத்தைக் காண்பார்கள்.

அவர்கள் பசியடைவதுமில்லை, தாகங்கொள்வதுமில்லை; வெளி 7:16-17மத் 5:6எசேக் 34:23ஏசா 33:16சங் 121:5-6ஏசா 40:11எரே 31:9யோவா 10:3-4

பாலைவன வெப்பமோ, வெயிலோ அவர்களைத் தாக்காது.

அவர்கள்மேல் இரக்கமாயிருக்கிறவரே அவர்களுக்கு வழிகாட்டி,

அவர்களைத் தண்ணீர் ஊற்றுகளின் அருகே வழிநடத்திச் செல்வார்.

எனது எல்லா மலைகளையும் நான் வழிகளாக மாற்றுவேன்; ஏசா 11:16ஏசா 35:8-10ஏசா 62:10லூக் 3:4-5ஏசா 40:3-4ஏசா 43:19ஏசா 57:14யோவா 14:6

எனது பெரும் பாதைகள் உயர்த்தப்படும்.

இதோ, அவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள், ஏசா 43:5-6ஏசா 11:10-11ஏசா 2:2-3ஏசா 60:9-14ஏசா 66:19-20லூக் 13:29மத் 8:11மீகா 4:2

சிலர் வடக்கிலிருந்தும், சிலர் மேற்கிலிருந்தும்,

சிலர் சீனீம் 1 பிரதேசத்திலிருந்தும் வருவார்கள்.”

வானங்களே, ஆனந்த சத்தமிடுங்கள்; ஏசா 44:23ஏசா 51:3சங் 96:11-13ஏசா 40:1-2ஏசா 52:9லூக் 2:13-142 தெச 2:16-17ஏசா 12:1

பூமியே, சந்தோஷப்படு;

மலைகளே, கெம்பீரமாய்ப் பாடுங்கள்!

யெகோவா தமது மக்களைத் தேற்றுகிறார்,

துன்புற்ற தம்முடையவர்கள்மேல் இரக்கம் காட்டுவார்.

ஆனால் சீயோனோ, “யெகோவா என்னைக் கைவிட்டுவிட்டார்; ஏசா 40:27ரோம 11:1-5எரே 23:39புலம் 5:20சங் 22:1சங் 31:22சங் 89:38-46சங் 13:1

யெகோவா என்னை மறந்துவிட்டார்” என்கிறது.

“தான் பாலூட்டும் தன்னுடைய குழந்தையை எந்தத் தாயும் மறந்துபோவாளோ? ஏசா 44:21சங் 103:13மத் 7:11எரே 31:20ஓசி 11:1மல்கி 3:17புலம் 4:101 இராஜா 3:26-27

கருவில் உருவான தனது பிள்ளைக்கு அவள் கருணை காட்டாதிருப்பாளோ?

அப்படி அவள் மறந்தாலுங்கூட,

நான் உன்னை மறப்பதில்லை.

இதோ, நான் என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; ஆகா 2:23ஏசா 60:18ஏசா 62:6உன்னத 8:6யாத் 13:9ஏசா 26:1ஏசா 54:12சங் 48:12-13

உன் மதில்கள் எப்பொழுதும் என் கண்முன் இருக்கின்றன.

உனது பிள்ளைகள் விரைந்து திரும்புவார்கள் 2, ஏசா 51:13ஏசா 62:5எசேக் 28:24ஏசா 51:22-23எஸ்றா 1:5ஏசா 10:6ஏசா 49:19ஏசா 51:18-20

உன்னை அழித்தவர்கள் உன்னைவிட்டு விலகிப் போவார்கள்.

உன் கண்களை உயர்த்திச் சுற்றிலும் பார்; ஏசா 54:1-3ஏசா 61:10ஏசா 66:12-13ஏசா 54:9ஏசா 43:5-6ஏசா 49:12ஏசா 54:7ஏசா 66:20

உனது பிள்ளைகள் யாவரும் ஒன்றுகூடி உன்னிடம் வருகிறார்கள்.

நான் வாழ்வது நிச்சயமாய் இருப்பதுபோலவே,

நீ அவர்களையெல்லாம் நகைகளாய் அணிந்துகொள்வாய்;

மணமகளைப்போல் அவர்களை அணிந்துகொள்வாய்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

“நீ அழிக்கப்பட்டு பாழாக்கப்பட்டாய், சகரி 10:10ஏசா 54:1-2எரே 30:18-19ஓசி 1:10-11ஏசா 49:25-26ஏசா 51:3சங் 56:1-2எசேக் 36:3

உனது நாடு பாழாய் விடப்பட்டது.

ஆயினும் இப்பொழுதோ உன்னில் குடியிருக்கிறவர்கள்

வாழ்வதற்கு இடம் போதாதபடி நீ சிறிதாய் இருப்பாய்.

உன்னை விழுங்கியவர்களும் உன்னைவிட்டுத் தூரமாய் போவார்கள்.

உன் இழப்பில் துயருற்ற நாட்களில் யோசு 17:14-162இராஜா 6:1கலா 4:26-28ஓசி 1:10ஏசா 51:3ஏசா 54:1-3ஏசா 60:4மத் 3:9

உனக்குப் பிறந்த பிள்ளைகள் உன்னைப் பார்த்து,

‘இந்த இடம் எங்களுக்கு மிகச் சிறிதாக இருக்கிறது;

நாங்கள் வசிப்பதற்கு போதிய இடம் தாரும்’

என உன் செவிகள் கேட்கும்படி சொல்லுவார்கள்.

அப்பொழுது நீ உனது உள்ளத்தில் கலா 3:29கலா 4:26-29ஏசா 1:8ஏசா 3:26ஏசா 5:13ஏசா 51:17-20ஏசா 52:2ஏசா 54:3-8

‘எனக்கு இந்தப் பிள்ளைகளைக் கொடுத்தது யார்?

நான் துயருற்றவளாகவும் மலடியாகவும் இருந்தேன்;

நான் நாடுகடத்தப்பட்டவளாகவும், புறக்கணிக்கப்பட்டவளாகவும் இருந்தேன்.

யார் இந்தப் பிள்ளைகளை வளர்த்தெடுத்தார்கள்?

இதோ நான் தனித்தவளாயிருந்தேனே!

ஆனால் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?’ என்று சொல்லிக்கொள்வாய்.”

ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: ஏசா 14:2லூக் 13:29சங் 86:9ஏசா 11:10-12ஏசா 2:2-3ஏசா 42:1-4ஏசா 49:12ஏசா 60:3-11

“இதோ, நான் பிற நாட்டவர்களை கைகாட்டி அழைப்பேன்,

மக்கள் கூட்டங்களுக்கு எனது கொடியை ஏற்றுவேன்.

அவர்கள் உங்கள் மகன்களைத் தங்கள் கைகளில் கொண்டுவருவார்கள்;

மகள்களையும் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டுவருவார்கள்.

அரசர்கள் உங்களுக்கு வளர்ப்புத் தந்தைகளாய் இருப்பார்கள்; ஏசா 60:14ஏசா 60:16ஏசா 60:3மீகா 7:17ஏசா 45:14ஏசா 60:10-11ரோம 10:11சங் 25:3

அரசிகள் உங்களுக்கு வளர்ப்புத் தாய்களாய் இருப்பார்கள்.

அவர்கள் உங்களுக்கு முன்பாகத் தரையில் முகங்குப்புற விழுந்து வணங்குவார்கள்;

அவர்கள் உங்கள் பாதங்களிலுள்ள புழுதியை நக்குவார்கள்.

அப்பொழுது நீங்கள், நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள்;

என்னை நம்பியிருப்பவர்கள் வெட்கப்பட்டு போகமாட்டார்கள்” என்கிறார்.

போர்வீரர்களிடமிருந்து கொள்ளைப்பொருட்களைப் பறித்தெடுக்க முடியுமோ? லூக் 11:21-22சங் 124:6-7மத் 12:29எசேக் 37:3ஏசா 42:22எஸ்றா 9:13எஸ்றா 9:9சங் 126:1-3

வெற்றி வீரனிடமிருந்து கைதிகளைக் காப்பாற்ற முடியுமோ?

ஆனால், யெகோவா சொல்வது இதுவே: ஏசா 54:15-17ஏசா 35:4ஏசா 41:11-12எரே 50:33-34ஏசா 54:13ரோம 8:31-39சகரி 14:12ஏசா 10:27

“ஆம், கைதிகள் போர்வீரரிடமிருந்து விடுவிக்கப்படுவார்கள்;

வலியவனிடமிருந்து கொள்ளைப்பொருளும் மீட்கப்படும்.

உங்களுடன் சண்டையிடுகிறவர்களோடு நான் சண்டையிடுவேன்.

உங்கள் பிள்ளைகளை நான் காப்பாற்றுவேன்.

உங்களை ஒடுக்குகிறவர்களைத் தங்கள் சொந்த மாமிசத்தையே தின்னச் செய்வேன்; ஏசா 9:20ஏசா 41:14-20ஏசா 9:4வெளி 16:6எசேக் 39:7ஏசா 43:3ஏசா 60:16சங் 9:16

திராட்சை மதுவினால் வெறிகொள்வதுபோல்,

அவர்கள் தங்கள் சொந்த இரத்தத்தினாலேயே வெறிகொள்வார்கள்.

அப்பொழுது யெகோவாவாகிய நானே உங்கள் இரட்சகர்;

யாக்கோபின் வல்லவராகிய நானே உங்கள் மீட்பர் என்பதை

மனுக்குலம் அனைத்தும் அறிந்துகொள்ளும்.”