ஏசாயா 38

Isaiah 38

எசேக்கியாவின் வியாதி

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் தருவாயில் இருந்தான். ஆமோஸின் மகனான இறைவாக்கினன் ஏசாயா அவனிடம் போய், “யெகோவா கூறுவது இதுவே: நீர் சாகப்போகிறீர்; பிழைக்கமாட்டீர். ஆகையால் உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும் என்கிறார்” என்றான். 2 நாளாக 32:24ஏசா 38:1-82இராஜா 20:1-112 சாமு 17:23யோனா 3:10அப் 9:37ஏசா 37:21பிலி 2:27-30

எசேக்கியா தன் முகத்தை சுவரின் பக்கமாகத் திருப்பி யெகோவாவிடம் மன்றாடினான். மத் 6:61 இராஜா 8:30சங் 50:15சங் 91:15 அவன், “யெகோவாவே, நான் உமக்குமுன் உண்மையுள்ளவனாய் நடந்து, பயபக்தியாய் முழுமனதுடன் உமது பார்வையில் நலமானதையே செய்தேன் என்பதை நினைவுகூரும்” என்று எசேக்கியா மனங்கசந்து அழுதான். எபி 5:7எபி 6:10சங் 18:20-27நெகே 13:142 நாளாக 31:20-212 கொரி 1:12உபா 6:18யோவா 1:47

அப்பொழுது யெகோவாவின் வார்த்தை ஏசாயாவுக்கு வந்தது. “நீ எசேக்கியாவிடம் போய் சொல்லவேண்டியதாவது: ‘உன் தகப்பனாகிய தாவீதின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே, நான் உனது வேண்டுதலைக் கேட்டேன்; உன் கண்ணீரையும் கண்டேன். உன் வாழ்நாட்களோடு இன்னும் பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன். 1 யோவா 5:14-15சங் 34:5-6வெளி 7:17லூக் 1:13சங் 147:3சங் 56:82இராஜா 19:202 கொரி 7:6 அசீரிய அரசனின் கையிலிருந்து உன்னையும், இந்தப் பட்டணத்தையும் விடுவிப்பேன். இந்தப் பட்டணத்துக்கு ஆதரவாக இருப்பேன். ஏசா 37:35ஏசா 12:6ஏசா 31:4-52 நாளாக 32:222 தீமோ 4:17

“ ‘யெகோவா தான் வாக்களித்ததை நிறைவேற்றுவார் என்பதற்கு யெகோவா உனக்குத் தரும் அடையாளம் இதுவே: ஏசா 37:30நியாயாதி 6:37-392இராஜா 20:8-21ஏசா 7:11-14நியாயாதி 6:17-22ஆதி 9:13ஏசா 38:22 ஆகாஸின் நேரம்பார்க்கும் படிவரிசையில் சூரியனின் நிழலைப் பத்துப்படி பின்னடையச் செய்வேன்’ என்றார்.” அப்படியே சூரிய ஒளியும் பத்துப்படி பின்னடைந்தது. 2இராஜா 20:9-11யோசு 10:12-142 நாளாக 32:24மத் 16:12 நாளாக 32:31

யூதாவின் அரசன் எசேக்கியா நோயுற்றுக் குணமடைந்ததும் பின்வரும் கவிதையை எழுதினான்: 1 சாமு 2:1-102 நாளாக 29:30உபா 32:39யாத் 15:1-21ஓசி 6:1-2ஏசா 12:1-6நியாயாதி 5:1-31யோபு 5:18

“நான் என் வாழ்வின் சிறந்த பருவத்தில் 2 கொரி 1:9சங் 102:24யோபு 7:7சங் 107:18ஏசா 38:1யோபு 17:11-16யோபு 6:11

மரண வாசலுக்குப் போகவேண்டுமோ?

எனது மிகுதி வருடங்களைப் பறிகொடுக்க வேண்டுமோ?”

“வாழ்வோரின் நாட்டில் சங் 27:13சங் 116:8-9பிரச 9:5-6யோபு 35:14-15சங் 31:22சங் 6:4-5

நான் மீண்டும் யெகோவாவை காண்பதில்லை.

மனிதகுலத்தை இனியொருபோதும் பார்ப்பதில்லை,

அல்லது இவ்வுலகில் வாழ்வோருடன் இருப்பதில்லை.

மேய்ப்பனின் கூடாரத்தைப்போல என் வீடு 1 2 கொரி 5:1எபி 1:12சங் 73:142 கொரி 5:42 பேது 1:13-14ஏசா 1:8ஏசா 13:20யாக் 4:14

என்னிடமிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டிருக்கிறது.

நெசவாளனைப்போல என் வாழ்வை நான் சுருட்டி விட்டேன்,

அவரும் என்னைத் தறியிலிருந்து வெட்டிவிட்டார்;

காலையிலிருந்து இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்.

நான் விடியும்வரை பொறுமையாய்க் காத்திருந்தேன்; தானி 6:24சங் 51:81 இராஜா 13:24-261 கொரி 11:30-32ஓசி 5:14யோபு 10:16-17யோபு 16:12-14சங் 39:10

ஆனால் என் எலும்புகளையெல்லாம் சிங்கத்தைப்போல் நொறுக்கி விட்டார்;

காலையிலிருந்து இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்.

நான் சிட்டுக்குருவியைப் போலவும் நாரைப் போலவும் கூவினேன், ஏசா 59:11சங் 69:3எசேக் 7:16யோபு 30:29நாகூ 2:7சங் 119:122-123சங் 123:1-4யோபு 17:3

துயரப்படும் புறாவைப்போல் விம்முகிறேன்.

உதவிவேண்டி நான் வானங்களை நோக்கியபோது, என் கண்கள் பெலவீனமாயின.

யெகோவாவே, நான் ஒடுக்கப்படுகிறேன், எனக்கு உதவிசெய்ய வாரும்” என்று சொன்னேன்.

ஆனால் என்னால் என்ன சொல்லமுடியும்? 1 இராஜா 21:27யோபு 7:11யோபு 10:11 சாமு 1:102இராஜா 4:27எஸ்றா 9:10யோவா 12:27யோபு 21:25

அவர் என்னிடம் பேசினார்; அவரே இதைச் செய்திருக்கிறார்.

என் ஆத்தும துயரத்தின் நிமித்தம்

நான் எனது காலமெல்லாம் தாழ்மையாய் நடப்பேன்.

யெகோவாவே, மனிதர் இவைகளாலேயே வாழ்கிறார்கள்; 1 கொரி 11:32எபி 12:10-11மத் 4:4சங் 119:25உபா 8:3ஏசா 64:5யோபு 33:19-282 கொரி 4:17

எனது ஆவியும் இவற்றிலே வாழ்வைக் காண்கிறது.

நீரே என்னை சுகப்படுத்தி

வாழச் செய்தீர்.

நிச்சயமாக, என் நன்மைக்காகவே ஏசா 43:25யோனா 2:6மீகா 7:18-19எரே 31:34சங் 30:3சங் 86:13யோபு 3:25-26சங் 30:6-7

இப்படியான வேதனையை நான் அனுபவித்தேன்.

உமது அன்பினால்தான்

நான் அழிவின் குழிக்குள் போகாதபடி நீர் என்னை வைத்திருக்கிறீர்.

என் பாவங்களையெல்லாம்

உமது முதுகிற்குப் பின்னாலே போட்டுவிட்டீர்.

பாதாளம் உம்மைத் துதிக்காது, பிரச 9:10சங் 30:9சங் 6:5சங் 115:17-18சங் 88:10-11எண் 16:33லூக் 16:26-31மத் 25:46

மரணம் உமக்குத் துதிபாடாது;

குழியில் இறங்குவோர்

உமது உண்மையை எதிர்பார்க்க முடியாது.

இன்று நான் உம்மைத் துதிப்பதுபோல, உபா 6:7சங் 119:175உபா 4:9சங் 78:3-6உபா 11:19யாத் 12:26-27யாத் 13:14-15ஆதி 18:19

வாழ்பவர்கள், வாழ்பவர்களே உம்மைத் துதிப்பார்கள்.

பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு

உமது உண்மையைப் பற்றிச் சொல்கிறார்கள்.

யெகோவா என்னை இரட்சிப்பார்; சங் 116:2சங் 145:2சங் 150:4ஆப 3:19சங் 116:17-19சங் 27:5-6சங் 30:11-12சங் 33:2

நாம் நம் வாழ்நாள் எல்லாம்

யெகோவாவினுடைய ஆலயத்தில்

இசைக்கருவிகளுடன் துதிபாடுவோம்.

ஏற்கெனவே ஏசாயா நோயுற்றிருந்த எசேக்கியாவுக்கு, “அத்திப்பழ அடையொன்றைத் தயாரித்து, அதைக் கட்டியின்மீது பற்றுப்போடுங்கள்; அப்பொழுது அவர் சுகமடைவார்” என சொல்லியிருந்தான். 2இராஜா 20:7-8யோவா 9:6மாற் 7:33

அப்பொழுது எசேக்கியா, “நான் யெகோவாவின் ஆலயத்திற்குப் போவேன் என்பதற்கு அடையாளம் என்ன?” என்று கேட்டிருந்தான். 2இராஜா 20:8யோவா 5:14சங் 118:18-19சங் 122:1சங் 42:1-2சங் 84:1-2சங் 84:10-12