சங்கீதங்கள் 84

Psalms 84
சங்கீதம் 84

கித்தீத் என்னும் இசையில் வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.

சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, சங் 27:4சங் 43:3சங் 36:8சங் 122:1சங் 132:5சங் 8:1வெளி 21:22-23நெகே 9:6

உமது தங்குமிடம் எவ்வளவு அழகானது!

என் ஆத்துமா யெகோவாவினுடைய ஆலய முற்றங்களுக்காக ஏசா 26:9சங் 42:1-2சங் 63:1-2சங் 119:81சங் 73:26சங் 143:6சங் 119:20உன்னத 5:8

ஏங்கித் தவிக்கிறது;

என் உடலும் உள்ளமும்

உயிருள்ள இறைவனை நோக்கி மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்கிறது.

என் அரசரும் என் இறைவனுமாய் இருக்கிற சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, சங் 91:1சங் 90:1மத் 8:20சங் 43:4சங் 116:7சங் 5:2மத் 23:37

உம்முடைய பீடத்தினருகே

அடைக்கலான் குருவிக்கு வீடும்,

இரட்டைவால் குருவிக்குத்

தன் குஞ்சுகளை வைத்துக்கொள்ள கூடும் கிடைத்ததே.

உம்முடைய வீட்டில் வசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; சங் 23:6சங் 65:4சங் 27:4ஏசா 12:4-5சங் 71:8சங் 42:11சங் 134:1-3சங் 145:21

அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டே இருப்பார்கள்.

உம்மில் பெலன் கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், சங் 28:7-82 கொரி 12:9சகரி 10:12பிலி 4:13சங் 40:8மீகா 4:2எரே 31:33சங் 55:14

தங்கள் உள்ளத்தை சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள்மேல் பதித்துள்ளார்கள்.

அவர்கள் பாக்கா என்னும் வறண்ட பள்ளத்தாக்கைக் கடந்து போகையில், 2 கொரி 4:17யோவா 16:33யோவே 2:23ரோம 5:3-5ரோம 8:37வெளி 7:14சங் 68:9சங் 66:10-12

அதை நீரூற்றுகளின் இடமாக்குகிறார்கள்;

முன்மாரி மழையும் அதை நீர்நிலைகளால் நிரப்புகின்றது.

அவர்கள் ஒவ்வொருவரும் சீயோனின் இறைவனுக்கு முன்பாக வரும்வரைக்கும், நீதி 4:182 கொரி 3:18ஏசா 40:31யோபு 17:92 பேது 3:18யோவா 1:16உபா 16:16சங் 42:2

பலத்தின்மேல் பலம் அடைகிறார்கள்.

சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்; சங் 59:5

யாக்கோபின் இறைவனே, எனக்குச் செவிகொடும்.

எங்கள் கேடயமாகிய இறைவனே, எங்களை நோக்கிப்பாரும்; சங் 2:2ஆதி 15:1சங் 98:11 சாமு 16:61 சாமு 2:102 நாளாக 6:42உபா 33:29சங் 132:17

நீர் அபிஷேகம் பண்ணியவரின் முகத்தை தயவுடன் பாரும்.

உமது ஆலய முற்றங்களில் ஒரு நாளைக் கழிப்பது, சங் 27:4சங் 26:8-10சங் 63:2பிலி 3:20ரோம 8:5-6சங் 84:1-2சங் 141:4-5சங் 17:14-15

வேறெங்காவது ஆயிரம் நாட்களைக் கழிப்பதைவிட சிறந்தது;

கொடியவர்களின் கூடாரங்களில் குடியிருப்பதைவிட,

என் இறைவனுடைய வீட்டில் வாசல் காவலனாக இருப்பதை நான் அதிகமாய் விரும்புவேன்.

ஏனெனில் இறைவனாகிய யெகோவா சூரியனும் கேடயமுமாய் இருக்கிறார்; சங் 34:9-10நீதி 2:7மத் 6:33பிலி 4:19சங் 85:12நீதி 10:9யோவா 8:12சங் 3:3

யெகோவா கிருபையையும் மகிமையையும் கொடுப்பார்;

குற்றமற்றோராய் நடப்போருக்கு

அவர் நன்மையானவற்றைக் கொடாமல் இருப்பதில்லை.

சர்வ வல்லமையுள்ள யெகோவாவே, எரே 17:7-8சங் 62:8ஏசா 30:18ஏசா 50:10சங் 2:12சங் 146:5-6சங் 34:8

உம்மில் நம்பிக்கையாயிருக்கிற மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.