நினிவேக்கு ஐயோ கேடு
இரத்தம் சிந்தின பட்டணமே, ஆப 2:12செப்ப 3:1-3எசேக் 22:2-3எசேக் 24:6-9ஓசி 4:2நாகூ 2:12ஏசா 17:14ஏசா 42:24
உனக்கு ஐயோ கேடு,
நீ பொய்யினாலும் கொள்ளையினாலும் நிறைந்திருக்கிறாய்.
ஒருபோதும் உன்னிடம் கொலை இல்லாமல் போவதில்லை.
சவுக்கு அடியின் ஒசையும், எரே 47:3நாகூ 2:3-4நியாயாதி 5:22யோபு 39:22-25ஏசா 9:5
உருளைகளின் சத்தமும்,
குதிரைகளின் பாய்ச்சலும்,
தேர்களின் அதிர்வும் கேட்கிறதே,
தாக்குகின்ற குதிரைப்படையின் வாள்களும், எசேக் 39:4ஆப 3:11ஏசா 34:3ஏசா 37:36ஆதி 3:242இராஜா 19:35எசேக் 31:3-13நாகூ 2:4
மின்னும் ஈட்டிகளும் பளிச்சிடுகின்றன,
அநேகர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்கள்.
பிரேதங்கள் குவியலாய் கிடக்கின்றன.
இறந்த உடல்களோ எண்ணற்றவை.
மக்கள் பிரேதங்கள்மேல்
இடறி விழுகிறார்கள்.
இவையெல்லாம் நினிவேயின் வேசித்தனத்தினாலும், ஏசா 47:9ஏசா 47:12-13எசேக் 16:25-29வெளி 17:1-5வெளி 18:2-3வெளி 18:23வெளி 18:9ஏசா 23:15-17
கட்டுக்கடங்காத காமத்தினாலும் உண்டாயிற்று.
அவள் வசீகரமுள்ளவளும், மந்திரங்களில் தேர்ச்சி பெற்றவளுமாயிருக்கிறாள்.
அவள் நாடுகளைத் தன் வேசித்தனத்தினாலும்,
மக்கள் கூட்டங்களைத் தன் மந்திரங்களினாலும் அடிமைப்படுத்தியிருக்கிறாள்.
இதோ, சேனைகளின் யெகோவா சொல்கிறார்: எரே 13:26எசேக் 23:29எரே 13:22எசேக் 16:37ஏசா 47:2-3நாகூ 2:13ஆப 2:16எசேக் 23:25
“நினிவேயே, நான் உனக்கு விரோதமாய் வந்து,
உன் ஆடையை உன் முகத்துக்கு மேலாக தூக்குவேன்;
நாடுகளுக்கு உன் நிர்வாணத்தையும்,
எல்லா அரசுகளுக்கும் உன் வெட்கத்தையும் காட்டுவேன்.
அசுத்தமானவற்றை உன்மேல் வீசுவேன். மல்கி 2:9எரே 51:37யோபு 9:31சங் 38:5-71 கொரி 4:9எபி 10:33யோபு 30:8நாகூ 1:14
உன்னை அவமதிப்பாய் நடத்தி,
உன்னை ஒரு இழிவுக் காட்சியாக்குவேன்.
உன்னைக் காண்கிறவர்கள் எல்லோரும் உன்னைவிட்டு விலகி ஓடி, ஏசா 51:19எரே 15:5வெளி 18:10எரே 51:9புலம் 2:13எண் 16:34நாகூ 1:1நாகூ 2:9-10
‘நினிவே பாழாக்கப்பட்டுப் போனது;
அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்?’ என்று சொல்வார்கள்.
உன்னை ஆறுதல்படுத்துவதற்கு ஒருவனை நான் எங்கே தேடுவேன்?”
நைல் நதிக்கருகில் அமைந்திருக்கிறதும், ஆமோ 6:2எசேக் 30:14-16எசேக் 31:2-3ஏசா 19:5-10எரே 46:25-26
நீரால் சூழப்பட்டதுமான நோ அம்மோன் பட்டணத்தைப் பார்க்கிலும்,
நினிவேயே நீ சிறந்தவளோ?
நதியானது நோ அம்மோனுக்குப் பாதுகாப்பாகவும்,
தண்ணீர் அவளுக்கு மதிலாகவும் இருந்தன.
அவளுக்கு எத்தியோப்பியாவும், எகிப்தும் அளவற்ற வல்லமையாய் இருந்தன. எசேக் 27:10எசேக் 30:52 நாளாக 12:3எசேக் 38:5ஆதி 10:6ஏசா 20:5எரே 46:91 நாளாக 1:8
பூத்தும் லிபியாவும் அவளுக்கு நட்பு நாடுகளாயிருந்தன.
ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறைபிடிக்கப்பட்டு, ஏசா 20:4ஓசி 13:16யோவே 3:3ஒபதி 1:11ஏசா 13:16புலம் 2:192இராஜா 8:12ஆமோ 1:13
நாடுகடத்தப்பட்டாள்.
அவளுடைய பிள்ளைகளோ ஒவ்வொரு வீதிச்சந்தியிலும்,
அடித்து நொறுக்கப்பட்டார்கள்.
அவளது உயர் குடிமக்களுக்காக அசீரிய வீரர்களால் சீட்டுகள் போடப்பட்டன.
அவளின் பெரிய மனிதர் சங்கிலிகளால் கட்டப்பட்டு
அடிமைகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.
நினிவே பட்டணமே! நீயும் வெறிகொள்வாய். ஏசா 2:10ஏசா 49:26லூக் 23:30ஓசி 10:8ஏசா 2:19எரே 4:5நாகூ 1:10சங் 75:8
நீ ஒரு ஒளிவிடத்திற்குப் போவாய்.
பகைவரிடமிருந்து தப்ப புகலிடம் தேடுவாய்.
உன் அரண்களெல்லாம் முதல் பழுத்த வெளி 6:13ஆப 1:10ஏசா 28:4
பழங்களுடைய அத்திமரங்களைப் போலிருக்கும்.
அவை உலுக்கப்பட்டபோது அவற்றின் பழங்கள்
அவற்றைத் தின்கிறவனின் வாயிலே விழும்.
உன் இராணுவ வீரர்களைப் பார்! எரே 51:30ஏசா 19:16எரே 50:37நாகூ 2:6ஏசா 45:1-2சங் 107:16சங் 147:13
அவர்கள் பெண்களைப் போலிருக்கிறார்கள்.
உன் நாட்டின் வாசல்கள் உன் பகைவர்களுக்கு முன்பாக
விரிவாய்த் திறக்கப்பட்டிருக்கின்றன;
வாயில் தாழ்ப்பாள்களை நெருப்பு சுட்டெரித்தது.
முற்றுகைக் காலத்துக்கென 2 நாளாக 32:3-4நாகூ 2:1எரே 46:3-42 நாளாக 32:11ஏசா 22:9-11ஏசா 37:25ஏசா 8:9எரே 46:9
தண்ணீரை அள்ளி வைத்துக்கொள்ளுங்கள்,
உங்கள் அரண்களைப் பலப்படுத்துங்கள்;
களிமண்ணில் வேலைசெய்து சாந்தைக் குழைத்து
செங்கல் சுவரைப் பழுது பாருங்கள்.
ஆயினும் நெருப்பு உங்களைச் சுட்டெரிக்கும்; யோவே 1:4நாகூ 2:13நாகூ 3:13யாத் 10:13-15யோவே 2:25செப்ப 2:13
வாள் உங்களை வெட்டி வீழ்த்தும்.
அது உங்களை வெட்டுக்கிளிகளைப்போல் தின்னும்.
பச்சைக்கிளிகளைப்போல் பெருகுங்கள்,
வெட்டுக்கிளிகளைப்போல் பெருகுங்கள்!
உன் வர்த்தகர்களின் எண்ணிக்கையை வானத்து நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய், ஆதி 15:5ஆதி 22:17எரே 33:22நெகே 9:23
ஆனால் அவர்கள் வெட்டுக்கிளிகளைப்போல்
நாட்டை வெறுமையாக்கி விட்டு,
பறந்து போய்விடுகிறார்கள்.
உன் காவலர்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள். எரே 51:27வெளி 9:7
உன் அதிகாரிகள் குளிர்க்காலத்தில் சுவர்களில் ஒட்டிக்கொள்ளும்
வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போல் இருக்கிறார்கள்.
சூரியன் வந்ததும் அவை பறந்துபோய் விடுகின்றன.
ஆனால் அவை எங்கே போயின என்று யாரும் அறியமாட்டார்கள்.
அசீரிய அரசனே, உனது ஆளுநர்கள் உறங்குகிறார்கள். 1 இராஜா 22:17சங் 76:5-6ஏசா 13:14எரே 50:18எரே 51:57யாத் 15:16எசேக் 31:3-18எசேக் 32:22-23
உனது உயர்குடி மக்கள் படுத்து ஓய்வெடுக்கிறார்கள்.
உனது மக்கள் மலைகளில் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களை ஒன்றுசேர்ப்பார் ஒருவருமில்லை.
உன் காயத்தை எதனாலும் குணமாக்க முடியாது; மீகா 1:9புலம் 2:15ஏசா 37:18யோபு 27:23எரே 46:11எசேக் 25:6எசேக் 30:21-22ஏசா 10:6-14
உனது காயம் மரணத்திற்கு ஏதுவானது.
உன்னைக் குறித்த செய்தியைக் கேட்கிறவர்கள் எல்லோரும்,
உன் வீழ்ச்சியைப் பார்த்து கைத்தட்டுகிறார்கள்.
ஏனெனில் உன் முடிவற்ற
கொடுமையை அறியாதவன் யார்?