ஆமோஸின் மகன் ஏசாயா, யூதாவின் அரசர்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் அரசாண்ட காலங்களில் யூதா நாட்டையும், எருசலேம் பட்டணத்தையும் பற்றி கண்ட தரிசனம். 2 நாளாக 26:12இராஜா 18:1சங் 89:192இராஜா 15:12இராஜா 15:322இராஜா 15:7அப் 10:17ஆமோ 1:1
யூதாவுக்கு யெகோவாவின் நியாயத்தீர்ப்பு
வானங்களே, கேளுங்கள், பூமியே, கவனித்துக் கேள்! உபா 32:1உபா 30:19மீகா 1:2உபா 4:26சங் 50:4மல்கி 1:6மீகா 6:1-2ஆமோ 3:1
ஏனெனில் யெகோவா பேசியிருக்கிறார்:
“நான் என் பிள்ளைகளை பராமரித்துப் பாதுகாத்து வளர்த்தேன்;
ஆனால் அவர்கள் எனக்கெதிராகக் கலகம் பண்ணினார்கள்.
எருது தன் எஜமானையும், எரே 8:7எரே 4:22ஏசா 44:18ஏசா 5:12மத் 13:13-15சங் 94:8ரோம 1:28ஏசா 27:11
கழுதை தன் எஜமானின் தொழுவத்தையும் அறியும்.
ஆனால் இஸ்ரயேலரோ என்னை அறிந்துகொள்ளாமலும்,
என் மக்கள் என்னைப் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள்.”
ஐயோ, இவர்கள் பாவம் நிறைந்த நாடு, ஏசா 5:24எரே 2:17எரே 2:13ரோம 8:7அப் 7:51-52ஏசா 5:19எரே 2:19எரே 7:19
குற்றம் நிறைந்த மக்கள்,
தீயவர்களின் கூட்டம்,
கேடு கெட்டு நடக்கும் பிள்ளைகள்!
இவர்கள் யெகோவாவை விட்டுவிட்டார்கள்,
இவர்கள் இஸ்ரயேலின் பரிசுத்தரை அவமதித்து,
அவருக்குத் தங்கள் முதுகைக் காட்டினார்கள்.
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்? தானி 9:8-11எசேக் 24:13எரே 5:3வெளி 16:8-11ஏசா 31:6எரே 5:31செப்ப 3:1-4எபி 12:5-8
உங்கள் தலை முழுவதும் காயப்பட்டும்,
உங்கள் இருதயம் முழுவதும் வேதனையுற்றும் இருக்கிறதே!
தொடர்ந்து ஏன் நீங்கள் கலகம் செய்கிறீர்கள்?
உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரை, எரே 6:14எரே 33:6மத் 9:12யோபு 5:18லூக் 10:34மல்கி 4:2சங் 38:3-5சங் 77:2
நீங்கள் ஆரோக்கியம் அற்றவர்களாய் இருக்கிறீர்கள்.
ஆறாத புண்களும், அடிகாயங்களும்,
சீழ்வடியும் புண்களுமே இருக்கின்றன.
அவை சுத்தமாக்கப்படவோ, கட்டுப்போடப்படவோ,
எண்ணெய் பூசி குணமாக்கப்படவோ இல்லை.
உங்கள் நாடு பாழடைந்திருக்கிறது; உபா 28:33உபா 28:43புலம் 5:2எசேக் 30:12ஓசி 7:92 நாளாக 28:16-212 நாளாக 28:5உபா 28:48-52
உங்கள் நகரங்கள் தீயினால் எரிந்துபோய்க் கிடக்கின்றன.
உங்கள் கண்முன்பதாகவே
உங்கள் வயல்கள் அந்நியரால் கொள்ளையிடப்படுகின்றன;
உங்கள் நாடு பிறநாட்டினரால் தோற்கடிக்கப்பட்டு பாழடைந்ததைப் போல் இருக்கிறதே!
சீயோனின் மகள் 1 சகரி 9:9யோவா 12:15சகரி 2:10ஏசா 62:11ஏசா 10:32புலம் 2:6ஏசா 37:22ஏசா 4:4
திராட்சைத் தோட்டத்திலுள்ள கொட்டில் போலவும்,
வெள்ளரித் தோட்டத்தின் குடில்போலவும்,
முற்றுகையிட்ட பட்டணம் போலவும் தனித்து விடப்பட்டிருக்கிறாள்.
எல்லாம் வல்ல யெகோவா ரோம 9:29ஏசா 37:31-32ஆதி 19:24புலம் 3:22ஆமோ 4:11ரோம 11:4-6ஆதி 18:32ஏசா 10:20-22
நம்மில் ஒரு சிலரைத் தப்பிப்பிழைக்க விட்டிராமல் இருந்தால்,
நாம் சோதோமைப் போலாகியிருப்போம்;
நாம் கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.
சோதோமின் ஆளுநர்களே, உபா 32:32எசேக் 16:49ஏசா 3:9வெளி 11:81 இராஜா 22:19-23எசேக் 16:46ஆதி 13:13ஏசா 28:14
யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்;
கொமோராவின் மக்களே,
நமது இறைவனின் கட்டளைக்குச் செவிகொடுங்கள்!
“உங்கள் ஏராளமான பலிகள் 1 சாமு 15:22ஆமோ 5:21எரே 6:20ஏசா 66:3மீகா 6:7மல்கி 1:10மத் 9:13நீதி 15:8
எனக்கு எதற்கு?”
என யெகோவா கேட்கிறார்.
“செம்மறியாட்டுக் கடாக்களின் தகனபலிகளும்,
கொழுத்த மந்தைகளின் கொழுப்பும், எனக்குச் சலித்துவிட்டன;
காளைகள், செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தினால்
எனக்கு மகிழ்ச்சி இல்லை.
நீங்கள் என் முன்னிலையில் வரும்போது, யாத் 34:23பிரச 5:1யாத் 23:17ஏசா 58:1-2மீகா 6:8சங் 40:6மத் 23:5உபா 16:16
இவற்றையெல்லாம் கொண்டுவந்து,
இப்படி என் பிராகாரங்களை மிதிக்கவேண்டுமென உங்களிடம் கூறியவர் யார்?
உங்களது அர்த்தமற்ற காணிக்கைகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள்! ஏசா 66:3மல்கி 1:10மத் 15:9எசேக் 20:39புலம் 2:61 நாளாக 23:311 கொரி 11:17உபா 16:1-22
உங்கள் தூபம் எனக்கு அருவருப்பாயிருக்கிறது.
அமாவாசை நாட்கள், ஓய்வுநாட்கள், சபைக்கூட்டங்கள் போன்ற
ஒழுங்கற்ற ஒன்றுகூடுதலை இனி என்னால் சகிக்க முடியாது.
உங்களது அமாவாசை நாட்களையும், ஆமோ 5:21ஏசா 43:24ஏசா 61:8ஏசா 7:13ஆமோ 2:13ஏசா 29:1மல்கி 2:17சகரி 11:8
உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது.
அவை எனக்கு சுமையாகிவிட்டன;
நான் அவைகளைச் சுமந்து களைத்துப் போனேன்.
நீங்கள் ஜெபிப்பதற்காகக் கைகளை உயர்த்தும்போது, மீகா 3:4ஏசா 59:2-3நீதி 1:28சகரி 7:13எரே 7:8-10சங் 66:18ஏசா 58:7எரே 14:12
நான் உங்களிடமிருந்து என் கண்களை மறைத்துக்கொள்வேன்;
அநேக ஜெபங்களைச் செய்தாலும்,
நான் செவிகொடுக்கமாட்டேன்.
“ஏனெனில் உங்கள் கைகள் குற்றமற்ற இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றது!
“உங்களைக் கழுவி சுத்திகரியுங்கள். 1 பேது 3:11ஏசா 55:6-71 பேது 2:12 கொரி 7:1யாக் 4:8எசேக் 18:30-31தீத் 2:11-14மத் 3:8
உங்கள் கொடிய செயல்களை எனது பார்வையிலிருந்து நீக்கி,
தீமை செய்வதை நிறுத்துங்கள்.
சரியானதைச் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியைத் தேடுங்கள். மீகா 6:8எரே 22:3சங் 82:3-4நீதி 31:9ஏசா 1:23சகரி 7:9-10எரே 22:15-16தானி 4:27
ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
திக்கற்றவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்;
விதவைக்காக வழக்காடுங்கள்.
“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” ஏசா 44:22வெளி 7:14சங் 51:7மீகா 7:18-19ஏசா 43:24-26எபே 1:6-8ஏசா 41:21ஏசா 41:1
என்று யெகோவா கூறுகிறார்.
“உங்கள் பாவங்கள் செந்நிறமாய் இருந்தாலும்,
பனிபோல் வெண்மையாகும்;
அவை கருஞ்சிவப்பாய் இருந்தாலும்,
பஞ்சைப்போல் வெண்மையாகும்.
நீங்கள் இணங்கிக் கீழ்ப்படிந்தால், உபா 30:15-16ஏசா 3:10யோவே 2:26எபி 5:9ஏசா 55:6-7ஏசா 55:1-3மத் 21:28-32எரே 31:18-20
நாட்டின் சிறந்த பலனைச் சாப்பிடுவீர்கள்.
ஆனால் எதிர்த்துக் கலகம் பண்ணுவீர்களாயின், ஏசா 65:12ஏசா 58:14ஏசா 40:5எண் 23:19ஏசா 3:11ஏசா 3:251 சாமு 12:252 நாளாக 36:14-16
நீங்கள் பட்டயத்துக்கு இரையாவீர்கள்.”
யெகோவாவின் வாயே இவற்றை சொல்லியிருக்கிறது.
பாருங்கள், எவ்வளவு உண்மையாய் இருந்த பட்டணம் எசேக் 22:1-23சகரி 8:3செப்ப 3:1-32 நாளாக 19:92 சாமு 8:15அப் 7:52எசேக் 16:1-63எபி 12:22
இப்படி வேசியாயிற்று!
முன்பு அது நியாயத்தால் நிரம்பியிருந்தது;
நீதி அதில் குடியிருந்ததே,
இப்பொழுதோ அது கொலைகாரரின் வசிப்பிடமாயிருக்கிறது.
உன் வெள்ளி களிம்பாகிவிட்டது, எசேக் 22:18-22ஓசி 4:18எரே 6:28-30புலம் 4:1-22 கொரி 2:17ஓசி 6:4
உன் சிறந்த திராட்சை இரசம் தண்ணீர் கலப்பாயிற்று.
உனது ஆளுநர்கள் கலகக்காரர், மீகா 7:3யாத் 23:8சகரி 7:10அப் 4:5-11லூக் 18:2-5ஏசா 10:1-2ஏசா 3:14எரே 5:28-29
திருடரின் தோழர்;
ஒவ்வொருவரும் இலஞ்சத்தை விரும்பி,
வெகுமதியை நாடி விரைகிறார்கள்.
அநாதைகளுக்கு நியாயம் செய்யாதிருக்கிறார்கள்;
விதவையின் வழக்கை எடுத்துப் பேசாதிருக்கிறார்கள்.
ஆகவே, யெகோவா, எல்லாம் வல்ல யெகோவாவாகிய ஏசா 60:16உபா 28:63ஏசா 49:26எசேக் 5:13ஏசா 35:4ஏசா 61:2சங் 132:2உபா 32:43
இஸ்ரயேலின் வல்லவர் அறிவிக்கிறார்:
“ஓ! நான் என் எதிரிகளிடமிருந்து விடுதலையடைந்து
என் பகைவர்களைப் பழிவாங்குவேன்.
நான் என் கரத்தை உனக்கு எதிராகத் திருப்புவேன்; மல்கி 3:3ஏசா 1:22ஏசா 4:4எரே 9:7எசேக் 20:38எசேக் 22:22ஏசா 6:11-13எரே 6:29
நான் உனது களிம்பு முற்றிலும் நீங்க உன்னை உருக்கி,
உன் அசுத்தங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துவேன்.
முந்தைய நாட்களில் இருந்ததுபோல், எரே 33:7சகரி 8:3ஏசா 62:1-2எசேக் 34:23-24எசேக் 37:24-25எசேக் 45:8ஏசா 1:21ஏசா 32:1-2
நான் உன்னுடைய நியாயதிபதிகளைத் திரும்பவும் அமர்த்துவேன்.
ஆரம்பத்தில் இருந்ததுபோலவே உன் ஆலோசகர்களையும் மீண்டும் தருவேன்.
அதன்பின் நீ நீதியின் நகரம் என்றும்,
உண்மையுள்ள நகரம் என்றும் அழைக்கப்படுவாய்.”
சீயோன் நியாயத்தினாலும், ஏசா 62:12ஏசா 45:21-25ஏசா 5:16ஏசா 63:41 கொரி 1:301 பேது 1:18-192 கொரி 5:21எபே 1:7-8
அங்கு மனந்திரும்புவோர் நீதியினாலும் மீட்கப்படுவார்கள்.
ஆனால் கலகக்காரரும் பாவிகளும் ஒருமித்து நொறுக்கப்படுவார்கள்; 2 தெச 1:8-9சங் 1:6ஏசா 30:13யோபு 31:3வெளி 21:81 நாளாக 28:91 இராஜா 9:6-91 சாமு 12:25
யெகோவாவைவிட்டு விலகுகிறவர்களோ அழிந்துபோவார்கள்.
“நீங்கள் விருப்பத்துடன் வணங்கிய ஏசா 57:5ஏசா 65:3ஏசா 66:17எசேக் 16:63ஓசி 4:13எசேக் 36:31எசேக் 6:13ஓசி 14:3
புனித கர்வாலி மரங்களின் நிமித்தம் வெட்கப்படுவீர்கள்;
நீங்கள் வழிபாட்டுக்கெனத் தெரிந்துகொண்ட
தோட்டங்களினிமித்தம் அவமானப்படுவீர்கள்.
நீங்கள் இலையுதிர்ந்த கர்வாலி மரம் போலவும், எரே 17:5-6எசேக் 17:24எசேக் 17:9-10எசேக் 31:4-18ஏசா 5:6ஏசா 58:11எரே 31:12மத் 21:19
தண்ணீரில்லாத தோட்டம்போலவும் இருப்பீர்கள்.
வலிமையுள்ளவன் காய்ந்த கூளம் போலவும் ஏசா 66:24எசேக் 32:21மல்கி 4:1எசேக் 20:47-48ஏசா 26:11ஏசா 27:4ஏசா 33:14ஏசா 34:9-10
அவனுடைய செயல் ஒரு நெருப்புப்பொறியும் போலாகி,
இரண்டும் அணைப்பாரின்றி
ஏகமாய் எரிந்துபோகும்.”