நியாயத்தீர்ப்பும் இரட்சிப்பும்
“என்னைப்பற்றி விசாரிக்காதவர்களுக்கு என்னை நான் வெளிப்படுத்தினேன். ரோம 10:20ரோம 9:24-261 பேது 2:10எபே 2:12-13ஓசி 1:10ஏசா 45:22சங் 22:27ஏசா 55:5
என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுகொண்டார்கள்.
என் பெயரைச் சொல்லி மன்றாடாத மக்களிடம்,
‘இதோ நான், இதோ நான்’ என்று சொன்னேன்.
நான் பிடிவாதமான மக்களுக்கு ரோம 10:21எரே 4:14நீதி 1:24சங் 81:11-12ஏசா 1:2ஏசா 63:10எரே 5:23எரே 7:24
நாள்முழுவதும் என் கைகளை நீட்டினேன்.
அவர்கள் தமது கற்பனைகளையே பின்பற்றி,
நலமற்ற வழியில் நடக்கிறவர்கள்.
அவர்கள் தோட்டங்களில் பலிசெலுத்தி, ஏசா 1:29உபா 32:21ஏசா 66:172இராஜா 17:14-17உபா 32:16-19ஏசா 3:8எரே 32:30-35யோபு 1:11
தங்கள் செங்கல் பீடங்களில் தூபம் எரித்து,
தொடர்ந்து என்னை என் முகத்துக்கு
முன்பாகவே கோபமூட்டுகிறார்கள்.
அவர்கள் கல்லறைகள் மத்தியில் உட்கார்ந்து, ஏசா 66:17லேவி 11:7உபா 14:8ஏசா 66:3உபா 14:3உபா 18:11எசேக் 4:14லூக் 8:27
இரகசியமாய் விழித்திருந்து ஆவிகளை வணங்கி, இரவைக் கழிக்கிறார்கள்.
பன்றியின் இறைச்சியைச் சாப்பிடுகிறார்கள்.
அவர்களுடைய பானைகளில் அசுத்த இறைச்சியின் குழம்பு இருக்கிறது.
அவர்கள் ஒருவருக்கொருவர், ‘தள்ளி நில்லுங்கள்; எனக்கு அருகே வராதீர்கள்; லூக் 18:9-12லூக் 7:39நீதி 16:5லூக் 15:28-30ரோம 2:17-29உபா 29:20லூக் 5:301 பேது 5:5
ஏனெனில் நான் உங்களிலும் மிகத் தூய்மையானவன்’ என்கிறார்கள்.
இப்படிப்பட்ட மக்கள் எனது நாசியின் துவாரங்களில் புகையாயும்
நாள்முழுவதும் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பாயும் இருக்கிறார்கள்.
“பாருங்கள், அது என்முன் எழுதப்பட்டிருக்கிறது: சங் 50:3எரே 16:18சங் 50:21சங் 79:12ஏசா 42:14ஏசா 64:12எசேக் 22:31யோவே 3:4
நான் மவுனமாய் இருக்கமாட்டேன், முழுவதுமாக பதில் செய்வேன்;
அவர்களுடைய மடியில் அதைத் திருப்பிக் கொட்டுவேன்.
உங்களுடைய பாவங்களுக்கும், உங்கள் முற்பிதாக்களின் பாவங்களுக்கும் எசேக் 20:27-28ஏசா 57:7யாத் 20:5ஏசா 22:14ஏசா 65:6எரே 13:25எரே 5:29எரே 5:9
பதில் செய்வேன்” என்று யெகோவா சொல்கிறார்.
“அவர்கள் மலைகளின்மேல் பலிகளை எரித்து,
குன்றுகளின்மேல் என்னை எதிர்த்து நின்றார்கள்.
அவர்களின் முந்திய செயல்களுக்கான பலனை முழுமையாக
அவர்களின் மடியில் அளந்துகொடுப்பேன்.”
யெகோவா சொல்வது இதுவே: ரோம 9:27-29ஆமோ 9:8-9ஏசா 6:13எரே 30:11மாற் 13:20ரோம 11:24-26ரோம 11:5-6யோவே 2:14
“திராட்சைக் குலையில் சாறு இருக்கையில்,
‘அதை அழிக்காதே,
அதில் இன்னும் பலன் உண்டு’ என்று மனிதர் சொல்வார்களல்லவா?
அதுபோல, என் ஊழியரின் நிமித்தம் நான் இப்படிச் செய்வேன்.
அவர்கள் எல்லோரையும் அழிக்கமாட்டேன்.
யாக்கோபிலிருந்து சந்ததிகளையும், ஆமோ 9:11-15ஏசா 27:6ரோம 11:5-7எசேக் 36:24எசேக் 36:8-15எசேக் 37:21-28எசேக் 39:25-29ஏசா 10:20-22
யூதாவிலிருந்து என் மலையை சுதந்தரிப்பவர்களையும் கொண்டுவருவேன்;
நான் தெரிந்துகொண்ட மக்கள் அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்,
எனது ஊழியர்கள் அங்கே வசிப்பார்கள்.
என்னைத் தேடும் என் மக்களுக்கு ஏசா 35:2ஏசா 33:9ஓசி 2:15ஏசா 51:1எசேக் 34:13-14யோசு 7:24-26
சாரோன் ஆட்டு மந்தைகளின் மேய்ச்சலிடமாகவும்,
ஆகோர் பள்ளத்தாக்கும் மாட்டு மந்தைகளின் தொழுவமாகவும் இருக்கும்.
“நீங்களோ யெகோவாவைவிட்டு, உபா 32:17ஏசா 1:28ஏசா 2:21 கொரி 10:20-211 நாளாக 28:9உபா 29:24-25எசேக் 23:41-42எபி 12:22
என் பரிசுத்த மலையை மறந்து,
காத் 1 என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம் செய்து,
மேனி தெய்வத்துக்கு திராட்சை இரசத்தைக் கிண்ணங்களில் நிறைக்கிறீர்கள்.
உங்களை நான் வாளுக்கு இரையாக்குவேன், எரே 7:132 நாளாக 36:15-16ஏசா 50:2மத் 21:34-43சகரி 7:11-13உபா 32:25எசேக் 14:17-21ஏசா 1:16
நீங்கள் எல்லோரும் கொல்லப்படுவதற்கு குனிவீர்கள்.
ஏனெனில் நான் கூப்பிட்டேன், நீங்கள் பதிலளிக்கவில்லை;
நான் பேசினேன், நீங்கள் கேட்கவில்லை.
எனது பார்வையில் தீமையைச் செய்து
நான் விரும்பாதவற்றைத் தெரிந்துகொண்டீர்கள்.”
ஆகையால் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: மல்கி 3:18ஏசா 66:14ஏசா 61:7லூக் 16:24-25ஏசா 66:5ஏசா 44:9லூக் 14:23-24ஏசா 1:19
“எனது ஊழியர்கள் சாப்பிடுவார்கள்,
நீங்களோ பசியோடிருப்பீர்கள்;
எனது ஊழியர்கள் குடிப்பார்கள்,
நீங்களோ தாகமாயிருப்பீர்கள்;
எனது ஊழியர்கள் மகிழ்ச்சியாயிருப்பார்கள்,
நீங்களோ வெட்கத்திற்குள்ளாவீர்கள்.
எனது ஊழியர்கள் உள்ளத்தின் மத் 8:12சங் 66:4ஏசா 24:14ஏசா 52:8-9யாக் 5:1யாக் 5:13எரே 31:7லூக் 13:28
மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்;
நீங்களோ இதய வேதனையால்
கதறி அழுவீர்கள்;
உள்ளமுடைந்தவர்களாய் புலம்புவீர்கள்.
நான் தெரிந்துகொண்டவர்களுக்கு ஏசா 62:2ரோம 9:26அப் 11:26சகரி 8:13எரே 29:221 பேது 2:9-10ஏசா 65:22ஏசா 65:9
உங்களுடைய பெயரை ஒரு சாபமாய் விட்டுப்போவீர்கள்;
ஆண்டவராகிய யெகோவா உங்களைக் கொன்றுபோட்டு,
ஆனால் தம்முடைய ஊழியருக்கோ அவர் வேறு பெயரைக் கொடுப்பார்.
நாட்டில் ஆசீர்வாதத்தை வேண்டிக்கொள்ளுகிறவன் எவனும், ஏசா 19:18எரே 4:2எபி 6:17-18பிலி 2:11சங் 31:5உபா 32:4ஏசா 45:23-25ஏசா 65:19
உண்மையின் இறைவனாலேயே ஆசி பெறுவான்.
பூமியில் ஆணையிடுகிறவனும்,
உண்மையின் இறைவனைக்கொண்டே ஆணையிடுவான்.
ஏனெனில் முந்திய தொல்லைகள் மறக்கப்பட்டு,
எனது கண்களிலிருந்து அவை மறைக்கப்படும்.
புதிய வானமும் புதிய பூமியும்
“இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் 2 பேது 3:13ஏசா 66:22வெளி 21:1-5ஏசா 43:18எரே 3:16ஏசா 51:16
உண்டாக்குவேன்.
முந்தியவைகள் நினைக்கப்படுவதுமில்லை,
மனதில் தோன்றுவதுமில்லை.
நான் உண்டாக்கப்போகிறதில் சங் 98:1-9ஏசா 66:10-14வெளி 11:15-18வெளி 19:1-6சங் 67:3-51 தெச 5:16ஏசா 12:4-6ஏசா 25:9
நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூருங்கள்.
ஏனெனில், எருசலேமை அது மகிழ்ச்சிக்குரியதாகவும்,
அதன் மக்களை சந்தோஷமாகவும் படைப்பேன்.
நானும் எருசலேமில் மகிழ்ந்து, வெளி 21:4ஏசா 25:8வெளி 7:17ஏசா 35:10எரே 32:41ஏசா 51:11ஏசா 51:3ஏசா 60:20
எனது மக்களில் பெருமகிழ்ச்சியடைவேன்;
அங்கு புலம்பலின் குரலும்,
அழுகையின் சத்தமும் இனி ஒருபோதும் கேட்பதில்லை.
“ஒருசில நாட்கள் மட்டும் வாழும் குழந்தையோ, யோபு 5:26பிரச 8:12-13உபா 4:40சங் 34:12ஏசா 3:11ரோம 2:5-9
தனக்குரிய காலம்வரை வாழாத முதியவனோ
ஒருபோதும் அங்கு இருக்கமாட்டார்கள்.
நூறு வயதில் இறக்கிறவன்
வாலிபன் என்று எண்ணப்படுவான்;
பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும்
சபிக்கப்பட்டவன் என்று கருதப்படுவான்.
அவர்கள் வீடுகள் கட்டி அவைகளில் குடியிருப்பார்கள்; ஆமோ 9:14ஏசா 62:8-9எரே 31:4-5ஏசா 32:18ஏசா 37:30நியாயாதி 6:1-6லேவி 26:16உபா 28:30-33
அவர்கள் திராட்சைத் தோட்டங்களையும் உண்டாக்கி,
அவைகளின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.
அவர்கள் கட்டும் வீடுகளில் இனிமேல் வேறெவரும் வாழமாட்டார்கள், சங் 92:12-14சங் 91:16சங் 21:4ஏசா 65:15ஏசா 65:9ஆதி 5:27ஆதி 5:5லேவி 26:16
அவர்கள் நடுகிறவைகளில் வேறொருவரும் சாப்பிடவுமாட்டார்கள்.
ஏனெனில் ஒரு மரத்தின் காலத்தைப்போலவே
எனது மக்களின் வாழ்நாட்களும் இருக்கும்.
நான் தெரிந்துகொண்ட மக்களும் தங்கள் கைகளின் பலனில்
நெடுநாளாய் மகிழ்ச்சிகொள்வார்கள்.
அவர்கள் வீணாக முயற்சி செய்யமாட்டார்கள், ஏசா 61:9எரே 32:38-39உபா 28:3-12அப் 2:39சங் 115:14-15ஏசா 49:4ஏசா 55:2ரோம 9:7-8
அவர்கள் அவலத்துக்குரிய பிள்ளைகளைப் பெறவுமாட்டார்கள்.
ஏனெனில், அவர்கள் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களாயிருப்பார்கள்;
அவர்களுடன் அவர்களின் சந்ததிகளும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்.
அவர்கள் கூப்பிடுமுன்னே நான் பதிலளிப்பேன்; தானி 10:121 யோவா 5:14-15மாற் 11:24ஏசா 58:9சங் 91:15சங் 50:15ஏசா 55:6அப் 4:31
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நான் கேட்பேன்.
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒன்றுகூடி மேயும், ஏசா 11:6-9மீகா 4:3அப் 9:19-211 கொரி 6:9-11அப் 9:1எசேக் 43:11ஏசா 35:9ஏசா 65:11
சிங்கமும் எருதைப்போல் வைக்கோல் தின்னும்,
பாம்போ புழுதியைத் தின்னும்.
எனது பரிசுத்த மலையெங்கும்
அவை ஒரு தீங்கையோ, அழிவையோ செய்யமாட்டாது”
என்று யெகோவா சொல்கிறார்.