சங்கீதங்கள் 131

Psalms 131
சங்கீதம் 131

சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.

யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல, ரோம 12:16சங் 139:6யோபு 42:3எரே 45:5மத் 11:29சங் 101:51 தெச 2:6-7சங் 122:1

என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல;

பெரிய காரியங்களிலும்,

எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.

பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல், 1 கொரி 14:20மாற் 10:15புலம் 3:26சங் 42:11சங் 43:5மத் 18:3-4யோவா 14:1-2ஏசா 30:15

என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்;

என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.

இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும் சங் 130:7ஏசா 26:4சங் 146:5எரே 17:7-8சங் 115:18சங் 115:9-11

யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு.