1 நாளாகமம் 18

1 Chronicles 18

தாவீதின் வெற்றிகள்

சிறிது காலத்தின்பின் தாவீது பெலிஸ்தியரை முறியடித்து அவர்களைக் கீழ்ப்படுத்தினான். அவன் பெலிஸ்தியரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த காத் பட்டணத்தையும், அதைச் சேர்ந்த கிராமங்களையும் கைப்பற்றினான். 2 சாமு 8:1-181 சாமு 27:41 சாமு 5:82 சாமு 1:20

அதோடு தாவீது மோவாபியரையும் தோற்கடித்தான். எனவே அவர்கள் தாவீதின் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டு காணிக்கை செலுத்திவந்தார்கள். சங் 72:8-101 இராஜா 10:21 இராஜா 10:251 சாமு 10:272இராஜா 3:4-52 சாமு 8:2ஏசா 11:14ஏசா 16:1

மேலும் சோபாவின் அரசன் ஆதாதேசர் தனது அதிகாரத்தை யூப்ரட்டீஸ் நதி பிரதேசத்தில் நிலைநாட்ட போனபோது, தாவீது அவனுடன் ஆமாத்வரை போரிட்டான். சங் 60:12 சாமு 8:32 சாமு 10:6யாத் 23:31ஆதி 15:181 சாமு 14:47 தாவீது அவனிடமிருந்த ஆயிரம் தேர்களையும், ஏழாயிரம் தேர் ஓட்டிகளையும், இருபதாயிரம் காலாட்படையினரையும் கைப்பற்றினான். அவன் நூறு தேர்க்குதிரைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றெல்லாக் குதிரைகளின் பின்தொடை நரம்புகளை வெட்டி முடமாக்கினான். 2 சாமு 8:4சங் 20:7சங் 33:16-171 இராஜா 10:261 இராஜா 4:2உபா 17:16யோசு 11:6யோசு 11:9

சோபாவின் அரசன் ஆதாதேசருக்கு உதவும்படி தமஸ்குவைச் சேர்ந்த சீரியர் வந்தபோது, தாவீது அவர்களில் இருபத்திரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டான். 1 நாளாக 19:62 சாமு 8:5-6ஏசா 8:9-101 நாளாக 18:31 இராஜா 11:23-241 சாமு 14:47 அவன் தமஸ்குவிலுள்ள சீரியரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் கோட்டை காவலாளர்களை நிறுத்தினான். சீரியர்கள் தாவீதின் ஆட்சிக்குட்பட்டு காணிக்கை செலுத்தினார்கள். இவ்வாறு யெகோவா தாவீது போன இடமெல்லாம் அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார். 1 நாளாக 17:8நீதி 21:31சங் 121:8சங் 18:43-441 நாளாக 18:2

ஆதாதேசரின் அதிகாரிகளிடமிருந்து தனது தங்கக் கேடயங்களை தாவீது எடுத்து எருசலேமுக்குக் கொண்டுவந்தான். 1 இராஜா 10:16-171 இராஜா 14:26-282 நாளாக 12:9-102 நாளாக 9:15-16 ஆதாதேசருக்குச் சொந்தமான திபாத், கூன் பட்டணங்களிலிருந்து தாவீது அதிக அளவு வெண்கலங்களைக் கொண்டுவந்தான். இவற்றிலிருந்துதான் பின்னர் சாலொமோன் வெண்கல பெருந்தொட்டியையும், தூண்களையும், இன்னும் பலரகமான வெண்கலப் பொருட்களையும் செய்தான். 2 சாமு 8:82 நாளாக 4:12-181 நாளாக 22:141 இராஜா 7:15-472 நாளாக 4:2-6எரே 52:17-23

தாவீது சோபாவின் அரசன் ஆதாதேசரின் படையனைத்தையும் முறியடித்த செய்தியை ஆமாத்தின் அரசன் தோயூ கேள்விப்பட்டான். 2 சாமு 8:9 அப்பொழுது தாவீது அரசன் ஆதாதேசருடன் சண்டையிட்டு வெற்றிபெற்றமைக்காக, தோயூ அரசன் தன் மகன் அதோராமை தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும்படி அனுப்பினான். எனவே அதோராம் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு வந்தான். 2 சாமு 8:102 நாளாக 9:12 நாளாக 9:23-24ஏசா 39:1

தாவீது அரசன் தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர் ஆகிய எல்லா நாட்டினரிடமிருந்து கொண்டுவந்த வெள்ளியையும் தங்கத்தையும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்தான். அதுபோலவே இந்தப் பொருட்களையும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தான். 1 நாளாக 20:1-21 நாளாக 22:141 நாளாக 26:201 நாளாக 26:26-271 நாளாக 29:141 இராஜா 7:511 சாமு 27:8-91 சாமு 30:13

செருயாவின் மகன் அபிசாயி உப்புப் பள்ளத்தாக்கிலே பதினெட்டாயிரம் ஏதோமியரை வெட்டிப்போட்டான். சங் 60:11 நாளாக 11:201 நாளாக 19:111 நாளாக 2:161 சாமு 26:62 நாளாக 25:112 சாமு 10:102 சாமு 8:13-14 அவன் ஏதோமிலே காவல் படைகளை நிறுத்தினான். எல்லா ஏதோமியரும் தாவீதுக்குக் கீழ்ப்பட்டு இருந்தார்கள். தாவீது சென்ற இடமெல்லாம் யெகோவா அவனுக்கு வெற்றியைக் கொடுத்தார். 1 நாளாக 18:62 சாமு 7:14-17ஆதி 27:37சங் 121:7சங் 144:10சங் 18:48-501 சாமு 10:51 சாமு 13:3

தாவீதின் அதிகாரிகள்

தாவீது தனது எல்லா மக்களுக்கும் நீதியும் நியாயமும் செய்து, இஸ்ரயேலர் அனைவரையும் ஆட்சிசெய்தான். எரே 33:15சங் 89:14எரே 23:5-61 நாளாக 12:382 சாமு 8:15ஏசா 32:1-2ஏசா 9:7எரே 22:15

செருயாவின் மகன் யோவாப் படைகளுக்குத் தலைவனாயிருந்தான்; 1 நாளாக 11:62 சாமு 8:161 இராஜா 4:3

அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளனாயிருந்தான்.

அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அபிமெலேக்கும் ஆசாரியர்களாய் இருந்தார்கள். 2 சாமு 8:172 சாமு 20:251 இராஜா 4:31 நாளாக 24:61 இராஜா 2:35

சவிஷா என்பவன் செயலாளராக இருந்தான்.

யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியருக்கும், பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான். 2 சாமு 8:182 சாமு 15:181 நாளாக 23:281 இராஜா 1:381 இராஜா 1:441 இராஜா 2:34-352 சாமு 20:232 சாமு 20:7

தாவீதின் மகன்கள் அரசனின் பிரதான அதிகாரிகளாய் 1 அரசனின் பக்கத்தில் இருந்தார்கள்.