யெரொபெயாமுக்கு விரோதமாக அபியாவின் இறைவாக்கு
அந்தக் காலத்தில் யெரொபெயாமின் மகனான அபியா வியாதியுற்றான். 1 இராஜா 13:33-341 இராஜா 14:12-131 சாமு 31:21 சாமு 4:19-202 சாமு 12:15யாத் 20:5 அப்போது யெரொபெயாம் தன் மனைவியிடம், “உன்னை யாராவது யெரொபெயாமின் மனைவி என்று கண்டுபிடித்து விடாதபடி, மாறுவேடமிட்டு சீலோவுக்குப் போ. இஸ்ரயேலரை நானே அரசாளுவேன் என்று எனக்குக் கூறிய இறைவாக்கினன் அகியா அங்கே இருக்கிறான். 1 இராஜா 11:29-381 சாமு 28:82 சாமு 14:22 நாளாக 18:291 இராஜா 14:5-61 இராஜா 22:30யோசு 18:1லூக் 12:2 உன்னுடன் பத்து அப்பங்களையும் சில அடைகளையும், ஒரு ஜாடி தேனையும் எடுத்துக்கொண்டு போ. பிள்ளைக்கு என்ன நடக்குமென்று அவன் உனக்குச் சொல்வான்” என்றான். 1 சாமு 9:7-81 இராஜா 13:72இராஜா 4:422இராஜா 1:22இராஜா 5:152இராஜா 5:52இராஜா 8:7-9யோவா 11:3 யெரொபெயாமின் மனைவி அவன் சொன்னவாறே செய்து சீலோவிலிருக்கும் அகியாவின் வீட்டுக்குப் போனாள். 1 இராஜா 11:291 சாமு 3:21 சாமு 4:151 இராஜா 14:21 சாமு 4:3-4உபா 34:7பிரச 12:3ஆதி 27:1
அகியா வயதுசென்றதினால் கண்பார்வை இழந்தவனாயிருந்தான். அவனால் பார்க்க முடியாதிருந்தது. ஆனால் யெகோவா அகியாவிடம், “யெரொபெயாமின் மனைவி தன் மகனைப்பற்றிக் கேட்க உன்னிடம் வருகிறாள். அவன் வியாதியாயிருக்கிறான். அவளுக்கு நீ இன்ன இன்ன விதமான மறுமொழி கூறவேண்டும். அவள் வரும்போது வேறு யாரோபோல பாசாங்கு செய்வாள்” என்றார். 2இராஜா 4:272இராஜா 6:8-12ஆமோ 3:7நீதி 21:30சங் 139:1-4அப் 10:19-20
அதனால் அகியா வாசலில் அவளுடைய காலடிச் சத்தம் கேட்டவுடனேயே, “யெரொபெயாமின் மனைவியே உள்ளே வா. ஏன் இந்தப் பாசாங்கு? உனக்கு ஒரு துர்ச்செய்தியோடு நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். 1 இராஜா 13:20-221 இராஜா 14:10-111 இராஜா 14:21 இராஜா 14:51 இராஜா 20:421 இராஜா 21:18-241 இராஜா 22:81 சாமு 15:16 இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே என்று யெரொபெயாமிடம் போய்ச் சொல். ‘நான் உன்னை மக்களிடையேயிருந்து எழுப்பி என் மக்களாகிய இஸ்ரயேலருக்குத் தலைவனாக நியமித்தேன். 1 இராஜா 16:22 சாமு 12:7-81 இராஜா 12:241 சாமு 15:161 சாமு 2:27-30 தாவீதின் குடும்பத்திலிருந்து அவனுடைய அரசாட்சியைப் பிரித்தெடுத்து, உனக்குக் கொடுத்தேன். ஆனால், என் கட்டளைச் சட்டங்களைக் கைக்கொண்டு, என் பார்வையில் சரியானதை மட்டுமே செய்து, தன் முழு மனதோடும் என்னைப் பின்பற்றிய தாவீதைப்போல் நீ இருக்கவில்லை. 1 இராஜா 15:51 இராஜா 11:33-382 நாளாக 28:1அப் 13:22அப் 13:361 இராஜா 11:30-311 இராஜா 3:142 நாளாக 17:3 உனக்குமுன் வாழ்ந்த எல்லோரைப் பார்க்கிலும் அதிகமான தீமையையே செய்தாய். உலோகத்தால் செய்யப்பட்ட விக்கிரகங்களான வேறே தெய்வங்களை உனக்கு உண்டாக்கினாய். எனக்குக் கோபமூட்டி என்னைத் தள்ளி ஒதுக்கிவிட்டாய். எசேக் 23:35நெகே 9:26சங் 50:171 இராஜா 12:282 நாளாக 11:15யாத் 34:171 கொரி 10:22எசேக் 8:17
“ ‘ஆதலால் யெரொபெயாம் குடும்பத்துக்கு அழிவைக் கொண்டுவரப் போகிறேன். யெரொபெயாமின் குடும்பத்தில் உள்ள அடிமையானாலும், சுதந்திரவாளியானாலும் இஸ்ரயேலின் ஒவ்வொரு கடைசி ஆணையும் அழித்துவிடுவேன். ஒருவன் சாணத்தை அது முழுவதும் இல்லாமல் போகும்வரை எரிப்பதுபோல, யெரொபெயாமின் குடும்பத்தை அழித்துவிடுவேன். 1 இராஜா 21:212இராஜா 14:26உபா 32:362இராஜா 9:8-91 இராஜா 15:25-301 இராஜா 16:111 சாமு 2:301 சாமு 25:22 பட்டணத்தில் சாகும் யெரொபெயாமின் குடும்பத்தினரை நாய்கள் தின்னும். நாட்டுப்புறத்தில் சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்று யெகோவாவே கூறினார்.’ 1 இராஜா 16:41 இராஜா 21:23-24எரே 15:3வெளி 19:17-181 இராஜா 21:19எசேக் 39:17-19ஏசா 66:24
“இப்போது நீ உன் வீட்டுக்குப்போ. பட்டணத்தில் நீ காலடி வைத்ததுமே உன் மகன் இறந்துவிடுவான். 1 இராஜா 14:16-171 இராஜா 14:32இராஜா 1:162இராஜா 1:6யோவா 4:50-52 முழு இஸ்ரயேலரும் அவனுக்காகத் துக்கப்பட்டு, அவனை அடக்கம்பண்ணுவார்கள். யெரொபெயாமின் குடும்பத்தில் அவன் மட்டும் அடக்கம் செய்யப்படுவான். ஏனெனில் இஸ்ரயேலரின் இறைவனாகிய யெகோவா யெரொபெயாமின் குடும்பத்தில் அவனிடத்தில் மட்டுமே ஏதேனும் நன்மையைக் கண்டிருக்கிறார். 2 நாளாக 19:32 நாளாக 12:122 பேது 2:8-9எசேக் 18:14-32எரே 22:10எரே 22:18யோபு 19:28எண் 20:29
“யெகோவா தனக்கென ஒருவனை இஸ்ரயேலின் அரசனாக எழுப்புவார். அவன் யெரொபெயாமின் குடும்பத்தை அழித்துப் போடுவான். அந்நாள் இதுவே. இப்பொழுதே. 1 இராஜா 15:27-292 பேது 2:3பிரச 8:11எசேக் 12:22-28எசேக் 7:2-7யாக் 5:9 யெகோவா இஸ்ரயேலை அடிப்பார். எனவே அது தண்ணீரில் நாணல் அசைவது போலாகும். இஸ்ரயேலை அவர்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த இந்த நாட்டிலிருந்து வேருடன் பிடுங்கி, ஐபிராத்து ஆற்றுக்கு அப்பால் சிதறடிப்பார். ஏனென்றால் அவர்கள் அசேரா விக்கிரக தூணை உண்டாக்கி, யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள். யோசு 23:15-16சங் 52:52இராஜா 15:29உபா 12:3-4யாத் 34:13-14நீதி 2:221 இராஜா 14:23-241 இராஜா 14:9 யெரொபெயாம் செய்த பாவத்தினாலும், இஸ்ரயேலைப் பாவஞ்செய்யப்பண்ணியதாலும் அவர் இஸ்ரயேலரைக் கைவிட்டுவிடுவார்” என்றான். 1 இராஜா 13:341 இராஜா 15:301 இராஜா 15:341 இராஜா 16:21 இராஜா 12:30யாத் 32:21யாத் 32:35ஓசி 5:11-12
அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து திர்சாவுக்குப் போனாள். அவள் தன் வீட்டு வாசலில் காலடி வைத்ததுமே அவனுடைய மகன் இறந்தான். 1 இராஜா 15:331 இராஜா 15:211 இராஜா 16:151 இராஜா 16:23உன்னத 6:41 இராஜா 14:12-131 இராஜா 16:6-91 சாமு 2:20-34 யெகோவா தமது பணியாளனாகிய அகியா என்னும் இறைவாக்கினன் மூலம் சொல்லியிருந்தபடியே, இஸ்ரயேலர் அவனை அடக்கம்பண்ணி அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். 1 இராஜா 14:13
யெரொபெயாமின் ஆட்சிக் காலத்தின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்த யுத்தங்களும், அவன் ஆண்ட விதங்களும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளது. 2 நாளாக 13:2-201 நாளாக 27:241 இராஜா 14:29-301 இராஜா 15:311 இராஜா 16:141 இராஜா 16:201 இராஜா 16:271 இராஜா 16:5 யெரொபெயாம் இருபத்தி இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். அதன்பின் அவன் தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் நாதாப் அரசனானான். யோபு 14:121 இராஜா 11:431 இராஜா 2:10சங் 3:51 இராஜா 15:25-31சங் 4:8
ரெகொபெயாமின் ஆட்சி
சாலொமோனின் மகனான ரெகொபெயாம் யூதாவில் அரசனாயிருந்தான். அவன் அரசனாகும்போது அவனுக்கு நாற்பத்தொரு வயதாயிருந்தது. யெகோவா தனது பெயர் விளங்கும்படி இஸ்ரயேல் கோத்திரங்கள் அனைத்திலுமிருந்து தெரிந்துகொண்ட பட்டணமான எருசலேமில் பதினேழு வருடங்கள் அரசாண்டான். அம்மோனியப் பெண்ணான அவன் தாயின் பெயர் நாமாள். 2 நாளாக 12:131 இராஜா 11:361 இராஜா 14:311 இராஜா 11:321 இராஜா 11:431 இராஜா 8:161 இராஜா 8:442 நாளாக 13:7
யூதா கோத்திரத்தார் யெகோவாவின் பார்வையில் தீமையானதையே செய்துவந்தார்கள். தாங்கள் செய்த பாவங்களினால் தங்கள் முன்னோர் செய்ததைக் காட்டிலும் யெகோவாவை அதிகமாகக் கோபமூட்டினார்கள். 1 கொரி 10:222 நாளாக 12:1சங் 78:581 இராஜா 14:91 இராஜா 16:302 நாளாக 12:142இராஜா 17:19உபா 29:28 உயர்ந்த ஒவ்வொரு மலையின்மேலும், ஒவ்வொரு செழிப்பான மரத்தின் கீழும் மேடைகளையும், புனிதக் கற்களையும், அசேரா விக்கிரக தூண்களையும் தங்களுக்கு அமைத்துக்கொண்டார்கள். உபா 12:2ஏசா 57:52இராஜா 17:9-10எசேக் 16:24-251 இராஜா 14:151 இராஜா 3:22 நாளாக 28:42இராஜா 21:3-7 நாட்டின் வழிபாட்டிடங்களில் வேசித்தனத்திற்கு தங்களைக் கொடுக்கும் ஆண் விபசாரக்காரரும் இருந்தார்கள். இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா துரத்தியிருந்த ஜனங்களின் அருவருக்கத்தக்க பழக்கங்களில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். உபா 23:171 கொரி 6:91 இராஜா 15:122இராஜா 23:71 இராஜா 22:46ஆதி 19:5நியாயாதி 19:22ரோம 1:24-27
ரெகொபெயாமின் ஆட்சியின் ஐந்தாம் வருடம் எகிப்திய அரசனான சீஷாக் எருசலேமைத் தாக்கினான். 1 இராஜா 11:402 நாளாக 12:2-42 நாளாக 12:9 அவன் யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனையிலும் இருந்த எல்லா செல்வங்களையும் சூறையாடிக் கொண்டுபோனான். சாலொமோன் செய்துவைத்திருந்த எல்லா தங்கக் கேடயங்கள் உட்பட அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். 1 இராஜா 15:182 நாளாக 9:15-161 இராஜா 10:16-171 இராஜா 7:512 நாளாக 12:9-112இராஜா 24:13பிரச 2:18-19நீதி 23:5 எனவே அரசன் ரெகொபெயாம் அவற்றிற்குப் பதிலாக வெண்கல கேடயங்களைச் செய்து, அரச அரண்மனை வாசல் காவலர்களின் தளபதிகளிடம் ஒப்படைத்தான். 1 சாமு 22:171 சாமு 8:111 இராஜா 14:11 இராஜா 14:51 இராஜா 18:462 சாமு 15:1புலம் 4:1-2 யெகோவாவின் ஆலயத்திற்கு அரசன் போகும்போதெல்லாம், அந்தக் காவலர் கேடயங்களைச் சுமந்துகொண்டுபோய், திரும்பவும் அவற்றைக் காவலறைக்குள் கொண்டுவந்து வைப்பார்கள். 2 நாளாக 12:11
ரெகொபெயாமின் ஆட்சிக் காலத்தின் மற்ற சம்பவங்களும், அவன் செய்த அனைத்தும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் அல்லவோ எழுதப்பட்டுள்ளன. 1 இராஜா 11:411 இராஜா 14:191 இராஜா 15:231 இராஜா 22:452 நாளாக 12:15-16 ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் இடையில் தொடர்ந்து யுத்தம் நடந்து கொண்டேயிருந்தது. 1 இராஜா 12:211 இராஜா 12:241 இராஜா 15:6-72 நாளாக 12:15 ரெகொபெயாம் தன் முற்பிதாக்களைப்போல இறந்து தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். அம்மோனியப் பெண்ணாயிருந்த அவனுடைய தாயின் பெயர் நாமாள். அவன் மகன் அபியா அவனுடைய இடத்தில் அரசனானான். 2 நாளாக 12:16மத் 1:71 நாளாக 3:101 இராஜா 11:431 இராஜா 14:20-211 இராஜா 15:241 இராஜா 15:31 இராஜா 22:50