உபாகமம் 12

Deuteronomy 12

ஒரே வழிபாட்டிடம்

உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, நீங்கள் உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்படி உங்களுக்குக் கொடுத்திருக்கிற நாட்டில் வாழும் காலமெல்லாம், நீங்கள் கைக்கொள்ளும்படி கவனமாயிருக்கவேண்டிய விதிமுறைகளும் சட்டங்களும் இவையே: 1 இராஜா 8:40யோபு 7:1உபா 12:19உபா 4:1-2உபா 4:19உபா 4:45உபா 4:5உபா 4:9-10 அங்கே நீங்கள் வெளியேற்றும் நாடுகள் வழிபட்ட உயர்ந்த மலைகளிலும், குன்றுகளின்மேலும், படர்ந்த ஒவ்வொரு மரங்களின் கீழும் இருக்கும் தெய்வங்களின் வழிபாட்டிடங்களை எல்லாம் நீங்கள் முற்றிலும் அழித்துப்போடுங்கள். உபா 7:52இராஜா 16:4எண் 33:51-522இராஜா 17:10-11உபா 7:25-26யாத் 34:12-17எசேக் 20:28-29எரே 3:6 அவர்களுடைய பலிபீடங்களை உடைத்து, அவர்களுடைய புனிதக் கற்களை நொறுக்கி, அசேரா விக்கிரகக் கம்பத்தை நெருப்பில் எரித்துப்போடுங்கள். அவர்களுடைய தெய்வங்களின் விக்கிரகங்களை வெட்டி வீழ்த்தி, அந்த இடங்களிலிருந்து அவர்களுடைய பெயர்களையே இல்லாமல் செய்துவிடுங்கள். நியாயாதி 2:2எண் 33:52சகரி 13:2சங் 16:4உபா 7:5யாத் 23:131 இராஜா 15:132 நாளாக 19:3

நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவை அவர்களுடைய வழிகளில் வழிபடக்கூடாது. லேவி 20:23உபா 20:18உபா 12:30-31உபா 16:21-22 நீங்களோ உங்கள் இறைவனாகிய யெகோவா எல்லா கோத்திரங்களிலிருந்தும் தமது உறைவிடமாகத் தெரிந்துகொண்டு, தமது பெயரை இடுகிற அந்த இடத்தையே தேடவேண்டும். அந்த இடத்திற்கே நீங்கள் போகவேண்டும்; உபா 12:112 நாளாக 7:12உபா 26:2உபா 16:21 இராஜா 8:29உபா 12:13சங் 132:13-14சங் 78:68 நீங்கள் அங்கேயே உங்கள் தகன காணிக்கைகள், பலிகள், உங்கள் பத்திலொரு பங்கு, நீங்கள் கொடுப்பதாக நேர்ந்துகொண்ட விசேஷ அன்பளிப்புகள், சுயவிருப்பு காணிக்கைகள், ஆட்டு மந்தை, மாட்டு மந்தை ஆகியவற்றின் தலையீற்றுகள் அனைத்தையும் கொண்டுவர வேண்டும். உபா 15:19-20உபா 12:17உபா 14:22-26உபா 26:2எசேக் 20:40லேவி 17:3-9லேவி 27:32-33லூக் 11:42 அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குமுன், நீங்களும் உங்கள் குடும்பங்களும் சாப்பிட்டு, நீங்கள் கையிட்டுச் செய்த எல்லாவற்றையும் குறித்து மகிழ்வீர்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருக்கிறார். உபா 12:18உபா 14:26லேவி 23:40உபா 12:12பிலி 4:4சங் 128:1-2உபா 14:23உபா 15:20

இன்று இங்கே நாம் ஒவ்வொருவரும் நமது விருப்பப்படி நமக்குச் சரியெனப்பட்டதைச் செய்ததுபோல், அங்கே நீங்கள் செய்யக்கூடாது. நியாயாதி 21:25நியாயாதி 17:6நீதி 21:2அப் 7:42எண் 15:39ஆமோ 5:25 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கிற இளைப்பாறும் இடத்திற்கும், உரிமைச்சொத்திற்கும் நீங்கள் போய்ச் சேரும்போது அப்படிச் செய்யக்கூடாது. 1 இராஜா 8:56உபா 25:19சங் 95:11எபி 4:8-9மீகா 2:101 நாளாக 23:251 பேது 1:3-4 நீங்கள் யோர்தானைக் கடந்து உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டிலேபோய் வாழப்போகிறீர்கள். அங்கே அவர் உங்களைச்சூழ உள்ள பகைவர்களிடத்தில் இருந்து உங்களுக்கு ஆறுதல் கொடுப்பார். நீங்கள் அங்கே பாதுகாப்பாய் வாழ்வீர்கள். எசேக் 34:28எரே 33:11உபா 11:31உபா 3:27உபா 4:221 இராஜா 4:251 சாமு 7:12உபா 33:12 பின்பு உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் வழங்கும்படி தமக்கு வசிப்பிடமாகத் தெரிந்துகொள்ளும் இடத்துக்கு நீங்கள் போவீர்கள். அங்கே நான் கட்டளையிடுகிற ஒவ்வொன்றையும் கொண்டுவர வேண்டும். உங்கள் தகன காணிக்கைகளையும், பலிகளையும், உங்கள் பத்திலொரு பங்கையும், கொடைகளையும், யெகோவாவுக்குக் கொடுப்பேன் என நீங்கள் நேர்த்திக்கடன்செய்த எல்லா உடைமைகளையும் கொண்டுவாருங்கள். உபா 12:5உபா 15:20உபா 16:2-8உபா 17:8உபா 18:6யோவா 4:20-231 இராஜா 8:131 இராஜா 8:29 அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக களிகூருங்கள். நீங்களும் உங்கள் மகன்களும், மகள்களும், உங்கள் வேலைக்காரரும், வேலைக்காரிகளும் தங்களுக்கு சொந்தப் பங்கோ உரிமைச்சொத்தோ இல்லாத உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியருமான எல்லோரும் களிகூருங்கள். பலிகளுக்குரிய நிபந்தனைகள் உபா 12:7உபா 10:9உபா 26:12உபா 12:19உபா 14:291 இராஜா 8:662 நாளாக 29:362 நாளாக 30:21-26 நீங்கள் விரும்பிய இடமெல்லாம் தகன காணிக்கைகளைப் பலியிடாதபடி கவனமாய் இருங்கள். 1 இராஜா 15:342 நாளாக 15:17உபா 12:6லேவி 17:2-51 இராஜா 12:28-32 உங்கள் கோத்திரங்களில் யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்தில் மட்டுமே அவற்றைச் செலுத்துங்கள். நான் கட்டளையிட்ட யாவையும் அங்கே செய்யுங்கள். 2 கொரி 5:19உபா 12:11உபா 12:5எபி 10:19-22எபி 13:15சங் 5:7சங் 9:11

ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஆசீர்வாதத்தின்படியே, உங்கள் பட்டணங்களில் நீங்கள் உங்கள் வளர்ப்பு மிருகங்களைக் கொன்று, விரும்பிய அளவு இறைச்சியைச் சாப்பிடுங்கள். வெளிமானையும், கலைமானையும் அடித்துச் சாப்பிடுவதுபோல அடித்துச் சாப்பிடலாம். சம்பிரதாய முறைப்படி அசுத்தமாயிருக்கிறவர்களும், சுத்தமாயிருக்கிறவர்களும் அதைச் சாப்பிடலாம். உபா 14:5உபா 12:20-23உபா 14:26உபா 15:22-23லேவி 17:3-5 ஆனால் இரத்தத்தை நீங்கள் சாப்பிடக்கூடாது. தண்ணீரை ஊற்றுவது போல் அதை நிலத்தில் ஊற்றுங்கள். ஆதி 9:4உபா 15:23அப் 15:29உபா 12:23-241 தீமோ 4:4லேவி 17:10-13லேவி 7:26-27 நீங்கள் உங்கள் சொந்தப் பட்டணங்களில் உங்கள் தானியம், புதுத் திராட்சை இரசம், ஒலிவ எண்ணெய் ஆகியவற்றின் பத்திலொரு பங்கை சாப்பிடக்கூடாது. உங்கள் ஆடு, மாடு மந்தைகளின் தலையீற்றையோ அல்லது நீங்கள் நேர்ந்துகொண்ட எதையுமோ அல்லது உங்கள் சுயவிருப்பக் காணிக்கையையோ அல்லது விசேஷ கொடைகளையோ அங்கு சாப்பிடக்கூடாது. உபா 26:14உபா 12:6உபா 14:22-29உபா 12:11உபா 12:26உபா 26:12லேவி 27:30-32எண் 18:21-24 பதிலாக நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக, உங்கள் இறைவனாகிய யெகோவா தனக்கென்று தெரிந்துகொண்ட இடத்தில் இருந்தே சாப்பிடவேண்டும். அப்படியே நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும் உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியர்களும் அந்த இடத்திலிருந்தே சாப்பிடவேண்டும். உங்கள் இறைவனாகிய யெகோவா முன்பாக நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லாவற்றிற்காகவும் மகிழ்ச்சியடையவேண்டும். உபா 12:7உபா 14:23உபா 12:51 கொரி 10:31அப் 16:34அப் 2:46உபா 12:11-12உபா 12:19 நீங்கள் உங்கள் நாட்டில் வாழும் காலமெல்லாம் லேவியரை கைவிடாதபடி கவனமாயிருங்கள். 2 நாளாக 31:4-21நெகே 10:34-391 கொரி 9:10-142 நாளாக 11:13-14உபா 14:27-29

உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குப்பண்ணியபடி, உங்கள் ஆட்சியின் எல்லையை விரிவாக்குவார். அப்பொழுது நீங்கள் இறைச்சியை விரும்பி, “எனக்கு இறைச்சி விருப்பமாயிருக்கிறது” என்று சொன்னால், நீங்கள் விரும்பிய அளவு சாப்பிடலாம். உபா 19:8உபா 11:24யாத் 34:241 நாளாக 4:10ஆதி 28:14உபா 12:15யாத் 23:31ஆதி 15:18-21 உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடம் உங்களுக்கு அதிக தூரமாயிருந்தால், நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் ஆட்டு மந்தைகளிலும், மாட்டு மந்தைகளிலும் உள்ள மிருகங்களைக் கொன்று, உங்கள் சொந்தப் பட்டணங்களில் நீங்கள் விரும்பிய அளவு அவற்றைச் சாப்பிடலாம். உபா 12:51 இராஜா 14:212 நாளாக 12:13உபா 12:11உபா 12:15உபா 14:23-24உபா 16:11உபா 16:6 வெளிமானையோ, கலைமானையோ சாப்பிடுவதுபோல அதைச் சாப்பிடுங்கள். சம்பிரதாய முறைப்படி அசுத்தமானவர்களும், சுத்தமானவர்களும் அதைச் சாப்பிடலாம். உபா 12:15-16 ஆனால் இரத்தத்தைச் சாப்பிடாமல் இருக்கக் கவனமாயிருங்கள். ஏனெனில் இரத்தமே உயிர். நீங்கள் உயிரை இறைச்சியுடன் சாப்பிடக்கூடாது. லேவி 17:11ஆதி 9:4லேவி 17:13-14உபா 12:16லேவி 3:16-17மத் 20:28வெளி 5:9 நீங்கள் இரத்தத்தைச் சாப்பிடக்கூடாது. அதை நிலத்திலே தண்ணீரைப்போல் ஊற்றுங்கள். உபா 12:16உபா 15:23 அதைச் சாப்பிடாதீர்கள். அப்பொழுது நீங்களும், உங்கள் பிள்ளைகளும் நலமாயிருப்பீர்கள். ஏனெனில் யெகோவாவின் பார்வையில் எது சரியானதோ அதையே நீங்கள் செய்வீர்கள். 1 இராஜா 11:38உபா 4:40யாத் 15:26ஏசா 3:10உபா 13:18உபா 6:18உபா 12:28உபா 5:16

ஆனால் அர்ப்பணிக்கப்பட்ட உங்கள் பொருட்களையும், கொடுப்பதற்காக நீங்கள் நேர்ந்துகொண்டதையும் எடுத்துக்கொண்டு யெகோவா தெரிந்துகொண்ட இடத்திற்குப் போங்கள். எண் 18:19எண் 5:9-101 சாமு 1:21-24உபா 12:11உபா 12:17-18உபா 12:21உபா 12:6ஆதி 28:20 அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தின்மேல் உங்கள் தகன காணிக்கைகளைச் செலுத்துங்கள். இறைச்சியும், இரத்தமுமான இரண்டையும் பலி செலுத்துங்கள். உங்கள் பலிகளின் இரத்தம் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பலிபீடத்தின் அருகில் ஊற்றப்படவேண்டும். இறைச்சியை நீங்கள் சாப்பிடலாம். லேவி 1:13லேவி 1:9லேவி 17:11லேவி 1:5லேவி 4:30 இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற இந்த எல்லா நியமங்களுக்கும் கீழ்ப்படியக் கவனமாயிருங்கள். அப்பொழுது நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நலமாயிருப்பீர்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் நல்லதையும், சரியானதையும் செய்து கொண்டிருப்பீர்கள். உபா 12:25உபா 4:40யோவா 15:10யோவா 15:142 நாளாக 7:17உபா 24:8யாத் 34:11எசேக் 37:24

நீங்கள் படையெடுத்து வெளியேற்றப்போகும் நாடுகளை உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாக அழித்துப்போடுவார். ஆனால் அவர்களை நீங்கள் துரத்தி, அவர்களுடைய நாட்டில் குடியிருக்கையில், யோசு 23:4உபா 19:1உபா 9:3யாத் 23:23சங் 78:55 அவர்கள் அழிக்கப்பட்ட பின்பும் நீங்கள் கவனமாய் இருங்கள். “இந்த நாடுகள் தங்கள் தெய்வங்களுக்கு எப்படிப் பணிசெய்கிறார்கள்? நாங்களும் அப்படியே செய்வோம்” என்று சொல்லி, அவர்களுடைய தெய்வங்களைப்பற்றி விசாரிப்பதன் மூலம் அவர்களுடைய கண்ணியில் சிக்கிக்கொள்ளாமல் கவனமாய் இருங்கள். எசேக் 20:32எரே 10:2உபா 7:16எபே 4:17யாத் 23:31-33எசேக் 20:28சங் 106:34-381 பேது 4:3-4 உங்களுடைய இறைவனாகிய யெகோவாவை அவர்களுடைய வழியில் வழிபடக்கூடாது. ஏனெனில், அவர்களுடைய தெய்வ வழிபாட்டில், யெகோவா வெறுக்கும் எல்லா வகையான அருவருப்பையும் அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் மகன்களையும், மகள்களையும்கூட தங்கள் தெய்வங்களுக்குப் பலியாக நெருப்பில் எரிக்கிறார்கள். எரே 32:352இராஜா 17:15-172இராஜா 21:2உபா 18:9-10எரே 7:31உபா 12:4உபா 9:5யாத் 23:2

நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றின்படியும் செய்யக் கவனமாயிருங்கள்; அவற்றுடன் ஒன்றையும் கூட்டவோ, அவற்றிலிருந்து ஒன்றையும் குறைக்கவோ வேண்டாம். உபா 4:2வெளி 22:18-19யோசு 1:7நீதி 30:6உபா 13:18மத் 28:20