ஆதியாகமம் 9

Genesis 9

நோவாவுடன் இறைவனின் உடன்படிக்கை

பின்பு இறைவன் நோவாவையும் அவன் மகன்களையும் ஆசீர்வதித்து சொன்னதாவது, “நீங்கள் பலுகி, எண்ணிக்கையில் பெருகி பூமியை நிரப்புங்கள்.” ஆதி 1:28ஆதி 9:7ஆதி 8:17ஆதி 1:22ஏசா 51:2சங் 128:3-4ஆதி 10:32ஆதி 2:3 உங்களைப்பற்றிய பயமும், பீதியும் பூமியிலுள்ள எல்லா விலங்குகளுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் ஊரும்பிராணிகளுக்கும், கடல்வாழ் மீன்களுக்கும் இருக்கும்; அவை உங்கள் அதிகாரத்தின்கீழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. சங் 8:4-8ஆதி 1:28ஓசி 2:18யாக் 3:7எசேக் 34:25யோபு 5:22-23லேவி 26:6ஆதி 2:19 நடமாடும் உயிரினங்கள் யாவும் உங்களுக்கு உணவாகும். தாவரங்களை உங்களுக்கு உணவாகக் கொடுத்ததுபோல, இப்பொழுது இவை எல்லாவற்றையும் உங்களுக்கு உணவாகக் கொடுக்கிறேன். ரோம 14:141 தீமோ 4:3-5கொலோ 2:21-22உபா 12:151 கொரி 10:311 கொரி 10:25-26கொலோ 2:161 கொரி 10:23

“ஆனாலும், இறைச்சியை அதன் உயிருள்ளபோது அதாவது இரத்தம் அதில் இருக்கும்போது சாப்பிடவேண்டாம். உபா 12:23உபா 12:16உபா 15:23அப் 15:20லேவி 7:26அப் 15:29லேவி 17:10-14லேவி 3:17 உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் நிச்சயமாக ஈடு கேட்பேன். ஒவ்வொரு மிருகத்திடமும் ஒவ்வொரு மனிதரிடமும் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவர்களோடிருக்கும் சக மனிதரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன். யாத் 21:28-29யாத் 21:12ஆதி 4:9-10எண் 35:31-33சங் 9:12உபா 21:1-9யாத் 20:13லேவி 19:16

“யாராவது மனித இரத்தத்தைச் சிந்தினால், லேவி 24:17மத் 26:52வெளி 13:10யாத் 21:12-14எண் 35:33ஆதி 1:26-27யாக் 3:9ஆதி 5:1

அவர்களுடைய இரத்தமும் மனிதராலேயே சிந்தப்பட வேண்டும்;

ஏனெனில், இறைவன் மனிதரை

இறைவனின் சாயலிலேயே படைத்திருக்கிறார்.

நீங்களோ, இனவிருத்தியில் பெருகி எண்ணிக்கையில் அதிகரியுங்கள்; பூமியில் பெருகி, விருத்தியடையுங்கள்.” ஆதி 9:1ஆதி 1:28ஆதி 9:19ஆதி 8:17

பின்பு இறைவன் நோவாவிடமும், அவனுடனிருந்த அவன் மகன்களிடமும்: “நான் உங்களுடனும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியுடனும் இப்பொழுது என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். ஆதி 6:18ஏசா 54:9-10ரோம 1:3ஆதி 17:7-8ஆதி 9:11ஆதி 9:17ஆதி 22:17எரே 33:20 உங்களுடன் பேழையிலிருந்து வெளியேறிய உயிரினங்களான பறவைகள், வளர்ப்பு மிருகங்கள், காட்டு மிருகங்கள் ஆகிய பூமியின் எல்லா உயிரினங்களுடனும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். சங் 145:9ஆதி 8:1ஆதி 9:15-16யோபு 38:1-41யோபு 41:1-34யோனா 4:11சங் 36:5-6 ‘வெள்ளத்தினால் இனி ஒருபோதும் எல்லா உயிர்களும் அழிக்கப்படமாட்டாது; பூமியை அழிக்க இனி ஒருபோதும் வெள்ளப்பெருக்கு உண்டாகாது’ என்று உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன்” என்றார். ஏசா 54:9ஆதி 8:21-222 பேது 3:7ஆதி 7:21-232 பேது 3:11

மேலும் இறைவன், “நான் உங்களோடும், உங்களோடிருக்கும் எல்லா உயிரினங்களோடும், வரப்போகும் எல்லா சந்ததிகளோடும் ஏற்படுத்தும் உடன்படிக்கையின் அடையாளம் இதுவே: ஆதி 17:11மத் 26:26-28யாத் 12:131 கொரி 11:23-25யாத் 13:16ஆதி 9:17யோசு 2:12 நான், என் வானவில்லை மேகங்களில் அமைத்திருக்கிறேன், பூமிக்கும் எனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளம் இதுவே. எசேக் 1:28வெளி 10:1வெளி 4:3 நான் பூமிக்கு மேலாக மேகங்களை வரப்பண்ணுகையில், அம்மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம், உங்களோடும் எல்லாவித உயிரினங்களோடும் நான் செய்துகொண்ட என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். இனி ஒருபோதும் எல்லா உயிர்களையும் அழிக்கும்படி தண்ணீர் வெள்ளமாய் பெருகாது. உபா 7:9எசேக் 16:60ஏசா 54:8-10யாத் 28:121 இராஜா 8:23லேவி 26:42-45சங் 106:45எரே 14:21 மேகங்களில் வானவில் தோன்றும்போதெல்லாம் நான் அதைப் பார்த்து, இறைவனுக்கும் பூமியிலுள்ள எல்லாவித உயிரினங்களுக்கும் இடையே உள்ள நித்திய உடன்படிக்கையை நினைவுகூருவேன்” என்றார். எரே 32:40ஏசா 54:8-102 சாமு 23:5ஆதி 17:13ஆதி 17:19எபி 13:20ஆதி 17:7ஆதி 8:21-22

இப்படியாக இறைவன் நோவாவிடம், “எனக்கும் பூமியிலுள்ள எல்லா உயிர்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே” என்று சொன்னார்.

நோவாவின் மகன்கள்

பேழையிலிருந்து வெளியேறிய நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களாவர். காம் கானானின் தகப்பன். ஆதி 10:1ஆதி 10:6ஆதி 9:25-27ஆதி 9:231 நாளாக 1:4 நோவாவின் மூன்று மகன்கள் இவர்களே; இவர்களிலிருந்தே பூமி எங்கும் பரந்திருக்கும் மக்கள் வந்தார்கள். 1 நாளாக 1:4-28ஆதி 10:2-32ஆதி 5:32ஆதி 8:17

நோவா நிலத்தைப் பயிரிடுகிறவனாகி, திராட்சைத் தோட்டமொன்றை உண்டாக்கத் தொடங்கினான். உபா 20:6உபா 28:30பிரச 5:9ஆதி 3:18-19ஆதி 3:23ஆதி 4:2ஆதி 5:29ஏசா 28:24-26 அவன் ஒரு நாள் தோட்டத்தின் திராட்சை இரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தினுள்ளே உடை விலகிய நிலையில் கிடந்தான். ஆப 2:15-16நீதி 20:1நீதி 23:31-32கலா 5:21தீத் 2:21 கொரி 10:12பிரச 7:20ஆதி 19:32-36 அப்பொழுது கானானின் தகப்பனான காம், தன் தகப்பனின் நிர்வாணத்தைக் கண்டு, வெளியே போய் தன் இரு சகோதரருக்கும் அதைத் தெரியப்படுத்தினான். நீதி 30:17கலா 6:11 கொரி 13:6மத் 18:15சங் 40:15ஆதி 10:15-19ஆதி 10:6ஒபதி 1:12-13 ஆனால் சேமும் யாப்பேத்தும் ஓர் உடையை எடுத்துத் தம் இருவர் தோளிலும் போட்டவாறு, பின்னிட்டுச் சென்று தங்கள் தகப்பனின் நிர்வாணத்தை மூடினார்கள். அவர்கள் தங்கள் தகப்பனின் நிர்வாணத்தைக் காணாதபடிக்குத் தங்கள் முகங்களை மறுபக்கமாகத் திருப்பிக்கொண்டார்கள். கலா 6:1யாத் 20:121 பேது 2:171 பேது 4:81 தீமோ 5:11 தீமோ 5:171 தீமோ 5:19லேவி 19:32

நோவா வெறி தெளிந்து எழுந்தபோது, தன் இளையமகன் தனக்குச் செய்ததை அறிந்தான். எனவே அவன், உபா 27:16யோசு 9:23நியாயாதி 1:28-301 இராஜா 9:20-21யோவா 8:34யோசு 9:272 நாளாக 8:7-8ஆதி 9:22

“கானான் சபிக்கப்படட்டும்!

அவன் தன் சகோதரர்களிலும்

அடிமைகளிலும் கீழ்ப்பட்டவனாய் இருக்கட்டும்.”

மேலும் நோவா சொன்னதாவது: சங் 144:15ஆதி 12:1-3எபி 11:16உபா 33:26ஆதி 10:10-26ஆதி 27:37லூக் 3:23-36ரோம 9:5

“சேமின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக!

கானான் சேமுக்கு அடிமையாய் இருப்பானாக.

இறைவன் யாப்பேத்தின் எல்லையை விரிவுபடுத்துவாராக; ரோம 11:12ரோம 15:12எபே 2:13-14எபே 3:6எபி 11:9-10எபே 2:19எபே 3:13ஓசி 2:14

யாப்பேத் சேமின் கூடாரங்களில் குடியிருப்பானாக,

கானான் யாப்பேத்துக்கு அடிமையாய் இருப்பானாக.”

பெருவெள்ளத்திற்கு பிறகு நோவா முந்நூற்று ஐம்பது வருடங்கள் வாழ்ந்தான். நோவா மொத்தம் 950 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். ஆதி 5:27ஆதி 5:32சங் 90:10ஆதி 11:11-25ஆதி 5:20ஆதி 5:5