ரெகொபெயாம் எருசலேமை வந்தடைந்தபோது, யூதா, பென்யமீன் குடும்பத்தில் 1,80,000 போர்வீரரை ஒன்றுகூட்டினான். இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டு முழு அரசையும் தனது ஆட்சிக்குட்படுத்தவே அவர்கள் திரட்டப்பட்டனர். 1 இராஜா 12:21-24நீதி 21:30-31சங் 33:10சங் 33:16
ஆனால் இறைவனின் மனிதன் செமாயாவுக்கு இந்த யெகோவாவின் வார்த்தை வந்தது: 2 நாளாக 12:151 இராஜா 12:22-241 சாமு 2:271 தீமோ 6:112 நாளாக 12:5-72 நாளாக 8:14உபா 33:1 “நீ யூதாவின் அரசனான சாலொமோனின் மகன் ரெகொபெயாமுக்கும், யூதாவிலும் பென்யமீனிலுமுள்ள எல்லா இஸ்ரயேலருக்கும் சொல்லவேண்டியதாவது: 2இராஜா 17:34யாத் 24:4ஆதி 49:28பிலி 3:5வெளி 7:4-8 ‘யெகோவா சொல்வது இதுவே: உங்கள் சக இஸ்ரயேலர்களுக்கு 1 எதிராக யுத்தம்செய்யப் போகவேண்டாம். இது எனது செயல்; நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்கிறார்’ ” என்றான். எனவே அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு எதிராக அணிவகுத்துச் செல்வதைவிட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். ஆதி 50:201 இராஜா 11:29-382 நாளாக 10:15-162 நாளாக 25:7-102 நாளாக 28:8-151 கொரி 6:5-81 யோவா 3:11-131 இராஜா 22:36
ரெகொபெயாம் யூதாவை அரணுள்ளதாக்குதல்
ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்து, யூதாவில் பாதுகாப்பிற்கென பட்டணங்களைக் கட்டினான். 2 நாளாக 8:2-62 நாளாக 11:232 நாளாக 14:6-72 நாளாக 16:62 நாளாக 17:122 நாளாக 26:62 நாளாக 27:4ஏசா 22:8-11 பெத்லெகேம், ஏத்தாம், தெக்கோவா, 1 நாளாக 4:321 சாமு 17:122 நாளாக 20:202 சாமு 14:2ஆமோ 1:1ஆதி 35:19நியாயாதி 15:8எரே 6:1 பெத்சூர், சோக்கோ, அதுல்லாம், யோசு 15:351 சாமு 22:12 சாமு 23:13யோசு 12:15யோசு 15:58மீகா 1:15 காத், மரேஷா, சீப், 1 நாளாக 18:11 சாமு 23:141 சாமு 23:19யோசு 15:24யோசு 15:44சங் 54:1 அதோராயீம், லாகீசு, அசேக்கா, 2 நாளாக 32:9யோசு 10:11யோசு 10:5யோசு 15:35யோசு 15:39 சோரா, ஆயலோன், எப்ரோன் ஆகிய அரணான பட்டணங்களை பென்யமீனிலும் யூதாவிலும் கட்டினான். 2 சாமு 2:11ஆதி 23:2யோசு 14:14யோசு 15:33யோசு 19:41-42யோசு 20:7எண் 13:22 அவன் அங்குள்ள பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவற்றிற்கு தளபதிகளை நியமித்தான். அவர்களுக்கான உணவையும், ஒலிவ எண்ணெயையும், திராட்சை இரசத்தையும் கொடுத்தான். 2 நாளாக 11:232 நாளாக 17:19ஏசா 22:10-11 அவன் எல்லாப் பட்டணங்களிலும் கேடயங்களையும், ஈட்டிகளையும் வைத்து அவற்றை மிகவும் பலப்படுத்தினான். அப்படியே யூதாவும், பென்யமீனும் அவனுடையதாயிற்று. 2 நாளாக 26:14-152 நாளாக 32:52 சாமு 13:192 சாமு 13:22
இஸ்ரயேல் எங்குமுள்ள ஆசாரியரும், லேவியர்களும் அவர்களுடைய எல்லைகளிலிருந்து அவனுக்கு ஆதரவு வழங்கினர். லேவியர் யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் மகன்களும் புறக்கணித்ததால், தங்கள் விளைச்சல் நிலங்களையும், சொத்துக்களையும்விட்டு யூதாவுக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள். 2 நாளாக 13:9எண் 35:2-51 இராஜா 12:28-331 நாளாக 6:66-811 இராஜா 13:33யோசு 21:20-42லேவி 27:30-34எண் 18:21-28 ஆனால் யெரொபெயாம் தான் செய்திருந்த வழிபாட்டு மேடைகளுக்கும், ஆடு, கன்றுக்குட்டி விக்கிரகங்களுக்குமென தனது சொந்த ஆசாரியர்களை நியமித்தான். 1 இராஜா 12:281 இராஜா 12:311 இராஜா 13:33உபா 32:171 இராஜா 14:91 தீமோ 4:1யாத் 32:31யாத் 32:4-8 இஸ்ரயேலர் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் தேடவேண்டும் எனத் தங்கள் இருதயத்தில் நினைத்தவர்கள், தங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவுக்கு பலி செலுத்துவதற்கென லேவியர்களைப் பின்பற்றி எருசலேமுக்குப் போனார்கள். 2 நாளாக 15:91 நாளாக 16:291 நாளாக 22:11 சாமு 7:3-42 நாளாக 30:112 நாளாக 30:18-19அப் 11:23தானி 6:14 இவ்வாறு அவர்கள் மூன்று வருடங்கள் சாலொமோனின் மகனான ரெகொபெயாமுக்கு உதவிசெய்து, யூதாவின் அரசாட்சியை நிலைநிறுத்திப் பெலப்படுத்தினார்கள்; இந்த மூன்று வருடங்களும் அவர்கள் தாவீது, சாலொமோன் நடந்த வழிகளில் நடந்தார்கள். 2 நாளாக 12:12 நாளாக 1:1-122 நாளாக 7:17-192 நாளாக 8:13-16ஓசி 6:4மத் 13:20-21
ரெகொபெயாமின் குடும்பம்
ரெகொபெயாம் மகலாத்தைத் திருமணம் செய்தான். இவள் தாவீதின் மகன் எரிமோத்திற்கும் ஈசாயின் மகனான எலியாபின் மகள் அபியாயேலுக்கும் பிறந்தவள். 1 சாமு 16:61 நாளாக 27:181 சாமு 17:131 சாமு 17:281 நாளாக 2:13 மகலாத் அவனுக்கு எயூஸ், ஷெமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள். பின்பு அவன் அப்சலோமின் மகளான மாக்காளைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு அபியா, அத்தாய், சீசா, செலோமித் ஆகியோரைப் பெற்றாள். 2 நாளாக 13:21 இராஜா 15:1-22 நாளாக 11:212 நாளாக 12:16மத் 1:7 ரெகொபெயாம் தனது மற்ற மனைவியரையும், வைப்பாட்டிகள் எவரையும்விட, அப்சலோமின் மகளான மாக்காள்மீதே அன்பாயிருந்தான். அவனுக்கு எல்லாமாக மொத்தம் பதினெட்டு மனைவிகளும், அறுபது வைப்பாட்டிகளும், இருபத்தெட்டு மகன்களும், அறுபது மகள்களும் இருந்தார்கள். 1 இராஜா 11:3உபா 17:17நியாயாதி 8:302 சாமு 3:2-52 சாமு 5:132 நாளாக 11:23உன்னத 6:8-91 நாளாக 3:1-9
ரெகொபெயாம் மாக்காளின் மகன் அபியாவை அரசனாக்கும்படி, அவனுடைய சகோதரருக்குள் முதன்மையான இளவரசனாக்கினான்; அவனையே அரசனாக்க வேண்டுமென்றிருந்தான். உபா 21:15-171 நாளாக 29:11 நாளாக 5:1-2 அவன் ஞானமாய் நடந்து, தன் மகன்களில் சிலரை பென்யமீன், யூதா நாடுகளெங்குமுள்ள அரணுள்ள பட்டணங்களில் பிரிந்து பரவலாய் இருக்கச்செய்தான். அவன் அவர்களுக்கு ஏராளமான உணவுப் பொருட்களையும், அவர்களுக்கென அநேக மனைவிகளையும் கொடுத்தான். 1 இராஜா 1:5-62 நாளாக 10:8-152 நாளாக 21:3ஆதி 25:6லூக் 16:8