ஆகாபுக்கு எதிரான இறைவாக்கு
யோசபாத் பெரும் செல்வமும் கனமும் உள்ளவனாய் இருந்தான். அவன் ஆகாபுடன் திருமணத்தின்மூலம் உறவுமுறை கொண்டிருந்தான். 2 நாளாக 17:52 நாளாக 21:62 நாளாக 19:22இராஜா 8:181 இராஜா 16:31-331 இராஜா 21:252 நாளாக 1:11-152 நாளாக 17:12 சில வருடங்களுக்குப் பின்பு யோசபாத் சமாரியாவுக்கு ஆகாபினிடத்திற்கு போனான்; ஆகாப் அவனுக்கும் அவனுடன் வந்த மக்களுக்குமாக ஆடுமாடுகளை வெட்டினான். ஆகாப் ராமோத் கீலேயாத்தைத் தாக்குவதற்கு யோசபாத்தைத் தூண்டினான். 1 இராஜா 1:92 நாளாக 19:22இராஜா 9:11 இராஜா 17:71 இராஜா 22:2-351 இராஜா 4:13உபா 4:43ஏசா 22:12-13 இஸ்ரயேலின் அரசன் ஆகாப், யூதாவின் அரசன் யோசபாத்திடம், “நீ கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு எதிராகப் போக என்னுடன் வருவாயா?” எனக் கேட்டான். 1 இராஜா 22:42இராஜா 3:72 யோவா 1:10-11எபே 5:11சங் 139:21
அதற்கு யோசபாத், “உம்மைப் போலவே நானும் ஆயத்தமாயிருக்கிறேன். என்னுடைய மக்கள் உம்முடைய மக்களைப் போலவும் இருக்கிறோம். நாங்கள் உன்னுடன் யுத்தத்தில் இணைவோம்” என்றான். மேலும் யோசபாத் இஸ்ரயேல் அரசனிடம், “முதலில் யெகோவாவின் ஆலோசனையைத் தேடுங்கள்” என்று சொன்னான். எரே 21:21 சாமு 23:21 சாமு 23:41 சாமு 23:9-122 சாமு 2:12 சாமு 5:192 சாமு 5:231 இராஜா 22:5-6
எனவே இஸ்ரயேலின் அரசன் இறைவாக்கினர்களான நானூறு மனிதரை ஒன்றுதிரட்டி அவர்களிடம், “நாம் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்குப் போகலாமா? அல்லது போகக்கூடாதா?” என்று கேட்டான். 1 இராஜா 18:192 நாளாக 18:142 நாளாக 18:20-212இராஜா 3:132 தீமோ 4:3எசேக் 13:22எசேக் 13:3-16எரே 23:14
அதற்கு அவர்கள், “நீர் போகலாம், இறைவன் அதை அரசனாகிய உமது கையில் கொடுப்பார்” என பதிலளித்தார்கள்.
ஆனால் யோசபாத், “நாம் விசாரிப்பதற்கு யெகோவாவின் இறைவாக்கினன் யாராவது இங்கே இல்லையா?” என்று கேட்டான். 1 இராஜா 22:7-92இராஜா 3:11-13
அதற்கு இஸ்ரயேலின் அரசன் ஆகாப் யோசபாத்திடம், “யெகோவாவிடம் விசாரிக்கும்படி இன்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால் நான் அவனை வெறுக்கிறேன். ஏனெனில் அவன் எப்போதும் என்னைப்பற்றி நன்மையாக அல்ல தீமையாகவே இறைவாக்கு சொல்லுவான். இம்லாவின் மகன் மிகாயாவே அவன்” என்றான். ஆமோ 5:10மீகா 2:71 இராஜா 18:171 இராஜா 21:20ஏசா 30:10லூக் 6:221 இராஜா 18:41 இராஜா 19:10
அப்பொழுது யோசபாத், “அரசனாகிய நீர் அவ்விதமாகக் கூறக்கூடாது” என்றான்.
எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் தனது அதிகாரிகளில் ஒருவனை அழைத்து, “இம்லாவின் மகன் மிகாயாவை உடனடியாகக் கூட்டிக்கொண்டு வாருங்கள்” என்றான். 1 நாளாக 28:11 இராஜா 22:91 சாமு 8:152 நாளாக 18:25-26தானி 1:3தானி 1:7-8ஏசா 39:7
இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் அரச உடைகளை அணிந்தவர்களாய் சமாரியாவின் வாசலில், சூடடிக்கும் களத்திலிருந்த அரியணையில் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள்முன் எல்லா இறைவாக்கினரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டிருந்தனர். 1 இராஜா 22:10-122 நாளாக 18:29தானி 7:9எசேக் 26:16ஏசா 14:9எரே 27:14-16மத் 11:8மத் 19:28 அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா இரும்பினால் கொம்புகளைச் செய்து அவர்களைப் பார்த்து, “யெகோவா சொல்வது இதுவே: இந்த இரும்புக் கொம்புகளால் சீரியர் முழுவதுமாக அழியும்வரைக்கும் அவர்களைக் குத்திக் கொல்வீர்கள்” என்றான். 2 தீமோ 3:8எசேக் 13:7எசேக் 22:28எரே 23:17எரே 23:21எரே 23:25எரே 23:31எரே 27:2
மற்ற எல்லா இறைவாக்கினர்களும் அதையே வாக்காக உரைத்து, “கீலேயாத்திலுள்ள ராமோத்தை தாக்கி வெற்றிகொள்ளுங்கள். ஏனெனில் யெகோவா அதை அரசராகிய உமது கையில் தருவார்” என்றார்கள். 2 நாளாக 18:122 நாளாக 18:33-342 நாளாக 18:52 பேது 2:1-3யூதா 1:16மீகா 3:5நீதி 24:24-25வெளி 16:13-14
மிகாயாவை அழைத்துவரப்போன தூதுவன் அவனிடம், “எல்லா இறைவாக்கினர்களும் ஒரேவிதமாகவே வாக்கு உரைத்து அரசனுக்கு வெற்றியையே அறிவிக்கிறார்கள். நீயும் அப்படியே பேசி அரசனுக்குச் சாதகமானதையே சொல்” என்றான். 1 கொரி 2:14-16ஆமோ 7:13ஓசி 7:3ஏசா 30:10யோபு 22:13யோசு 9:2மீகா 2:11மீகா 2:6
ஆனால் மிகாயா அவனிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் எனது இறைவன் சொல்வதை மட்டுமே நான் சொல்வேன் என்பதும் நிச்சயம்” என்றான். எண் 22:35எண் 22:18-20எண் 24:131 கொரி 11:231 இராஜா 22:141 தெச 2:42 கொரி 2:17அப் 20:27
அவன் வந்து சேர்ந்தபோது ஆகாப் அரசன் அவனிடம், “மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு எதிராக யுத்தத்திற்கு போகலாமா அல்லது போகக்கூடாதா?” என்று கேட்டான். 1 இராஜா 18:271 இராஜா 22:15ஆமோ 4:4-5பிரச 11:1புலம் 4:21மத் 26:45
மிகாயா அதற்குப் பதிலாக, “போய்த் தாக்கி வெற்றிபெறுங்கள்; அவர்கள் உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்” என்று சொன்னான்.
அரசன் அவனிடம், “யெகோவாவின் பெயரில் உண்மையைத் தவிர வேறொன்றும் சொல்ல வேண்டாமென எத்தனை தடவை உன்னை நான் ஆணையிட வைக்கவேண்டும்?” எனக் கேட்டான். 1 இராஜா 22:161 சாமு 14:24அப் 19:13மத் 26:63மாற் 5:7
அப்பொழுது மிகாயா, “இஸ்ரயேலர் எல்லோரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் மலைகளில் சிதறடிக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். ‘இவர்களுக்குத் தலைவன் இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்கு சமாதானத்துடன் போகட்டும்’ என்று யெகோவா சொன்னார்” என்றான். மத் 9:361 இராஜா 22:17எசேக் 34:5-6எசேக் 34:8மாற் 6:34எண் 27:171 இராஜா 22:34-362 நாளாக 18:33-34
அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஆகாப், யோசபாத் அரசனிடம், “அவன் எப்போதும் எனக்கு நன்மையானதையல்ல தீமையானதையே இறைவாக்காகச் சொல்வான் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்றான். 1 இராஜா 22:182 நாளாக 18:7எரே 43:2-3நீதி 29:1
தொடர்ந்து மிகாயா, “ஆகவே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். யெகோவா தமது அரியணையில் அமர்ந்திருப்பதையும், அவரது வலதுபக்கத்திலும், இடது பக்கத்திலும் வானத்தின் எல்லா சேனைகளும் நிற்பதையும் நான் கண்டேன். தானி 7:9ஏசா 6:1-51 இராஜா 22:19-23அப் 7:55-56ஆமோ 7:16ஆதி 32:2ஏசா 39:5எரே 2:4 அப்பொழுது யெகோவா அந்த சேனையிடம், ‘இஸ்ரயேலின் அரசன் ஆகாபை, கீலேயாத்திலுள்ள ராமோத்தைத் தாக்குவதற்கும், அங்கே அவன் சாகும்படி போவதற்கும் அவனைத் தூண்டிவிடுகிறவன் யார்?’ எனக் கேட்டார். 1 இராஜா 22:202 நாளாக 25:192 நாளாக 25:82 தெச 2:11-12எசேக் 14:9ஏசா 54:16ஏசா 6:9-10யாக் 1:13-14
“அதற்கு ஒரு ஆவி ஒருவிதமாகவும், இன்னொரு ஆவி இன்னொரு விதமாகவும் வித்தியாசமான யோசனை கூறின. கடைசியாக ஒரு ஆவி முன்னேவந்து யெகோவாவுக்கு முன்பாக நின்று, ‘நான் அவனைத் தூண்டுவேன்’ என்றது. யோபு 1:62 கொரி 11:13-152 கொரி 11:3யோபு 2:1
“ ‘எவ்விதமாக?’ என்று யெகோவா கேட்டார்.
“ ‘நான் போய் அவனுடைய எல்லா இறைவாக்கினர்களின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன்’ என்றது. யோவா 8:441 இராஜா 22:21-221 யோவா 4:62 நாளாக 18:192 நாளாக 18:22ஆதி 3:4-5நியாயாதி 9:23யோபு 1:12
“ ‘போய் அவ்வாறே செய், நீ அவனைத் தூண்டி வெற்றிபெறுவாய்’ என யெகோவா கூறினார்.
“அவ்வாறே இப்பொழுதும் யெகோவா உனது இறைவாக்கினர்களின் வாய்களில் பொய்யின் ஆவியை வைத்திருக்கிறார். யெகோவா உனக்குப் பேரழிவையே நியமித்திருக்கிறார்” என்றான். எசேக் 14:9ஏசா 19:14யோபு 12:161 தீமோ 4:1-22 நாளாக 18:172 நாளாக 18:72 நாளாக 25:182 கொரி 11:11-13
அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா முன்பாகப் போய் மிகாயாவின் முகத்தில் அறைந்தான். பின் அவனிடம், “யெகோவாவின் ஆவியானவர் என்னைவிட்டு உன்னுடன் பேச வரும்போது, எந்த வழியாக வந்தார்” என்றும் மிகாயாவைக் கேட்டான். மாற் 14:65எரே 20:21 இராஜா 22:23-252 நாளாக 18:10ஏசா 50:5-6எரே 29:26-27யோவா 9:40-41புலம் 3:30
அதற்கு மிகாயா, “நீ ஒளிப்பதற்கு ஒரு உள் அறையினுள் போகும்நாளில் இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்” என்றான். 1 இராஜா 20:30ஏசா 26:11ஏசா 26:20எரே 28:16-17எரே 29:21-22எரே 29:32
அப்பொழுது இஸ்ரயேலின் அரசனான ஆகாப், “மிகாயாவைப் பிடித்து நகர ஆளுநனான ஆமோனிடமும், அரசனின் மகனான யோவாஸினிடமும் கொண்டுபோய், 2 நாளாக 18:82 நாளாக 34:8அப் 24:25-27எரே 37:15-21எரே 38:6-7 அவர்களிடம், ‘அரசன் கூறுவது இதுவே: நான் பாதுகாப்பாக திரும்பி வரும்வரையும் இவனைச் சிறையில் போடுங்கள். அப்பத்தையும், தண்ணீரையும் தவிர வேறொன்றையும் கொடுக்கக்கூடாது’ ” என்று கூறினான். 2 நாளாக 16:101 இராஜா 22:26-281 சாமு 25:211 தெச 5:2-32 நாளாக 18:152 கொரி 11:23அப் 22:22அப் 5:18
அதற்கு மிகாயா, “நீ பாதுகாப்பாகத் திரும்பி வந்தால், யெகோவா என்னைக்கொண்டு பேசவில்லை” என்று சொல்லி, “மக்களே, நீங்கள் எல்லோரும் எனது வார்த்தைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்!” என்றும் சொன்னான். அப் 13:10-11ஆமோ 9:10லூக் 20:45-46மத் 13:9மத் 15:10மீகா 1:2மாற் 7:14எண் 16:29
ஆகாப் கொல்லப்படுதல்
எனவே இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு போனார்கள். 1 இராஜா 22:29-33 இஸ்ரயேலின் அரசன் யோசபாத்திடம், “நான் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்கு வருகிறேன். நீர் உமது அரச உடைகளை உடுத்திக்கொள்ளும்” என்றான். அப்படியே இஸ்ரயேலின் அரசன் ஆகாப் மாறுவேடம் போட்டு யுத்தத்திற்குப் போனான். 1 சாமு 28:81 இராஜா 14:2-61 இராஜா 20:382 நாளாக 35:22-23எரே 23:24யோபு 24:15நீதி 26:25சங் 12:2
இப்பொழுது சீரிய அரசனோ தனது தேர்ப்படைத் தளபதிகளிடம், “நீங்கள் இஸ்ரயேலின் அரசனைத் தவிர சிறியவனோ, பெரியவனோ வேறு யாருடனும் சண்டையிட வேண்டாம்” எனக் கட்டளையிட்டிருந்தான். 1 இராஜா 20:33-341 இராஜா 20:422 நாளாக 15:13உபா 1:17ஆதி 19:11 தேர்ப்படை தளபதிகள் யோசபாத்தைக் கண்டபோது, “நிச்சயமாக இவன்தான் இஸ்ரயேலின் அரசன்” என்று நினைத்து அவனைத் தாக்குவதற்குத் திரும்பினார்கள். ஆனால் யோசபாத் கதறினான். யெகோவா அவனுக்கு உதவி செய்தார். இறைவன் அவர்களை அவனிடமிருந்து விலகிப்போகச் செய்தார். 2 நாளாக 13:14சங் 118:132 கொரி 1:9-10நெகே 1:11நீதி 16:7நீதி 21:1சங் 116:1-2சங் 34:7 தேர்ப்படைத் தளபதிகள் அவன் இஸ்ரயேலின் அரசன் ஆகாப் அல்ல என்பதைக் கண்டபோது, அவனைப் பின்தொடர்வதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள். 1 இராஜா 22:33
ஆனால் ஒருவன் தனது வில்லை உருவி குறிபார்க்காமல் எய்தபோது, இஸ்ரயேலின் அரசன் ஆகாபின் ஆயுதக் கவசங்களின் இடைவெளி வழியாக அது அவனைத் தாக்கியது. அரசன் ஆகாப் தேரோட்டியிடம், “தேரைத் திருப்பிக்கொண்டு என்னைப் போர்க்களத்துக்கு வெளியே கொண்டுபோ. நான் காயப்பட்டு விட்டேன்” என்றான். 1 இராஜா 22:34-352 நாளாக 35:232 சாமு 15:11 அந்த நாள்முழுவதும் கடும் போர் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் ஆகாப் சாயங்காலம்வரை சீரியரின் பக்கம் பார்த்தபடி, தேரில் சாய்ந்துகொண்டு நின்றான். பின் சூரியன் மறையும் வேளையில் அவன் இறந்தான். நீதி 13:212 நாளாக 18:162 நாளாக 18:192 நாளாக 18:27எண் 32:23நீதி 28:17