2 நாளாகமம் 7

2 Chronicles 7

ஆலய அர்ப்பணம்

சாலொமோன் ஜெபித்து முடித்தபோது, பரலோகத்திலிருந்து நெருப்பு கீழே இறங்கி தகன காணிக்கையையும், பலிகளையும் எரித்துப்போட்டது; யெகோவாவின் மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று. 1 இராஜா 18:381 நாளாக 21:26லேவி 9:23-241 இராஜா 18:24எசேக் 43:5எசேக் 44:4ஆதி 15:17மல்கி 3:1-2 யெகோவாவின் மகிமை ஆலயத்தை நிரப்பியதனால் ஆசாரியர்களால் ஆலயத்திற்குள் போகமுடியவில்லை. வெளி 15:82 நாளாக 5:14யாத் 24:17ஏசா 6:5 நெருப்பு கீழே இறங்கினதையும், யெகோவாவின் மகிமை ஆலயத்திற்கு மேலாய் இருப்பதையும் எல்லா இஸ்ரயேலரும் கண்டார்கள், அப்போது அவர்கள் நடைபாதையில் முழங்காலிட்டு முகங்குப்புற விழுந்து, 2 நாளாக 5:132 நாளாக 20:21எபி 7:24-25லூக் 1:50எஸ்றா 3:11ஏசா 63:7யாத் 4:31சங் 136:1-26

“அவர் நல்லவர்,

அவர் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது”

என்று அவரை வழிபட்டு, யெகோவாவுக்கு நன்றி செலுத்தினர்.

பின்பு அரசனும் எல்லா மக்களும் யெகோவாவுக்கு முன்பாக பலிகளைச் செலுத்தினார்கள். 1 இராஜா 8:62-63 அதோடு அரசன் சாலொமோன் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் பலியாகச் செலுத்தினான்; இவ்விதமாக அரசனும் எல்லா மக்களும் இறைவனின் ஆலயத்தை அர்ப்பணம் செய்தார்கள். யோவா 10:222 நாளாக 30:24எசேக் 45:171 நாளாக 29:211 இராஜா 8:62-632 நாளாக 1:62 நாளாக 15:112 நாளாக 2:4 ஆசாரியர்கள் தங்களுக்குரிய இடத்தில் நின்றார்கள். லேவியர்களும் யெகோவாவின் கீதவாத்திய கருவிகளை வைத்துக்கொண்டு நின்றார்கள். இவற்றைத் தாவீது அரசன் யெகோவாவைத் துதிப்பதற்காக செய்திருந்தான். “யெகோவாவின் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று சொல்லி அவன் நன்றி செலுத்தும்போது, இவை பயன்படுத்தப்பட்டன. லேவியர்களுக்கு எதிராக ஆசாரியர்கள் நின்று அவர்களின் எக்காளங்களை ஊதினார்கள். எல்லா இஸ்ரயேல் மக்களும் நின்றுகொண்டிருந்தனர். 2 நாளாக 5:121 நாளாக 15:16-212 நாளாக 7:31 நாளாக 13:81 நாளாக 15:241 நாளாக 16:341 நாளாக 16:39-421 நாளாக 16:4-6

சாலொமோன் அரசன் யெகோவாவின் ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை அர்ப்பணித்தான். அங்கே அவன் தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளின் கொழுப்பையும் செலுத்தினான். ஏனெனில் அவன் செய்திருந்த வெண்கல பலிபீடம் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், கொழுப்புப் பங்குகளையும் கொள்ளமுடியாதபடி சிறியதாயிருந்தது. 1 இராஜா 8:64-66எபி 13:10-122 நாளாக 36:142 நாளாக 4:1எண் 16:37-38

எனவே சாலொமோனும், மிகப்பெரிய கூட்டமாய் லேபோ ஆமாத் எல்லைமுதல் எகிப்து நதிவரை அவனோடிருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் அந்த நாளிலிருந்து ஏழுநாட்களுக்கு பண்டிகையை கொண்டாடும்படி பெருந்திரளாய் கூடினர். ஆதி 15:181 இராஜா 8:651 இராஜா 4:21-252 நாளாக 30:13ஆமோ 6:14உபா 16:13-15யோவா 7:2யோவா 7:27-39 எட்டாவது நாள் ஒன்றாகக் கூடினார்கள். ஏழுநாட்களுக்கு பலிபீட அர்ப்பணிப்பைக் கொண்டாடியிருந்தார்கள். இன்னும் ஏழுநாட்களுக்குப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். லேவி 23:361 இராஜா 8:652 நாளாக 30:23உபா 16:8யோவே 1:14நெகே 8:18 ஏழாம் மாதம் இருபத்துமூன்றாம் நாளில் சாலொமோன் மக்களை அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டான். தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தனது மக்களான இஸ்ரயேலருக்கும் யெகோவா செய்த எல்லா நன்மைகளுக்காகவும் மனதில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாய் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள். 1 இராஜா 8:66சங் 100:22 நாளாக 29:362 நாளாக 30:262 நாளாக 6:41அப் 16:34அப் 2:46உபா 12:12

யெகோவா சாலொமோனுக்குக் காட்சியளித்தல்

இவ்வாறு சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், அரச அரண்மனையையும் கட்டிமுடித்தான். யெகோவாவின் ஆலயத்தையும், தனது அரண்மனையையும் எவ்வாறு கட்டவேண்டுமென மனதில் எண்ணியிருந்தானோ அவ்வாறே எல்லாவற்றையும் வெற்றிகரமாக செய்துமுடித்தான். 1 இராஜா 9:1-92 நாளாக 2:1பிரச 2:10-11பிரச 2:4 அப்பொழுது இரவில் யெகோவா சாலொமோனுக்குத் காட்சியளித்து சொன்னதாவது: ஆதி 17:11 இராஜா 9:22 நாளாக 1:72 நாளாக 7:161 யோவா 5:14-152இராஜா 20:5அப் 10:31உபா 12:11

“நான் உனது விண்ணப்பத்தைக் கேட்டேன்; இந்த இடத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்.

“நான் மழை பெய்யாதபடி வானத்தை அடைத்து, அல்லது நாட்டை அழிக்கும்படி வெட்டுக்கிளிகளுக்கு கட்டளையிட்டு, அல்லது எனது மக்களுக்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது, 2 நாளாக 6:26-28உபா 11:17வெளி 11:6வெளி 3:72 சாமு 24:13-15யாத் 10:4-6எசேக் 14:19-21யோபு 12:14 எனது பெயரால் அழைக்கப்படும் என் மக்கள் தங்களைத் தாழ்த்தி மன்றாடி, என் முகத்தைத் தேடி, தங்கள் கொடிய வழிகளைவிட்டு விலகுவார்களேயானால், அப்பொழுது நான் பரலோகத்திலிருந்து கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் நாட்டைக் குணப்படுத்துவேன். புலம் 3:40-41ஏசா 55:6-7யாக் 4:9-10நீதி 28:132 நாளாக 6:37-39உபா 4:29-30எரே 33:62 நாளாக 33:12-13 இந்த இடத்தில் செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்திருக்கும்; என் செவிகள் கவனமாயிருக்கும். 1 பேது 3:122 நாளாக 6:402 நாளாக 6:20நெகே 1:6உபா 11:12சங் 65:2சங் 130:2 நான் என்றென்றைக்கும் என் பெயர் இந்த ஆலயத்திலிருக்கும்படி, அதைத் தெரிந்துகொண்டு, பரிசுத்தப்படுத்தியிருக்கிறேன். எனது கண்களும், எனது இருதயமும் எப்பொழுதும் அங்கிருக்கும். 2 நாளாக 7:152 நாளாக 7:122 நாளாக 6:5-61 இராஜா 9:32 நாளாக 6:20கொலோ 2:9யோவா 2:19-212 நாளாக 33:4-7

“நீயோ உனது தகப்பன் தாவீது செய்ததுபோல் எனக்கு முன்பாக நடந்து, நான் கட்டளையிட்டவற்றை எல்லாம் செய்து, எனது விதிமுறைகளையும் சட்டங்களையும் கைக்கொள்வாயானால், 1 இராஜா 11:38உபா 4:40எசேக் 36:27சகரி 3:71 நாளாக 28:91 இராஜா 2:31 இராஜா 3:141 இராஜா 8:25 நான் உனது தகப்பன் தாவீதுடன், ‘இஸ்ரயேலை ஆட்சிசெய்ய உனது மகன்களில் ஒருவனாவது ஒருபோதும் இல்லாமல் போகமாட்டான்’ என்று சொல்லி, உடன்படிக்கை செய்ததின்படியே உன் அரச அரியணையை நிலைநிறுத்துவேன். 2 நாளாக 6:162 சாமு 7:13-16எரே 33:20-211 இராஜா 9:5எரே 33:25-26சங் 132:11-12சங் 89:28-40

“ஆனால் நீங்களோ நான் உங்களுக்குக் கொடுத்த விதிமுறைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளாமல், வேறே தெய்வங்களுக்குப் பணிசெய்து அவைகளை வழிபடும்படி விலகிப்போனால், உபா 28:15லேவி 26:14லேவி 26:33-461 நாளாக 28:91 இராஜா 11:4-81 இராஜா 9:6-71 சாமு 12:25உபா 28:36-68 நான் இஸ்ரயேலருக்குக் கொடுத்த என் நாட்டிலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கிப் போடுவேன். நான் என் பெயருக்கென்று பரிசுத்தமாக்கிய இந்த ஆலயத்தையும் புறக்கணித்து விடுவேன். நான் அதை எல்லா மக்களுக்குள்ளும் பழிச்சொல்லாகவும், கேலிப்பொருளாகவும் ஆக்குவேன். 2இராஜா 17:20உபா 28:371 இராஜா 14:151 இராஜா 9:7உபா 29:28எரே 24:9எரே 45:4எரே 31:28 இந்த ஆலயம் அழிவின் குவியலாக மாறும். இதைக் கடந்து போகிறவர்கள் இதைக்கண்டு திகைத்து, ‘இந்த நாட்டுக்கும் இந்த ஆலயத்துக்கும் யெகோவா ஏன் இப்படி செய்தார்?’ என்பார்கள். எரே 22:8-9எரே 16:10-12எரே 19:81 இராஜா 9:8-92 நாளாக 29:8உபா 29:24-28எரே 13:22எரே 22:28 அப்பொழுது மக்கள், ‘எகிப்திலிருந்து அவர்களுடைய முற்பிதாக்களை மீட்டுக் கொண்டுவந்த அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டார்கள். அவர்கள் வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றை வழிபட்டு, அவற்றிற்குப் பணிசெய்தார்கள். இதனால்தான் யெகோவா அவர்கள்மீது இந்த பேரழிவைக் கொண்டுவந்தார்’ என்பார்கள்.” தானி 9:12புலம் 4:13-152 நாளாக 36:17எசேக் 14:23எசேக் 36:17-20நியாயாதி 2:12-13எரே 1:16புலம் 2:16-17