ஏழு வாதைகளுடன் ஏழு தூதர்கள்
நான் பரலோகத்திலே பெரும் வியப்புக்குரிய இன்னுமொரு அடையாளத்தைப் பார்த்தேன்: ஏழு தூதர்கள் ஏழு வாதைகளுடன் நின்றார்கள்; இவை கடைசி வாதைகள்; ஏனெனில், இவற்றுடன் இறைவனுடைய கோபம் நிறைவுபெறும். லேவி 26:21வெளி 15:6-7தானி 4:2-3வெளி 21:9வெளி 19:15தானி 12:6-7தானி 6:27மத் 13:41-42 நான் கண்ணாடிக்கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். அதில் நெருப்பு கலந்திருந்தது. அதற்கருகில் அந்த மிருகத்தையும், அதனுடைய உருவச்சிலையையும், அதன் பெயருக்குரிய எண்ணையும் மேற்கொண்டு வெற்றிகொண்டவர்கள், நின்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் இறைவனால் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வீணைகளைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். வெளி 4:6வெளி 12:11வெளி 19:1-7வெளி 5:81 பேது 1:7வெளி 21:18மத் 3:11வெளி 13:14 அவர்கள் இறைவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவருடைய பாடலையும் பாடினார்கள்: சங் 111:2யாத் 15:1-18சங் 139:14வெளி 5:9-13சங் 145:17எபி 3:5ஓசி 14:9ஏசா 33:22
“எல்லாம் வல்ல இறைவனாகிய கர்த்தாவே, உமது செயல்கள் பெரிதானவை.
அவை வியக்கத்தகுந்தவை.
எல்லா யுகங்களுக்கும் அரசனாயிருக்கிறவரே,
உமது வழிகள் நீதியும் சத்தியமுமானவை.
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமல் இருப்பார்கள்? சங் 86:9எரே 10:7மல்கி 1:11சங் 22:27வெளி 11:15வெளி 14:7ஏசா 25:3ஏசா 45:23
யார் உமது பெயருக்கு மகிமையைக் கொடுக்காமலும் இருப்பார்கள்?
ஏனெனில், நீர் ஒருவரே பரிசுத்தர்.
எல்லா நாட்டினரும் வந்து உமக்கு முன்பாக
ஆராதனை செய்வார்கள்,
ஏனெனில், உமது நீதியான செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.”
இதற்குப் பின்பு, நான் நோக்கிப் பார்த்தபொழுது, பரலோகத்திலுள்ள ஆலயம் திறந்திருந்தது. இதுவே சாட்சியின் இறைசமுகக் கூடாரம். வெளி 11:19எண் 1:50மத் 27:51யாத் 38:21எண் 1:53யாத் 25:21 ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளுடன் ஏழு இறைத்தூதர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் சுத்தமான, பிரகாசமுள்ள மென்பட்டு உடையை உடுத்தியிருந்தார்கள்; தங்கள் மார்புகளைச் சுற்றி, தங்கச் சால்வைகளைக் கட்டியிருந்தார்கள். வெளி 1:13வெளி 15:1எசேக் 44:17-18யாத் 28:5-8லூக் 24:4வெளி 14:15 அப்பொழுது அந்த நான்கு உயிரினங்களில் ஒன்று, ஏழு தூதருக்கு ஏழு தங்கக் கிண்ணங்களைக் கொடுத்தது. அந்தக் கிண்ணங்கள், என்றென்றும் வாழ்கிற இறைவனின் கோபத்தால் நிறைந்திருந்தன. வெளி 10:6வெளி 16:2வெளி 5:8வெளி 15:1வெளி 21:9எரே 25:15சங் 75:8வெளி 4:6-9 அந்த ஆலயம் இறைவனுடைய மகிமையிலிருந்தும், அவருடைய வல்லமையிலிருந்தும் எழும்பிய புகையினால் நிறைந்திருந்தது. அந்த ஏழு இறைத்தூதர்களுடைய ஏழு வாதைகளும் நிறைவேறி முடியும்வரைக்கும், ஒருவராலும் அந்த ஆலயத்திற்குள் செல்ல முடியவில்லை. ஏசா 6:41 இராஜா 8:10-11யாத் 40:34-352 நாளாக 5:13-142 தெச 1:9சங் 29:9வெளி 15:1எரே 15:1