2 கொரிந்தியர் 13

2 Corinthians 13

இறுதி எச்சரிப்புகள்

இதோடு மூன்றாவது முறையாக நான் உங்களிடம் வருகிறேன். எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படவேண்டும் 1 என்று, வேதவசனம் சொல்கிறது. மத் 18:16உபா 19:15உபா 17:6யோவா 8:17-18எண் 35:302 கொரி 12:141 இராஜா 21:10எபி 10:28-29 நான் இரண்டாவது முறையாக உங்களிடம் வந்திருந்தபோது, ஏற்கெனவே உங்களை எச்சரித்திருந்தேன். இப்பொழுதும் நான் உங்களோடு இல்லாதிருந்தாலும், மீண்டும் உங்களை எச்சரிக்கிறேன்: நான் மீண்டும் வரும்போது, முன்பு பாவம் செய்தவர்களையும் இப்பொழுது பாவம் செய்கிறவர்களையும் தண்டிக்காமல் விடமாட்டேன். 2 கொரி 1:231 கொரி 5:52 கொரி 10:1-22 கொரி 10:8-112 கொரி 12:20-211 கொரி 4:19-212 கொரி 13:10 கிறிஸ்து என் மூலமாய்ப் பேசுகிறார் என்பதற்கு அத்தாட்சியை நீங்கள் கட்டாயப்படுத்திக் கேட்பதினால், நான் இப்படிச் செய்வேன். கிறிஸ்து உங்களிடையே பலம் குறைந்தவராக அல்ல, பலமுள்ளவராகவே செயலாற்றுகிறார். மத் 10:202 கொரி 10:8-102 கொரி 12:12லூக் 21:151 கொரி 9:1-31 கொரி 5:4-52 கொரி 10:42 கொரி 2:10 உண்மையில் அவர் வலுவற்ற மனித உடலில் சிலுவையில் அறையப்பட்டார். ஆனால், இறைவனுடைய வல்லமையினாலேயே அவர் உயிர் வாழ்கிறார். அப்படியே நாங்களும் அவருக்குள் பலவீனர்களாய் இருக்கிறோம். ஆனால் இறைவனுடைய வல்லமையினால் உங்கள்பொருட்டு ஊழியம் செய்ய அவருடன் உயிர்வாழ்வோம். 1 பேது 3:18ரோம 6:42 கொரி 10:3-42 தீமோ 2:11-12ரோம 6:8-111 கொரி 15:431 கொரி 2:3எபி 5:7

நீங்கள் விசுவாசத்தில் இருக்கிறீர்களா என்று உங்களையே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் உங்களையே சோதித்துப் பாருங்கள். கிறிஸ்து இயேசு உங்களில் குடியிருக்கிறார் என்ற உணர்வு உங்களுக்கு இல்லையா? அந்த உணர்வு உங்களில் இல்லாவிட்டால், நீங்கள் சோதனையில் தோற்றுப்போய்விட்டீர்கள் என்றே அர்த்தமாகும். புலம் 3:401 கொரி 11:28சங் 139:23-241 கொரி 9:27வெளி 2:51 கொரி 11:31கலா 6:4எபி 12:15 நாங்களோ சோதனையில் தோல்வியடையவில்லை என்பது உங்களுக்கு வெளிப்படும் என்றே நம்புகிறேன். 2 கொரி 12:202 கொரி 13:102 கொரி 13:3-4 நீங்கள் தீமையேதும் செய்யாதிருக்கும்படியாக நாங்கள் இறைவனிடம் மன்றாடுகிறோம். நாங்கள் இப்படி மன்றாடுவது, நாங்கள் சோதனையில் வெற்றியடைந்தோம் என்று மக்கள் காணவேண்டும் என்பதற்காக அல்ல. நாங்கள் தோல்வியடைந்தது போலக் காணப்பட்டாலும், நீங்கள் நன்மையானதையே செய்யவேண்டும் என்றே, நாங்கள் மன்றாடுகிறோம். யாக் 1:121 தெச 5:231 தீமோ 2:22 கொரி 6:8-92 தீமோ 2:152 தீமோ 4:18பிலி 1:9-11பிலி 4:8 ஏனெனில், சத்தியத்திற்கு எதிராக நாங்கள் எதையும் செய்யமுடியாது. சத்தியத்திற்காக மட்டுமே எல்லாவற்றையும் செய்கிறோம். நீதி 21:30மாற் 9:39அப் 4:28-30எபி 2:3-4எண் 16:28-351 தீமோ 1:20அப் 5:1-111 கொரி 5:4-5 நாங்கள் பெலவீனமாய் இருக்கின்றபோதும், நீங்கள் பெலமாய் இருக்கின்றதைக் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் முழுமையாக வளர்ச்சியடைய வேண்டும் என்றே நாங்கள் மன்றாடுகிறோம். 2 கொரி 13:111 கொரி 4:101 தெச 3:101 பேது 5:102 கொரி 12:5-102 கொரி 11:302 கொரி 13:7-82 கொரி 7:1 நான் உங்களிடம் வரும்போது, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரத்துடன் உங்களுடன் கடுமையாக நடந்துகொள்ள விரும்பவில்லை, உங்களைவிட்டுத் தூரமாய் இருக்கும்போது இவைகளைப் பற்றி நான் எழுதுகிறேன். கர்த்தர் எனக்குக் கொடுத்திருக்கிற அதிகாரம், உங்களை இடித்து வீழ்த்துவதற்குக் கொடுக்கப்படவில்லை, உங்களைக் கட்டி எழுப்புவதற்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. 2 கொரி 10:82 கொரி 2:3தீத் 1:131 கொரி 4:212 கொரி 10:22 கொரி 13:82 கொரி 12:20-212 கொரி 13:2

கடைசி வாழ்த்துதல்

கடைசியாக பிரியமானவர்களே, நான் விடைபெறுகிறேன். மகிழ்ச்சியாயிருங்கள். முழுநிறைவான வாழ்வுக்கு முயற்சியுங்கள். நான் சொன்னவற்றைக் கவனித்துக் கேளுங்கள். ஒரே மனதுடையவர்களாய் இருங்கள். சமாதானமாய் வாழுங்கள். அப்பொழுது அன்புக்கும், சமாதானத்திற்கும், அமைதிக்கும் உரியவரான இறைவன் உங்களுடனே இருப்பார். எபி 12:14ரோம 12:161 கொரி 1:10ரோம 15:33மாற் 9:50ரோம 12:181 யோவா 4:8-161 பேது 3:11

ஒருவரையொருவர் பரிசுத்த முத்தமிட்டு வாழ்த்துங்கள். ரோம 16:161 பேது 5:141 தெச 5:261 கொரி 16:20

பரிசுத்தவான்கள் எல்லோரும், தங்களுடைய வாழ்த்துதலைத் தெரிவிக்கிறார்கள். 1 பேது 5:132 யோவா 1:133 யோவா 1:14எபி 13:24பிலே 1:23-24பிலி 4:21-22ரோம 16:16ரோம 16:21-23

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், இறைவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் உங்கள் எல்லோருடனும் இருப்பதாக. எபே 2:22ரோம 5:51 கொரி 16:23ரோம 16:20யூதா 1:211 கொரி 6:19பிலி 2:12 கொரி 8:9