2 கொரிந்தியர் 6

2 Corinthians 6

இறைவனுடைய உடன் வேலையாட்களாகிய நாங்கள் இறைவனிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட கிருபையை வீணாக்க வேண்டாம் என உங்களை வருந்தி வேண்டிக்கொள்கிறோம். எபி 12:151 கொரி 3:91 பேது 4:102 கொரி 5:18-20கலா 2:21ரோம 12:12 கொரி 8:1-2கலா 4:11-12 ஏனெனில், அவர் சொன்னதாவது: ஏசா 49:8எபி 4:7எபி 3:13ஏசா 61:2எபி 3:7லூக் 19:42-44லூக் 4:19எசேக் 16:8

“என் தயவின் காலத்தில் நான் உங்களுக்கு செவிகொடுத்தேன்.

இரட்சிப்பின் நாளிலே நான் உங்களுக்கு உதவி செய்தேன்.” 1

நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்பொழுதே இறைவனது தயவின் காலம். இப்பொழுதே இரட்சிப்பின் நாள்.

பவுலின் கஷ்டங்கள்

எங்கள் ஊழியத்தைப்பற்றி யாரும் குறைகூறாதபடி, நாங்கள் எவருடைய வழியிலும் இடறுதலை ஏற்படுத்துகிறதில்லை. ரோம 14:131 கொரி 9:121 கொரி 10:32-331 கொரி 9:22மத் 17:27மத் 18:61 கொரி 10:23-241 கொரி 8:9-13 மாறாக, நாங்கள் இறைவனின் உண்மையான ஊழியர்கள் என்பதை எல்லாவிதத்திலும், எங்கள் நடத்தையின் மூலமாகக் காண்பிக்கிறோம்: எல்லாவற்றையும் சகித்தலிலும்; கஷ்டங்களிலும், துன்பங்களிலும், துயரங்களிலும்; 2 கொரி 12:102 கொரி 4:82 கொரி 11:271 கொரி 4:11-12ரோம 8:35-36ரோம 5:3-4பிலி 4:11-121 கொரி 3:5 அடிக்கப்பட்டதிலும், சிறைவைக்கப்பட்டதிலும், கலவரங்களில் அகப்பட்டதிலும்; கஷ்டமான வேலையில் ஈடுபட்டதிலும், இரவில் நித்திரை இல்லாமலும், உணவு இல்லாமல் இருந்ததிலும்; 2 கொரி 11:23-252 கொரி 11:27அப் 17:5அப் 19:23-34எபி 11:361 கொரி 15:101 கொரி 4:111 கொரி 7:5 தூய்மையிலும், விளங்கிக்கொள்வதிலும், பொறுமையிலும், தயவிலும்; பரிசுத்த ஆவியானவர் எங்களில் இருப்பதிலும், உண்மை அன்பிலும்; எபே 4:32கொலோ 1:27எபே 4:2கலா 5:222 கொரி 12:152 கொரி 2:42 கொரி 3:3கலா 3:5 சத்திய போதனையிலும், இறைவனின் வல்லமையில் நடப்பதிலும், நீதியின் ஆயுதத்தை வலதுகையிலும் இடது கையிலும் பிடித்திருப்பதிலும், எங்கள் முன்மாதிரியைக் காண்பிக்கிறோம்; 2 கொரி 4:22 கொரி 10:4-52 தீமோ 2:15எபே 6:11-201 தெச 5:82 கொரி 13:4எபே 3:202 தீமோ 4:7 நாங்கள் மதிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு, புகழப்பட்டு, தூற்றப்பட்டு, ஏமாற்றுக்காரர்கள் என எண்ணப்பட்ட போதிலும், நாங்கள் உண்மை ஊழியர்களாகவே இருக்கிறோம்; 1 பேது 4:14மத் 27:631 தீமோ 4:10அப் 24:5அப் 28:22வெளி 3:93 யோவா 1:12அப் 10:22 நாங்கள் அங்கீகரிக்கப் படாதவர்களென எண்ணப்பட்டாலும், அங்கீகரிக்கப் பட்டவர்களாக இருக்கிறோம்; நாங்கள் செத்தவர்கள் என சிலர் எண்ணினாலும், நாங்கள் தொடர்ந்து வாழ்கிறோம்; அடிக்கப்படுகிறோம், ஆனால் கொல்லப்படவில்லை; 2 கொரி 4:10-11ரோம 8:362 கொரி 1:8-102 கொரி 4:21 கொரி 4:92 கொரி 11:6சங் 118:17-181 கொரி 11:32 துக்கமடைகிறோம், ஆனால் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருக்கிறோம்; ஏழைகளாய் இருக்கிறோம், ஆனால் பலரைச் செல்வந்தர்களாக்குகிறோம்; நாங்கள் ஒன்றுமில்லாதவர்களாய் இருக்கிறோம், ஆனால் யாவும் இருக்கின்றது! வெளிச்சத்திற்கும், இருளுக்கும் ஐக்கியம் இருக்க முடியுமா? யோவா 16:222 கொரி 8:9யாக் 2:5வெளி 2:91 பேது 1:6-81 தீமோ 4:8எபி 10:34பிலி 4:4

கொரிந்தியரே, நாங்கள் உங்களோடு வெளிப்படையாய் பேசியிருக்கிறோம். நாங்கள் எங்கள் உள்ளங்களை உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறோம். 2 கொரி 12:152 கொரி 7:3-4சங் 119:32பிலி 1:82 கொரி 2:41 சாமு 2:1கலா 3:1பிலி 4:15 நாங்கள் உங்களுக்கு ஒரு தடையும் இன்றி, தாராளமாய் அன்புகாட்டியிருக்கிறோம். ஆனால் நீங்களோ, எங்களுக்கு அன்பு காட்டாமல் இருக்கிறீர்களே. 2 கொரி 7:2மீகா 2:7பிலி 1:81 யோவா 3:17யோபு 36:16பிரச 6:9நீதி 4:12 உங்களை என் பிள்ளைகள் என்றே எண்ணி, உங்களோடு இப்படிப் பேசுகிறேன். நீங்களும் எங்களுக்கு உங்கள் உள்ளங்களைத் திறந்து அன்பு செலுத்துங்கள். 1 யோவா 3:183 யோவா 1:41 கொரி 4:14-151 யோவா 2:11 யோவா 3:71 தெச 2:111 யோவா 2:12-141 யோவா 5:14-15

அவிசுவாசிகளோடு பிணைக்கப்பட வேண்டாம்

அவிசுவாசிகளுடன் ஒன்றாக பிணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் கொடுமைக்கும் இடையில், பொதுவானது என்ன? 1 கொரி 15:331 கொரி 10:21யாக் 4:4எபே 5:6-14லேவி 19:191 பேது 2:9-10சங் 26:4-5உபா 22:9-11 கிறிஸ்துவுக்கும், சாத்தானுக்கும் 2 இடையே என்ன இணக்கம் இருக்கிறது? விசுவாசிக்கும், அவிசுவாசிக்கும் இடையில் பொதுவானது என்ன இருக்கிறது? 1 கொரி 10:20-211 யோவா 5:11-131 இராஜா 18:211 சாமு 5:2-4அப் 5:14அப் 8:20எஸ்றா 4:3மாற் 16:16 இறைவனுடைய ஆலயத்திற்கும், விக்கிரகங்களுக்கும் இடையே என்ன உடன்பாடு உண்டு? ஏனெனில், நாம் ஜீவனுள்ள இறைவனின் ஆலயமாய் இருக்கிறோமே. இறைவன் உங்களைக்குறித்து இப்படியாக சொல்லியிருக்கிறார்: வெளி 21:3யாத் 29:45எபி 8:10லேவி 26:12எசேக் 37:26-27எரே 32:381 கொரி 3:16-17எசேக் 11:20

“நான் அவர்களுடன் வாழுவேன்.

அவர்களிடையே உலாவுவேன்.

நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன்.

அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்.” 3

ஆகவே, ஏசா 52:11வெளி 18:42 கொரி 7:1சங் 1:1-3எண் 16:26எஸ்றா 10:11நீதி 9:6அப் 2:40

“அவர்களைவிட்டு வெளியே வந்து,

பிரிந்திருங்கள்.

அசுத்தமான எதையும் தொடாதேயுங்கள்.

அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்,

என்று கர்த்தர் சொல்கிறார்.” 4

மற்றும், யோவா 1:12வெளி 21:72 சாமு 7:14ரோம 8:14-17கலா 4:5-7கலா 3:26எரே 31:9ரோம 8:29

“நான் உங்களுக்குத் தகப்பனாயிருப்பேன்.

நீங்கள் எனக்கு மகன்களாயும் மகள்களாயும் இருப்பீர்கள் என்று,

எல்லாம் வல்ல கர்த்தர் சொல்கிறார்.” 5