இஸ்ரயேல் இறைவனிடம் திரும்பவில்லை
ஏழைகளை ஒடுக்கி, வறியவரை நசுக்கும் பெண்களே, சங் 22:12ஆமோ 6:1ஆமோ 5:11எசேக் 39:18பிரச 4:11 இராஜா 16:24ஆமோ 2:6-8ஆமோ 3:9-10
“எங்களுக்குக் குடிவகைகளைக் கொண்டுவாருங்கள்”
என உங்கள் கணவர்களிடம் சொல்லுகிறவர்களே,
இந்த வார்த்தையைக் கேளுங்கள்;
நீங்கள் சமாரியா மலையிலுள்ள பாசானின்
கொழுத்த பசுக்களைப்போல் இருக்கிறீர்கள்.
எல்லாம் வல்ல ஆண்டவராகிய யெகோவா தமது பரிசுத்த பெயரினால் ஆணையிட்டார்: எரே 16:16சங் 89:35ஆப 1:15-16ஆமோ 6:8ஏசா 37:29எசேக் 39:4-5
“நிச்சயமாய் ஒரு காலம் வரும்.
அப்பொழுது நீங்கள் கொக்கிகளினாலும்,
உங்களில் எஞ்சியிருப்போரில் கடைசியானவர் வரைக்கும்
தூண்டில்களினாலும் இழுத்துக்கொண்டு செல்லப்படுவீர்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் எசேக் 12:5எசேக் 12:12ஏசா 31:7மத் 16:262இராஜா 25:42இராஜா 7:152இராஜா 7:7-8ஏசா 2:20
சுவர் வெடிப்புகளின் வழியாக ஓடிப்போவீர்கள்.
அர்மோன் மலைப் பக்கமாக நீங்கள் இழுத்தெறியப்படுவீர்கள்”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“சமாரியா மக்களே போங்கள்; பெத்தேலுக்குப் போய் பாவம் செய்யுங்கள். எசேக் 20:39ஓசி 4:15எண் 28:3-4ஆமோ 5:5ஓசி 12:11ஓசி 9:15மத் 23:32ஆமோ 3:14
கில்காலுக்குப் போய் இன்னும் அதிக பாவம் செய்யுங்கள்.
காலைதோறும் உங்கள் பலிகளையும்,
மூன்று வருடத்திற்கொரு முறை உங்கள் பத்தில் ஒரு பாகத்தையும் கொண்டுவாருங்கள்.
புளிப்பூட்டப்பட்ட அப்பத்தை நன்றிக் காணிக்கையாக எரியுங்கள். லேவி 22:18-21சங் 81:12ஓசி 9:10ஓசி 9:1லேவி 7:12-13மத் 15:13-14மத் 23:23மத் 6:2
உங்கள் சுயவிருப்புக் காணிக்கையைப் பற்றி பெருமையாய் பேசி
அவற்றைக்குறித்துப் புகழுங்கள்,
இஸ்ரயேலரே, இவற்றைத் செய்வதற்குத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள்”
என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
“ஆனால் நான் உங்கள் நகரங்கள் ஒவ்வொன்றிலும் பட்டினியையும், ஆகா 2:17எரே 5:3ஏசா 9:13வெளி 16:10-11ஓசி 5:15லேவி 26:26வெளி 2:211 இராஜா 17:1
பட்டணங்கள் ஒவ்வொன்றிலும் உணவுப் பற்றாக்குறையையும் கொண்டுவந்தேன்.
அப்படியிருந்தும், நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“அறுவடைக்கு இன்னும் மூன்று மாதம் இருக்கையில் யாத் 9:26எரே 3:32 நாளாக 7:13-14யாத் 10:23யாத் 9:4ஏசா 5:61 இராஜா 8:35-36உபா 11:17
நான் வேண்டிய மழையை அனுப்பாமல் விட்டேன்.
நான் ஒரு நகரத்துக்கு மழையை அனுப்பி,
இன்னொரு நகரத்திற்கு அதை அனுப்பாமல் விட்டேன்.
ஒரு வயலுக்கு மழை பெய்தது.
இன்னொன்றோ மழையின்றிக் காய்ந்தது.
மக்கள் ஊரூராகத் தண்ணீர் தேடி அலைந்து திரிந்தும், ஆமோ 4:61 இராஜா 18:5ஆகா 1:6ஆமோ 4:9-11எசேக் 4:16-17ஓசி 7:10ஏசா 41:17-18எரே 14:3-4
குடிப்பதற்குப் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.
அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“பலமுறை உங்கள் தோட்டங்களையும், திராட்சைத் தோட்டங்களையும் தாக்கினேன். உபா 28:22ஆகா 2:17யோவே 1:4ஆமோ 4:6ஆமோ 7:1-21 இராஜா 8:372 நாளாக 6:28ஆமோ 4:8
நான் அவற்றைக் கருகல் நோயினாலும், பூஞ்சணத்தினாலும் தாக்கினேன்.
உங்கள் அத்திமரங்களையும், ஒலிவ மரங்களையும் வெட்டுக்கிளிகள் தின்று முடித்தன.
அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் எகிப்தில் செய்ததுபோல, உபா 28:60லேவி 26:252இராஜா 13:7யோவே 2:20உபா 28:26-27உபா 7:15யாத் 9:3-6சங் 78:49-50
உங்கள் மத்தியில் கொள்ளைநோயை அனுப்பினேன்.
உங்கள் வாலிபரை வாளினால் கொன்றேன்.
அவர்களுடன் கைப்பற்றப்பட்ட உங்கள் குதிரைகளையும் கொன்றேன்;
கூடாரங்களின் துர்நாற்றத்தினால் உங்கள் நாசிகளை நிரப்பினேன்.
அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“நான் சோதோம், கொமோராவை கவிழ்த்துப் போட்டதுபோல், ஏசா 13:19சகரி 3:2ஆதி 19:24-25எரே 23:142 பேது 2:6ஆமோ 4:6எசேக் 22:17-22யூதா 1:23
உங்களில் சிலரையும் கவிழ்த்துப் போட்டேன்.
நீங்கள் நெருப்பினின்று இழுத்தெடுக்கப்பட்ட கொள்ளியைப்போல் இருந்தீர்கள்.
அப்படியிருந்தும் நீங்கள் என்னிடமாய்த் திரும்பவில்லை”
என்று யெகோவா அறிவிக்கிறார்.
“ஆகவே இஸ்ரயேலே, நான் உனக்குச் செய்யப்போவது இதுவே; 1 தெச 5:2-4யாக் 4:1-10ஆமோ 9:1-4மாற் 13:32-37எசேக் 13:5ஆமோ 5:4-15ஏசா 47:3லூக் 21:3-36
இதை நான் செய்யப்போவதால், இஸ்ரயேலே,
உன் இறைவனை நீ சந்திக்க ஆயத்தப்படு.”
மலைகளை உருவாக்குகிறவரும், ஆமோ 5:8மீகா 1:3ஆமோ 9:6ஏசா 47:4சங் 65:6தானி 2:28உபா 33:29ஏசா 40:12
காற்றை உண்டாக்குகிறவரும் அவரே,
மனிதனுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்துகிறவரும்,
அதிகாலையில் வெளிச்சத்தை இருளாக மாற்றுகிறவரும் அவரே,
பூமியின் உயர்ந்த மேடுகளில் நடக்கிறவரும் அவரே,
சேனைகளின் இறைவனாகிய யெகோவா என்பது அவர் பெயர்.