ஆமோஸ் 9

Amos 9

இஸ்ரயேல் அழிக்கப்படுதல்

யெகோவா பலிபீடத்தின் அருகே நிற்பதைக் கண்டேன்: சங் 68:21ஆமோ 3:14ஆப 3:13ஏசா 6:1ஏசா 6:3-4யோவா 1:18வெளி 1:172 நாளாக 18:18

அவர் சொன்னதாவது: தூண்களின் உச்சியை இடித்துப்போடுங்கள்.

தூண்களின் வாசல் நிலைகள் அசையட்டும்.

அவற்றை மக்கள் எல்லோரின் தலைகள்மேலும் விழப்பண்ணுங்கள்.

மீந்திருப்போரை நான் வாளினால் கொல்லுவேன்.

ஒருவனும் தப்பி ஓடமாட்டான்,

ஒருவனுமே தப்பமாட்டான்.

பாதாளத்தின் ஆழங்கள்வரை அவர்கள் தோண்டிக்கொண்டு போனாலும், எரே 51:53சங் 139:7-10ஒபதி 1:4எசேக் 28:13-16ஏசா 14:13-16ஏசா 2:19எரே 49:16யோபு 20:6

அங்கிருந்தும் என் கை அவர்களைப் பிடித்தெடுக்கும்.

அவர்கள் வானங்கள்வரை ஏறினாலும்,

அங்கிருந்தும் அவர்களை கீழே கொண்டுவருவேன்.

கர்மேல் மலையுச்சியில் அவர்கள் ஒளிந்துகொண்டாலும், எரே 16:16ஏசா 27:1எரே 23:23-24யோபு 34:22ஆமோ 1:2சங் 139:9-11

நான் அங்கேயும் அவர்களைத் தேடிப் பிடித்துக்கொள்வேன்.

என் பார்வைக்குத் தப்பி கடலின் அடியில் மறைந்துகொண்டாலும்

அவர்களைக் கடிக்க பாம்பிற்குக் கட்டளையிடுவேன்.

தங்கள் பகைவரால் நாடுகடத்தப்பட்டுத் துரத்தப்பட்டாலும், லேவி 26:33எரே 21:10எரே 44:11உபா 28:63-65எசேக் 5:12எரே 39:16லேவி 17:102 நாளாக 16:9

அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்குக் கட்டளையிடுவேன்.

“நன்மைக்காக அல்ல,

தீமைக்காகவே அவர்கள்மேல் என் கண்களை வைப்பேன்.”

யெகோவா, சேனைகளின் யெகோவா பூமியைத் தொடுகிறார், ஆமோ 8:8சங் 46:6ஏசா 64:1மீகா 1:3-4வெளி 20:11ஆப 3:10ஓசி 4:3எரே 12:4

அது உருகுகிறது,

அதில் வாழும் அனைவரும் புலம்புகிறார்கள்;

முழு நாடும் நைல் நதியைப்போல் பொங்கி எழுகிறது,

பின்னர் எகிப்தின் நதியைப்போல் வற்றிப்போகிறது.

யெகோவா வானங்களின் உயர்வில் தமது அரண்மனைகளைக் கட்டுகிறார், ஆமோ 5:8சங் 104:3ஆமோ 4:13சங் 104:13எரே 5:22யாத் 3:14-15ஆதி 2:1ஆதி 7:11-19

பூமியின்மேல் அஸ்திபாரத்தை அமைக்கிறார்;

கடல்நீரை அழைத்து

பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறார்.

யெகோவா என்பது அவர் பெயர்.

இஸ்ரயேலின் மக்களே, எரே 47:42இராஜா 16:9உபா 2:23ஆமோ 1:5ஆமோ 2:10எரே 9:25-26ஓசி 12:13ஏசா 20:4

நீங்களும் எனக்கு எத்தியோப்பியரைப்போல் அல்லவோ இருக்கிறீர்கள்

என்று யெகோவா அறிவிக்கிறார்.

நான் இஸ்ரயேலரை எகிப்திலிருந்து கொண்டுவந்தேன்.

பெலிஸ்தியரை கப்தோரிலிருந்தும்,

சீரியரை கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?

“நிச்சயமாக ஆண்டவராகிய எரே 30:11ஆமோ 9:4எரே 44:27எரே 5:101 இராஜா 13:34உபா 4:31உபா 6:15ஆதி 6:7

யெகோவாவின் கண்கள் பாவமுள்ள அரசின்மேல் இருக்கின்றன.

பூமியின்மேல் இராதபடி அந்த அரசை அழிப்பேன்.

எனினும் யாக்கோபின் குடும்பத்தை

நான் முற்றிலும்

அழிக்கமாட்டேன்”

என்று யெகோவா அறிவிக்கிறார்.

“நானே கட்டளையிட்டு, லூக் 22:31உபா 28:64ஏசா 30:28லேவி 26:33

தானியத்தை அரிதட்டில் போட்டு அரித்தெடுப்பதுபோல,

எல்லா நாடுகளுக்குள்ளேயும்

இஸ்ரயேல் குடும்பத்தை அரித்தெடுப்பேன்.

ஒரு கூழாங்கல்லும் தரையில் விழாது.

என் மக்களுள் வாழும் எல்லா பாவிகளும், ஆமோ 6:3ஏசா 33:14மத் 13:49-50ஆமோ 6:1பிரச 8:11எசேக் 34:16-17ஏசா 28:14-15ஏசா 5:19

பேராபத்து எங்களை

மேற்கொள்ளவோ சந்திக்கவோ மாட்டாது என்று

சொல்கின்ற எல்லோரும் வாளினால் சாவார்கள்.

இஸ்ரேலின் மறுசீரமைப்பு

“அந்த நாளில் அப் 15:15-17எரே 33:14-16ஏசா 16:5எரே 23:5-6சங் 80:12எசேக் 17:24ஓசி 3:5ஏசா 63:11

“நான் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தைத் திரும்பவும் அமைப்பேன்.

நான் அதன் உடைந்த இடங்களை பழுதுபார்த்து,

அதன் பாழிடங்களை சீரமைப்பேன்.

முன் இருந்ததுபோல அதைக் கட்டுவேன்,

அப்பொழுது என் மக்கள் ஏதோமில் மீதியாக இருப்போரையும், ஏசா 43:7அப் 15:17ஏசா 65:1தானி 9:18-19ஏசா 63:19எரே 14:9ஏசா 14:1-2எண் 24:17-18

என் பெயரைத் தரித்திருக்கும் எல்லா நாடுகளையும்

உரிமையாக்கிக்கொள்வார்கள் என்று

இவற்றைச் செயற்படுத்தப்போகிற யெகோவா அறிவிக்கிறார்.

“நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். யோவே 3:18யோவா 4:35ஏசா 55:13லேவி 26:5ஏசா 35:1-2எசேக் 36:35ஓசி 2:21-23யோவே 3:20

“அப்பொழுது அறுவடை செய்கிறவனை உழுகிறவன் முந்திக்கொள்வான்;

நடுகிறவனை திராட்சைப் பழத்தைப் பிழிகிறவன் முந்திக்கொள்வான்.

மலைகளிலிருந்து புது திராட்சை இரசம்

வடிந்து எல்லாக் குன்றுகளின்மேலும் ஓடும்,

நாடுகடத்தப்பட்ட என் மக்களாகிய இஸ்ரயேலரை முன்நிலைக்குக் கொண்டுவருவேன். ஏசா 61:4எரே 30:3எரே 30:18எசேக் 28:26எரே 31:28ஏசா 65:21சங் 53:6எசேக் 37:25-28

“அவர்கள் பாழடைந்த பட்டணங்களை திரும்பக் கட்டி, அவற்றில் குடியிருந்து,

திராட்சைத் தோட்டங்களை நாட்டி, அதன் இரசத்தைக் குடித்து,

தோட்டங்களை உண்டாக்கி, அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள்.

நான் இஸ்ரயேலை அவர்கள் சொந்த நாட்டிலே நாட்டுவேன். எரே 24:6எசேக் 37:25ஏசா 60:21எசேக் 34:28யோவே 3:20எரே 32:41மீகா 4:4

நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் நாட்டிலிருந்து,

இனியொருபோதும் வேரோடு பிடுங்கப்படமாட்டார்கள் என்று”

உங்கள் இறைவனாகிய யெகோவா சொல்கிறார்.