மொர்தெகாயின் மேன்மை
அகாஸ்வேரு அரசன் அவனுடைய பேரரசு எங்கும், அதன் தூரமான எல்லைகள் வரைக்கும் வரி விதித்தான். ஏசா 24:15சங் 72:10தானி 11:18எஸ்த 1:1எஸ்த 8:9ஆதி 10:5ஏசா 11:11லூக் 2:1 மொர்தெகாயின் அதிகாரமும் வல்லமையுள்ள எல்லாச் செயல்களும், அரசன் அவனை மேன்மைப்படுத்தி அவனுக்குக் கொடுத்த அவனுடைய மேன்மையின் முழு விபரமும் பெர்சிய, மேதிய அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டிருக்கின்றன. எஸ்த 8:15எஸ்த 2:23எஸ்த 9:4எஸ்த 6:11 இராஜா 11:411 இராஜா 14:191 இராஜா 22:39தானி 2:48 யூதனான மொர்தெகாய் மேன்மையில் அரசனுக்கு அடுத்ததாய் இருந்தான். அவன் தனது மக்களின் நலனுக்காக உழைத்ததினாலும், எல்லா யூதர்களுடைய முன்னேற்றத்துக்காகப் பேசியதினாலும் அவன் யூதர்கள் மத்தியிலும் முதன்மை பெற்றவனாயிருந்தான். அவன் தன் சகோதரரான மற்ற யூதர்களினால் உயர்வாய் மதிக்கப்பட்டவனுமாயிருந்தான். நெகே 2:10ரோம 10:1ரோம 14:182 நாளாக 28:7தானி 5:29ஆதி 41:40ஆதி 41:43-44சங் 122:6-9