இஸ்ரயேலர் ஒடுக்கப்படுதல்
யாக்கோபுடனும் அவனுடைய குடும்பங்களுடனும் எகிப்திற்குப்போன இஸ்ரயேலுடைய மகன்களின் பெயர்களாவன: 1 நாளாக 2:1-2ஆதி 46:8-26ஆதி 35:23-261 நாளாக 12:23-40யாத் 6:14-16ஆதி 29:31ஆதி 35:18ஆதி 49:3-27
ரூபன், சிமியோன், லேவி, யூதா, ஆதி 35:22
இசக்கார், செபுலோன், பென்யமீன், யாத் 28:20ஆதி 35:23
தாண், நப்தலி,
காத், ஆசேர்.
யாக்கோபின் சந்ததிகள் மொத்தம் எழுபதுபேர். யோசேப்பு ஏற்கெனவே எகிப்தில் இருந்தான். உபா 10:22ஆதி 46:26-27நியாயாதி 8:30யாத் 1:20
இப்பொழுது யோசேப்பும், அவனுடைய சகோதரர்கள் எல்லோரும், அந்த தலைமுறையினர் யாவரும் இறந்துபோனார்கள். ஆதி 50:26அப் 7:14-16ஆதி 50:24 இஸ்ரயேல் என அழைக்கப்பட்ட, யாக்கோபின் சந்ததிகள் வளம்பெற்று, அதிகமாய்ப் பெருகினார்கள்; நாடு அவர்களால் நிரம்பும் அளவுக்கு அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் பெருகினார்கள். ஆதி 46:3உபா 26:5ஆதி 1:28ஆதி 35:11ஆதி 47:27ஆதி 9:1உபா 10:22ஆதி 12:2
பின்பு யோசேப்பைப்பற்றி அறியாத ஒரு புதிய அரசன் எகிப்தில் ஆட்சிக்கு வந்தான். அப் 7:18பிரச 2:18-19பிரச 9:15 அவன் தன் மக்களிடம், “பாருங்கள், இஸ்ரயேலரோ நம்மைவிட எண்ணிக்கையில் அதிகமாயும், பலமுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள். சங் 105:24-25பிரச 4:4யாக் 3:14-16எண் 22:4-5நீதி 14:28நீதி 27:4தீத் 3:3யாக் 4:5 வாருங்கள், நாம் அவர்களுடன் விவேகமாய் நடந்துகொள்ள வேண்டும், இல்லையென்றால் அவர்கள் இன்னும் எண்ணிக்கையில் அதிகமாய்ப் பெருகிவிடுவார்கள், யுத்தம் ஒன்று உண்டானால் அவர்கள் நம் பகைவர்களோடு சேர்ந்து, நமக்கு விரோதமாகப் போரிட்டு நாட்டைவிட்டுப் போய்விடுவார்கள்” என்றான். அப் 7:19சங் 83:3-4நீதி 1:11சங் 105:25சங் 10:21 கொரி 3:18-20அப் 23:12யாக் 3:15-18
எனவே இஸ்ரயேலர்களைக் கட்டாய வேலைக்கு உட்படுத்தி ஒடுக்குவதற்கு, அடிமைகளை நடத்தும் அதிகாரிகளை அவர்களுக்கு மேலாக நியமித்தார்கள்; இவ்வாறு அவர்கள் பித்தோம், ராமசேஸ் என்னும் களஞ்சியப் பட்டணங்களைப் பார்வோனுக்காகக் கட்டினார்கள். ஆதி 15:13யாத் 2:11யாத் 3:7ஆதி 47:11உபா 26:6சங் 81:61 இராஜா 9:192 நாளாக 8:4 ஆனால் இஸ்ரயேலர் எவ்வளவு அதிகமாய் ஒடுக்கப்பட்டார்களோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் பெருகிப் பரவினார்கள்; இதனால் எகிப்தியர் இஸ்ரயேலர்களுக்குப் பயந்து, சங் 105:24யாத் 1:9ரோம 8:28அப் 5:28-33அப் 4:2-4யோவா 12:19நீதி 27:4எபி 12:6-11 அவர்கள் இஸ்ரயேலரைக் கொடூரமாய் நடத்தி வேலை வாங்கினார்கள். உபா 4:20 செங்கல்லும் சாந்தும் செய்யும் கடினமான வேலைகளினாலும், வயல்களில் செய்யும் எல்லா விதமான வேலைகளினாலும், எகிப்தியர் அவர்களுடைய வாழ்க்கையைக் கசப்பாக்கினார்கள்; இரக்கமின்றி அவர்களுடைய எல்லாக் கடின வேலைகளிலும் அவர்களைக் கொடூரமாய் நடத்தினார்கள். அப் 7:19எண் 20:15யாத் 2:23யாத் 6:9அப் 7:34ஏசா 58:6சங் 81:6உபா 26:6
எகிப்திய அரசன், சிப்பிராள், பூவாள் என்னும் எபிரெய மருத்துவச்சிகளிடம், “எபிரெய பெண்களின் பிரசவ நேரத்தில் அவர்கள் மணையின்மேல் இருக்கையில் நீங்கள் பார்த்து, பிறக்கும் பிள்ளை ஆண் குழந்தையானால், அதைக் கொன்றுபோடுங்கள்; பெண் குழந்தையானால் அதை வாழவிடுங்கள்” என்றான். யாத் 1:22மத் 21:38வெளி 12:4 ஆனாலும் மருத்துவச்சிகளோ இறைவனுக்குப் பயந்து, எகிப்திய அரசன் தங்களுக்குச் செய்யச் சொல்லியிருந்ததைச் செய்யவில்லை; அவர்கள் ஆண்பிள்ளைகளையும் வாழவிட்டார்கள். அப் 5:29யாத் 1:21பிரச 12:13லூக் 12:5மத் 10:28அப் 4:18-20தானி 3:16-18தானி 6:13 இதை அறிந்த எகிப்திய அரசன் மருத்துவச்சிகளை அழைப்பித்து, “நீங்கள் ஏன் இதைச் செய்தீர்கள்? ஆண் பிள்ளைகளை ஏன் வாழ விட்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான். பிரச 8:42 சாமு 13:28
மருத்துவச்சிகள் பார்வோனுக்குப் பதிலளித்து, “எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப் போன்றவர்களல்ல; அவர்கள் பலமுள்ளவர்கள், அதனால் மருத்துவச்சிகள் வந்து சேருமுன்பே அவர்கள் குழந்தைகளைப் பெற்றுவிடுகிறார்கள்” என்றார்கள். 2 சாமு 17:19-20யோசு 2:4-241 சாமு 21:2
இறைவன் மருத்துவச்சிகளுக்குத் தயவு காட்டினார்; இஸ்ரயேல் மக்கள் பெருகி எண்ணிக்கையில் இன்னும் அதிகரித்தார்கள். பிரச 8:12ஏசா 3:10நீதி 11:18யாத் 1:12எபி 6:10சங் 111:5யாத் 1:7லூக் 1:50 மருத்துவச்சிகள் இறைவனுக்குப் பயந்தபடியால், அவர் அவர்களுடைய சொந்தக் குடும்பங்களை விருத்தியடையச் செய்தார். 1 இராஜா 11:381 சாமு 2:35சங் 37:32 சாமு 7:27-29பிரச 8:121 இராஜா 2:241 சாமு 25:282 சாமு 7:11-13
பின்பு பார்வோன் தன் மக்கள் எல்லோருக்கும் கட்டளை கொடுத்து, “எபிரெயருக்குப் பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் நீங்கள் நைல் நதியில் எறிந்துவிடவேண்டும்; ஆனால், எல்லா பெண் குழந்தைகளையும் வாழவிடுங்கள்” என்றான். அப் 7:19நீதி 1:16யாத் 1:16நீதி 4:16சங் 105:25வெளி 16:4-6யாத் 7:19-21ஆதி 41:1