அப்பொழுது யெகோவா மோசேயிடம், “இப்பொழுது நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ காண்பாய்: என் பலத்த கரத்தின் நிமித்தம் அவன் அவர்களைப் போகவிடுவான்; அவன் என் கரத்தின் வல்லமையின் நிமித்தம் அவர்களைத் தன் நாட்டிலிருந்து துரத்தியே விடுவான்” என்றார். யாத் 12:33யாத் 12:31யாத் 12:39யாத் 3:19-20சங் 136:12உபா 32:39யாத் 11:1எசேக் 20:33-34
பின்னும் இறைவன் மோசேயிடம், “நானே யெகோவா. அப் 17:24-25ஏசா 42:8எரே 9:24மல்கி 3:6யாத் 14:18யாத் 17:1யாத் 20:2யாத் 6:6 ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும் எல்லாம் வல்ல இறைவனாக 1 நானே காட்சியளித்தேன். ஆனாலும் யெகோவா என்ற என் பெயரால் நான் என்னை அவர்களுக்கு அறியச்செய்யவில்லை. சங் 83:18ஆதி 17:1சங் 68:4யாத் 3:14ஆதி 35:11ஆதி 48:3ஏசா 44:6ஆதி 12:7-8 அத்துடன், ‘இஸ்ரயேல் மக்கள் பிறநாட்டினராய் வாழ்ந்த கானான் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பேன்’ என்று அவர்களுடன் ஒரு உடன்படிக்கையையும் ஏற்படுத்தினேன். ஆதி 28:4ஆதி 15:18ஆதி 17:7-8ஆதி 26:3அப் 7:5ஏசா 55:32 சாமு 23:5ஆதி 15:13 மேலும், எகிப்தியர் அடிமைப்படுத்துகிற இஸ்ரயேலரின் அழுகுரலைக் கேட்டிருக்கிறேன்; என்னுடைய உடன்படிக்கையை நினைவுகூர்ந்தேன். யாத் 2:24சங் 106:44-45ஏசா 63:9யாத் 3:7ஆதி 8:1ஆதி 9:15லூக் 1:54லூக் 1:72
“ஆகையால், நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது; ‘நானே யெகோவா, நான் எகிப்தியரின் நுகத்தின் கீழிருந்து உங்களை வெளியே கொண்டுவருவேன். நீங்கள் அவர்களுக்கு அடிமைகளாய் இருப்பதிலிருந்து உங்களை விடுதலையாக்குவேன்; நான் பலத்த கரத்தினாலும், தண்டனைத் தீர்ப்பளிக்கும் வல்ல செயல்களினாலும் உங்களை மீட்பேன். உபா 26:81 நாளாக 17:21உபா 7:8யாத் 7:4நெகே 1:10உபா 15:15யாத் 3:17சங் 136:11-12 உங்களை என் சொந்த மக்களாக்கி, நான் உங்கள் இறைவனாயிருப்பேன். அப்பொழுது எகிப்திய நுகத்தின் கீழிருந்து, உங்களை விடுவித்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே என்று அறிந்துகொள்வீர்கள். உபா 29:13உபா 7:6உபா 4:202 சாமு 7:23-24உபா 14:2உபா 26:18யாத் 29:45-46ஆதி 17:7-8 ஆபிரகாமிற்கும், ஈசாக்கிற்கும், யாக்கோபிற்கும் கொடுப்பேன் என்று, உயர்த்திய கரத்தினால் நான் ஆணையிட்ட நாட்டிற்கு உங்களைக் கொண்டுவருவேன். அதை உங்களுக்கு உடைமையாகக் கொடுப்பேன். நானே யெகோவா’ ” என்றார். ஆதி 15:18ஆதி 26:3எசேக் 20:42எசேக் 20:5-6ஆதி 14:22உபா 32:40யாத் 32:13எசேக் 47:14
மோசே இஸ்ரயேலருக்கு இவற்றை அறிவித்தான், ஆனால் அவர்களோ மனச்சோர்வினாலும் கொடூரமான அடிமைத்தனத்தினாலும் துன்பப்பட்டதனால் அவனுக்குச் செவிகொடுக்கவில்லை. யாத் 5:21யோபு 21:4யாத் 14:12எண் 21:4நீதி 14:19
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “எகிப்திய அரசனாகிய பார்வோனிடம் நீ போ, அவனுடைய நாட்டிலிருந்து இஸ்ரயேலரைப் போகவிடும்படிச் சொல்” என்றார். யாத் 3:10யாத் 5:1யாத் 5:23யாத் 6:29யாத் 7:1
ஆனால் மோசே யெகோவாவிடம், “இஸ்ரயேலரே எனக்குச் செவிகொடுக்கவில்லை என்றால், பார்வோன் ஏன் செவிகொடுக்கவேண்டும்? நானோ பண்படாத உதடுகளுள்ளவன்” 2 என்றான். யாத் 4:10யாத் 6:30எரே 1:6எரே 6:10அப் 7:51யாத் 6:9லேவி 26:41யாத் 3:13
மோசே, ஆரோனின் குடும்ப அட்டவணை
யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் இஸ்ரயேலரைப் பற்றியும், எகிப்திய அரசன் பார்வோனைப் பற்றியும் பேசி, எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். 1 தீமோ 1:181 தீமோ 5:211 தீமோ 6:132 தீமோ 4:1உபா 31:14எண் 27:23சங் 91:111 தீமோ 6:17
இஸ்ரயேலரின் குடும்பங்களின் தலைவர்கள் இவர்களே: ஆதி 46:91 நாளாக 5:3எண் 26:5-71 நாளாக 5:241 நாளாக 7:21 நாளாக 7:71 நாளாக 8:6யாத் 6:25
யாக்கோபின் முதற்பேறான மகனாகிய ரூபனின் மகன்கள்:
ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
ரூபனின் வம்சங்கள் இவையே.
சிமியோனின் மகன்கள்: 1 நாளாக 4:24ஆதி 46:10எண் 26:12-13
எமுயேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானியப் பெண்ணின் மகனான சாவூல் என்பவர்கள் ஆவர்.
சிமியோனுடைய வம்சங்கள் இவையே.
பதிவேட்டின்படி லேவியின் மகன்களின் பெயர்கள்: ஆதி 46:11எண் 3:171 நாளாக 6:11 நாளாக 6:16எண் 26:571 நாளாக 23:6யாத் 6:18யாத் 6:20
கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள் ஆவர்.
லேவி 137 வருடங்கள் வாழ்ந்தான்.
லிப்னீயும் சீமேயியும் 1 நாளாக 6:17எண் 3:181 நாளாக 23:7ஆதி 46:11
கெர்சோனின் வம்சத்தின் மகன்கள் ஆவர்.
அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர் 1 நாளாக 6:181 நாளாக 6:2எண் 3:19எண் 26:57
கோகாத்தின் மகன்கள் ஆவர்.
கோகாத் 133 வருடங்கள் வாழ்ந்தான்.
மெராரியின் மகன்கள் 1 நாளாக 23:211 நாளாக 6:19எண் 3:20
மகேலி, மூஷி என்பவர்கள்.
அவர்களுடைய பதிவேட்டின்படி லேவியின் வம்சங்கள் இவையே.
அம்ராம் தன் தகப்பனின் சகோதரியான யோகெபேத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு ஆரோனையும், மோசேயையும் பெற்றாள். யாத் 2:1-2எண் 26:59யாத் 6:16யாத் 6:18
அம்ராம் 137 வருடங்கள் வாழ்ந்தான்.
இத்சேயாரின் மகன்கள் 1 நாளாக 6:37-38எண் 16:1யாத் 6:24எண் 16:32எண் 26:10-11
கோராகு, நெப்பேக், சிக்ரி என்பவர்கள் ஆவர்.
ஊசியேலின் மகன்கள்: லேவி 10:4எண் 3:30நெகே 3:20
மீசயேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள் ஆவர்.
அம்மினதாபின் மகளும், நகசோனின் சகோதரியுமான எலிசபாளை ஆரோன் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள். ரூத் 4:19-20எண் 2:31 நாளாக 2:101 நாளாக 6:3எண் 1:7மத் 1:41 நாளாக 24:1-2யாத் 24:1
கோராகியரின் மகன்கள்: 1 நாளாக 6:22-231 நாளாக 6:27-281 நாளாக 6:331 நாளாக 6:37-381 சாமு 1:1யாத் 6:21எண் 16:1எண் 16:32
ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள் ஆவர்.
கோராகிய வம்சங்கள் இவையே.
ஆரோனின் மகன் எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான். யோசு 24:33எண் 25:7-13நியாயாதி 20:28யோசு 22:13யோசு 22:31-32எண் 31:6சங் 106:30-31
அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள். வம்சம் வம்சமாக லேவிய குடும்பங்களின் தலைவர்கள் இவர்களே.
இதே ஆரோனுக்கும், மோசேக்குமே, “இஸ்ரயேலருடைய கோத்திரப்பிரிவின்படி அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவாருங்கள்” என்று யெகோவா சொல்லியிருந்தார். யாத் 12:17யாத் 12:51யாத் 7:4யாத் 6:13எண் 33:11 நாளாக 6:31 சாமு 12:61 சாமு 12:8 இதே மோசேயும் ஆரோனுமே எகிப்திலிருந்து இஸ்ரயேலரை வெளியே கொண்டுவருவது பற்றி, எகிப்திய அரசன் பார்வோனிடம் பேசினார்கள். யாத் 32:7யாத் 33:1யாத் 5:1-3யாத் 6:13யாத் 6:26யாத் 7:10மீகா 6:4சங் 77:20
ஆரோன் மோசேக்காகப் பேசுதல்
யெகோவா எகிப்தில் மோசேயுடன் பேசியபோது, யெகோவா மோசேயிடம், “நானே யெகோவா. நான் உனக்குச் சொல்லும் எல்லாவற்றையும் எகிப்திய அரசன் பார்வோனுக்குச் சொல்” என்றார். யாத் 6:11யாத் 7:2யாத் 6:2யாத் 6:6யாத் 6:8அப் 20:27எசேக் 2:6-7எசேக் 3:11
ஆனால் மோசேயோ யெகோவாவிடம், “நான் திக்குவாயுள்ளவன். பார்வோன் எப்படி எனக்குச் செவிகொடுப்பான்?” என்றான். யாத் 6:12யாத் 4:101 கொரி 9:16-17