இஸ்ரயேலரின் இளவரசர்களுக்கான புலம்பல்
“நீ இஸ்ரயேலரின் இளவரசர்களைக் குறித்துப் புலம்பு. எசேக் 26:17எசேக் 27:22இராஜா 23:29-302இராஜா 23:342இராஜா 24:122இராஜா 24:62இராஜா 25:5-7எசேக் 19:14 நீ சொல்லவேண்டியதாவது: ஏசா 11:6-9ஏசா 5:29யோபு 4:11நாகூ 2:11-12சங் 58:6சகரி 11:3செப்ப 3:1-4
“ ‘சிங்கங்களுக்கு நடுவில் உன் தாய்
ஒரு பெண்சிங்கமாயிருந்தாள்.
அவள் இளஞ்சிங்கங்கள் மத்தியில்
படுத்திருந்து தன் குட்டிகளை வளர்த்தாள்.
தன் குட்டிகளில் ஒன்றை அவள் வளர்த்தாள். 2 நாளாக 36:1-22இராஜா 23:31-32எசேக் 19:6எசேக் 22:25
அக்குட்டி ஒரு பலமுள்ள சிங்கம் ஆனான்.
அவன் இரையைக் கிழிக்கப்பழகி
மனிதர்களை விழுங்கினான்.
நாடுகள் அவனைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, 2 நாளாக 36:42இராஜா 23:33-342 நாளாக 36:6எரே 22:11-122இராஜா 23:31எரே 22:18
அவன் அவர்களுடைய குழியில் அகப்பட்டான்.
அவர்கள் அவனை விலங்கிட்டு
எகிப்திற்கு நடத்திச்சென்றார்கள்.
“ ‘தன் நம்பிக்கை நிறைவேறவில்லையென்றும், 2இராஜா 23:34-37எசேக் 19:3
தன் எதிர்பார்ப்பு சிதைந்தது
என்றும் தாய்ச்சிங்கம் கண்டபோது,
தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து பலமுள்ள சிங்கமாக்கியது.
அது இப்பொழுது பாலசிங்கமானதால், 2 நாளாக 36:52 நாளாக 36:92இராஜா 24:1-72இராஜா 24:9எரே 22:13-17எரே 26:1-24எரே 36:1-32
சிங்கங்கள் மத்தியில் இரைதேடித் திரிந்தது.
அது இரையைக் கிழிக்கப்பழகி
மனிதரை விழுங்கியது.
அவர்களுடைய அரண்களை நொறுக்கி, எசேக் 30:12ஆமோ 6:8எசேக் 12:19எசேக் 22:25மீகா 1:2நீதி 19:12நீதி 28:15-16நீதி 28:3
நகரங்களை அழித்தது.
நாடும் அதிலுள்ள அனைவரும்
அதனுடைய கர்ஜனையைக் கேட்டுக் கலங்கினார்கள்.
அப்பொழுது எல்லாப் பக்கமும் சூழ்ந்திருக்கும் பிறநாடுகள், எசேக் 12:13எசேக் 19:4புலம் 4:202இராஜா 24:1-62இராஜா 24:11எசேக் 17:20
அதை எதிர்த்து வந்தன.
அதன்மேல் தங்கள் வலையை வீசியபோது,
அது அவர்களுடைய குழியில் அகப்பட்டது.
அவர்கள் அதனை விலங்கிட்டு கூண்டிலிட்டு, 2 நாளாக 36:6எசேக் 6:22இராஜா 24:15எசேக் 19:7எசேக் 36:1எரே 22:18-19எரே 36:30-31
பாபிலோன் அரசனிடம் கொண்டுசென்று
அங்கே சிறையிட்டார்கள்.
எனவே இஸ்ரயேலின் மலைகளில்
அதனுடைய கர்ஜனை அதற்குப்பின் கேட்கவேயில்லை.
“ ‘உன் தாய் உன் திராட்சைத் தோட்டத்தில் சங் 80:8-11உபா 8:7மத் 21:33-41எண் 24:6-7உபா 8:9எசேக் 15:2-8எசேக் 17:6எசேக் 19:2
தண்ணீரின் அருகே நாட்டப்பட்ட திராட்சைக்கொடியைப் போலிருந்தாள்!
தண்ணீர் வளம் மிகுந்த காரணத்தால்
கிளைகள் செழித்து பழங்களும் பெருகின.
அதன் கிளை உறுதியாய் இருந்ததினால் எசேக் 31:3தானி 4:11சங் 80:15தானி 4:20-21எசேக் 19:12எசேக் 19:14எசேக் 21:10எசேக் 21:13
அரச செங்கோலுக்குத் தகுதியாயிற்று.
அடர்ந்து வளர்ந்த மற்ற இலைகளுக்கு மேலாய் அது உயர்ந்து நின்றது.
தன் உயரத்தாலும்,
பல கிளைகளாலும்
அது சிறப்பாய்க் காட்சியளித்தது.
ஆனால், அந்தத் திராட்சைக்கொடி எசேக் 17:10ஓசி 13:15ஏசா 27:11எசேக் 15:4எசேக் 19:11எரே 31:282இராஜா 23:292இராஜா 23:34
கடுங்கோபத்தோடு வேரோடு பிடுங்கப்பட்டுத்
தரையில் எறியப்பட்டது.
கீழ்க்காற்று அதனை வாடப்பண்ணி பழங்களும் உதிர்க்கப்பட்டன.
அதன் பலத்த கிளைகள் வாடிப்போயின.
நெருப்பு அவைகளை எரித்தது.
இப்பொழுது அது வறண்ட வளமற்ற ஓசி 2:3எசேக் 19:102இராஜா 24:12-16எசேக் 20:35எரே 52:27-31சங் 63:1சங் 68:6உபா 28:47-48
பாலைவனத்தில் நாட்டப்பட்டுள்ளது.
முக்கிய கிளை ஒன்றிலிருந்து இருந்து நெருப்பு எழும்பி, 2இராஜா 24:20எசேக் 19:1எசேக் 19:11ஏசா 9:18-19சங் 80:15-162 நாளாக 36:13ஆமோ 9:11எசேக் 15:4
அதன் பழத்தைச் சுட்டெரித்தது.
அரச செங்கோலுக்குத் தகுதிபெற
இனியொரு கிளையும் அதில் விடப்படவில்லை.’
இது ஒரு புலம்பல் புலம்பலாகவே, உபயோகிக்கப்பட வேண்டும்.”