எசேக்கியேலின் அழைப்பு
அவர் என்னிடம், “மனுபுத்திரனே, எழுந்து காலூன்றி நில்; நான் உன்னுடன் பேசுவேன்” என்றார். தானி 10:11எசேக் 3:17எசேக் 4:1எசேக் 3:1எசேக் 3:4எசேக் 5:1அப் 9:6மத் 16:13-16 அவர் பேசியபோது ஆவியானவர் எனக்குள் வந்து, என்னை உயர்த்தினார். அவர் என்னுடன் பேசுவதை நான் கேட்டேன். எசேக் 3:24எசேக் 3:12எண் 11:25-261 சாமு 16:13தானி 8:18எசேக் 3:14எசேக் 36:27நியாயாதி 13:25
அவர் என்னிடம்: “மனுபுத்திரனே, எனக்கு விரோதமாகக் கலகம் பண்ணியிருக்கிற, கலகக்கார தேசத்தாராகிய இஸ்ரயேலரிடம் நான் உன்னை அனுப்புகிறேன். அவர்களும், அவர்களுடைய முற்பிதாக்களும் எனக்கு விரோதமாய் இன்றுவரை துரோகம்செய்து வந்திருக்கிறார்கள். எரே 3:251 சாமு 8:7-8தானி 9:5-13உபா 9:242 நாளாக 36:15-162இராஜா 17:17-20அப் 7:51உபா 9:27 கீழ்ப்படியாதவர்களும், பிடிவாதமுள்ளவர்களுமாய் இருக்கிறவர்களிடத்தில் நான் உன்னை அனுப்புகிறேன். ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே’ என்று அவர்களுக்குச் சொல். எசேக் 3:7ஏசா 48:4எரே 5:3எரே 6:15சங் 95:81 இராஜா 22:142 நாளாக 30:82 நாளாக 36:13 அவர்களோ கலகம் செய்யும் குடும்பத்தினர். ஆகவே அவர்கள் செவிகொடுத்தாலும், செவிகொடாமற்போனாலும் தங்கள் மத்தியில் இறைவாக்கினன் ஒருவன் இருந்தான் என்பதை அறிந்துகொள்வார்கள். எசேக் 33:33எசேக் 3:27யோவா 15:22மத் 10:12-15அப் 13:46எசேக் 2:7லூக் 10:10-122 கொரி 2:15-17 மனுபுத்திரனே, நீ அவர்களுக்கோ, அவர்களுடைய வார்த்தைகளுக்கோ பயப்படாதே. உன்னைச் சுற்றி நெருஞ்சில்களும் முட்களும் இருந்தாலும், தேள்கள் மத்தியில் நீ குடியிருந்தாலும் அஞ்சவேண்டாம். அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தினர்களாக இருக்கிறபோதிலும், அவர்கள் சொல்வது எதுவாயினும் நீ பயப்படாதே. திகிலடையாதே. எரே 1:8ஏசா 51:121 பேது 3:142 தீமோ 1:7லூக் 10:19எரே 1:17மத் 10:28மீகா 7:4 அவர்கள் செவிகொடுத்தாலும், செவிகொடுக்கத் தவறினாலும் நீ எனது வார்த்தைகளை அவர்களிடம் சொல்லவேண்டும். ஏனெனில் அவர்கள் கலகக்காரர். எரே 23:28எசேக் 2:5எசேக் 3:10எசேக் 3:17எரே 1:7எரே 1:17எரே 26:2யோனா 3:2 ஆனால், மனுபுத்திரனே, நீ நான் உனக்குக் கூறுவதைக் கேள். அந்தக் கலகம் செய்யும் குடும்பத்தாரைப்போல் கலகம் செய்யாதே! உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுப்பதைச் சாப்பிடு” என்றார். வெளி 10:9எரே 15:16ஏசா 50:5எசேக் 3:1-31 பேது 5:31 தீமோ 4:14-16எசேக் 3:101 இராஜா 13:21-22
பின்பு நான் பார்த்தபோது எனக்கு நேராக நீட்டப்பட்ட ஒரு கரத்தைக் கண்டேன். அதில் ஒரு புத்தகச்சுருள் இருந்தது. எசேக் 8:3தானி 10:10எசேக் 3:1வெளி 10:8-11வெளி 5:1-5தானி 10:16-18தானி 5:5எபி 10:7 அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார். அதன் இருபுறமும் புலம்பல், துக்கம், கேடு பற்றிய வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. வெளி 8:13ஏசா 3:11ஏசா 30:8-11ஆப 2:2எரே 36:29-32வெளி 11:14வெளி 9:12