2 கொரிந்தியர் 2

2 Corinthians 2

ஆகவே, நான் உங்களுக்கு வேதனையை உண்டாக்கும் இன்னுமொரு சந்திப்பை ஏற்படுத்தாமலிருக்க என் மனதில் தீர்மானித்தேன். 2 கொரி 1:232 கொரி 13:102 கொரி 12:20-211 கொரி 4:212 கொரி 2:41 கொரி 2:21 கொரி 5:32 கொரி 1:15-17 நான் உங்களைத் துக்கப்படுத்தினால் என்னை மகிழ்விப்பவர்கள் யார்? என்னை துக்கப்படுத்தியது நீங்கள்தானே. 2 கொரி 7:81 கொரி 12:262 கொரி 1:14ரோம 12:152 கொரி 11:29 இதனாலேயே, நான் இவ்வாறு உங்களுக்குக் கடிதம் எழுதினேன். நான் உங்களிடம் வரும்போது, என்னை மகிழ்விக்க வேண்டியவர்களால் நான் துக்கமடைய விரும்பவில்லை. நீங்கள் எல்லோரும் என் சந்தோஷத்தில் பங்கு கொள்வீர்கள் என்று, நான் உங்கள் எல்லோரையும் குறித்து மனவுறுதியுள்ளவனாய் இருந்தேன். கலா 5:102 கொரி 8:22பிலே 1:212 தெச 3:42 கொரி 7:121 கொரி 4:212 கொரி 1:152 கொரி 12:11 நான் மிகுந்த துன்பத்தோடும், உள்ளத்தின் வேதனையோடும், அதிக கண்ணீரோடும் உங்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதினேன். ஆனால், உங்களைத் துக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, நான் உங்கள்மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே நான் அப்படி எழுதினேன். 2 கொரி 7:12நீதி 27:5-6லேவி 19:17-18லூக் 19:41-442 கொரி 11:22 கொரி 7:8-9பிலி 3:18சங் 119:136

துக்கம் உண்டாக்கியவனுக்கு மன்னிப்பு

யாராகிலும் ஒருவன் துக்கம் உண்டாக்கி இருந்தால், அவன் என்னை மட்டுமல்ல, ஓரளவுக்கு உங்களெல்லோரையுமே துக்கப்படுத்தியிருக்கிறான். இதை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. 1 கொரி 5:12-131 கொரி 5:1-5கலா 4:12கலா 5:10நீதி 17:25 அப்படிப்பட்டவன் உங்கள் அநேகரால் தண்டனை பெற்றிருக்கிறான். அது போதுமானது. 1 கொரி 5:4-51 தீமோ 5:202 கொரி 13:102 கொரி 7:11 ஆதலால், நீங்கள் இப்பொழுது அவனை மன்னித்து ஆறுதல்படுத்தவேண்டும். இல்லையெனில், அவன் அதிகமான துக்கத்தில் மூழ்கிவிடுவான். எபே 4:32கலா 6:1-2கொலோ 3:13ஏசா 28:7நீதி 17:221 கொரி 15:541 தெச 4:132 கொரி 5:4 ஆனபடியால் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், மீண்டும் நீங்கள் அவனுக்கு உங்கள் அன்பை உறுதிப்படுத்துங்கள். யூதா 1:22-23கலா 5:13கலா 6:10கலா 6:1-2 நீங்கள் எல்லாவற்றிலும் கீழ்ப்படிகிறீர்களா என்று உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே இப்படி எழுதினேன். 2 கொரி 10:6பிலே 1:212 கொரி 7:12-15பிலி 2:222 கொரி 8:242 தெச 3:14உபா 13:3உபா 8:16 நீங்கள் யாரையாவது மன்னித்தால், நானும் அவனை மன்னிக்கிறேன். நான் மன்னிக்கவேண்டியது ஏதேனும் இருந்தால், அதை நான் உங்கள் நிமித்தம் கிறிஸ்துவினுடைய சமுகத்தில் மன்னித்திருக்கிறேன். யோவா 20:232 கொரி 5:201 கொரி 5:4மத் 18:18 சாத்தான் நம்மைத் தனது தந்திரத்தால் வஞ்சிக்காதபடி அவ்வாறு செய்தேன். ஏனெனில், சாத்தானின் வஞ்சகதிட்டங்களை நாம் அறியாதவர்கள் அல்ல. 1 பேது 5:8எபே 6:11-122 கொரி 11:32 கொரி 4:4லூக் 22:31வெளி 12:9-112 கொரி 11:14மத் 4:10

புது உடன்படிக்கையின் ஊழியர்

நான் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காகத் துரோவா பட்டணத்துக்குப் போனபோது, கர்த்தர் எனக்கு ஒரு கதவு திறந்ததைக் கண்டேன். அப் 16:8அப் 14:27கொலோ 4:31 கொரி 16:9வெளி 3:7-8அப் 20:1-6அப் 20:8ரோம 1:1 ஆனாலும், அங்கே என் சகோதரன் தீத்துவைக் காணாதபடியால், என் உள்ளத்தில் சமாதானம் இல்லாதிருந்தது. ஆதலால், நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போனேன். 2 கொரி 12:182 கொரி 7:5-62 கொரி 8:162 கொரி 8:232 கொரி 8:62 தீமோ 4:10கலா 2:1கலா 2:3

இறைவனுக்கே நன்றி. அவர் எப்பொழுதும் எங்களைக் கரம்பிடித்து, கிறிஸ்துவின் வெற்றி பவனிக்குள் வழிநடத்துகிறார். இப்படி அவரைப்பற்றிய அறிவின் நறுமணம்போல் எங்கள் மூலமாக எல்லா இடங்களிலும் பரவச்செய்கிறார். எபே 5:2ரோம 8:372 கொரி 2:15-162 கொரி 9:15ரோம 6:17கொலோ 2:15சங் 106:47உன்னத 1:3 ஏனெனில், இரட்சிக்கப்படுகிறவர்கள் மத்தியிலும், அழிந்து போகிறவர்கள் மத்தியிலும் நாம் இறைவனுக்கு கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம். எபே 5:21 கொரி 1:18எசேக் 20:41பிலி 4:18ஆதி 8:212 தெச 2:10யாத் 29:182 கொரி 4:3-4 ஒரு சிலருக்கு மரணத்தை ஏற்படுத்தும் துர்நாற்றமாகவும் மற்றவருக்கு வாழ்வளிக்கும் நறுமணமாகவும் இருக்கிறோம். இப்படிப்பட்ட பணியை செய்யும் ஆற்றலுள்ளவன் யார்? 2 கொரி 3:5-61 பேது 2:7-8யோவா 9:39லூக் 2:341 கொரி 15:10அப் 13:45-47அப் 20:26-272 கொரி 12:11 அநேகர் இறைவனுடைய வார்த்தையை, மலிவான கடைச்சரக்காக கருதி இலாபம் பெற விற்கிறார்கள். நாங்கள் அவர்களைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, நாங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட மனிதரைப்போல், கிறிஸ்துவில் இறைவனுக்கு முன்பாக நேர்மையுடன் அதைப் பேசுகிறோம். 2 கொரி 4:22 கொரி 1:122 பேது 2:1-32 தீமோ 4:3-41 தீமோ 4:1-3மத் 24:241 கொரி 5:8எரே 23:27-32