எகிப்திற்கு விரோதமாய் இறைவாக்கு
பார்வோன் மீதான தீர்ப்பு
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பத்தாம் வருடம், பத்தாம் மாதம், பன்னிரண்டாம் நாளிலே, யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. எசேக் 26:1எசேக் 29:17எசேக் 20:1எசேக் 1:2எசேக் 40:1எசேக் 8:1 “மனுபுத்திரனே, நீ எகிப்தின் அரசனாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தை திருப்பி, அவனுக்கும் முழு எகிப்திற்கும் விரோதமாய் இறைவாக்குரைத்து சொல். எசேக் 6:2எரே 44:30எரே 46:2-16எசேக் 20:46எசேக் 21:2எசேக் 25:2எசேக் 28:21-22எசேக் 30:1 நீ அவனோடு பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. எசேக் 32:2ஏசா 27:1எரே 44:30உபா 8:17எசேக் 29:9-10தானி 4:30-31எசேக் 28:2எசேக் 28:22
“ ‘எகிப்தின் அரசனாகிய பார்வோனே,
நீரோடைகளின் நடுவே கிடக்கும் பெரும் இராட்சத முதலையே!
நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்.
“நீயோ, நைல் நதி என்னுடையது;
அதை எனக்காக நானே உண்டாக்கினேன்” என சொல்லிக்கொள்கிறாய்.
ஆனால் நான் உன் தாடைகளில் தூண்டில் மாட்டி, 2இராஜா 19:28எசேக் 38:4ஆமோ 4:2ஆப 1:14-15ஏசா 37:29யோபு 41:1-2
உன் நீரோடைகளின் மீன்களை உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன்.
உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும் எல்லா மீன்களோடும் சேர்த்து,
உன் நீரோடைகளின் நடுவிலிருந்து நான் உன்னை இழுத்தெடுப்பேன்.
நான் உன்னையும் உன் நீரோடைகளின் எசேக் 32:4-6எரே 34:20எரே 7:33எரே 8:2எரே 25:33சங் 110:5-61 சாமு 17:44எசேக் 31:18
எல்லா மீன்களையும் பாலைவனத்தில் விட்டுவிடுவேன்.
திறந்த வெளியிலே நீ விழுவாய்.
நீ சேர்க்கப்படவோ எடுக்கப்படவோமாட்டாய்.
நான் உன்னைப் பூமியின் மிருகங்களுக்கும்,
ஆகாயத்துப் பறவைகளுக்கும் உணவாகக் கொடுப்பேன்.
அப்பொழுது எகிப்தில் வாழும் அனைவரும் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள். 2இராஜா 18:21ஏசா 36:6யாத் 14:18யாத் 9:14எசேக் 28:22-24எசேக் 28:26ஏசா 20:5-6ஏசா 30:2-7
“ ‘நீ இஸ்ரயேலருக்கு நாணல் புல்லினாலான ஊன்றுகோலாயிருந்தாய். அவர்கள் உன்னைத் தங்கள் கைகளினால் இறுக்கி பிடித்தபோது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப் போகச்செய்வாய். ஏசா 36:6எசேக் 17:15-17எரே 17:5-6எரே 37:5-11நீதி 25:19சங் 118:8-9சங் 146:3-4
“ ‘ஆகவே ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நானே உனக்கு விரோதமாய் ஒரு வாளைக் கொண்டுவந்து, உன் மனிதர்களையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன். எசேக் 14:17யாத் 12:12எசேக் 25:13எசேக் 29:19-20எசேக் 30:10எசேக் 30:4எசேக் 32:10-13ஆதி 6:7 எகிப்து அழிந்து பாழ்நிலமாகும். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள். எசேக் 29:3எசேக் 29:10-12நீதி 16:18நீதி 18:12எசேக் 30:13-19எசேக் 30:7-8எரே 43:10-13நீதி 29:23
“ ‘நைல் நதி என்னுடையது; “நானே அதை உன்டாக்கினேன்” என்று நீ சொன்னாய் அல்லவோ? ஆகவே நான் உனக்கும் உன் நீரோடைகளுக்கும் விரோதமாக இருக்கிறேன். மிக்தோல் தொடக்கம்முதல் அஸ்வான்வரை, எத்தியோப்பியாவின் எல்லைவரையுள்ள எகிப்து நாட்டை இடிபாடுகளுடைய பாழ்நிலமாக்குவேன். எசேக் 30:12யாத் 14:2எசேக் 29:11எசேக் 30:6-9ஆப 3:8எரே 44:1எரே 46:14 மனித கால்களோ, மிருகத்தின் கால்களோ அதைக் கடப்பதில்லை. நாற்பது வருடங்களுக்கு ஒருவரும் அங்கு வாழப்போவதுமில்லை. எசேக் 32:13எரே 43:11-122 நாளாக 36:21தானி 9:2எசேக் 30:10-13எசேக் 31:12எசேக் 33:28எசேக் 36:28 பாழாய்ப்போன நாடுகளின் மத்தியில் எகிப்தையும் நான் பாழாக்குவேன். இடிபாடுகளுள்ள பட்டணங்களிடையே, அவளது பட்டணம் நாற்பது வருடங்கள் கிடக்கும். நான் எகிப்தியரைப் பல நாடுகளுக்குள்ளும் சிதறிப்போகச்செய்து அவர்களை நாடுகளுக்கூடே சிதறடிப்பேன். எசேக் 30:23எசேக் 30:7எரே 46:19எசேக் 30:26எரே 25:15-19எரே 27:6-11
“ ‘எனினும், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே நான் அந்த நாற்பது வருடங்களின் முடிவில், எகிப்தியரை, சிதறடிக்கப்பட்டிருந்த பல நாடுகளுக்குள்ளும் இருந்து, ஒன்றுசேர்ப்பேன். ஏசா 19:22எரே 46:26 திரும்பவும் நான் அவர்களைச் சிறையிருப்பிலிருந்து கொண்டுவந்து அவர்களுடைய முன்னோரின் நாடாகிய எகிப்தின் பத்ரோசுக்குக் கொண்டுவருவேன். அங்கே அவர்கள் ஒரு சிறிய அரசாக இருப்பார்கள். எசேக் 30:14ஏசா 11:11எரே 44:11 நாளாக 1:12ஆதி 10:14 அது அரசுகளிலெல்லாம் சிறியதாயிருக்கும். இனியொருபோதும் மற்ற நாடுகளின்மேல் தன்னை அது உயர்த்தாது. இனியொருகாலமும் அது நாடுகளுக்குமேல் ஆளுகைசெய்யாத அளவுக்கு அதை நான் பலவீனப்படுத்துவேன். எசேக் 30:13சகரி 10:11எசேக் 17:14எசேக் 17:6எசேக் 31:2எசேக் 32:2நாகூ 3:8-9தானி 11:42-43 எகிப்து இனியொருபோதும் இஸ்ரயேலரின் நம்பிக்கையின் ஆதாரமாய் இருக்கமாட்டாது. ஆனால் ஆதரவுக்காக அவளிடம் திரும்பியவர்களின் பாவத்தின் ஒரு ஞாபகமாய் அது இருக்கும். அப்பொழுது அவர்கள் ஆண்டவராகிய யெகோவா நானே என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.’ ” எசேக் 29:6-7ஓசி 8:13ஏசா 20:5எசேக் 21:23ஏசா 30:1-6ஏசா 64:9எரே 14:10எரே 2:36-37
எகிப்து நேபுகாத்நேச்சாருக்குக் கொடுக்கப்படுதல்
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட இருபத்தேழாம் வருடம், முதலாம் மாதம், முதலாம் நாளிலே யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம், எசேக் 29:1எசேக் 1:2எசேக் 24:1 “மனுபுத்திரனே, பாபிலோன் அரசனாகிய நேபுகாத்நேச்சார் தனது இராணுவத்தைத் தீருவுக்கு விரோதமாய் அனுப்பி, கடும் தாக்குதலை மேற்கொண்டான். ஒவ்வொருவனின் தலையும் மொட்டையாக்கப்பட்டு, ஒவ்வொருவனின் தோலும் புண்ணாகும்வரை தோலுரிக்கப்பட்டன. அப்படியிருந்தும் அவனும் அவனுடைய இராணுவமும், தீருவுக்கு எதிராக நடத்திய படையெடுப்பின் பலனைப் பெறவில்லை.” எரே 27:6எசேக் 26:7-12எரே 25:9எரே 48:37 ஆகையால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே, நான் எகிப்தை பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சாருக்குக் கையளிக்கப்போகிறேன். அதன் செல்வத்தை அவன் எடுத்துக்கொண்டு போவான். அவன் தன் இராணுவங்களுக்குக் கூலியாக நாட்டைச் சூறையாடிக் கொள்ளையிடுவான். எசேக் 30:24-25எரே 43:10-13எசேக் 30:10-12எசேக் 32:11எசேக் 30:4எசேக் 29:8-10 அவனும் அவனுடைய இராணுவமும் அதை எனக்காகச் செய்தபடியினால், அம்முயற்சிக்கு வெகுமதியாக எகிப்தை அவனுக்குக் கொடுத்திருக்கிறேன் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். ஏசா 10:6-7எரே 25:9ஏசா 45:1-32இராஜா 10:30
“அந்த நாளிலே நான் இஸ்ரயேலருக்குப் புதுப்பெலனைக் கொடுத்து, அவர்கள் மத்தியில் உன் வாயைத் திறப்பேன். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்றார்.” 1 சாமு 2:10லூக் 21:15சங் 132:17ஆமோ 3:7-8எசேக் 24:27எசேக் 33:22லூக் 1:69சங் 92:10