எகிப்தைக் குறித்த புலம்பல்
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: “மனுபுத்திரனே, நீ இறைவாக்கு உரைத்துச் சொல்லவேண்டியதாவது: ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: ஏசா 13:6எசேக் 21:12ஏசா 15:2யோவே 1:11யோவே 1:5ஏசா 14:31ஏசா 16:7ஏசா 23:1
“ ‘ஆபத்தான அந்த நாள் வருகிறது
“என அலறிச் சொல்லுங்கள்!”
அந்த நாள், சமீபமாயுள்ளது. ஒபதி 1:15யோவே 2:1-2எசேக் 30:18எசேக் 34:12எசேக் 7:12எசேக் 7:7ஏசா 24:21-23யோவே 1:15
யெகோவாவின் நாள் சமீபமாயுள்ளது.
அது ஒரு இருள்சூழ்ந்த நாள்;
பல நாடுகளுக்கும் அது அழிவின் காலம்.
எகிப்திற்கு விரோதமாக வாள் ஒன்று வரும், எசேக் 29:19எசேக் 29:8யாத் 15:14-16எசேக் 29:12எசேக் 30:9-10ஏசா 16:7ஏசா 19:16-17ஏசா 19:2
எத்தியோப்பியரின்மீது வேதனைகள் பெருகும்.
எகிப்திலே கொல்லப்படுவோர் விழும்போது
அதனுடைய செல்வம் எடுத்துக்கொண்டு போகப்படும்.
அதனுடைய அஸ்திபாரங்களும் இடிக்கப்படும்.
எத்தியோப்பியா, பூத், லீதியா, அரேபியா, லிபியா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களும், உடன்படிக்கை நாட்டின் மக்களும் எகிப்தியரோடுகூட வாளினால் சாவார்கள். எரே 25:20எசேக் 27:10எரே 25:24ஏசா 18:1ஏசா 20:4எரே 44:27எரே 46:9எரே 50:37
“ ‘யெகோவா கூறுவது இதுவே, எசேக் 29:10ஏசா 20:3-6ஏசா 31:3யோபு 9:13நாகூ 3:9
“ ‘எகிப்தின் நட்பு நாடுகளும் விழும்.
அவளுடைய பெருமையான பெலன் குன்றிப்போகும்.
அவர்கள், மிக்தோல் தொடக்கம்முதல் அஸ்வான்வரையும்
வாளினால் அவர்களுக்குள் வெட்டுண்டு கிடப்பார்கள்
என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
அவர்கள், பாழடைந்த நாடுகளுக்குள் எசேக் 29:12எரே 25:18-26எசேக் 32:18-32எரே 46:1-28
பாழாய்ப் போவார்கள்.
அழிந்துபோன பட்டணங்களுக்குள்,
அவர்களுடைய பட்டணங்களும் அழிக்கப்படும்.
நான் எகிப்திற்கு நெருப்பு வைக்கும்போதும், எசேக் 29:6ஆமோ 1:10ஆமோ 1:12ஆமோ 1:14ஆமோ 1:4ஆமோ 1:7எசேக் 22:31எசேக் 29:16
அதன் உதவியாளர்கள் நசுக்கப்படும்போதும்
நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
“ ‘அந்த நாளிலே பொய்யின்பம் கொண்டுள்ள எத்தியோப்பியரை அச்சுறுத்துவதற்காக என்னிடமிருந்து தூதுவர்கள் கப்பல்களில் போவார்கள். எகிப்து அழியும் நாளிலே, வேதனை அவர்களைப் பிடித்துக்கொள்ளும். நிச்சயமாகவே அந்த நாள் வருகிறது. ஏசா 18:1-2எசேக் 32:9-10ஏசா 23:5ஆமோ 4:2எசேக் 26:16எசேக் 27:35எசேக் 30:4-6எசேக் 33:33
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: எசேக் 29:19எசேக் 29:4-5எசேக் 30:24-25எசேக் 32:11-16
“ ‘பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சாரின் கையினால்,
எகிப்திய மக்கள்கூட்டத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன்.
நாடுகளுக்குள் மிகக் கொடியவனான அவனும், எசேக் 28:7உபா 28:50எசேக் 31:12எசேக் 32:12எசேக் 35:8எசேக் 39:11-20எசேக் 39:4ஆப 1:6-9
அவன் இராணுவமும் நாட்டை அழிப்பதற்காகக் கொண்டுவரப்படுவார்கள்.
அவர்கள், தங்கள் வாள்களை எகிப்திற்கு விரோதமாய் உருவி,
கொலையுண்டவர்களால் நாட்டை நிரப்புவார்கள்.
நான் நைல் நதியின் நீரோட்டங்களை வற்றச்செய்து, எசேக் 29:31 கொரி 10:26எசேக் 28:10எசேக் 29:9-10எசேக் 31:12ஏசா 19:4-10ஏசா 44:27நியாயாதி 2:14
நாட்டைத் தீயோருக்கு விற்றுப்போடுவேன்.
நாட்டையும் அதிலுள்ள அனைத்தையும்
அந்நியரின் கையினால் பாழாக்கிவிடுவேன்.
யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேன்.
“ ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: சகரி 10:11எரே 2:16எரே 46:14யாத் 12:12எசேக் 29:14-15ஓசி 9:6ஏசா 19:1-16எரே 43:12
“ ‘நான் விக்கிரகங்களை அழித்து
மெம்பிஸில் உள்ள உருவச் சிலைகளுக்கு ஒரு முடிவை உண்டாக்குவேன்.
எகிப்தில் இனியொருபோதும் இளவரசன் ஒருவன் எழும்புவதில்லை.
நாடெங்கும் நான் பயத்தை ஏற்படுத்துவேன்.
நான் எகிப்தின் பத்ரோஸைப் பாழாக்கி, எசேக் 29:14எரே 46:25சங் 78:12சங் 78:43ஏசா 19:11நாகூ 3:8எண் 13:22ஏசா 11:11
சோவானுக்கு நெருப்புமூட்டி,
தேபேஸைத் தண்டிப்பேன்.
எகிப்தின் பலத்த கோட்டையான பெலுஷக்யத்தின்மேல், நாகூ 1:6சங் 11:6வெளி 16:1
என் கோபத்தை ஊற்றுவேன்.
தேபேஸ் குடிகளை தண்டிப்பேன்.
நான் எகிப்திற்கு நெருப்பு வைப்பேன்; எசேக் 28:18எசேக் 30:8-9
பெலுஷக்யம் வேதனையால் துடிக்கும்;
தேபேஸ் புயலினால் அழிந்துபோகும்!
மெம்பிஸ் தொடர்ந்து துன்பத்திலேயே இருக்கும்.
ஹெலியோபொலிஸ், பூபாஸ்டிஸ் நகரங்களின் வாலிபர்கள் ஆதி 41:45
வாளினால் சாவார்கள்.
நகரங்களிலுள்ளவர்களும் சிறைப்பட்டுப் போவார்கள்.
எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும் நாளிலே, எசேக் 30:3எசேக் 29:15ஏசா 10:27எரே 2:16யாத் 10:15எசேக் 31:18எசேக் 32:18-32ஏசா 13:10
தக்பானேஸில் பகல் இருளாகும்.
அதனுடைய பெருமையான பெலனும் ஒரு முடிவுக்கு வரும்.
அது மேகங்களால் மூடப்படும்.
அதன் கிராமங்களிலுள்ளவர்கள் சிறைப்பட்டுப் போவார்கள்.
இவ்வாறாக, நான் எகிப்தைத் தண்டிப்பேன். எசேக் 30:14வெளி 17:1எசேக் 25:11எசேக் 5:15எசேக் 5:8எண் 33:4சங் 9:16ரோம 2:5
அவர்களும் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள்.’ ”
பாபிலோனின் பலம் முறிந்தது
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பதினோராம் வருடம், முதலாம் மாதம், ஏழாம்நாளில், யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. எசேக் 26:1எசேக் 29:17எசேக் 29:1எசேக் 1:2எசேக் 31:1 “மனுபுத்திரனே, நான் எகிப்திய அரசன் பார்வோனின் புயத்தை முறித்துவிட்டேன். அது சுகமடையும்படி கட்டப்படவும் இல்லை. வாள் பிடிக்கத்தக்க பெலன் ஏற்படக்கூடியதாக பத்தை வைத்துக் கட்டப்படவுமில்லை. எரே 30:13எரே 46:11எரே 48:25சங் 37:17எசேக் 30:24சங் 10:15ஏசா 1:6எரே 51:8-9 ஆதலால், ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் எகிப்தின் அரசன் பார்வோனுக்கு விரோதமாய் இருக்கிறேன். அவனுடைய முறிந்த புயத்தோடு நல்ல புயத்தையும் அதாவது, இரு கரங்களையுமே நான் முறித்து, அவனுடைய கையிலிருந்து வாளை விழப்பண்ணுவேன். சங் 37:172இராஜா 24:7எசேக் 29:3எரே 37:7எசேக் 34:16எரே 46:1-12எரே 46:21-25 நான் எகிப்தியரைப் பல நாடுகளுக்குள்ளும் சிதறிப்போகச்செய்து, அவர்களை நாடுகளெங்கும் கலைந்து போகப்பண்ணுவேன். எசேக் 30:17-18எசேக் 30:26எசேக் 29:12-13 நான் பாபிலோன் அரசனின் கரங்களை பலப்படுத்தி, எனது வாளை அவனுடைய கையிலே கொடுப்பேன். ஆனால் பார்வோனின் கரங்களையோ நான் முறிப்பேன். அவன் காயமுற்ற ஒரு மனிதனைப்போல பாபிலோன் அரசனுக்கு முன் வேதனையில் புலம்புவான். எசேக் 30:25செப்ப 2:12ஏசா 45:1ஏசா 45:5நெகே 6:9உபா 32:41-42எசேக் 26:15எசேக் 30:10 பாபிலோன் அரசனின் கரங்களை நான் பலப்படுத்துவேன். ஆனால் பார்வோனின் புயங்களோ செயலிழந்துபோகும். நான் எனது வாளைப் பாபிலோன் அரசனின் கையில் கொடுப்பேன். அவன் அதை எகிப்திற்கு விரோதமாகச் சுழற்றுவான். அப்பொழுது அவர்கள் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள். எசேக் 29:16எசேக் 29:21எசேக் 30:19எசேக் 30:26எசேக் 32:15எசேக் 38:16எசேக் 38:23எசேக் 39:21-22 நான் எகிப்தியரைப் பல நாடுகளுக்குள்ளும் சிதறடித்து, தேசங்களுக்குள்ளே அவர்களைக் கலைந்து போகப்பண்ணுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.” தானி 11:42எசேக் 29:12எசேக் 30:17-18எசேக் 30:23எசேக் 6:13