மேலும், அவர் என்னிடம், “மனுபுத்திரனே, நீ உன் முன்னால் இருப்பதைச் சாப்பிடு, இந்தப் புத்தகச்சுருளைச் சாப்பிட்டு. அதன்பின் இஸ்ரயேல் வீட்டாரிடம் போய்ப் பேசு” என்றார். வெளி 10:9-10எசேக் 3:17-21எசேக் 2:8-91 தீமோ 4:15எசேக் 3:15எரே 24:1-7எசேக் 2:3எசேக் 3:10-11 நான் என் வாயைத் திறந்தபோது, அவர் அந்த புத்தகச்சுருளை எனக்குச் சாப்பிடக் கொடுத்தார். எரே 25:17அப் 26:19
பின்பு அவர் என்னிடம், “மனுபுத்திரனே, நான் கொடுக்கும் இந்த புத்தகச்சுருளைச் சாப்பிடு. அதனால் உன் வயிற்றை நிரப்பு என்றார்.” எனவே அதை நான் சாப்பிட்டேன், அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாக இருந்தது. எரே 15:16வெளி 10:9-10சங் 119:103சங் 19:10கொலோ 3:16நீதி 2:10-11சங் 119:11சங் 119:97
பின்பு அவர் என்னிடம்: “மனுபுத்திரனே, இப்பொழுது நீ இஸ்ரயேல் வீட்டாரிடம் போய் என் வார்த்தைகளைக் கூறு. அப் 1:8மத் 15:24எசேக் 2:3எசேக் 2:7எசேக் 3:11மத் 10:5-6 புரியாத பேச்சும், கடினமான மொழியும் கொண்ட மக்களிடமல்ல, இஸ்ரயேல் வீட்டாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய். யோனா 1:2ஏசா 33:19அப் 26:17-18எசேக் 3:6ஏசா 28:11யோனா 3:2-4சங் 81:5 புரியாத பேச்சையும், உன்னால் விளங்கிக்கொள்ள முடியாத கடினமான மொழியையும் பேசுகிற திரளான மக்களிடத்தில் நான் உன்னை அனுப்பவில்லை. அப்படிப்பட்டவர்களிடம் உன்னை நான் அனுப்பியிருந்தால், நிச்சயமாக அவர்கள் உனக்குச் செவிகொடுத்திருப்பார்கள். யோனா 3:5-10லூக் 11:30-32மத் 11:20-24மத் 12:41-42ரோம 9:30-33அப் 27:28 ஆனால் இஸ்ரயேல் வீட்டாரோ, எனக்குச் செவிகொடுக்க விருப்பமற்றவர்கள். ஆதலால் உனக்கும் அவர்கள் செவிகொடுக்கமாட்டார்கள். இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் கல்நெஞ்சமும், பிடிவாதமும் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். லூக் 10:161 சாமு 8:7எசேக் 2:4யோவா 15:20-24எசேக் 24:7ஏசா 3:9எரே 25:3-4எரே 3:3 ஆனால் நான் உன்னையும் அவர்களைப்போல் இணங்காதவனாயும் கடினமானவனாயும் மாற்றுவேன். எரே 1:18அப் 7:51-561 இராஜா 21:20யாத் 11:4-8யாத் 4:15-16எபி 11:27எபி 11:32-37ஏசா 50:7 உன் நெற்றியை கருங்கல்லிலும் பார்க்கக் கடினமான கல்லைப்போலாக்குவேன். அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தாராய் இருந்தாலும், நீ அவர்களுக்குப் பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றார்.” எசேக் 2:6எரே 1:8ஏசா 41:10ஏசா 50:7சகரி 7:121 தீமோ 2:3ஏசா 41:14எரே 17:18
மேலும் அவர் என்னிடம், “மனுபுத்திரனே, நான் உன்னோடு பேசும் வார்த்தைகளையெல்லாம் கவனமாய்க் கேட்டு, அவைகளை உன் உள்ளத்திலே பதித்து வைத்துக்கொள். யோபு 22:22சங் 119:11லூக் 8:15எசேக் 2:8எசேக் 3:1-31 தெச 2:131 தெச 4:1நீதி 19:20 இப்பொழுது நீ நாடுகடத்தப்பட்டிருக்கும் உன் சொந்த நாட்டு மக்களிடம் போய்ப் பேசு. அவர்கள் செவிகொடுத்தாலும், செவிகொடுக்காவிட்டாலும், ‘ஆண்டவராகிய யெகோவா இவ்வாறு சொல்கிறார்,’ என்று அவர்களுக்குச் சொல் என்றார்.” எசேக் 2:7எசேக் 2:5எசேக் 3:27எசேக் 33:2எசேக் 33:12எசேக் 33:17எசேக் 33:30அப் 20:26-27
அதன்பின் ஆவியானவர் என்னை உயரத்தூக்கினார். யெகோவாவின் மகிமை அவருடைய உறைவிடத்தில் துதிக்கப்படுவதாக என்று எனக்குப் பின்னாக அதிர்கின்ற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப் 8:39எசேக் 8:3அப் 2:2எசேக் 11:11 இராஜா 18:12எசேக் 3:141 சாமு 4:21-222இராஜா 2:16 அச்சத்தம், உயிரினங்களின் சிறகுகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டிருந்ததினாலும், அவற்றினருகேயிருந்த சக்கரங்கள் எழுப்பிய சத்தத்தினாலும் வந்த ஒரு அதிரும் சத்தம். எசேக் 1:24எசேக் 10:16-17எசேக் 10:52 சாமு 5:24எசேக் 1:15 அப்பொழுது ஆவியானவர் என்னை உயர்த்தி, அங்கிருந்து கொண்டுபோனார். நான் மனக்கசப்புடனும் உள்ளத்தில் கோபத்துடனும் போனேன். யெகோவாவின் வலிமையான கரமும் என்மீது இருந்தது. 2இராஜா 3:15எசேக் 37:1எரே 20:7-9எசேக் 8:32இராஜா 2:16எசேக் 1:3எசேக் 3:121 இராஜா 18:46 நான் கேபார் நதிக்கரையில் அமைந்திருந்த தெலாபீப் என்னுமிடத்தில் நாடுகடத்தப்பட்டிருந்தவர்களிடம் வந்துசேர்ந்தேன். அங்கே அவர்கள் மத்தியில் ஏழு நாட்கள் மனப்பாரத்தோடு உட்கார்ந்திருந்தேன். யோபு 2:13சங் 137:1எசேக் 1:1ஆதி 50:10எசேக் 10:15ஆப 3:16எரே 23:9எசேக் 3:23
இஸ்ரயேலுக்கு எச்சரிப்பு
ஏழுநாட்களின் முடிவில் யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. எரே 42:7 “மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலாளியாக நியமித்திருக்கிறேன். ஆதலால் நீ, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டு, அவர்களுக்கு எனது எச்சரிப்பைக் கொடு. 2 நாளாக 19:10எபி 13:17ஏசா 52:8கொலோ 1:28ஏசா 62:6எரே 6:171 கொரி 4:141 தெச 5:14 நான் கொடியவன் ஒருவனிடம், ‘நீ நிச்சயமாய் சாவாய்,’ என கூறும்போது நீ அவனை எச்சரிக்கும்படியாகவும், அவன் தன் தீய வழிகளிலிருந்து விலகி தன்னைக் காக்கும்படியாகவும், நீ அவனிடம் பேசாமற்போனால், அந்தக் கொடியவன் தன் பாவத்திலே மரிப்பான். அவனுடைய இரத்தப்பழிக்கு உன்னிடமே நான் கணக்குக்கேட்பேன். எசேக் 33:6யாக் 5:19-20எசேக் 3:20அப் 20:26-27எசேக் 33:8-10லூக் 13:51 தீமோ 4:16அப் 2:40 ஆனால் அவனை நீ எச்சரித்தும், அவன் தனது கொடுமையையும் தீயவழிகளையும்விட்டுத் திரும்பாமற் போவானாயின், அவன் தனது பாவத்திலேயே மரிப்பான். ஆனால் நீயோ உன்னைக் காத்துக்கொள்வாய். எசேக் 33:91 தீமோ 4:16எசேக் 14:202 தெச 1:8-9எசேக் 14:14எபி 12:25அப் 20:26எபி 10:26-27
“மேலும் நீதியுள்ள ஒருவன் தன் நீதியிலிருந்து வழுவி, தீமையானவற்றைச் செய்யும்போது, அவனுக்கு முன்னால் தடையொன்றை வைப்பேன். அப்பொழுது அவன் மரிப்பான். நீ அவனை எச்சரியாதபடியினால், அவன் தனது பாவத்திலேயே மரிப்பான். அவன் செய்த நற்காரியங்கள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழிக்கு நான் உன்னிடமே கணக்குக்கேட்பேன். எசேக் 18:24எசேக் 18:26எசேக் 33:12-13எசேக் 3:18எபி 10:38ரோம 2:7-82 பேது 2:18-22சங் 125:5 ஆனால் அந்த நீதியுள்ள மனிதன், பாவம் செய்யாதபடி அவனை நீ எச்சரித்ததினால் அவன் பாவம் செய்யாது விடுவானாயின், உண்மையாகவே அவன் பிழைப்பான். ஏனெனில் உன் எச்சரிப்பை அவன் ஏற்றுக்கொண்டானே. நீயும் உனது உயிரைக் காத்துக்கொள்வாய்” என்றார். 1 தீமோ 4:161 கொரி 4:14யாக் 5:20நீதி 9:9தீத் 2:151 யோவா 3:6-9அப் 20:31எசேக் 3:19-20
யெகோவாவின் கரம் அங்கே என்மீது இருந்தது. அவர் என்னிடம், “எழுந்து சமவெளிக்குப் புறப்பட்டுப்போ, அங்கே நான் உன்னோடு பேசுவேன்” என்றார். அப் 9:6எசேக் 1:3எசேக் 37:1எசேக் 8:4எசேக் 3:14 எனவே நான் எழுந்து சமவெளிக்குப் போனேன். கேபார் நதியண்டையிலே கண்ட மகிமையைப் போலவே, யெகோவாவினுடைய மகிமை அங்கே நிற்பதை நான் கண்டேன். உடனே முகங்குப்புற விழுந்தேன். எசேக் 1:28அப் 7:55வெளி 1:17தானி 10:8-9தானி 8:17எசேக் 1:1-4எசேக் 10:18எசேக் 9:3
அப்பொழுது ஆவியானவர் எனக்குள் வந்து என்னைக் காலூன்றி நிற்கச்செய்தார். அவர் என்னோடு பேசி என்னிடம் கூறியதாவது: “நீ உன் வீட்டிற்குள்போய்ப் பூட்டிக்கொண்டிரு. எசேக் 2:2தானி 10:19தானி 10:8-10எசேக் 37:10எசேக் 4:1-4 மனுபுத்திரனே! அவர்கள் உன்னைக் கயிறுகளால் கட்டுவார்கள்; அப்பொழுது நீ மக்களிடையே போகமுடியாதபடி கட்டப்பட்டிருப்பாய். எசேக் 4:8அப் 20:23அப் 21:11-13அப் 9:16யோவா 21:18மாற் 3:21 மேலும், நான் உன் நாவை உன்னுடைய மேல்வாயோடே ஒட்டிக்கொள்ளும்படிச் செய்வேன். அதனால் நீ பேசாதிருப்பாய். அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தாராயிருந்தபோதும், அவர்களைக் கண்டிக்க உன்னால் முடியாமலிருக்கும். எசேக் 24:27ஆமோ 8:11-12லூக் 1:20-22மீகா 3:6-7சங் 137:6சங் 51:15ஆமோ 5:10எசேக் 2:3-8 ஆனால் நான் உன்னோடு பேசும்போது உனது வாயைத் திறப்பேன். அப்பொழுது நீ, ‘ஆண்டவராகிய யெகோவா இவ்வாறு சொல்லுகிறார் என அவர்களுக்குச் சொல்வாய்.’ கேட்பவன் கேட்கட்டும், கேட்க மறுப்பவன் கேட்காமலிருக்கட்டும். ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் குடும்பத்தார் என்றார். எசேக் 12:2-3எசேக் 24:27எசேக் 3:11எசேக் 29:21எபே 6:19யாத் 4:11-12எசேக் 11:25எசேக் 2:5