ஏதோமுக்கு எதிரான இறைவாக்கு
யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: 2 பேது 1:21எசேக் 21:1எசேக் 22:1எசேக் 34:1 “மனுபுத்திரனே, நீ சேயீர்மலைக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி அதற்கு விரோதமாக இறைவாக்கு சொல். எசேக் 25:8எசேக் 6:2ஆதி 32:32 நாளாக 20:102 நாளாக 20:22-232 நாளாக 25:11-14ஆமோ 1:11-12உபா 2:5 நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. சேயீர்மலையே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன். நான் உனக்கு விரோதமாய் எனது கரத்தை நீட்டி, உன்னைப் பாழாக்குவேன். எரே 6:12எசேக் 35:7எசேக் 6:14எரே 15:6எசேக் 21:3எசேக் 25:13எசேக் 29:10எசேக் 29:3 நான் உனது பட்டணங்களை இடிந்துபோகப்பண்ணுவேன். நீ பாழாக்கிவிடப்படுவாய். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய். எசேக் 35:9மல்கி 1:3-4யாத் 14:4யாத் 9:14எசேக் 35:12எசேக் 6:6-7யோவே 3:19
“ ‘இஸ்ரயேலின் தண்டனை உச்சமடைந்து, அவர்கள் துன்பத்திலிருந்த வேளையில் நீ பழைய பகைமையை நினைவில் வைத்திருந்தபடியினால், அவர்களை வாளுக்கு இரையாக்கினாய். சங் 137:7ஒபதி 1:10-16ஆமோ 1:11எசேக் 21:25எசேக் 21:29எசேக் 25:12எசேக் 25:15ஆதி 27:41-42 ஆகையால் நான் வாழ்வது நிச்சயம்போலவே, உன்னை நான் இரத்தம் சிந்துதலுக்கு ஒப்புக்கொடுப்பேன். அது உன்னைத் தொடரும். இரத்தம் சிந்துதலை நீ வெறுக்காதபடியால், இரத்தம் சிந்துதல் உன்னைத் தொடரவே செய்யும் என்பதும் நிச்சயம் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். ஏசா 63:2-6ஒபதி 1:15வெளி 18:24மத் 7:2சங் 109:16-17வெளி 16:5-7வெளி 18:6வெளி 19:2-3 சேயீர்மலையைப் பாழாக்கி, போவோரையும் வருவோரையும் அதிலிருந்து அகற்றிவிடுவேன். எசேக் 29:11எசேக் 35:3நியாயாதி 5:6-72 நாளாக 15:5-6எசேக் 33:28எசேக் 35:9 நான் உன் மலைகளைக் கொலையுண்டோரால் நிரப்புவேன். வாளினால் கொல்லப்பட்டோர் உனது குன்றுகளிலும், பள்ளத்தாக்குகளிலும் உன் சகல கணவாய்களிலும் விழுவார்கள். எசேக் 31:12எசேக் 32:4-5எசேக் 39:4-5ஏசா 34:2-7 நான் உன்னை என்றென்றும் பாழாயிருக்கும்படி செய்வேன். உனது பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நானே யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய். எசேக் 25:13எசேக் 35:4எசேக் 6:7மல்கி 1:3-4எசேக் 36:11எசேக் 7:4எசேக் 7:9எரே 49:13
“ ‘யெகோவாவாகிய நான் அங்கு இருப்பினும், “இஸ்ரயேல் யூதா ஆகிய இவ்விரு நாடுகளும், அவைகளின் நாடுகளும் எங்களுடையதாகும்; அவைகளை நாம் உடைமையாக்கிக்கொள்வோம்” என்றும் நீ சொன்னாய். எசேக் 36:5எசேக் 48:35சங் 83:4-12எசேக் 36:2சங் 48:1-3ஏசா 12:6ஒபதி 1:13சங் 132:13-14 ஆதலால் ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: நான் வாழ்வது நிச்சயம்போலவே, நீ அவர்களில்கொண்ட வெறுப்பினால் காட்டிய கோபத்திற்கும் எரிச்சலுக்கும் ஏற்றவாறு நான் உன்னை நடத்துவேன். நான் உனக்குத் தீர்ப்பிடும்போது, அவர்கள் மத்தியில் என்னை அறிந்துகொள்ளச் செய்வேன் என்பதும் நிச்சயம். மத் 7:2சங் 9:16ஆமோ 1:11சங் 137:7சங் 73:17-18எசேக் 25:14யாக் 2:13 அப்பொழுது இஸ்ரயேலின் மலைகளுக்கு விரோதமாக நீ சொன்ன இழிவான காரியங்களையெல்லாம் யெகோவாவாகிய நான் கேட்டேன் என்பதை நீ அறிந்துகொள்வாய். “அவை பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது” என்று நீ சொன்னாயே. எசேக் 36:2சங் 83:12எசேக் 35:9எசேக் 6:7எரே 50:7சங் 94:9-10 நீ எனக்கு விரோதமாய் பெருமைபாராட்டி, அடக்கமின்றி எனக்கு விரோதமாய்ப் பேசினாய். அதை நான் கேட்டேன். தானி 11:361 சாமு 2:3எசேக் 35:12ஏசா 36:20எரே 29:232 நாளாக 32:152 நாளாக 32:192இராஜா 19:28 ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. பூமி முழுவதுமே மகிழ்ந்து கொண்டிருக்கையில் நான் உன்னைப் பாழாகும்படி செய்வேன். ஏசா 14:7-8ஏசா 65:13-15எரே 51:48 ஏனெனில், இஸ்ரயேலின் உரிமைச்சொத்து பாழாகியபோது நீ மகிழ்ந்தாயே. அவ்வாறே நானும் உனக்குச் செய்வேன். நீ பாழாக்கப்படுவாய். சேயீர்மலையே, நீயும் முழு ஏதோமும் பாழாக்கப்படுவீர்கள். அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.’ ” எசேக் 35:3-4ஏசா 34:5-6புலம் 4:21ஒபதி 1:12ஒபதி 1:15சங் 137:7எசேக் 35:9எசேக் 36:2-5