எஸ்றா 2

Ezra 2

திரும்பி வந்தவர்களின் பெயர்ப் பட்டியல்

பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் சிறைபிடிக்கப்பட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டவர்களுள், சிறையிருப்பிலிருந்து அவர்களுடைய பட்டணமான எருசலேமுக்கும் யூதாவுக்கும் 2இராஜா 25:112இராஜா 24:14-16நெகே 7:6-732 நாளாக 36:1-23எஸ்த 1:1எஸ்த 1:11எஸ்த 1:3எஸ்த 1:8 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களுடன் திரும்பி வந்தார்கள். ஆகா 1:12ஆகா 1:14ஆகா 2:4நெகே 7:7எஸ்றா 1:11எஸ்றா 3:8-9எஸ்றா 4:3எஸ்றா 4:8

இவர்களுடன் திரும்பி வந்த இஸ்ரயேல் மனிதரின் பெயர் பட்டியல்:

பாரோஷின் எஸ்றா 8:3எஸ்றா 10:25நெகே 7:8

சந்ததி 2,172 பேர்,

செபத்தியாவின் சந்ததி 372 பேர், எஸ்றா 8:8நெகே 7:9

ஆராகின் சந்ததி 775 பேர், நெகே 7:10நெகே 6:18

யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,812 பேர், நெகே 7:11எஸ்றா 10:14எஸ்றா 10:30எஸ்றா 8:4எஸ்றா 8:9

ஏலாமின் சந்ததி 1,254 பேர், எஸ்றா 10:26எஸ்றா 2:31எஸ்றா 8:7நெகே 7:12

சத்தூவின் சந்ததி 945 பேர், நெகே 7:13எஸ்றா 10:27

சக்காயின் சந்ததி 760 பேர், நெகே 7:14

பானியின் சந்ததி 642 பேர், எஸ்றா 10:34நெகே 7:15

பெபாயின் சந்ததி 623 பேர், எஸ்றா 10:28எஸ்றா 8:11நெகே 7:16

அஸ்காதின் சந்ததி 1,222 பேர், நெகே 7:17எஸ்றா 8:12

அதோனிகாமின் சந்ததி 666 பேர், எஸ்றா 8:13நெகே 7:18

பிக்வாயின் சந்ததி 2,056 பேர், எஸ்றா 8:14நெகே 7:19

ஆதீனின் சந்ததி 454 பேர், நெகே 7:20எஸ்றா 8:6

எசேக்கியாவின் வழிவந்த ஆதேரின் சந்ததி 98 பேர், நெகே 7:21

பேஸாயின் சந்ததி 323 பேர், நெகே 7:23

யோராகின் சந்ததி 112 பேர், நெகே 7:24

ஆசூமின் சந்ததி 223 பேர், நெகே 7:22எஸ்றா 10:33

கிபாரின் சந்ததி 95 பேர். நெகே 7:25

பெத்லெகேமின் மனிதர் 123 பேர், 1 நாளாக 2:50-52

நெத்தோபாவின் மனிதர் 56 பேர், 1 நாளாக 2:542 சாமு 23:28எரே 40:8நெகே 7:26

ஆனதோத்தின் மனிதர் 128 பேர், ஏசா 10:30எரே 1:1எரே 11:21யோசு 21:18நெகே 7:27

அஸ்மாவேத்தின் மனிதர் 42 பேர், நெகே 7:28

கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் பட்டணங்களின் மனிதர் 743 பேர், யோசு 9:17நெகே 7:29

ராமா, கேபாவின் மனிதர் 621 பேர், யோசு 18:24-25நெகே 7:30

மிக்மாசின் மனிதர் 122 பேர், 1 சாமு 13:231 சாமு 13:5ஏசா 10:28நெகே 7:31

பெத்தேல், ஆயியின் மனிதர் 223 பேர், ஆதி 12:8யோசு 7:2யோசு 8:17யோசு 8:9நெகே 7:33

நேபோவின் மனிதர் 52 பேர், உபா 32:49ஏசா 15:2எரே 48:1எரே 48:22நெகே 7:33எண் 32:3

மக்பீசின் மனிதர் 156 பேர்,

மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர், எஸ்றா 2:7நெகே 7:34

ஆரீமின் மனிதர் 320 பேர், எஸ்றா 10:31நெகே 7:35

லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 725 பேர், 1 நாளாக 8:12நெகே 11:34-35நெகே 6:2நெகே 7:37

எரிகோவின் மனிதர் 345 பேர், 1 இராஜா 16:342 நாளாக 28:15நெகே 7:36

செனாகாவின் மனிதர் 3,630 பேர். நெகே 7:38

ஆசாரியர்கள்: 1 நாளாக 24:7-181 நாளாக 9:10எஸ்றா 3:9நெகே 7:39

யெசுவாவின் குடும்பத்தானாகிய

யெதாயாவின் சந்ததி 973 பேர்,

இம்மேரின் சந்ததி 1,052 பேர், 1 நாளாக 24:14எஸ்றா 10:20நெகே 7:40

பஸ்கூரின் சந்ததி 1,247 பேர், 1 நாளாக 9:12எஸ்றா 10:22நெகே 7:41

ஆரீமின் சந்ததி 1,017 பேர். 1 நாளாக 24:8எஸ்றா 10:21நெகே 7:42

லேவியர்கள்: எஸ்றா 3:9நெகே 7:43

ஓதவியாவின் வழிவந்த யெசுவா, கத்மியேல் ஆகியோரின் சந்ததி 74 பேர்.

பாடகர்கள்: 1 நாளாக 6:391 நாளாக 15:171 நாளாக 25:1-2நெகே 11:17நெகே 7:44

ஆசாப்பின் சந்ததி 128 பேர்.

ஆலய வாசல் காவலர்கள்: 1 நாளாக 26:1-191 நாளாக 9:17நெகே 7:45

சல்லூம் அதேர், தல்மோன், அக்கூப், அதிதா, சோபாய் ஆகியோரின் சந்ததிகள் 139 பேர்.

திரும்பி வந்த ஆலய பணியாட்கள்: 1 நாளாக 9:2எஸ்றா 2:58நெகே 10:28நெகே 7:46-56

சீகா, அசுபா, தபாயோத்,

கேரோசு, சீயாகா, பாதோன், நெகே 7:47

லெபானா, அகாபா, அக்கூப், நெகே 7:48

ஆகாப், சல்மாயி, ஆனான்,

கித்தேல், காகார், ரயாயா,

ரேசீன், நெக்கோதா, காசாம்,

ஊசா, பாசெயா, பேசாய், நெகே 7:51

அஸ்னா, மெயூனீம், நெபுசீம், நெகே 7:52

பக்பூக், அகுபா, அர்கூர்,

பஸ்லூத், மெகிதாவ், அர்ஷா, நெகே 7:54

பர்கோஸ், சிசெரா, தேமா, நெகே 7:55

நெத்சியா, அதிபா ஆகியோரின் சந்ததிகள்.

திரும்பி வந்த சாலொமோனின் வேலையாட்களின் சந்ததிகள்: 1 இராஜா 9:21நெகே 7:57

சோதாய், சொபெரேத், பெருதா,

யாலா, தர்கோன், கித்தேல், நெகே 7:58

செபத்தியா, அத்தீல், பொகெரேத் செபாயீம், ஆமி ஆகியோரின் சந்ததிகள். நெகே 7:59

ஆலய பணியாட்களுடன், சாலொமோனின் பணியாட்களின் சந்ததிகளும் சேர்த்து 392 பேர். 1 நாளாக 9:21 இராஜா 9:21யோசு 9:21யோசு 9:23யோசு 9:27எஸ்றா 7:7நெகே 3:26நெகே 7:60

பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை. நெகே 7:61

அவர்கள், தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 652 பேர். நெகே 7:62

ஆசாரியர்களைச் சேர்ந்தவர்கள்: 2 சாமு 17:271 இராஜா 2:72 சாமு 19:31-39நெகே 7:63-64

அபாயா, அக்கோஸ், அக்கோசு, பர்சில்லாய் ஆகியோரின் சந்ததிகள். பர்சில்லாய் என்பவன் கீலேயாத்திய மனிதனான பர்சில்லாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்ததால் இப்பெயரால் அழைக்கப்பட்டான்.

இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள். எண் 3:10எண் 16:39-40எசேக் 44:10-14லேவி 21:21-23எண் 18:7 ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான். யாத் 28:30லேவி 2:10லேவி 2:3எண் 27:21லேவி 22:10நெகே 8:91 சாமு 28:6உபா 33:8

எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர். எரே 23:3எஸ்றா 9:8ஏசா 10:20-22நெகே 7:66-69 இவர்களைத் தவிர அவர்களின் ஆண் பெண் வேலைக்காரர் 7,337 பேரும், பாடகர்களும் பாடகிகளும் 200 பேரும் இருந்தனர். 2 சாமு 19:352 நாளாக 35:25பிரச 2:8யாத் 15:20-21ஏசா 14:1-2மத் 9:23நெகே 7:67சங் 148:12-13 அவர்களிடம் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் இருந்தன.

அவர்கள் எல்லோரும் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தவுடனே, குடும்பத் தலைவர்களில் சிலர் இறைவனுடைய ஆலயத்தை அதனுடைய இடத்தில் திரும்பக் கட்டுவதற்காக சுயவிருப்புக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். 2 கொரி 9:72 கொரி 8:3யாத் 35:29யாத் 35:5-19யாத் 36:31 நாளாக 21:181 நாளாக 22:11 நாளாக 29:5-17 அவர்கள் தங்களால் முடியுமானவரை 61,000 தங்கக் காசுகளையும் 1, 5,000 வெள்ளியையும் 2, ஆசாரியருக்கான 100 உடைகளையும் அவ்வேலைக்கென ஆலயத் திரவிய களஞ்சியத்துக்குக் கொடுத்தார்கள். எஸ்றா 8:25-341 நாளாக 22:141 நாளாக 26:20-281 இராஜா 7:51நெகே 7:71-72

ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் வேறுசில மக்களுடனும், மீதியான இஸ்ரயேலருடனும் தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியமர்ந்தார்கள். நெகே 7:731 நாளாக 11:21 நாளாக 9:2எஸ்றா 6:16-17நெகே 11:3-36