ஆதியாகமம் 11

Genesis 11

பாபேல் கோபுரம்

அக்காலத்தில் முழு உலகமும் ஒரே மொழியையும், பொதுவான ஒரே பேச்சு வழக்கையும் உடையதாய் இருந்தது. அப் 2:6செப்ப 3:9ஏசா 19:18 மக்கள் கிழக்குநோக்கி இடம்பெயர்ந்து சென்றபோது, சிநெயார் நாட்டிலே ஒரு சமவெளியைக் கண்டு, அங்கே குடியேறினார்கள். தானி 1:2ஆதி 10:10ஆதி 14:1ஏசா 11:11சகரி 5:11ஆதி 13:11ஆதி 11:9

அங்கே அவர்கள், “நாம் செங்கல் செய்து, அவற்றை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். அவர்கள் கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லையும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலையும் உபயோகித்தார்கள். ஆதி 14:10யாத் 1:14யாத் 2:3எபி 10:24யாக் 5:12 சாமு 12:31எபி 3:13ஏசா 41:6-7 பின்னும் அவர்கள், “வாருங்கள், நாம் வானத்தைத் தொடும்படியான கோபுரத்தைக் கொண்ட ஒரு பட்டணத்தைக் கட்டுவோம்; அதனால் நமக்குப் புகழ் உண்டாகும்படி செய்து, நாம் பூமியெங்கிலும் சிதறிப் போகாமல் இருப்போம்” என்றும் சொல்லிக்கொண்டார்கள். உபா 1:28யோவா 5:44லூக் 1:51தானி 4:30உபா 9:1நீதி 10:7சங் 49:11-132 சாமு 8:13

மனிதர் கட்டிக்கொண்டிருந்த நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்க, யெகோவா இறங்கி வந்தார். சங் 33:13-14ஆதி 18:21யோவா 3:13எபி 4:13எரே 23:23-24யாத் 19:11யாத் 19:20சங் 11:4 யெகோவா, “அவர்கள் ஒரே மொழி பேசும் ஒரே மக்களாய் இருப்பதால் இதைச் செய்யத்தொடங்கி இருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் திட்டமிடும் எதையும் அவர்களால் செய்யமுடியாமல் போகாது. சங் 2:1-4ஆதி 11:1ஆதி 3:22பிரச 11:9லூக் 1:51ஆதி 6:5ஆதி 9:19ஆதி 8:21 ஆதலால் நாம் அங்கே இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றவர் விளங்கிக்கொள்ளாதபடி, அவர்களுடைய மொழியைக் குழப்பிவிடுவோம் வாருங்கள்” என்றார். சங் 33:10ஆதி 1:26யோபு 5:12-13சங் 55:91 கொரி 14:2-111 கொரி 14:23அப் 2:4-11ஆதி 42:23

அப்படியே யெகோவா அவர்களை அங்கிருந்து பூமியெங்கும் சிதறப்பண்ணி, அவர்கள் பட்டணத்தைக் கட்டுவதை நிறுத்தினார். லூக் 1:51ஆதி 10:25ஆதி 10:32உபா 32:8ஆதி 11:4ஆதி 11:9ஆதி 49:7 முழு உலகத்தினுடைய மொழியையும் யெகோவா குழப்பினபடியால், அந்த இடம் பாபேல் என்று அழைக்கப்பட்டது. யெகோவா அங்கிருந்து அவர்களைப் பூமியெங்கும் சிதறப்பண்ணினார். ஆதி 10:10ஆதி 10:5அப் 17:26ஆதி 10:201 கொரி 14:23ஆதி 10:25எரே 50:1-46ஆதி 10:31-32

சேமிலிருந்து ஆபிராம்வரை

சேமின் வம்சவரலாறு இதுவே: 1 நாளாக 1:17-27ஆதி 10:21-22ஆதி 11:27லூக் 3:34-36

பெருவெள்ளம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் சென்றபின், சேம் 100 வயதாய் இருக்கும்போது, அர்பக்சாத்தைப் பெற்றான். அர்பக்சாத் பிறந்த பிறகு, சேம் 500 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான். ஆதி 9:7ஆதி 1:28ஆதி 5:4-32சங் 127:3-4சங் 128:3-4சங் 144:12

அர்பக்சாத் 35 வயதாய் இருக்கும்போது, சேலாவைப் பெற்றான். லூக் 3:36 சேலா பிறந்த பிறகு அர்பக்சாத் 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

சேலா 30 வயதாய் இருக்கும்போது, ஏபேரைப் பெற்றான். ஏபேர் பிறந்த பிறகு, சேலா 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

ஏபேர் 34 வயதாய் இருக்கும்போது, பேலேகைப் பெற்றான். 1 நாளாக 1:19ஆதி 10:21ஆதி 10:25லூக் 3:35எண் 24:24 பேலேகு பிறந்த பிறகு, ஏபேர் 430 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

பேலேகு 30 வயதாய் இருக்கும்போது ரெகூவைப் பெற்றான். லூக் 3:35 ரெகூ பிறந்த பிறகு, பேலேகு 209 வருடங்கள் வாழ்ந்து இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

ரெகூ 32 வயதாய் இருக்கும்போது செரூகுவைப் பெற்றான். லூக் 3:35 செரூகு பிறந்த பிறகு ரெகூ 207 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

செரூகு 30 வயதாய் இருக்கும்போது நாகோரைப் பெற்றான். யோசு 24:2 நாகோர் பிறந்த பிறகு செரூகு 200 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

நாகோர் 29 வயதாய் இருக்கும்போது தேராகுவைப் பெற்றான். லூக் 3:34யோசு 24:2 தேராகு பிறந்த பிறகு நாகோர் 119 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.

தேராகு 70 வயதாய் இருக்கும்போது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான். யோசு 24:21 நாளாக 1:26-27ஆதி 12:4-5ஆதி 22:20-24ஆதி 29:4-5

ஆபிராமின் குடும்பம்

தேராகின் வம்சவரலாறு இதுவே: ஆதி 11:31ஆதி 12:4ஆதி 14:122 பேது 2:7ஆதி 13:1-11ஆதி 19:1-29

ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோருக்குத் தேராகு தகப்பனானான். ஆரான் லோத்துக்குத் தகப்பனானான். தன் தகப்பன் தேராகு உயிரோடிருக்கும்போதே, ஆரான் தனது பிறப்பிடமான கல்தேயர் நாட்டிலுள்ள ஊர் என்னும் இடத்தில் இறந்தான். ஆதி 15:7அப் 7:2-4ஆதி 11:31நெகே 9:7 ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள். ஆபிராமின் மனைவி சாராய், நாகோரின் மனைவி மில்க்காள்; மில்க்காள் ஆரானின் மகள், ஆரான் மில்க்காள், இஸ்காள் ஆகிய இருவரின் தகப்பன். ஆதி 17:15ஆதி 22:20ஆதி 20:12ஆதி 24:15 சாராய் குழந்தை இல்லாமல் மலடியாய் இருந்தாள், ஏனெனில் அவளுக்குப் பிள்ளைகள் இல்லை. 1 சாமு 1:2ஆதி 15:2-3ஆதி 16:1-2ஆதி 18:11-12ஆதி 21:1-2ஆதி 25:21ஆதி 29:31ஆதி 30:1-2

தேராகு, தன் மகன் ஆபிராமையும், ஆரானின் மகனான தன் பேரன் லோத்தையும், ஆபிராமின் மனைவியான தன் மருமகள் சாராயையும், அழைத்துக்கொண்டு கல்தேயரின் நாட்டிலுள்ள ஊர் என்னும் பட்டணத்தைவிட்டு, கானான் நாட்டுக்குப் போகப் புறப்பட்டான். ஆனால் அவர்கள் ஆரான் என்னும் இடத்திற்கு வந்தபோது, அங்கேயே குடியிருந்துவிட்டார்கள். நெகே 9:7அப் 7:2-4ஆதி 12:4ஆதி 15:7ஆதி 24:10யோசு 24:2-3ஆதி 11:32ஆதி 10:19

தேராகு 205 வருடங்கள் வாழ்ந்தபின் ஆரானிலே இறந்தான்.