ஆதியாகமம் 21

Genesis 21

ஈசாக்கின் பிறப்பு

யெகோவா தாம் சொல்லியிருந்தபடியே, சாராளுக்குக் கருணை காட்டினார்; தாம் கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றினார். சங் 12:6ஆதி 18:10ஆதி 18:14கலா 4:23ஆதி 17:191 சாமு 2:21மத் 24:35தீத் 1:2 ஆபிரகாமின் முதிர்வயதில் சாராள் கர்ப்பவதியாகி, இறைவன் வாக்குப்பண்ணியிருந்த அந்த குறித்த காலத்திலேயே, அவனுக்கு ஒரு மகனைப் பெற்றாள். கலா 4:22எபி 11:11அப் 7:8ஆதி 17:19ஆதி 17:21ஆதி 18:10ஆதி 18:14லூக் 1:24-25 சாராள் தனக்குப் பெற்ற மகனுக்கு ஈசாக்கு 1 என்று ஆபிரகாம் பெயரிட்டான். ஆதி 17:19ஆதி 21:6ரோம 9:7ஆதி 21:12எபி 11:18யோசு 24:3மத் 1:2அப் 7:8 தன் மகன் ஈசாக்குப் பிறந்த எட்டாம் நாளில், இறைவன் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆபிரகாம் அவனுக்கு விருத்தசேதனம் செய்தான். அப் 7:8உபா 12:32யாத் 12:48ஆதி 17:10-12யோவா 7:22-23லேவி 12:3லூக் 1:59லூக் 1:6 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு பிறந்தபோது, அவன் நூறு வயதுடையவனாய் இருந்தான். ஆதி 17:17ஆதி 17:1ரோம 4:19

அப்பொழுது சாராள், “இறைவன் என்னைச் சிரிக்க வைத்தார், இதைக் கேட்கும் யாவரும் என்னுடன் சேர்ந்து சிரிப்பார்கள்; சங் 126:2ஏசா 54:1ஆதி 17:17லூக் 1:58கலா 4:27-28ஏசா 49:21லூக் 1:14லூக் 1:46-55 சாராள் பிள்ளைகளைப் பாலூட்டி வளர்ப்பாள் என்று ஆபிரகாமுக்கு யார் சொல்லியிருப்பார்? அப்படியிருந்தும் அவரது முதிர்வயதில் நான் அவருக்கு ஒரு மகனைப் பெற்றேனே” என்றாள். ஆதி 18:11-12ஏசா 66:82 தெச 1:10உபா 4:32-34எபே 3:10எண் 23:23சங் 86:10சங் 86:8

ஆகாரும் இஸ்மயேலும்

அந்தக் குழந்தை வளர்ந்து பால்குடி மறந்தது. ஈசாக்கு பால் மறந்த நாளன்று ஆபிரகாம் ஒரு பெரிய விருந்து கொடுத்தான். 1 சாமு 1:22ஓசி 1:81 இராஜா 3:152 சாமு 3:20ஆதி 19:3ஆதி 26:30ஆதி 29:22ஆதி 40:20 ஆனாலும், எகிப்தியப் பெண்ணான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகன், தன் மகனைக் கேலி பண்ணுகிறதை சாராள் கண்டாள். கலா 4:29ஆதி 16:15கலா 4:22ஆதி 16:12 நாளாக 30:102 நாளாக 36:16புலம் 1:7நீதி 20:11 அப்பொழுது அவள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் வெளியே அனுப்பிவிடும்; உரிமைச்சொத்தில் இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது” என்றாள். யோவா 8:351 யோவா 2:19கலா 4:22-311 பேது 1:4ஆதி 36:6-7கலா 3:18கலா 4:7ஆதி 25:19

தன் மகனைக் குறித்த இந்தக் காரியம் ஆபிரகாமை வெகுவாய்த் துயரப்படுத்தியது. எபி 12:11ஆதி 17:18மத் 10:372 சாமு 18:33ஆதி 22:1-2 அப்பொழுது இறைவன் ஆபிரகாமிடம், “அந்தச் சிறுவனையும், உன் பணிப்பெண்ணையும் குறித்து அதிகம் கவலைப்படாதே. சாராள் சொல்வதை எல்லாம் கேள், ஏனெனில் ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததிகள் உண்டாகும். எபி 11:18ரோம 9:7-8ஆதி 17:191 சாமு 8:71 சாமு 8:9ஆதி 17:21ஏசா 46:10 பணிப்பெண்ணின் மகனும் உன் சந்ததியானபடியால், அவனையும் ஒரு நாடாக்குவேன்” என்றார். ஆதி 16:10ஆதி 17:20ஆதி 21:18ஆதி 25:12-18

மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் உணவையும், ஒரு தோல் குடுவையில் தண்ணீரையும் எடுத்து ஆகாரிடம் கொடுத்தான். அவன் அவற்றை அவளுடைய தோளில் வைத்து, மகனுடன் அவளை அனுப்பிவிட்டான். அவள் தன் வழியே போய் பெயெர்செபாவின் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தாள். 1 இராஜா 19:3பிரச 9:10ஆதி 16:7ஆதி 21:31ஆதி 25:6ஆதி 26:31யோவா 8:35நீதி 27:14

தோல் குடுவையின் தண்ணீர் முடிந்ததும், அவள் புதர்ச்செடிகள் ஒன்றின்கீழ் தன் மகனை விட்டு, 2இராஜா 3:9யாத் 15:22-25எரே 14:3சங் 63:1யாத் 17:1-3ஆதி 21:14ஏசா 44:12 “பிள்ளை சாகிறதை என்னால் பார்க்க முடியாது” என்று சொல்லி அவன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு அம்பு பாயும் தூரத்தில் போய் உட்கார்ந்து, அவள் 2 சத்தமாய் அழத்தொடங்கினாள். ஏசா 49:151 இராஜா 3:261 சாமு 24:161 சாமு 30:4எஸ்த 8:6ஆதி 29:11நியாயாதி 2:4ரூத் 1:9

இறைவன் பிள்ளை அழும் சத்தத்தைக் கேட்டார், இறைவனின் தூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகாரே, நடந்தது என்ன? பயப்படாதே; அங்கே உன் மகன் அழும் சத்தத்தை இறைவன் கேட்டார். ஆதி 16:11சங் 50:15யாத் 3:7சங் 91:151 சாமு 11:52இராஜா 13:232இராஜா 13:4யாத் 14:13 அவனைத் தூக்கி, அவனைக் கையில் பிடித்துக்கொண்டு போ. அவனை ஒரு பெரிய நாடாக்குவேன்” என்றார். ஆதி 21:13ஆதி 16:101 நாளாக 1:29-31ஆதி 17:20ஆதி 25:12-18

பின்பு இறைவன் அவளுடைய கண்களைத் திறந்தார், அப்போது அவள் தண்ணீருள்ள ஒரு கிணற்றைக் கண்டாள். அவள் தன் குடுவையில் நீரை நிரப்பி தன் மகனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். எண் 22:312இராஜா 6:17-20ஏசா 35:5-6லூக் 24:16-31

அவன் வளரும்போது இறைவன் அவனுடன் இருந்தார். அவன் பாலைவனத்தில் வசித்து, வில் வீரனானான். ஆதி 28:15ஆதி 39:21ஆதி 16:12ஆதி 10:9ஆதி 17:20ஆதி 25:27ஆதி 39:2-3ஆதி 49:23-24 இஸ்மயேல் பாரான் பாலைவனத்தில் குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்தியப் பெண் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தாள். 1 கொரி 7:381 சாமு 25:1ஆதி 24:3-4ஆதி 26:34-35ஆதி 27:46நியாயாதி 14:2எண் 10:12எண் 12:16

ஆபிரகாம் அபிமெலேக்குடன் ஒப்பந்தம்

அக்காலத்தில் அபிமெலேக்கும் அவனுடைய படைத்தளபதி பிகோலும் ஆபிரகாமிடம், “நீர் செய்யும் எல்லாவற்றிலும் இறைவன் உம்முடனேகூட இருக்கிறார். ஆதி 26:26ஆதி 26:28யோசு 3:7ஆதி 20:21 கொரி 14:25ஏசா 8:10ரோம 8:31எபி 13:5 ஆகையால் நீர் எனக்கோ, என் பிள்ளைகளுக்கோ, எனது சந்ததிகளுக்கோ எவ்விதத் தீங்கும் செய்யமாட்டேன் என்று, இறைவனுக்குமுன் எனக்கு ஆணையிட்டுக்கொடும். நான் உமக்குத் தயவுகாட்டியதுபோல், எனக்கும் நீர் அந்நியனாய் வாழும் இந்நாட்டிற்கும் எப்பொழுதும் தயவுகாட்டும்” என்றான். யோசு 2:12ஆதி 20:141 சாமு 20:131 சாமு 20:171 சாமு 20:421 சாமு 24:21-221 சாமு 30:152 கொரி 1:23

அதற்கு ஆபிரகாம், “அப்படியே ஆணையிட்டுக் கொடுக்கிறேன்” என்றான். ஆதி 14:13எபி 6:16ரோம 12:18

பின்பு அபிமெலேக்கின் வேலைக்காரர் கைப்பற்றிய கிணற்றைப்பற்றி, ஆபிரகாம் அபிமெலேக்கிடம் முறையிட்டான். ஆதி 26:15-22யாத் 2:15-17ஆதி 13:7ஆதி 29:8நியாயாதி 1:15மத் 18:15நீதி 17:10நீதி 25:9 அதற்கு அபிமெலேக்கு, “இதைச் செய்தவன் யாரென்று எனக்குத் தெரியாது. நீரும் எனக்கு இதை அறிவிக்கவில்லை; நான் இன்றுதான் இதைப்பற்றிக் கேள்விப்பட்டேன்” என்றான். 2இராஜா 5:20-24ஆதி 13:7

அப்பொழுது ஆபிரகாம், செம்மறியாடுகளையும் மாடுகளையும் கொண்டுவந்து, அபிமெலேக்குக்குக் கொடுத்தான். அவர்கள் இருவரும் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள். 1 சாமு 18:3எசேக் 17:13கலா 3:15ஆதி 14:22-23ஆதி 26:28-31ஆதி 31:44ஏசா 32:8நீதி 17:8 ஆபிரகாம் ஏழு பெண் செம்மறியாட்டுக் குட்டிகளை மந்தையிலிருந்து பிரித்தெடுத்தான். அப்பொழுது அபிமெலேக்கு, “இந்த ஏழு செம்மறியாட்டுக் குட்டிகளையும் பிரித்து வைப்பதன் பொருள் என்ன?” என்று ஆபிரகாமைக் கேட்டான். யாத் 12:26ஆதி 33:81 சாமு 15:14

அதற்கு ஆபிரகாம், “நானே இந்தக் கிணற்றை வெட்டினேன் என்பதற்குச் சாட்சியாக, நீர் இந்த ஏழு பெண் செம்மறியாட்டுக் குட்டிகளையும் என்னிடமிருந்து ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றான். ஆதி 31:52ஆதி 31:44-48யோசு 22:27-28யோசு 24:27

அவர்கள் இருவரும் அந்த இடத்தில் ஆணையிட்டு உறுதியளித்தபடியால், அந்த இடம் பெயெர்செபா 3 என்று அழைக்கப்பட்டது. ஆதி 26:33ஆதி 21:141 இராஜா 4:252 சாமு 17:11ஆதி 26:23நியாயாதி 20:1யோசு 15:28

பெயெர்செபாவிலே உடன்படிக்கை செய்தபின், அபிமெலேக்கும் அவன் படைத்தளபதி பிகோலும், பெலிஸ்திய நாட்டிலுள்ள வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். 1 சாமு 18:3யாத் 13:17ஆதி 10:14ஆதி 14:13ஆதி 21:27ஆதி 26:14ஆதி 26:8ஆதி 31:53 ஆபிரகாம் பெயெர்செபாவிலே தமரிஸ்கு மரத்தை நட்டு, அங்கே நித்திய இறைவனான யெகோவாவினுடைய பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான். 1 தீமோ 1:17ஏசா 40:28சங் 90:2எரே 10:10ரோம 16:26உபா 33:27ஆதி 12:8ஆதி 4:26 ஆபிரகாம் பெலிஸ்தியருடைய நாட்டில் அநேக நாட்கள் தங்கியிருந்தான். 1 நாளாக 29:151 பேது 2:11ஆதி 20:1எபி 11:13எபி 11:9சங் 39:12