ஆதியாகமம் 28

Genesis 28

அப்பொழுது ஈசாக்கு யாக்கோபைக் கூப்பிட்டு, அவனை ஆசீர்வதித்து, அவனுக்குக் கட்டளையிட்டதாவது: “நீ கானானியப் பெண்ணைத் திருமணம் செய்யாதே. ஆதி 24:3ஆதி 28:3-4ஆதி 27:462 கொரி 6:14-16ஆதி 24:37ஆதி 26:34-35ஆதி 6:2உபா 33:1 உடனே பதான் அராமிலுள்ள உன் தாயின் தந்தை பெத்துயேலின் வீட்டுக்குப்போ. அங்கே உன் தாயின் சகோதரன் லாபானின் மகள்களில் ஒருத்தியை உன் மனைவியாக்கிக்கொள். ஆதி 25:20ஓசி 12:12ஆதி 22:20-23ஆதி 24:15-24ஆதி 24:29ஆதி 24:50ஆதி 28:5ஆதி 32:10 எல்லாம் வல்ல இறைவன் உன்னை ஆசீர்வதித்து, உன்னை இனவிருத்தியுள்ளவனாக்கி, நீ ஒரு மக்கள் கூட்டமாகும் வரைக்கும் அவர் உன்னைப் பெருகப்பண்ணுவாராக. ஆதி 48:3ஆதி 35:11ஆதி 1:28ஆதி 17:1-6ஆதி 22:17-18ஆதி 13:16ஆதி 41:52ஆதி 43:14 ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதத்தை இறைவன் உனக்கும், உன் சந்ததிக்கும் கொடுப்பாராக. எனவே இறைவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும், இப்பொழுது நீ அந்நியனாய் வாழ்கின்றதுமான இந்த நாட்டை, நீ உரிமையாக்கிக்கொள்வாய்” என்றான். கலா 3:14ஆதி 12:7எபே 1:3ஆதி 17:6-8கலா 3:8ஆதி 12:1-3ஆதி 13:14-17ஆதி 15:18-21 அதன்பின் ஈசாக்கு, யாக்கோபை வழியனுப்பினான்; அவன் பதான் அராமிலிருந்த அரமேயனான பெத்துயேலின் மகன் லாபானிடம் போனான். லாபான் யாக்கோபு, ஏசா ஆகியோரின் தாயாகிய ரெபெக்காளின் சகோதரன்.

ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, பதான் அராமிலிருந்து ஒரு பெண்ணை எடுக்கும்படி அவனை அங்கு அனுப்பியதை ஏசா அறிந்தான். அவனை ஆசீர்வதிக்கும்பொழுது, “நீ கானானியப் பெண்ணைத் திருமணம் செய்யாதே” என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும் கேள்விப்பட்டான். ஆதி 27:33ஆதி 28:1 அத்துடன், யாக்கோபு தன் தகப்பனுக்கும் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் போய்விட்டதையும் ஏசா அறிந்தான். கொலோ 3:20எபே 6:1எபே 6:3யாத் 20:12ஆதி 27:43லேவி 19:3நீதி 1:8நீதி 30:17 அப்பொழுது தன் தகப்பன் ஈசாக்கு கானானியப் பெண்களில் எவ்வளவு வெறுப்பாய் இருக்கிறார் என்பதை ஏசா உணர்ந்தான். ஆதி 24:3ஆதி 26:34-351 சாமு 8:6ஆதி 28:1 எனவே ஏசா ஆபிரகாமின் மகனான இஸ்மயேலிடம் போய், அவன் மகள் மகலாத்தைத் திருமணம் செய்தான். நெபாயோத்தின் சகோதரியான அவளை ஏற்கெனவே தனக்கிருந்த மனைவிகளுடன் சேர்த்துக்கொண்டான். ஆதி 36:3ஆதி 25:13-17ஆதி 26:34ஆதி 36:13ஆதி 36:18

பெத்தேலில் யாக்கோபின் கனவு

யாக்கோபு பெயெர்செபாவைவிட்டு ஆரானுக்குப் புறப்பட்டான். அப் 7:2ஆதி 11:31ஆதி 32:10ஓசி 12:12அப் 25:13 அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது, சூரியன் மறைந்ததால் அந்த இடத்திலே இரவு தங்கினான். அவன் அங்கிருந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலையின்கீழ் வைத்து, அங்கே படுத்து உறங்கினான். ஆதி 28:18மத் 8:202 கொரி 1:5ஆதி 31:46 அப்பொழுது அவன் ஒரு ஏணி பூமியிலிருந்து வானத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டான்; அதிலே இறைவனின் தூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தார்கள். யோவா 1:51ஆதி 32:1-2எண் 12:6யோபு 33:15-16ஆதி 15:12 தீமோ 4:16-17ஆதி 37:5-11ஆதி 15:12 யெகோவா அதற்கு மேலாக நின்று அவனிடம், “உன் தகப்பன் ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனுமாகிய யெகோவா நானே. உனக்கும் உன் சந்ததிக்கும், நீ படுத்திருக்கிற இந்த நாட்டைத் தருவேன். ஆதி 13:15ஆதி 35:12ஆதி 48:3ஆதி 26:24ஆதி 35:1ஆதி 12:7யாத் 3:6ஆதி 46:3 உன் சந்ததிகள் பூமியின் புழுதியைப்போல் பெருகுவார்கள். நீ மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் பரவுவாய். உன்னாலும், உன் சந்ததியினாலும், பூமியிலுள்ள மக்கள் கூட்டங்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படும். ஆதி 12:3ஆதி 18:18ஆதி 22:18அப் 3:25ஆதி 13:16ஆதி 26:4கலா 3:8ஆதி 13:14 நான் உன்னுடனே இருக்கிறேன், நீ போகும் இடமெல்லாம் உன்னைப் பாதுகாத்து, உன்னைத் திரும்பவும் இந்த நாட்டிற்குக் கொண்டுவருவேன்; நான் உனக்கு வாக்குப்பண்ணியதை நிறைவேற்றும்வரை, உன்னைவிட்டு விலகவேமாட்டேன்” என்றார். யோசு 1:5ஏசா 41:10எரே 1:19உபா 31:6ஆதி 26:24ஆதி 31:3எபி 13:5-6சங் 121:5-8

யாக்கோபு நித்திரையை விட்டெழுந்தபோது, “யெகோவா நிச்சயமாய் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேனே” என்று நினைத்தான். யோசு 5:15யாத் 15:11யாத் 3:5யோபு 9:111 சாமு 3:4-7யோபு 33:14ஏசா 8:13சங் 68:35 அவன் பயந்து, “இந்த இடம் எவ்வளவு பிரமிப்புக்குரியது! இது இறைவனுடைய வீடேயன்றி வேறல்ல; இது பரலோகத்தின் வாசல்” என்றான். 1 தீமோ 3:15ஆதி 35:1-13பிரச 5:1யாத் 3:62 நாளாக 5:14ஆதி 28:22நியாயாதி 13:22லூக் 2:9

மறுநாள் அதிகாலையில், யாக்கோபு தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதன்மேல் எண்ணெய் ஊற்றினான். ஆதி 35:14ஆதி 31:13ஆதி 31:45லேவி 8:10-12ஆதி 22:3ஆதி 35:20எண் 7:11 சாமு 7:12 அந்த இடத்திற்கு அவன் பெத்தேல் 1 என்று பெயரிட்டான், முன்பு அந்தப் பட்டணம் லூஸ் என்று அழைக்கப்பட்டிருந்தது. ஆதி 35:1ஆதி 48:3ஓசி 12:4-51 இராஜா 12:29ஆதி 12:8ஓசி 4:15நியாயாதி 1:22-26

பின்பு யாக்கோபு ஒரு பொருத்தனை செய்து, சொன்னதாவது: “இறைவன் என்னோடிருந்து, நான் போகும் பயணத்தில் என்னைக் காப்பாற்றி, சாப்பிட உணவும், உடுக்க உடையும் தந்து, 1 தீமோ 6:82 சாமு 15:8ஆதி 31:13யோவா 1:16சங் 66:13அப் 23:12-15நியாயாதி 11:30-31சங் 116:14 பாதுகாப்புடன் என் தகப்பன் வீட்டுக்குத் திரும்பி வரப்பண்ணுவாரானால், யெகோவாவே என் இறைவனாயிருப்பார். உபா 26:17நியாயாதி 11:31யாத் 15:22 சாமு 15:82 சாமு 19:242 சாமு 19:302இராஜா 5:17 நான் தூணாக நிறுத்திய இந்தக் கல் இறைவனின் வீடாக இருக்கும். நீர் எனக்குக் கொடுக்கும் எல்லாவற்றிலும் பத்தில் ஒன்றை உமக்குக் கொடுப்பேன்” என்றான். ஆதி 35:7ஆதி 14:20உபா 14:22-23லேவி 27:30-33ஆதி 35:1ஆதி 12:8ஆதி 28:17ஆதி 33:20