ஆதியாகமம் 46

Genesis 46

எகிப்தில் யாக்கோபு

இஸ்ரயேல் தன் உடைமைகளுடன் புறப்பட்டுப் பெயெர்செபாவை அடைந்தபோது, அங்கே தன் தகப்பன் ஈசாக்கின் இறைவனுக்குப் பலிகளைச் செலுத்தினான். ஆதி 21:33ஆதி 26:22-25ஆதி 28:10ஆதி 28:13ஆதி 31:42ஆதி 21:31ஆதி 21:141 சாமு 3:20

அன்றிரவே இறைவன் இஸ்ரயேலுடன் தரிசனத்தில் பேசி, “யாக்கோபே! யாக்கோபே!” என்று கூப்பிட்டார். ஆதி 15:1யோபு 33:14-151 சாமு 3:101 சாமு 3:42 நாளாக 26:5அப் 10:3அப் 16:9அப் 9:10

அதற்கு அவன், “இதோ இருக்கிறேன்” என்றான்.

அப்பொழுது அவர், “நான் இறைவன், நானே உன் தகப்பனின் இறைவன். நீ எகிப்திற்குப் போகப் பயப்படாதே, அங்கே நான் உன்னை ஒரு பெரிய நாடாக்குவேன். ஆதி 12:2உபா 26:5அப் 27:24ஏசா 43:1-2ஆதி 26:2-3ஆதி 28:13-14ஆதி 35:11ஏசா 41:10 நீ எகிப்திற்குப் போகையில் உன்னுடன்கூட வருவேன், நிச்சயமாக உன்னை மறுபடியும் இங்கே கொண்டுவருவேன். யோசேப்பே தன் கையினால் உன் கண்களை மூடுவான்” என்றார். யாத் 3:8ஆதி 28:15ஆதி 48:21ஆதி 50:1ஆதி 15:14-16ஆதி 50:13ஆதி 50:24-25ஆதி 50:5

பின்பு யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டான்; இஸ்ரயேலின் மகன்கள் தங்களுடைய தகப்பன் யாக்கோபையும், தங்கள் பிள்ளைகளையும், தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பிய வண்டிகளில் ஏற்றிச் சென்றார்கள். ஆதி 45:19ஆதி 45:21ஆதி 45:27யாத் 10:24யாத் 10:26ஆதி 31:17-18அப் 7:15 அத்துடன் தங்களுடைய வளர்ப்பு மிருகங்களுடனும், கானானில் சம்பாதித்த எல்லா பொருட்களுடனும், யாக்கோபும் அவன் சந்ததிகளும் எகிப்திற்குப் போனார்கள். அப் 7:15ஏசா 52:4யோசு 24:4சங் 105:23உபா 26:51 சாமு 12:8உபா 10:22ஆதி 15:13 யாக்கோபு தன்னுடன் தன் சந்ததிகளான மகன்களையும், பேரன்களையும், மகள்களையும், பேத்திகளையும் அழைத்துக்கொண்டு எகிப்திற்குப் போனான்.

யாக்கோபுடன் எகிப்திற்குப்போன அவனுடைய சந்ததிகளான, இஸ்ரயேலரின் பெயர்களாவன: 1 நாளாக 2:1-55உபா 33:6யாத் 1:1-51 நாளாக 8:1-40யாத் 6:14-18ஆதி 29:1-30ஆதி 29:32ஆதி 35:22-23

யாக்கோபின் முதற்பேறானவன் ரூபன்.

ரூபனின் மகன்கள்:

ஆனோக், பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.

சிமியோனின் மகன்கள்: யாத் 6:15ஆதி 29:331 நாளாக 2:11 நாளாக 4:24-43ஆதி 28:1ஆதி 34:25ஆதி 34:30ஆதி 49:5-7

எமுயேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல் என்பவர்கள்.

லேவியின் மகன்கள்: ஆதி 29:341 நாளாக 2:11 நாளாக 2:111 நாளாக 2:161 நாளாக 22:1-191 நாளாக 6:1-31 நாளாக 6:16உபா 33:8-11

கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

யூதாவின் மகன்கள்: 1 நாளாக 4:21ஆதி 29:35ஆதி 38:10ஆதி 38:71 நாளாக 2:11 நாளாக 2:3-51 நாளாக 3:11 நாளாக 5:2

ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள். கானான் நாட்டில் ஏர், ஓனான் என்பவர்கள் இறந்துபோனார்கள்.

பேரேஸின் மகன்கள்:

எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

இசக்காருடைய மகன்கள்: 1 நாளாக 12:321 நாளாக 2:11 நாளாக 7:1-5உபா 33:18ஆதி 30:14-18ஆதி 35:23ஆதி 49:14-15எண் 1:28-30

தோலா, பூவா, யாசுப், சிம்ரோன் என்பவர்கள்.

செபுலோனுடைய மகன்கள்: 1 நாளாக 2:1உபா 33:18-19ஆதி 30:19-20ஆதி 49:13எண் 1:30-31எண் 1:9எண் 26:26-27

செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.

பதான் அராமிலே மகள் தீனாளைத் தவிர யாக்கோபுக்கு லேயாள் பெற்றெடுத்த மகன்கள் இவர்களே. அவனுடைய மகன்களும் மகள்களும் எல்லாரும் முப்பத்து மூன்றுபேர். ஆதி 29:32-35ஆதி 30:17-211 நாளாக 2:1யாத் 1:2-3ஆதி 25:20ஆதி 34:1-31ஆதி 35:23ஆதி 49:3-15

காத்துடைய மகன்கள்: எண் 26:15-17ஆதி 30:111 நாளாக 2:21 நாளாக 5:11-16உபா 33:20-21ஆதி 35:26ஆதி 49:19எண் 1:11

சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள்.

ஆசேருடைய மகன்கள்: ஆதி 30:13ஆதி 49:201 நாளாக 2:21 நாளாக 7:30-40உபா 33:24ஆதி 35:26எண் 1:13எண் 1:40-41

இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள். இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்.

பெரீயாவின் மகன்கள்:

ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.

லாபான் தன்னுடைய மகள் லேயாளுக்குக் கொடுத்த பெண்ணான, சில்பாள் மூலம் யாக்கோபுக்குக் கிடைத்த பிள்ளைகள் இவர்களே. அவர்கள் எல்லாரும் பதினாறுபேர். ஆதி 29:24யாத் 1:4ஆதி 30:9-13ஆதி 35:26

யாக்கோபின் மனைவி ராகேலின் மகன்கள்: ஆதி 44:271 நாளாக 2:2உபா 33:12-17யாத் 1:3யாத் 1:5ஆதி 29:18ஆதி 30:24ஆதி 35:16-18

யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.

எகிப்திலே யோசேப்புக்கு மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள். இவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத் யோசேப்புக்குப் பெற்றாள். ஆதி 41:50-52ஆதி 41:451 நாளாக 5:23-261 நாளாக 7:14-29உபா 33:13-17ஆதி 48:13-14ஆதி 48:20ஆதி 48:4-5

பென்யமீனின் மகன்கள்: 1 நாளாக 7:6-121 நாளாக 8:1-7உபா 33:12ஆதி 49:27எண் 1:11எண் 1:36-37எண் 26:38-40

பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பீம், உப்பீம், ஆர்த் என்பவர்கள்.

யாக்கோபுக்கு ராகேல் பெற்றெடுத்த மகன்கள் இவர்களே. அவர்கள் எல்லாமாக பதினாலு பேர்.

தாணுடைய மகன்: 1 நாளாக 12:351 நாளாக 2:21 நாளாக 7:12உபா 33:22ஆதி 30:6ஆதி 35:25ஆதி 49:16-17எண் 1:12

ஊசிம்.

நப்தலியின் மகன்கள்: 1 நாளாக 7:131 நாளாக 12:341 நாளாக 2:22இராஜா 15:29உபா 33:23ஆதி 30:7-8ஆதி 35:25ஆதி 49:21

யாத்சியேல், கூனி, எத்சேர், சில்லேம் என்பவர்கள்.

லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த பெண் பில்காள் யாக்கோபுக்கு பெற்றெடுத்த மகன்கள் இவர்களே. அவர்கள் எல்லாரும் ஏழுபேர். ஆதி 29:29யாத் 1:2ஆதி 30:3-8ஆதி 35:22ஆதி 35:25

யாக்கோபுடன் எகிப்திற்குப்போன மகன்களின் மனைவிகளைத் தவிர, நேரடியான சந்ததிகள் எல்லோரும் அறுபத்தாறு பேர். யாத் 1:5ஆதி 35:11நியாயாதி 8:30 யோசேப்புக்கு எகிப்தில் பிறந்த இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களுடன் யாக்கோபின் குடும்ப அங்கத்தினர்களும் சேர்த்து எல்லாருமாக எழுபதுபேர். அப் 7:14உபா 10:22யாத் 1:5யாத் 24:1

அதன்பின் யாக்கோபு கோசேனுக்குப் போகும் வழியை அறியும்படி, யூதாவைத் தனக்கு முன் யோசேப்பிடம் அனுப்பினான். அவர்கள் கோசேன் பிரதேசத்துக்கு வந்தபோது, ஆதி 45:10ஆதி 31:21ஆதி 43:8ஆதி 44:16-34ஆதி 46:34ஆதி 49:8 யோசேப்பு தன் தகப்பன் இஸ்ரயேலைச் சந்திக்க தனது தேரை ஆயத்தப்படுத்தி, கோசேனுக்குப் போனான். யோசேப்பு தன் தகப்பன் முன் போனதுமே தன் தகப்பனைக் கட்டிப்பிடித்து வெகுநேரம் அழுதான். லூக் 15:20ஆதி 33:4ஆதி 45:14-15அப் 20:37ஆதி 41:43ஆதி 45:19ஆதி 45:21

இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் உன் முகத்தைக் கண்டதால், நீ உயிரோடிருக்கிறாய் என்பதை அறிந்துகொண்டேன்; இனி நான் சாகவும் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றான். லூக் 2:29-30ஆதி 45:28

பின்பு யோசேப்பு தன் சகோதரரிடமும் தன் தகப்பன் குடும்பத்தாரிடமும், “நான் பார்வோனிடம் போய், ‘கானான் நாட்டில் வாழ்ந்த என் சகோதரரும் என் தகப்பனின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள். அப் 18:3ஆதி 45:16-20ஆதி 47:1-3எபி 2:11 அவர்கள் மேய்ப்பர்கள்; அவர்கள் கால்நடைகளை கவனித்துக்கொள்கிறார்கள்; அவர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளுடனும் மாட்டு மந்தைகளுடனும், தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் வந்திருக்கிறார்கள்’ என்று சொல்வேன். ஆதி 47:31 இராஜா 18:5-61 இராஜா 9:271 சாமு 17:15யாத் 3:1ஆதி 31:18ஆதி 37:2ஆதி 4:2 பார்வோன் உங்களைக் கூப்பிட்டு, ‘உங்கள் தொழில் என்ன?’ என்று கேட்கும்போது, ஆதி 46:32ஆதி 47:2-4யோனா 1:8 நீங்கள், ‘உமது அடியாராகிய நாங்களும் எங்கள் முற்பிதாக்களைப் போலவே, சிறுவயதுமுதல் மந்தை மேய்ப்பவர்கள்’ என்று சொல்லுங்கள். அப்போது நீங்கள் கோசேன் நாட்டில் குடியிருக்க அனுமதிக்கப்படுவீர்கள். ஏனெனில், எகிப்தியருக்கு மேய்ப்பர்கள் அருவருப்பானவர்கள்” என்றான். யாத் 8:26ஆதி 43:32ஆதி 37:12ஆதி 46:32ஆதி 30:35ஆதி 45:10ஆதி 34:5