முடிவு அறிவுறுத்தல்கள்
ஒருவரிலொருவர், சகோதர அன்பில் தொடர்ந்து நிலைத்திருங்கள். 1 யோவா 4:201 பேது 3:81 பேது 1:221 பேது 2:172 பேது 1:71 யோவா 2:9-102 யோவா 1:5-6எபி 10:24 அந்நியரை உபசரிக்க மறந்துவிடாதீர்கள். ஏனெனில் அவ்விதம் செய்ததினால், சிலர் அறியாமல் இறைத்தூதர்களையும் உபசரித்திருக்கிறார்கள். மத் 25:35ஆதி 18:11 பேது 4:9ரோம 12:13மத் 25:43மத் 25:40லேவி 19:341 இராஜா 17:10-16 சிறையில் இருப்பவர்களை, நீங்களும் அவர்களோடு சிறையில் இருப்பதுபோலவும், துன்பப்படுகிறவர்களை, நீங்களும் அவர்களோடு துன்பப்படுவதைப்போலவும் எண்ணிக்கொண்டு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மத் 25:36எபி 10:34ரோம 12:151 கொரி 12:26கொலோ 4:181 பேது 3:8கலா 6:1-2மத் 25:43
திருமணம் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும். திருமணப்படுக்கை தூய்மையாக காக்கப்படவேண்டும். விபசாரத்திலும், முறைகேடான பாலுறவிலும் ஈடுபடுகிறவர்களை இறைவன் நியாயந்தீர்ப்பார். ஆதி 2:24நீதி 5:15-231 கொரி 7:2-16கலா 5:19ஆதி 1:27-281 கொரி 6:9கலா 5:211 கொரி 5:13 பண ஆசையிலிருந்து விலகி, உங்களிடம் இருப்பதைக்கொண்டு மனத்திருப்தியுடன் வாழுங்கள். ஏனெனில் இறைவன், உபா 31:8யோசு 1:5உபா 31:61 சாமு 12:22ஏசா 41:17சங் 37:25ஏசா 41:101 நாளாக 28:20
“நான் உன்னைவிட்டு ஒருபோதும் விலகமாட்டேன்;
நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்” 1
என்று சொல்லியிருக்கிறாரே.
எனவே நாமும் மனத்தைரியத்துடன், சங் 118:6-9ஏசா 41:10ரோம 8:31சங் 27:1-3சங் 124:8எபி 4:16சங் 56:4சங் 56:11-12
“கர்த்தர் எனக்கு உதவியாளர்; நான் பயப்படமாட்டேன்.
மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?” 2
என்று சொல்வோம்.
உங்களுக்கு இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொடுத்த தலைவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை முறையின் பிரதிபலனை யோசித்துப் பார்த்து, அவர்களுடைய விசுவாசத்தையே நீங்களும் பின்பற்றுங்கள். 1 தெச 5:12-13எபி 13:17பிலி 3:17எபி 6:121 தெச 1:61 தெச 2:131 தீமோ 3:5அப் 14:23 இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராகவே இருக்கிறார். மல்கி 3:6யாக் 1:17வெளி 1:8ஏசா 44:6எபி 1:12சங் 102:27-28சங் 90:2சங் 103:17
பல்வேறுபட்ட விசித்திரமான போதனைகளினால், வழிவிலகிப் போகாதிருங்கள். எந்த பயனும் இல்லாத சடங்குமுறை உணவு வகைகளினால் அல்ல கிருபையினால் நம்முடைய இருதயம் பெலப்படுவதே நல்லது. எபே 4:141 தீமோ 6:3-5எபே 5:61 யோவா 4:1ரோம 14:6அப் 20:30கலா 1:6-9மத் 24:4 இறைசமுகக் கூடாரத்தில் பணிபுரிகிறவர்கள் அதிலிருந்து சாப்பிட அதிகாரமில்லாத ஒரு பலிபீடம் நமக்கு உண்டு. 1 கொரி 10:201 கொரி 5:7-81 கொரி 9:131 கொரி 10:17-18எண் 7:5எண் 3:7-8
பிரதான ஆசாரியன் மிருகங்களின் இரத்தத்தை, மகா பரிசுத்த இடத்திற்கு பாவநிவாரண காணிக்கையாகக் கொண்டுபோகிறான். ஆனால் மிருகங்களின் உடல்களோ முகாமுக்கு வெளியே எரிக்கப்படுகின்றன. லேவி 16:27யாத் 29:14லேவி 9:11எண் 19:3லேவி 6:30லேவி 16:14-19லேவி 4:11-12லேவி 4:16-21 இவ்விதமே இயேசுவும்கூட, நகர வாசலுக்கு வெளியே வேதனைகளை அனுபவித்து, தமது சொந்த இரத்தத்தின் மூலமாக மக்களைப் பரிசுத்தமாக்கினார். எபி 9:12-14யோவா 19:17-18மாற் 15:20-241 கொரி 6:11அப் 7:58எபே 5:26எபி 10:29யோவா 19:34 ஆகையால், அவர் சுமந்த அவமானத்தை நாமும் சுமந்து, முகாமுக்கு வெளியே அவரிடம் போவோம். எபி 11:261 பேது 4:14-16அப் 5:41லூக் 6:22மத் 16:241 கொரி 4:10-132 கொரி 12:10மத் 27:39-44 ஏனெனில், நித்தியமான நகரம் நமக்கு இங்கு இல்லை. வரப்போகின்ற ஒரு நகரத்திற்காகவே நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். பிலி 3:20கொலோ 3:1-3எபி 11:12-16எபி 12:222 பேது 3:13-14எபே 2:192 கொரி 4:17எபி 11:9-10
ஆகவே இயேசுவின் மூலமாய் இறைவனுடைய பெயரை அறிக்கையிடுகிற உதடுகளின் கனியை, துதியின் காணிக்கையாக இறைவனுக்கு இடைவிடாது செலுத்துவோமாக. சங் 107:21-22சங் 50:14ரோம 12:1சங் 145:1-211 பேது 2:5ஓசி 14:2எபே 5:19-20ஏசா 57:19 நன்மைசெய்ய மறக்கவேண்டாம், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் மறந்துவிடவேண்டாம். இப்படியான பலிகளிலேயே இறைவன் பிரியப்படுகிறார். 2 தெச 3:13கலா 6:10ரோம 12:13எபி 6:10எபி 13:1-21 தீமோ 6:18எபே 4:282 கொரி 9:12-13
உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களுடைய அதிகாரத்திற்கு பணிந்து நடவுங்கள். ஏனெனில், அவர்கள் கணக்குக் கொடுக்கவேண்டியவர்களாக, உங்கள்மேல் கண்காணிப்பு செய்கிறார்கள். நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்களது பொறுப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அது ஒரு துயரமாய் இருக்காது. அவர்கள் துயரத்தோடு பொறுப்பெடுத்தால், உங்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது. 1 தெச 5:12-131 தீமோ 5:17எபி 13:71 பேது 5:5அப் 20:281 பேது 5:2-31 கொரி 16:16எரே 13:17
எங்களுக்காக மன்றாடுங்கள். எங்களுக்கு நல்ல மனசாட்சி உண்டு என்பதில், நாங்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்கிறோம். எல்லா வழியிலும் நன்மதிப்புக்குரியவர்களாக வாழவே ஆசைப்படுகிறோம். 1 தெச 5:252 தெச 3:11 தீமோ 1:5கொலோ 4:3அப் 24:16ரோம 15:301 பேது 2:121 பேது 3:16 நான் சீக்கிரமாய் உங்களிடம் வரும்படி, நீங்கள் மன்றாட வேண்டும் என உங்களிடம் விசேஷமாக வேண்டிக்கொள்கிறேன். பிலே 1:22ரோம 1:10-12ரோம 15:31-32
முடிவுரையும் இறுதி வாழ்த்துக்களும்
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே, ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் இறைவன், யோவா 10:11எபி 10:22சங் 23:1ரோம 15:33யோவா 10:142 தெச 3:16எசேக் 37:26சகரி 9:11 இயேசுகிறிஸ்துவின் வழியாகத் தமக்கு பிரியமானதை உங்களில் செயலாற்றி, நீங்கள் இறைவனுடைய சித்தத்தின்படி செய்ய உங்களை எல்லா நல்ல செயல்களிலும் ஆயத்தப்படுத்துவாராக. கிறிஸ்துவுக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். பிலி 2:132 தெச 2:17பிலி 4:131 பேது 5:10-111 பேது 2:52 தீமோ 4:18பிலி 1:111 தெச 5:23
சகோதரர்களே, நான் உற்சாகப்படுத்தி எழுதியிருக்கும் இந்த வார்த்தைகளுக்குப் பொறுமையாய் செவிகொடுங்கள். நான் சுருக்கமான ஒரு கடிதத்தையே உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 1 பேது 5:122 கொரி 6:1எபி 3:1கலா 6:112 கொரி 5:20எபி 10:19-39எபி 12:1-2எபி 13:1-3
நமது சகோதரன் தீமோத்தேயு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறான் என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவன் சீக்கிரம் வந்தால், நான் உங்களைப் பார்ப்பதற்கு அவனுடனேயே வருவேன். 1 தெச 3:2பிலே 1:12 தீமோ 1:81 தீமோ 6:12அப் 16:1-3பிலே 1:22வெளி 7:14ரோம 15:25
உங்கள் தலைவர்கள் அனைவருக்கும், இறைவனின் மக்கள் எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். எபி 13:17எபி 13:7அப் 18:2பிலே 1:52 கொரி 1:12 கொரி 13:13கொலோ 1:2பிலி 4:22
இத்தாலியில் உள்ளவர்களும் உங்களுக்குத் தங்கள் வாழ்த்துதலைக் கூறுகிறார்கள்.
கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக! ஆமென். கொலோ 4:182 தீமோ 4:22எபே 6:24வெளி 22:21ரோம 16:20தீத் 3:15ரோம 1:7ரோம 16:23