எபிரெயர் 5

Hebrews 5

ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் மனிதரிடையே இருந்து தெரிந்தெடுக்கப்பட்டு, இறைவனுக்குரிய காரியங்களில், காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாய் நியமிக்கப்படுகிறான். எபி 8:3எபி 10:11எபி 11:4எபி 2:17எபி 7:27எபி 9:9லேவி 9:15-21யாத் 29:1-37 பிரதான ஆசாரியன் தானும் பலவீனனானபடியால், அறியாமையில் இருக்கிறவர்களுடனும் வழிவிலகிச் செல்கிறவர்களுடனும் இவன் தயவு காட்டக்கூடியவனாய் இருக்கிறான். எபி 4:15எபி 2:182 கொரி 12:9-10எபி 7:28எபி 12:132 கொரி 12:5கலா 4:13எண் 15:22-29 இதனாலேயே அவன் தன்னுடைய பாவங்களுக்காகவும் மக்களின் பாவங்களுக்காகவும் பலிகளைச் செலுத்த வேண்டியதாயிருக்கிறது. எபி 9:7லேவி 16:6லேவி 9:7எபி 7:27லேவி 16:15லேவி 4:3-12யாத் 29:12-19லேவி 8:14-21 மேலும் அந்த மதிப்புக்குரிய ஊழியத்தை ஒருவனும் தனக்குத்தானே பொறுப்பாக்கிக்கொள்ள முடியாது. ஆரோனைப்போலவே, அவனும் இறைவனால் அழைக்கப்பட வேண்டும். யாத் 28:1எண் 16:40எண் 16:51 நாளாக 23:132 நாளாக 26:18யோவா 3:27எண் 16:35எண் 16:46-48

அவ்விதமாகவே, கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்கு அந்த மகிமையை தனதாக்கிக்கொள்ளவில்லை. இறைவனே அவரைக்குறித்து சொல்லியிருக்கிறதாவது, சங் 2:7யோவா 8:54யோவா 7:18அப் 13:33எபி 1:5ரோம 8:3எபி 1:1மீகா 5:2

“நீர் என்னுடைய மகன்;

இன்று நான் உமக்குத் தந்தையானேன்.” 1

இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக்குறித்து, சங் 110:4எபி 7:17எபி 7:21எபி 7:3ஆதி 14:18-19எபி 5:10எபி 6:20எபி 7:15

“நீர் என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி

ஆசாரியராக இருக்கிறீர்” 2

என்று சொல்லியிருக்கிறார்.

இயேசு பூமியிலிருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற வல்லமையுள்ளவரை நோக்கி, சத்தமாய் கதறி, கண்ணீர்விட்டு, தமது வேண்டுதல்களைச் சொல்லி மன்றாடினார். அவருடைய பயபக்தியான அர்ப்பணிப்பினிமித்தம், அவருடைய மன்றாட்டு கேட்கப்பட்டது. லூக் 22:41-44யோவா 17:1மத் 27:46மாற் 14:32-39யோவா 17:4-5யோவா 12:27-28மாற் 15:34மத் 26:28-44 இயேசு இறைவனின் மகனாய் இருந்துங்கூட, தாம் அனுபவித்த வேதனையின் மூலமாகவே, கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். பிலி 2:8எபி 10:5-9யோவா 4:34ஏசா 50:5-6யோவா 15:10யோவா 6:38எபி 3:6எபி 1:5 இப்படி இயேசு முழுமையாகப் பிரதான ஆசாரியனாக்கப்பட்ட பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் காரணரானார். எபி 9:15எபி 12:2எபி 2:10எபி 9:12அப் 5:321 பேது 1:222 தெச 1:8தானி 9:24 இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி பிரதான ஆசாரியனாய் இருப்பதற்காக, இறைவனாலே நியமிக்கப்பட்டார். எபி 5:5-6எபி 6:20

வழிவிலகாதிருக்க எச்சரிக்கை

இதைக்குறித்து சொல்ல நமக்கு அதிகம் உண்டு. ஆனால் நீங்கள் கற்றுக்கொள்வதில் மந்தமாய் இருப்பதனால், இதை விளங்கப்படுத்துவது கடினமாயிருக்கிறது. மத் 13:152 பேது 3:16அப் 28:27யோவா 16:12ஏசா 6:10யோவா 6:6லூக் 24:25மாற் 8:21 உண்மையிலேயே இக்காலத்திற்குள் நீங்கள் வேத ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் இறைவனுடைய வார்த்தைகளின் ஆரம்ப பாடங்களையே மீண்டும் ஒருவர் உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையிலேயே நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்குத் தேவையானது பால்தான், திடமான உணவு அல்ல. எபி 6:11 கொரி 3:1-31 பேது 2:2எபி 5:13ஏசா 28:9-10கொலோ 3:16எஸ்றா 7:10ஏசா 28:13 பாலைக் குடிக்கிறவன் இன்னும் குழந்தையாகவே இருக்கிறான். இதனால் அவன் நீதியைப் பற்றின படிப்பினையில் தேர்ச்சி பெறாதவனாய் இருக்கிறான். 1 கொரி 14:201 பேது 2:22 தீமோ 3:16எபே 4:14ஏசா 28:91 கொரி 3:11 கொரி 13:112 கொரி 3:9 முதிர்ச்சியடைந்தவர்களுக்கே திடமான உணவு தகுதியானது. அவர்களே தொடர்ச்சியான பயிற்சியினால், தீமையிலிருந்து நன்மையை வித்தியாசம் காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள். 1 கொரி 2:14-151 தெச 5:21பிலி 1:9-101 கொரி 2:6எபே 1:18ஏசா 7:15எபே 4:13மத் 6:22-23