திருச்சபையின் பிரிவுகள்
பிரியமானவர்களே, நான் ஆவிக்குரியவர்களிடம் பேசுவதைப்போல், என்னால் உங்களுடன் பேச முடியவில்லை. உலகப்பிரகாரமானவர்களாக, கிறிஸ்துவில் குழந்தைகள் என்று எண்ணியே பேச வேண்டியதாயிற்று. எபி 5:131 கொரி 2:14-15எபே 4:13-141 கொரி 14:201 கொரி 2:6ரோம 7:141 கொரி 3:3-41 யோவா 2:12 நான் உங்களுக்குப் பாலையே கொடுத்தேன். பலமான உணவை உங்களுக்குக் கொடுக்கவில்லை. ஏனெனில், நீங்கள் அதை உட்கொள்ளக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இன்னும் நீங்கள் அதை உட்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறீர்கள். எபி 5:11-141 பேது 2:2யோவா 16:12 ஏனெனில், இன்னமும் உலகத்திற்குரியவர்களாகவே இருக்கிறீர்கள். இன்னும் உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவுகளும் இருக்கிறபடியால், நீங்கள் உலகத்திற்குரியவர்கள்தானே. நீங்கள் சாதாரண மனிதர்களைப்போல் அல்லவா நடந்துகொள்கிறீர்கள்? யாக் 3:16கலா 5:15தீத் 3:32 கொரி 12:20எபே 4:22-24யாக் 4:1-21 கொரி 1:111 கொரி 11:18 “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்று ஒருவன் சொல்லும்போது, மற்றவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். அப்படியென்றால், நீங்கள் சாதாரண மனித இயல்பின்படிதானே நடந்துகொள்கிறீர்கள். 1 கொரி 1:121 கொரி 3:31 கொரி 4:6
அப்பொல்லோ யார்? பவுல் யார்? உங்களை விசுவாசத்திற்கு வழிநடத்திய கர்த்தரின் ஊழியர்கள்தானே. அப்படியே ஒவ்வொருவரும் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த பணியையே அவர்கள் செய்கிறார்கள். 2 கொரி 6:42 கொரி 6:11 பேது 4:102 கொரி 3:61 கொரி 3:102 கொரி 11:232 கொரி 3:32 கொரி 4:5 நான் விதையை நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினான், ஆனால் இறைவனே அதை வளரச்செய்தார். 1 கொரி 3:9-10நீதி 11:252 கொரி 10:14-151 கொரி 9:1அப் 18:4-111 கொரி 1:30அப் 19:1ஏசா 55:10-11 எனவே நடுகிறவனும், தண்ணீர் ஊற்றுகிறவனும் முக்கியமானவர்களல்ல. அவற்றை வளரச்செய்கிற இறைவன் மட்டுமே முக்கியமானவர். யோவா 15:5கலா 6:32 கொரி 12:9சங் 115:11 கொரி 13:2தானி 4:35ஏசா 40:17ஏசா 41:29 நடுகிறவனுக்கும் தண்ணீர் ஊற்றுகிறவனுக்கும் ஒரே நோக்கமே உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ற கூலியைப் பெறுவார்கள். ரோம 2:62 யோவா 1:8யோவா 4:36-38மத் 16:27சங் 62:121 கொரி 15:58கலா 6:7-8வெளி 22:12 நாங்கள் இறைவனின் உடன் வேலையாட்கள்; நீங்களோ இறைவனின் வயல்நிலம், இறைவனின் கட்டிடம். 1 பேது 2:5எபே 2:20-222 கொரி 6:11 கொரி 3:16மாற் 16:20எபே 2:10ஏசா 61:11மத் 9:37
இறைவன் எனக்குத் தந்த கிருபையின்படி, ஒரு கட்டிட நிபுணனைப்போல நான் ஓர் அஸ்திபாம் போட்டேன். வேறு ஒருவன் அதன்மேல் கட்டுகிறான். ஆனால் ஒவ்வொருவனும், தான் எவ்வாறு கட்டுகிறான் என்பதைக்குறித்துக் கவனமாயிருக்க வேண்டும். 1 கொரி 3:11எபே 2:20ரோம 15:20தானி 12:3மத் 24:451 கொரி 3:5-61 கொரி 9:21 பேது 4:11 ஏற்கெனவே போடப்பட்ட அஸ்திபாரத்தைத் தவிர, வேறு அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் முடியாது. அந்த அஸ்திபாரம் இயேசுகிறிஸ்துவே. எபே 2:20ஏசா 28:162 தீமோ 2:19அப் 4:11-121 பேது 2:6-8மத் 16:18கலா 1:7-92 கொரி 11:2-4 யாராவது இந்த அஸ்திபாரத்தின்மேல் கட்டும்போது தங்கம், வெள்ளி, மாணிக்கக் கற்கள், மரம், புல், அல்லது வைக்கோல் ஆகியவற்றைக்கொண்டு கட்டலாம். 2 தீமோ 4:32 தீமோ 3:72 தீமோ 2:20கொலோ 2:18-231 பேது 1:72 கொரி 2:17எபி 13:9மத் 15:6-9 ஆனால் கிறிஸ்துவின் நாளில், அவனவனுடைய வேலைப்பாடு உண்மையாகவே எப்படியானது என்று வெளிப்படும். அது நெருப்பினால் வெளிப்படுத்தப்படும். மேலும், ஒவ்வொரு மனிதனுடைய வேலையின் தரத்தையும் நெருப்பு பரிசோதிக்கும். 1 பேது 1:71 கொரி 3:14-15வெளி 20:121 கொரி 4:5சகரி 13:91 பேது 4:122 பேது 3:10ரோம 2:16 அவன் கட்டியது நிலைத்திருந்தால், அவன் தனக்குரிய வெகுமதியைப் பெறுவான். 1 கொரி 3:8மத் 25:21-231 கொரி 4:5மத் 24:45-471 பேது 5:11 பேது 5:41 தெச 2:19தானி 12:3 அவன் கட்டியது எரிந்துபோகுமாயின், அவன் நஷ்டமடைவான்; ஆனால் அவனோ இரட்சிக்கப்படுவான். ஆயினும் அவனுடைய நிலை அக்கினி ஜுவாலையில் அகப்பட்டுத் தப்பிய ஒருவனைப்போல் இருக்கும். 2 யோவா 1:81 கொரி 3:12-13யூதா 1:23வெளி 3:181 பேது 4:18சகரி 3:2ஆமோ 4:11சங் 66:12
நீங்கள் இறைவனின் ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும், இறைவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? 1 கொரி 6:19எசேக் 36:272 கொரி 6:16ரோம 8:11எபே 2:21-22ரோம 8:9யோவா 14:171 பேது 2:5 யாராகிலும் ஒருவன் இறைவனுடைய ஆலயத்தை அழித்தால், இறைவன் அவனை அழித்துப்போடுவார். ஏனெனில், இறைவனின் ஆலயம் பரிசுத்தமானது; நீங்களே அந்த ஆலயம். 1 கொரி 6:18-20எசேக் 43:12எசேக் 7:22எண் 19:20எசேக் 23:38-39எசேக் 5:11லேவி 20:3சங் 79:1
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது ஒருவன் இவ்வுலக மதிப்பீட்டின்படி, தன்னை உண்மையாகவே ஞானமுள்ளவன் என எண்ணினால் அவன் மூடனாக வேண்டும். அப்பொழுதே அவன் ஞானமுள்ளவனாவான். நீதி 3:51 கொரி 1:18-21கலா 6:3ஏசா 5:211 கொரி 8:1-2லூக் 18:17யாக் 1:22மத் 18:4 இவ்வுலகத்தின் ஞானம் இறைவனின் பார்வையில் மூடத்தனமாயிருக்கிறது. எழுதியிருக்கிறபடி: “இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார்.” 1 யோபு 5:13சங் 141:101 கொரி 1:19-20ரோம 1:21-22ஏசா 44:251 கொரி 2:6சங் 9:15-16சங் 7:14-15 மேலும், “ஞானிகளுடைய சிந்தனைகள் வீணானவைகள் என்று கர்த்தர் அறிவார்” 2 எனவும் எழுதப்பட்டிருக்கிறது. சங் 94:11கொலோ 2:8ரோம 1:21யோபு 11:11-12சங் 2:1 எனவே, இனிமேல் மனிதர்களைக்குறித்துப் பெருமைகொள்ள வேண்டாம்! எல்லாக் காரியங்களும் உங்களுடையவைதான். ரோம 8:32ரோம 8:28எரே 9:23-241 கொரி 4:6வெளி 21:71 கொரி 1:12-171 கொரி 3:4-7ரோம 4:13 பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், அவர்கள் எல்லோரும் உங்களுடையவர்களே. இந்த உலகமானாலும், வாழ்வானாலும், மரணமானாலும், நிகழ்காலமானாலும், எதிர்காலமானாலும், அவையெல்லாமே உங்களுடையதே. எபே 4:11-12பிலி 1:211 கொரி 3:5-81 கொரி 9:19-222 கொரி 4:5ரோம 8:37-391 கொரி 1:12 நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள், கிறிஸ்து இறைவனுக்குரியவர். கலா 3:291 கொரி 11:31 கொரி 15:23யோவா 17:18யோவா 17:9-102 கொரி 10:7யோவா 17:21ரோம 14:8