மோவாபைப் பற்றிய இறைவாக்கு
மோவாபைப் பற்றி கூறப்பட்ட இறைவாக்கு: ஆமோ 2:1-3எரே 48:1-47எசேக் 25:8-11ஏசா 11:14எண் 21:281 தெச 5:1-3ஏசா 14:28ஏசா 16:11
ஒரே இரவில் மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம்
அழிக்கப்பட்டுப் பாழாயிற்று.
மோவாபிலுள்ள கீர் பட்டணமும் ஒரே இரவில்
அழிக்கப்பட்டுப் பாழாயிற்று.
தீபோன் மக்கள், அதன் மேடுகளிலுள்ள கோவில்களுக்கு எரே 48:1லேவி 21:5உபா 34:1ஏசா 3:24எரே 47:5எரே 48:18எண் 21:30உபா 14:1
அழுவதற்கென்று போயிருக்கிறார்கள்.
மோவாப் மக்கள் நேபோவைக் குறித்தும், மேதேபாவைக் குறித்தும் புலம்புகிறார்கள்.
ஒவ்வொருவருடைய தலையும் மொட்டையடிக்கப்பட்டு,
ஒவ்வொருவருடைய தாடியும் சிரைக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் துக்கவுடையை உடுத்தியபடி வீதிகளில் நிற்கிறார்கள்; யோனா 3:6-82இராஜா 6:302 சாமு 3:31உபா 22:8ஏசா 15:2ஏசா 22:1ஏசா 22:4எரே 19:13
வீட்டுக் கூரைகள் மேலும்,
பொதுமக்கள் கூடும் சதுக்கங்களிலும் புலம்புகிறார்கள்.
அவர்கள் தேம்பித் தேம்பி அழுகிறார்கள்.
எஸ்போனியரும், எலெயாலேயரும் கூக்குரலிட்டு அழுகிறார்கள், எரே 48:341 இராஜா 19:4உபா 2:32ஆதி 27:46ஏசா 16:8-9நியாயாதி 11:20எரே 20:18எரே 8:3
அவர்களுடைய குரல் யாகாசுவரை கேட்கிறது.
ஆகவே மோவாபியரில் ஆயுதமணிந்தவர்களும் கதறி அழுகிறார்கள்;
அவர்கள் இருதயங்கள் சோர்ந்திருக்கின்றன.
எனது உள்ளம் மோவாபியருக்காக அழுகிறது; எரே 48:5எரே 4:20எரே 48:31-36லூக் 19:41-442 சாமு 15:232 சாமு 15:30ஆதி 13:10ஆதி 14:2
அவர்களுடைய அகதிகள் சோவார் வரைக்கும்,
எக்லத் ஷெலிஷியாவரைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
அவர்கள் லூகித் மலைச்சரிவுகளில்
அழுதுகொண்டே ஏறுகிறார்கள்.
ஒரொனாயீமின் வழியில் தங்கி
பட்டணத்தின் அழிவைப்பற்றிப் புலம்புகிறார்கள்.
நிம்ரீமின் நீர்நிலைகள் வற்றிப்போயின; ஏசா 19:5-7யோவே 1:10-12எண் 32:36ஆப 3:17-18ஏசா 16:9-10யோசு 13:27எண் 32:3வெளி 8:7
புல்லும் வாடிப்போயிற்று,
பசுமையும் இல்லாமல் போயிற்று.
பசுமையான எதுவுமே மீதியாய் விடப்படவில்லை.
ஆகவே அவர்கள் தேடிச் சேர்த்த செல்வத்தை, எரே 48:36ஏசா 10:14ஏசா 10:6ஏசா 30:6ஏசா 5:29நாகூ 2:12-13சங் 137:1-2
அலறிகளின் ஆற்றுக்கு அப்பால் தூக்கிச் செல்கிறார்கள்.
அவர்களுடைய வேதனைக் குரல் மோவாப் எல்லையெங்கும் கேட்கிறது; எசேக் 47:10ஏசா 15:2-5எரே 48:20-24எரே 48:31-34
அவர்களுடைய அலறும் சத்தம் எக்லாயீம்வரை எட்டுகிறது.
அவர்களுடைய புலம்பல் பீர் ஏலீம் வரையும் கேட்கிறது.
தீமோன் பட்டணத்தின் நீர்நிலைகள் இரத்தத்தால் நிரம்பியிருக்கின்றன. 2இராஜா 17:25ஆமோ 5:19எரே 15:3எரே 48:43-45எரே 50:17லேவி 26:18லேவி 26:21-22லேவி 26:24
ஆனால் நான் தீமோனின்மேல் இன்னும் அதிக வேதனையைக் கொண்டுவருவேன்.
மோவாபிலுள்ள அகதிகள்மீதும்,
நாட்டில் மீதியாய் இருப்பவர்கள்மீதும் சிங்கத்தை ஏவிவிடுவேன்.