எத்தியோப்பியாவுக்கு எதிரான இறைவாக்கு
எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால், செப்ப 3:102இராஜா 19:9எசேக் 30:4-5செப்ப 2:12சங் 63:7எசேக் 30:9ஏசா 20:3-6ஏசா 30:2-3
இரைச்சலையுடைய செட்டைகளின் நாடே, ஐயோ உனக்குக் கேடு!
இந்த நாடு நாணல் படகுகளில் தண்ணீரின்மேல் ஆதி 10:8-9ஏசா 18:72 நாளாக 12:2-42 நாளாக 14:92 நாளாக 16:8யாத் 2:3எசேக் 30:9ஏசா 19:5-7
கடல் வழியாகத் தூதுவரை அனுப்புகிறது.
விரைந்து செல்லும் தூதுவர்களே,
உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும்,
தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடம் போங்கள்.
இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்;
இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
உலகத்தில் வாழ்பவர்களும், ஏசா 5:26ஏசா 26:11மத் 13:16ஆமோ 3:6-8ஏசா 1:2ஏசா 13:2ஏசா 13:4ஏசா 7:18
பூமியின் குடிமக்களே, நீங்கள் யாவரும்
மலைமேல் கொடியேற்றப்படும்போது,
அதைக் காண்பீர்கள்.
எக்காளம் முழங்கும்போது
அதைக் கேட்பீர்கள்.
யெகோவா என்னிடம் கூறுவது இதுவே: ஓசி 5:15ஏசா 26:21ஏசா 18:72 சாமு 23:4ஏசா 12:6ஏசா 14:32சங் 132:13-14ஓசி 14:5
“சூரிய ஒளியின் இளஞ்சூட்டைப் போலவும்,
அறுவடைகால வெப்பத்தின்போது வரும் மூடுபனிபோலவும்
நான் என்னுடைய உறைவிடத்தில் அமைதியாய் இருந்து பார்ப்பேன்.”
ஏனெனில் அறுவடைக்குமுன், ஏசா 17:10-11உன்னத 2:13எசேக் 17:6-10உன்னத 2:15
திராட்சை பூத்து, காய்த்து, பழங்களாகும்போது,
யெகோவா எத்தியோப்பியரை தளிர்களாகவும்,
படரும் கிளைகளாகவும் அரிவாள்களால் வெட்டி அப்புறப்படுத்தி விடுவார்.
அவையெல்லாம் இரைபிடிக்கும் மலைகளின் பிணந்தின்னும் பறவைகளுக்கும், எரே 7:33எசேக் 32:4-6எசேக் 39:17-20ஏசா 14:19ஏசா 34:1-7ஏசா 56:9எரே 15:3வெளி 19:17-18
காட்டு மிருகங்களுக்கும் விடப்படும்;
பிணந்தின்னும் பறவைகள் கோடைகாலத்திலும்,
காட்டு மிருகங்கள் மாரிகாலத்திலும் அவைகளைத் தின்னும்.
உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும், செப்ப 3:10அப் 8:27-28சகரி 14:16-172 நாளாக 32:23ஏசா 18:4ஏசா 45:14மல்கி 1:11மீகா 4:13
தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடமிருந்து
சேனைகளின் யெகோவாவுக்கு அந்நேரத்தில் கொடைகள் கொண்டுவரப்படும்.
இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்;
இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடைகள் சேனைகளின் யெகோவாவினுடைய பெயருக்குரிய இடமாகிய சீயோன் மலைக்குக் கொண்டுவரப்படும்.