எரேமியா 12

Jeremiah 12

எரேமியாவின் குற்றச்சாட்டு

யெகோவாவே, உமக்கு முன்பாக நான் வழக்குகளைக் கொண்டுவரும்போதெல்லாம் மல்கி 3:15சங் 92:7சங் 37:1சங் 37:35சங் 51:4சங் 73:3-28தானி 9:7ஆப 1:4

நீர் நீதியுள்ளவராகவே இருக்கிறீர்.

ஆகையினால் உம்முடைய நீதியைக் குறித்து நான் உம்மிடம் பேசப் போகிறேன்:

கொடியவர்களின் செயல்கள் செழிப்பது ஏன்?

நேர்மையற்றோர் கஷ்டமின்றி வாழ்வது ஏன்?

நீர் அவர்களை நாட்டியிருக்கிறீர். அவர்கள் வேரூன்றியிருக்கிறார்கள். ஏசா 29:13தீத் 1:16மத் 15:8எரே 11:17எசேக் 17:5-10எசேக் 33:31எரே 45:4எசேக் 19:10-13

வளர்ந்து அவர்கள் கனி கொடுக்கிறார்கள்.

எப்போதும் நீர் அவர்களின் உதடுகளில் இருக்கிறீர்.

ஆனாலும் அவர்கள் இருதயங்களுக்கோ நீர் தூரமாய் இருக்கிறீர்.

ஆனாலும் யெகோவாவே, நீர் என்னை அறிவீர். 2இராஜா 20:3எரே 17:18சங் 139:1-4யாக் 5:5சங் 17:3எரே 50:27சங் 139:23சங் 26:1

நீர் என்னைக் காண்கிறீர்; உம்மைப் பற்றிய என் சிந்தனைகளைச் சோதிக்கிறீர்.

வெட்டுவதற்கான செம்மறியாடுகளைப்போல அவர்களை இழுத்துச் செல்லும்.

அவர்களைக் கொல்லப்படும் நாளுக்கென ஒதுக்கிவையும்.

எவ்வளவு காலத்திற்கு நாடு வறண்டும், எரே 9:10சங் 107:34ஓசி 4:3எரே 4:25எரே 23:10எரே 5:31எரே 7:20ரோம 8:22

வயல்களிலுள்ள புல் வாடியும் கிடக்கவேண்டும்?

அதில் வாழ்கிறவர்கள் கொடியவர்களாகையினால் மிருகங்களும்,

பறவைகளும் அழிந்துவிட்டன.

அதுவுமில்லாமல் மக்களோ,

“எங்களுக்கு என்ன நேரிடுகிறது என்பதை அவர் காணமாட்டார்” என்கிறார்கள்.

இறைவனின் பதில்

காலால் ஓடும் மனிதரோடு ஓடும்போதே, 1 பேது 4:12நீதி 24:10எபி 12:3-4எரே 49:19எரே 50:44சங் 42:7சங் 69:1-2நீதி 3:11

அவர்கள் உன்னைக் களைப்படையச் செய்வார்களானால்

குதிரைகளோடு நீ எப்படிப் போட்டியிடுவாய்?

பாதுகாப்பான நாட்டிலேயே இடறுவாயானால்,

யோர்தானின் புதர் காடுகளில் நீ என்ன செய்வாய்?

உன் சொந்தக் குடும்பத்தினராகிய உன் சகோதரர்களே, நீதி 26:25எரே 9:4சங் 12:2ஆதி 37:4-11மீகா 7:5-6மத் 10:21எரே 11:19எரே 11:21

உனக்குத் துரோகம் செய்துவிட்டார்கள்.

அவர்கள் உனக்கு விரோதமாகக் குரலெழுப்பினார்கள்.

உன்னைப்பற்றி நன்மையாய்ப் பேசினாலும்,

அவர்களை நீ நம்பவேண்டாம்.

நான் என் வீட்டைக் கைவிட்டு, ஏசா 2:6சங் 78:59-60எரே 11:15ஓசி 9:15புலம் 2:1-22எசேக் 24:21எசேக் 7:20-21எரே 51:5

என் உரிமைச்சொத்தைப் புறக்கணிப்பேன்.

என் அன்புக்குரியவளை

அவளுடைய பகைவரின் கையில் கொடுத்துவிடுவேன்.

என் உரிமைச்சொத்தோ, ஆமோ 6:8ஓசி 9:15சகரி 11:8எரே 2:15எரே 51:38

எனக்குக் காட்டிலிருக்கும் சிங்கத்தைப்போல் ஆயிற்று.

அவள் என்னைப் பார்த்துக் கர்ஜிக்கிறாள்;

ஆதலால் நான் அவளை வெறுக்கிறேன்.

என் உரிமைச்சொத்தாகிய மக்கள் ஏசா 56:9எரே 7:332இராஜா 24:2எசேக் 23:22-25வெளி 19:17-18எசேக் 16:36-37எசேக் 39:17-20எரே 15:3

இரைதேடும் பலவர்ண பறவைகள்போல் ஆயிற்று;

சுற்றிலுமுள்ள மற்ற பறவைகளோ அதற்கு எதிராக எழுந்துள்ளன.

அதை விழுங்கும்படி

காட்டு மிருகங்களை ஒன்றுசேர்த்து, அவைகளைக் கொண்டுவா.

அநேக மேய்ப்பர்கள் என் திராட்சைத் தோட்டத்தை அழித்துவிடுவார்கள். ஏசா 5:1-7ஏசா 63:18எரே 23:1எரே 3:19எரே 6:3லூக் 20:9-16சங் 80:8-16ஏசா 43:28

என் வயலை மிதித்துப் போடுவார்கள்.

அவர்கள் எனது அழகான வயலை

ஒரு வனாந்திரமான பாழ்நிலமாக்கி விடுவார்கள்.

அது எனக்கு முன்பாக வறண்டு, ஏசா 42:25எரே 23:10எரே 14:2பிரச 7:2ஏசா 57:1எரே 10:22எரே 10:25எரே 12:4-8

வனாந்திரமான பாழ்நிலமாகும்.

அது கவனிப்பார் இல்லாதபடியால்

நாடு முழுவதும் பாழ்நிலமாகும்.

பாலைவனத்தில் எல்லா வறண்ட மேடுகள்மேலும் ஆமோ 9:4எரே 47:6எசேக் 14:17ஏசா 34:6எசேக் 5:2ஏசா 57:21ஏசா 66:15-16எரே 15:2

அழிக்கிறவர்கள் கூடுவார்கள்.

யெகோவாவின் வாள் நாட்டின்

ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை பட்சிப்பதால்,

ஒருவருக்குமே பாதுகாப்பு இருக்காது.

அவர்கள் கோதுமையை விதைத்தார்கள், முட்களை அறுப்பார்கள்; உபா 28:38ஆகா 1:6மீகா 6:15ஏசா 55:2லேவி 26:16ஆப 2:13எரே 25:37-38எரே 4:26

அவர்கள் களைத்து வேலை செய்வார்கள், ஆனால் பலனேதும் பெறமாட்டார்கள்.

யெகோவாவின் பயங்கர கோபத்தின் நிமித்தம்

அவர்கள் அறுவடையின்றி ஏமாந்து வெட்கமடைவார்கள்.

யெகோவா சொல்வது இதுவே: “என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு நான் கொடுத்த உரிமைச்சொத்தைப் பறிக்கிற கொடுமையான அயலவரைப் பொறுத்தவரையில், நான் அவர்களுடைய நாடுகளிலிருந்து அவர்களை வேரோடு அறுப்பேன். யூதா குடும்பத்தையோ அவர்கள் மத்தியிலிருந்து பிடுங்கி எடுத்துக்கொள்வேன். எரே 3:18சகரி 2:8எரே 49:7சகரி 10:6-12செப்ப 2:8-10உபா 30:3எசேக் 25:1-17ஏசா 11:11-16 ஆனால் அவர்களைப் பிடுங்கிய பின்பு மீண்டும் அவர்களில் இரக்கங்கொண்டு அவர்கள் ஒவ்வொருவனையும் அவனவனுடைய உரிமைச்சொத்துக்கும் சொந்த நாட்டுக்கும் கொண்டுவருவேன். எரே 49:6எரே 48:47எரே 49:39ஆமோ 9:14உபா 30:3உபா 3:20ஏசா 23:17-18எண் 32:18 அவர்கள் என் மக்களின் வழிகளை நன்றாகக் கற்றுக்கொண்டால், அவர்கள் என் மக்கள் மத்தியில் நிலைபெறுவார்கள். முன்னொரு காலத்தில் பாகாலின்மேல் ஆணையிட என் மக்களுக்கு அவர்கள் போதித்திருந்தார்கள். அதுபோல இப்பொழுது அவர்கள், ‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று என் பெயரினால் ஆணையிடுவதற்கு பழகினால், அவர்கள் நிலைபெறுவார்கள். எரே 4:2யோசு 23:7செப்ப 1:5உபா 10:20-21எரே 3:17சகரி 2:11எபே 2:19-22ஏசா 45:23 ஆனால் எந்த மக்களாவது இதற்குச் செவிகொடாமல் விட்டால், நான் அதை முழுவதும் வேரோடு அறுத்து அழித்துவிடுவேன்” என்று யெகோவா கூறுகிறார். ஏசா 60:12சங் 2:8-121 பேது 2:6-82 தெச 1:8தானி 11:4தானி 7:4-8எசேக் 19:12எரே 12:14-17