குயவனின் வீட்டில் எரேமியா
யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே: “நீ குயவனுடைய வீட்டிற்குப் போ; அங்கே நான் என்னுடைய வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன்” என்றார். எபி 1:1அப் 9:6எரே 19:1-2எரே 23:22ஆமோ 7:7எசேக் 4:1-5ஏசா 20:2எரே 13:1 அப்பொழுது நான் குயவனுடைய வீட்டிற்குப் போனேன், அங்கே குயவன் சக்கரத்தைக்கொண்டு வனைந்துகொண்டிருப்பதை நான் கண்டேன். யோவா 15:14அப் 26:19யோனா 1:3 ஆனால் குயவன் களிமண்ணால் உருவாக்கிக் கொண்டிருந்த அப்பாத்திரம் அவனுடைய கையிலே பழுதடைந்துவிட்டது; அதனால் அவன் தனக்கு நலமாய்த் தோன்றிய விதத்தில் வேறொரு பாத்திரமாக அதை வனைந்தான். ரோம 9:20-23எரே 18:6ஏசா 45:9
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: இஸ்ரயேல் குடும்பத்தாரே! இந்தக் குயவன் செய்வதுபோல, நானும் உங்களுக்குச் செய்யக்கூடாதா? என்று யெகோவா அறிவிக்கிறார். இஸ்ரயேல் குடும்பத்தாரே! குயவனுடைய கையில் களிமண் இருப்பதுபோல, நீங்களும் என் கையில் இருக்கிறீர்கள். ஏசா 64:8ரோம 9:20-21ஏசா 45:9எரே 18:4மத் 20:15தானி 4:23ரோம 11:34 எப்பொழுதாவது நான் ஒரு நாட்டையோ, அரசையோ குறித்து, அது வேரோடு பிடுங்கப்படும், தள்ளி வீழ்த்தப்படும், அழிக்கப்படும் என்று அறிவிக்கும்போது, எரே 1:10எரே 12:14-17எரே 45:4ஆமோ 9:8எரே 25:9-14யோனா 3:4 நான் எச்சரித்த அந்த நாடு தன் தீமையைவிட்டு மனந்திரும்பினால், நான் மனமிரங்கி, கொண்டுவரத் திட்டமிட்ட பேராபத்தை அதன்மேல் சுமத்தமாட்டேன். எசேக் 18:21எரே 26:13ஓசி 11:8யோனா 3:9-10எரே 26:3ஆமோ 7:3-6நியாயாதி 2:18யோவே 2:13-14 இன்னொரு வேளையில் ஒரு நாட்டையோ, அரசையோ குறித்து அது கட்டப்படும் என்றும் நாட்டப்படும் என்றும் அறிவிக்கும்போது, எரே 31:28ஆமோ 9:11-15எரே 1:10எரே 11:17பிரச 3:2எரே 30:18எரே 31:38எரே 31:4 அந்த நாடு எனக்குக் கீழ்ப்படியாமல், எனது பார்வையில் தீமையை செய்தால், அதற்கு நான் செய்ய எண்ணியிருந்த நன்மைகளைச் செய்வதோ இல்லையோ என திரும்பவும் சிந்திப்பேன். 1 சாமு 2:30எசேக் 33:181 சாமு 13:13எசேக் 18:241 சாமு 15:11சங் 125:51 சாமு 15:35எரே 7:23-28
ஆகவே, இப்பொழுது நீ யூதா மக்களிடமும், எருசலேமில் வாழ்பவர்களிடமும் சொல்லவேண்டியதாவது: யெகோவா சொல்வது இதுவே: இதோ பாருங்கள், உங்களுக்கு ஒரு பேராபத்தை ஆயத்தப் படுத்துகிறேன்; உங்களுக்கு எதிராக ஒரு திட்டத்தை வகுக்கிறேன். ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீயவழிகளைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் செய்கைகளையும் சீர்திருத்துங்கள் என்று சொல். 2இராஜா 17:13ஏசா 55:6-7ஏசா 1:16-19எரே 35:15எரே 7:3எரே 25:5அப் 26:20யாக் 5:1 அதற்கு அவர்களோ, “இது பயனற்றது; நாங்கள் எங்கள் சொந்தத் திட்டங்களிலேயே தொடர்ந்து நடப்போம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தீய இருதயத்தின் பிடிவாதத்திலேயே நடப்போம் என்பார்கள்” என்றார். எரே 2:25உபா 29:19எரே 16:12எரே 7:24ஏசா 57:10ஆதி 8:21எரே 3:17லூக் 1:51
ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: எரே 5:30ஓசி 6:10ஏசா 66:8எரே 2:10-13எரே 23:14எரே 14:17எரே 31:41 கொரி 5:1
“இப்படிப்பட்ட ஒரு செயலை யாரும் எப்போதாவது கேட்டதுண்டோ?
என்று நாடுகளிடம் விசாரியுங்கள்;
இஸ்ரயேல் என்னும் கன்னிகை
ஒரு படுமோசமான செயலைச் செய்திருக்கிறாள்.
லெபனோனின் பனி யோவா 6:68
அதன் பாறைச் சரிவுகளிலிருந்து எப்போதாவது மறைவதுண்டோ?
தூரத்திலுள்ள நீரூற்றுகளிலிருந்து வரும்
அதன் குளிர்ந்த தண்ணீர் எப்போதாவது ஓடாமல் நிற்கின்றதோ?
ஆயினும், என் மக்களோ, எரே 6:16எரே 2:32ஓசி 11:2ஏசா 57:14எரே 2:13மல்கி 2:8ஏசா 41:29எரே 10:15
என்னை மறந்துவிட்டார்கள்.
அவர்கள் பயனற்ற விக்கிரகங்களுக்குத் தூபம் எரிக்கிறார்கள்.
என் மக்களை அவர்களுடைய வழிகளிலும்,
முற்காலத்து பாதைகளிலும் அவைகளே இடறச்செய்தன.
அவைகள் குறுக்கு வழிகளிலும், செப்பனிடாத வீதிகளிலும் அவர்களை நடக்கப்பண்ணின.
அவர்களுடைய நாடு பாழாக்கப்பட்டு சங் 22:7எரே 25:9எரே 19:81 இராஜா 9:8எசேக் 33:28-29எரே 49:13எரே 50:13மத் 27:39
என்றென்றைக்கும் ஒரு கேலிப் பொருளாயிருக்கும்.
அவர்களைக் கடந்துபோகும் யாவரும் திகைத்து,
ஏளனமாய் தலையை அசைப்பார்கள்.
கொண்டல் காற்றைப்போல் பகைவரின் முன்பாக அவர்களைச் சிதறடிப்பேன். எரே 13:24எரே 2:27ஓசி 13:15யோபு 27:21சங் 48:7எரே 32:33எரே 46:21உபா 28:25
அவர்களுடைய பேராபத்தின் நாளில் அவர்களுக்கு என்னுடைய முகத்தை அல்ல;
என் முதுகையே காட்டுவேன் என்று
யெகோவா கூறுகிறார் என்று சொல்” என்றார்.
அதற்கு அவர்கள், “எரேமியாவுக்கு எதிராகச் சதித்திட்டம் போடுவோம் வாருங்கள்; ஏனெனில் ஆசாரியர்கள் சட்டத்தைக் போதிப்பதும், ஞானிகள் ஆலோசனை கொடுப்பதும், இறைவாக்கு உரைப்போர் இறைவாக்கு உரைப்பதும் இல்லாமல் போகாது. எனவே வாருங்கள். நமது வார்த்தையினால் அவனைத் தாக்கி அவன் சொல்லும் எதையும் கவனியாமல் இருப்போம்” என்றார்கள். சங் 52:2எரே 11:19மல்கி 2:7எரே 13:13-14எரே 18:11எரே 5:12-13மீகா 2:1-3நீதி 18:21
“யெகோவாவே! எனக்குச் செவிகொடும். நெகே 6:9எரே 20:12மீகா 7:8சங் 109:28சங் 55:16-172இராஜா 19:16லூக் 6:11-12நெகே 4:4-5
என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் சொல்வதையும் கேளும்.
நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்யப்படலாமோ? சங் 35:7சங் 57:6சங் 106:231 சாமு 24:17-19சங் 35:12பிரச 10:8எரே 18:22நீதி 26:27
அவர்கள் எனக்குக் குழியை வெட்டியிருக்கிறார்களே!
நான் உமது முன்னிலையில் நின்று
உமது கடுங்கோபத்தை அவர்களிடமிருந்து திருப்பும்படி
அவர்களின் சார்பாகப் பேசியதை நினைத்தருளும்.
ஆகையால் அவர்கள் பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, சங் 109:9-20ஆமோ 4:10உபா 32:25யாத் 22:24எரே 15:8எரே 16:3-4எரே 9:21புலம் 5:3
வாளின் வல்லமைக்கு அவர்களை ஒப்புக்கொடும்.
அவர்களுடைய மனைவிகள் பிள்ளையற்றவர்களாகவும், விதவைகளாகவும் ஆகட்டும்.
அவர்களுடைய ஆண்கள் சாகடிக்கப்பட்டு,
அவர்களின் வாலிபர் யுத்தத்தில் வாளால் கொலைசெய்யப்படட்டும்.
நீர் திடீரென அவர்கள்மீது கொள்ளைக் கூட்டத்தைக் கொண்டுவரும்போது, எரே 6:26சங் 140:5எரே 25:34-36செப்ப 1:10-11ஏசா 10:30சங் 56:5-7செப்ப 1:16ஏசா 22:1-4
அவர்கள் வீடுகளிலிருந்து கூக்குரல் கேட்கட்டும்.
ஏனெனில் என்னைப் பிடிப்பதற்கு அவர்கள் குழிவெட்டி,
என் கால்களுக்குக் கண்ணிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் யெகோவாவே! சங் 35:4சங் 69:22-28ஏசா 2:9நெகே 4:4-5சங் 109:14-15ஏசா 10:3எரே 11:18-20எரே 11:23
எனக்கெதிராக என்னைக் கொல்வதற்கு
அவர்கள் செய்யும் சதித்திட்டங்களை எல்லாம் நீர் அறிவீர்.
அவர்களுடைய குற்றங்களை மன்னியாமலும்,
உமது பார்வையிலிருந்து அவர்களுடைய பாவங்களை அகற்றாமலும் இரும்.
அவர்கள் உமக்கு முன்பாக வீழ்த்தப்படட்டும்;
உமது கோபத்தின் வேளையில் இவ்வாறு அவர்களுக்குச் செய்யும்.”