நாடுகடத்தப்பட்டோருக்கு கடிதம்
நேபுகாத்நேச்சாரினால், எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு எரேமியா ஒரு கடிதம் எழுதினான்: அதை அவன் எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் தப்பியிருந்த முதியோர், ஆசாரியர்கள், இறைவாக்கு உரைப்போர் ஆகியோருக்கும் மற்றும் எல்லா மக்களுக்கும் அனுப்பினான். அப் 15:23எஸ்த 9:20எபி 13:22எரே 29:25-29வெளி 2:1-32 நாளாக 30:1-62 கொரி 7:8எரே 24:1-7 இக்கடிதம் எகொனியா அரசனும், தாய் அரசியும், அரச அதிகாரிகளும், யூதாவிலும் எருசலேமிலுமிருந்த தலைவர்களும், கைவினைஞரும், தொழில் வல்லுநர்களும், எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டுப் போனபின்பு எழுதப்பட்டது. எரே 22:24-282 நாளாக 36:9-102இராஜா 24:12-16எரே 27:202இராஜா 20:182இராஜா 9:32தானி 1:3-21எரே 24:1 எரேமியா அக்கடிதத்தை சாப்பானின் மகன் எலெயாசாரிடமும், இல்க்கியாவின் மகன் கெமரியாவிடமும் ஒப்படைத்தான். அவர்களை யூதா அரசன் சிதேக்கியா, பாபிலோனிலுள்ள அரசன் நேபுகாத்நேச்சாரிடம் அனுப்பினான். அந்தக் கடிதத்தில்: 1 நாளாக 6:132 நாளாக 34:202இராஜா 22:122இராஜா 22:8எசேக் 8:11எரே 26:24எரே 36:25எரே 39:14
இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா, தான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தி அனுப்பிய யாவருக்கும் சொல்வதாவது: எரே 24:5ஆமோ 3:6ஏசா 10:5-6ஏசா 45:7ஏசா 59:1-2ஏசா 5:5 “நீங்கள் வீடுகளைக் கட்டி, அவைகளில் வாழுங்கள். தோட்டங்களை நாட்டி அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். எரே 29:28எரே 29:10எசேக் 28:26 நீங்கள் திருமணம் செய்து மகன்களையும், மகள்களையும் பெற்றெடுங்கள். உங்கள் மகன்களுக்கு மனைவிகளைத் தேடுங்கள். உங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுங்கள். அவர்களும் மகன்களையும், மகள்களையும் பெறட்டும். எண்ணிக்கையில் பெருகுங்கள்; குறைந்து போகாதிருங்கள். ஆதி 21:21ஆதி 24:3-4ஆதி 24:51ஆதி 28:1-4ஆதி 29:19நியாயாதி 12:91 கொரி 7:36-381 தீமோ 5:14 நான் உங்களை நாடுகடத்தி அனுப்பிய பட்டணத்தின் சமாதானத்தையும், செழிப்பையும் தேடுங்கள். அதற்காக யெகோவாவிடம் மன்றாடுங்கள். ஏனெனில் பட்டணம் செழித்தால், நீங்களும் செழிப்பீர்கள்.” 1 தீமோ 2:1-2எஸ்றா 6:101 பேது 2:13-17எஸ்றா 7:23தானி 4:27ரோம 13:1ரோம 13:5தானி 4:19 ஆம், இஸ்ரயேலின் சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “உங்கள் மத்தியிலுள்ள இறைவாக்கினரும், குறிசொல்பவர்களும், உங்களை ஏமாற்ற விடவேண்டாம். கனவுகளைக் காணச்செய்கிற அவர்களுக்கு நீங்கள் செவிகொடாமலும் இருங்கள். எபே 5:62 தெச 2:9-11எரே 5:312 பேது 2:2-32 தீமோ 3:13எரே 14:14எரே 27:14-15எரே 27:9 அவர்கள் என் பெயரில் உங்களுக்குப் பொய்களையே இறைவாக்காகக் கூறுகிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். எரே 27:15எரே 29:31எரே 29:23
யெகோவா சொல்வதாவது: “பாபிலோனுக்கு எழுபது வருடங்கள் நிறைவேறிய பின்பு, நான் உங்களிடம் வந்து மீண்டும் உங்களை இந்த இடத்திற்குக் கொண்டுவருவேன் எனக்கூறிய, எனது நல்ல வார்த்தையை நிறைவேற்றுவேன். தானி 9:2எரே 24:6-7சகரி 7:5எரே 25:12எரே 27:22எரே 32:42-442 நாளாக 36:21செப்ப 2:7 உங்களுக்காக நான் வைத்திருக்கும் என் திட்டங்களை நானே அறிவேன்.” அவைகள், “உங்களுக்குத் தீமை விளைவிக்கும் திட்டங்களல்ல, அவை உங்களுக்கு ஒரு செழிப்பான வாழ்வையும், நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் கொடுக்கும் திட்டங்களே என்று யெகோவா அறிவிக்கிறார். ஏசா 55:8-12சங் 33:11மீகா 4:12சங் 40:5யோபு 23:13புலம் 3:26ஏசா 46:10-11எசேக் 34:11-31 அப்பொழுது நீங்கள் என்னை நோக்கிக் கூப்பிட்டு, என்னிடம் வந்து மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். மத் 7:7-8எரே 33:3சங் 50:15சங் 145:19சங் 10:17ஏசா 65:24சகரி 13:9எரே 31:9 நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது, நீங்கள் என்னைத் தேடிக் கண்டடைவீர்கள். உபா 4:29-31சங் 119:2மத் 7:7சங் 119:10எரே 24:7யோவே 2:12லூக் 11:9-10சங் 91:15 நீங்கள் என்னைக் கண்டுகொள்ளும்படி நான் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் உங்களைச் சிறையிருப்பிலிருந்து மீண்டும் கொண்டுவருவேன். நான் உங்களை நாடுகடத்திய எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா இடங்களிலிருந்தும் உங்களை ஒன்றுசேர்ப்பேன்; எங்கிருந்து நான் உங்களை நாடுகடத்தி அனுப்பினேனோ அந்த இடத்திற்கு உங்களைத் திரும்பவும் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். எசேக் 36:1-38எரே 30:31 நாளாக 28:9மீகா 4:12ரோம 10:202 நாளாக 15:12-15உபா 30:3ஏசா 45:19
“யெகோவா எங்களுக்குப் பாபிலோனிலும் இறைவாக்கு உரைப்போரை எழுப்பியிருக்கிறார்” என்று நீங்கள் சொல்லலாம். எசேக் 1:1எசேக் 1:3எரே 28:1-17எரே 29:8-9 ஆனால் யெகோவா கூறுவதாவது: தாவீதின் அரியணையிலிருக்கிற அரசனைக் குறித்தும், உங்களுடன் நாடுகடத்தப்படாமல் இந்த பட்டணத்திலேயே தங்கியிருக்கும் உங்கள் நாட்டினரான எல்லா மக்களைக் குறித்தும் எரே 38:17-23எரே 38:2-3எசேக் 17:12-21எசேக் 21:9-27எசேக் 22:31எசேக் 24:1-14எசேக் 6:1-9எரே 24:2 சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “ஆம், நான் வாளையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; அத்துடன் சாப்பிட முடியாத அளவுக்கு அழுகிப்போன கெட்ட அத்திப்பழங்களைப் போலவே அவர்களை ஆக்குவேன். எரே 24:8-10எரே 29:18எசேக் 14:12-21எசேக் 5:12-17எரே 15:2-3எரே 24:1-3எரே 27:8எரே 34:17-22 நான் அவர்களைப் பிடிப்பதற்கு வாளுடனும், பஞ்சத்துடனும், கொள்ளைநோயுடனும் பின்தொடர்வேன். அவர்களை பூமியின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாகும்படி செய்வேன். மேலும் நான் அவர்களைத் துரத்துகிற எல்லா நாடுகளின் மத்தியிலும் அவர்களை சாபத்திற்கும், பயங்கரத்திற்கும், பழிக்கும், நிந்தைக்கும் உள்ளாக்குவேன். 2 நாளாக 29:8எரே 15:4எரே 42:18உபா 28:25எரே 24:9எரே 34:17எசேக் 12:15ஏசா 65:15 ஏனெனில் அவர்கள் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் என் ஊழியக்காரர்களான இறைவாக்கினர்மூலம் திரும்பத்திரும்ப அவர்களுக்கு அனுப்பிய வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை. நாடுகடத்தப்பட்டவர்களாகிய நீங்களுங்கூட, அதற்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். எரே 6:19எரே 26:5எபி 12:25எரே 25:3-7எரே 34:17எரே 35:14-16எரே 7:13எரே 7:24-26
ஆகையால் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு என்னால் நாடுகடத்தப்பட்ட நீங்கள் எல்லோரும், யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். எரே 24:5மீகா 4:10எசேக் 3:11எசேக் 3:15 கோலாயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசெயாவின் மகன் சிதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “இவர்கள் என் பெயரில் உங்களுக்குப் பொய்களை இறைவாக்காகச் சொல்கிறார்கள். நான் அவர்களைப் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடம் ஒப்புக்கொடுப்பேன். அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான். எரே 14:14-15எரே 29:8-9புலம் 2:14 இந்தப் பயங்கர செயலின் நிமித்தம் யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, பாபிலோனில் வசிப்போர், ‘பாபிலோன் அரசன் நெருப்பிலே சுட்டெரித்த சிதேக்கியாவைப்போலவும், ஆகாபைப்போலவும் யெகோவா உங்களை நடத்தட்டும்’ என்று சாபமான வார்த்தையாகச் சொல்வார்கள். தானி 3:6ஏசா 65:15தானி 3:21ஆதி 48:201 கொரி 16:22ரூத் 4:11 ஏனெனில் இந்த மனிதர் இஸ்ரயேலில் மோசமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்; தங்கள் அயலவரின் மனைவியருடன் விபசாரம் செய்திருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் செய்யும்படி சொல்லாதவற்றை, என் பெயரினால் பொய்களாகப் பேசியிருக்கிறார்கள். நான் அதை அறிவேன். அதற்கு நானே சாட்சி” என்று யெகோவா அறிவிக்கிறார். எபி 4:13எரே 23:14மல்கி 3:5எரே 16:17எரே 29:21எரே 29:8-9நீதி 5:212 பேது 2:10-19
செமாயாவுக்கு செய்தி
நீ நெகெலாமியனான செமாயாவுக்குச் சொல்லவேண்டியதாவது: எரே 29:31-32 “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: நீ எருசலேமிலுள்ள எல்லா மக்களுக்கும் உன் பெயரில் கடிதங்களை அனுப்பியிருக்கிறாய். ஆசாரியன் மாசெயாவின் மகனுமாகிய செப்பனியாவுக்கும், மற்ற எல்லா ஆசாரியருக்குங்கூட அவைகளை அனுப்பியிருக்கிறாய். நீ செப்பனியாவுக்கு எழுதியிருந்ததாவது: எரே 29:29எரே 37:3எரே 52:241 இராஜா 21:8-132 நாளாக 32:172இராஜா 10:1-72இராஜா 19:142இராஜா 19:9 ‘யெகோவாவின் ஆலயத்தில் பொறுப்பாயிருக்கும்படி, யோய்தாவுக்குப் பதிலாக யெகோவா உன்னை ஆசாரியனாக நியமித்திருக்கிறார்; இறைவாக்கினனைப்போல் நடிக்கும் எந்தவொரு பைத்தியக்காரனையும் நீ கால் விலங்குகளிலும், கழுத்து விலங்குகளிலும் போடவேண்டுமே. எரே 20:1-22இராஜா 9:11அப் 26:24ஓசி 9:7யோவா 10:20அப் 16:24உபா 13:1-5மாற் 3:21 அப்படியானால் உங்கள் மத்தியில் தன்னை இறைவாக்கினனாய் காட்டிக்கொள்ளும், ஆனதோத் ஊரைச்சேர்ந்த எரேமியாவை ஏன் கண்டிக்காமல் விட்டிருக்கிறாய்? 2 நாளாக 25:162 தீமோ 3:8அப் 4:17-21அப் 5:28அப் 5:40ஆமோ 7:12-13எரே 1:1எரே 29:26 இந்த எரேமியாவோ பாபிலோனில் இருக்கும் நமக்கு, உங்கள் சிறையிருப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும். அதுவரை வீடுகளைக் கட்டிக் குடியிருங்கள். தோட்டங்களை நாட்டி அதன் பலனைச் சாப்பிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறானே” என்பதே அந்தக் கடிதம். எரே 29:5எரே 29:1எரே 29:10
ஆசாரியனாகிய செப்பனியா இறைவாக்கினன் எரேமியாவுக்கு அந்தக் கடிதத்தை வாசித்துக் காட்டினான். எரே 29:25 அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது: “நாடுகடத்தப்பட்ட யாவருக்கும் நீ இந்தச் செய்தியை அனுப்பு. நெகெலாமியனான செமாயாவைப் பற்றி யெகோவா கூறுவது இதுவே: நான் செமாயாவை அனுப்பாதபோதும் அவன் இறைவாக்கு கூறி நீங்கள் பொய்யை நம்பும்படி செய்திருக்கிறான். எரே 29:9எசேக் 13:22-23எசேக் 13:8-16எரே 14:14-15எரே 29:23-242 பேது 2:1எரே 23:21எரே 28:15-17 ஆகவே, யெகோவா கூறுவது இதுவே: நான் நெகெலாமியனான செமாயாவையும் அவனுடைய சந்ததிகளையும் நிச்சயம் தண்டிப்பேன். அவன் எனக்கு விரோதமாகக் கலகத்தைப் பிரசிங்கித்தபடியால், இந்த மக்கள் மத்தியில் அவனுக்கென ஒருவரும் மீந்திருக்கமாட்டார்கள். நான் என் மக்களுக்குச் செய்யப்போகும் நன்மைகளையும் அவன் காணமாட்டான்” என்று யெகோவா அறிவிக்கிறார். எரே 28:162இராஜா 7:19-20எரே 17:61 சாமு 2:30-342இராஜா 7:2எரே 22:302இராஜா 5:27ஆமோ 7:17