எரேமியாவுக்கு சாவின் அச்சுறுத்தல்
யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமின் ஆட்சியின் ஆரம்பத்தில், யெகோவாவிடமிருந்து இந்த வார்த்தை வந்தது: 2 நாளாக 36:4-5எரே 27:12இராஜா 23:34-36எரே 1:3எரே 25:1எரே 35:1எரே 36:1 “யெகோவா சொல்வது இதுவே: யெகோவாவின் ஆலய முற்றத்தில் நின்று, யெகோவாவின் ஆலயத்தில் வழிபட வருகின்ற யூதா பட்டணத்து மக்கள் எல்லோருடனும் பேசு. நான் உனக்குச் சொல்லும்படி கட்டளையிட்டிருக்கிற எல்லா வார்த்தைகளையும் ஒன்றுவிடாமல் சொல். உபா 4:2அப் 20:27மத் 28:20எரே 1:17எரே 19:14அப் 20:20அப் 5:42எரே 7:2 ஒருவேளை அவர்கள் அந்த வார்த்தைகளைக் கேட்டு, ஒவ்வொருவரும் தங்கள் தீமையான வழியைவிட்டுத் திரும்புவார்கள். அப்பொழுது அவர்கள் செய்திருக்கிற தீமையின் நிமித்தம் நான் திட்டமிட்ட பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவராமல் மனமிரங்குவேன். எரே 36:3ஏசா 1:16-19எரே 18:7-10யோனா 4:2எசேக் 18:27-30எரே 36:7யோனா 3:8-101 இராஜா 21:27 நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது, ‘யெகோவா சொல்வது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நான் உங்கள்முன் வைத்த என் சட்டத்தின்படி நடக்கவேண்டும். 1 இராஜா 9:6ஏசா 1:20எரே 44:102 நாளாக 7:19-20உபா 11:32உபா 28:15-68உபா 29:18-28உபா 31:16-18 நான் திரும்பத்திரும்ப உங்களிடத்தில் அனுப்பும் என் ஊழியரான இறைவாக்கினரின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவேண்டும். ஆனால் நீங்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை. எரே 11:72இராஜா 9:7எஸ்றா 9:11எரே 25:3-4எரே 7:13எரே 7:25ஆமோ 3:7தானி 9:6-10 ஆகையால் நான் இந்த ஆலயத்தை சீலோவைப்போல் அழித்து, இந்தப் பட்டணத்தையும் பூமியிலுள்ள எல்லா நாடுகளின் மத்தியிலும் சாபத்திற்குள்ளாக்குவேன் என்று சொல்’ என்றார்.” 2இராஜா 22:19எரே 24:9ஏசா 65:15எரே 25:181 சாமு 4:10-121 சாமு 4:19-22தானி 9:11எரே 7:12-14
ஆசாரியரும், இறைவாக்கினரும், எல்லா மக்களும் யெகோவாவின் ஆலயத்தில் எரேமியா கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டார்கள். எரே 5:31மீகா 3:11அப் 4:1-6அப் 5:17எசேக் 22:25-26எரே 23:11-15மத் 21:15செப்ப 3:4 யெகோவா சொல்லும்படி தனக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் எரேமியா எல்லா மக்களுக்கும் சொன்னான். சொன்னவுடனேயே ஆசாரியரும், இறைவாக்கினரும் எல்லா மக்களும் அவனைப் பிடித்து, “நீ சாகவேண்டும். புலம் 4:13-142 நாளாக 36:16அப் 5:33அப் 7:52எரே 11:19-21எரே 12:5-6எரே 18:18எரே 2:30 நீ ஏன், இந்த ஆலயம் சீலோவைப் போலாகும் என்றும், பட்டணம் குடிகளின்றிப் பாழாகும் என்றும் யெகோவாவின் பெயரில் இறைவாக்கு உரைத்தாய்?” என்று கேட்டார்கள். எல்லா மக்களும் யெகோவாவின் ஆலயத்தில் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டார்கள். 2 நாளாக 25:16அப் 13:50அப் 16:19-22அப் 17:5-8அப் 19:24-32அப் 21:30அப் 4:17-19அப் 6:14
இவற்றை யூதாவின் அதிகாரிகள் கேள்விப்பட்டபோது அரச அரண்மனையிலிருந்து யெகோவாவின் ஆலயத்திற்குச் சென்று யெகோவாவின் ஆலயத்திலிருந்த புதிய வாசலின் முகப்பில் உட்கார்ந்தார்கள். எரே 36:102இராஜா 15:35எசேக் 22:27எசேக் 22:6எரே 26:16-17எரே 26:24எரே 34:19எரே 36:12-19 அப்பொழுது ஆசாரியரும், இறைவாக்கினரும், “இவன் பட்டணத்திற்கெதிராய் இறைவாக்குரைத்தான். இவன் மரண தண்டனைக்கு உரியவன். நீங்களே உங்கள் காதுகளால் கேட்டீர்கள்” என்று அதிகாரிகளிடமும், எல்லா மக்களிடமும் சொன்னார்கள். எரே 38:4உபா 18:20மத் 26:66அப் 6:11-14அப் 22:22அப் 24:4-9அப் 25:2-13எரே 18:23
அப்பொழுது எரேமியா எல்லா அதிகாரிகளையும் மக்களையும் பார்த்து: “இந்த ஆலயத்திற்கும் இந்தப் பட்டணத்திற்கும் எதிராய் நான் சொன்ன எல்லாவற்றையும் இறைவாக்கு உரைக்கும்படி யெகோவாவே என்னை அனுப்பினார். அப் 4:19அப் 5:29எரே 26:15எரே 1:17-18எரே 26:2ஆமோ 7:15-17எரே 19:1-3 இப்போது உங்கள் வழிகளையும், செயல்களையும் சீர்திருத்தி, உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள். அப்பொழுது யெகோவா மனமிரங்கி உங்களுக்கெதிராகத் தீர்ப்பளித்த பேராபத்தைக் கொண்டுவரமாட்டார். ஏசா 1:19யோனா 3:9யோனா 4:2எபி 5:9ஓசி 14:1-4ஏசா 55:7எரே 18:8எரே 26:19 நானோ உங்கள் கையில் இருக்கிறேன்; நீங்கள் நலமானது என்றும், சரியானது என்றும் நினைப்பதைச் செய்யுங்கள். யோசு 9:252 சாமு 15:26எரே 38:5தானி 3:16 நீங்கள் என்னைக் கொன்றால், குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும், இந்தப் பட்டணத்தின்மேலும், இதில் வாழ்கிறவர்கள்மேலும் நீங்களே சுமரப்பண்ணுவீர்கள் என்பதை நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில், உண்மையிலேயே நீங்கள் கேட்ட இந்த வார்த்தைகளையெல்லாம் உங்களுக்குச் சொல்லும்படி யெகோவாவே என்னை அனுப்பினார்” என்றான். எண் 35:33நீதி 6:17அப் 7:60எரே 22:3எரே 7:6மத் 26:25வெளி 16:61 தெச 2:15-16
அப்பொழுது அதிகாரிகளும், எல்லா மக்களும் ஆசாரியர்களையும், இறைவாக்கினரையும் பார்த்து, “இந்த மனிதன் மரண தண்டனைக்கு தகுதியானவன் அல்ல. அவன் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பெயரிலேயே எங்களுடன் பேசியிருக்கிறான்” என்றார்கள். அப் 23:29அப் 23:9அப் 25:25அப் 5:34-39எரே 36:19எரே 36:25அப் 26:31-32எஸ்த 4:14
நாட்டின் முதியோர் சிலர் முன்னேவந்து, கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது: அப் 5:34மீகா 1:1 “யூதாவின் அரசன் எசேக்கியாவின் நாட்களில், மோரேசேத் ஊரைச்சேர்ந்த மீகா இறைவாக்குரைத்தான். அவன் எல்லா யூத மக்களிடமும், ‘சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: மீகா 1:1நெகே 4:2சகரி 8:3எரே 17:3மீகா 3:12ஏசா 2:2-3சங் 79:12இராஜா 19:25
“ ‘சீயோன் வயலைப்போல உழப்படும்,
எருசலேம் மண்மேடுகளாகும்,
ஆலயம் அமைந்துள்ள மலை, புல் அடர்ந்த காடாகும்’ 1” என்று சொல்லியிருந்தான்.
“அப்பொழுது யூதாவின் அரசன் எசேக்கியாவோ அல்லது யூதாவிலிருந்து வேறு எவரோ அவனைக் கொன்றார்களா? எசேக்கியா யெகோவாவுக்குப் பயந்து அவருடைய தயவை நாடவில்லையோ? யெகோவாவும் அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பிட்ட பேராபத்தை அனுப்பாதபடி, மனமிரங்கவில்லையோ? ஆனால் நாங்களோ, எங்களுக்கெதிராகப் பெரும் பேரழிவை வருவித்துக்கொள்ளப் போகிறோம்” என்றார்கள். 2 சாமு 24:16யாத் 32:142 நாளாக 29:6-11ஏசா 37:15-202 நாளாக 32:25-26அப் 5:39ஏசா 37:1ஏசா 37:4
இப்பொழுது கீரியாத்யாரீம் ஊரைச்சேர்ந்த செமாயாவின் மகன் உரியா என்னும் வேறொருவனும் யெகோவாவின் பெயரில் இறைவாக்கு உரைத்தான். அவனும் எரேமியா கூறிய அதே வார்த்தைகளையே இந்தப் பட்டணத்திற்கும், இந்த நாட்டிற்கும் எதிராக இறைவாக்கு உரைத்தான். 1 சாமு 7:2யோசு 9:171 சாமு 6:21யோசு 15:60யோசு 18:14 யோயாக்கீம் அரசனும், அவனுடைய எல்லா அதிகாரிகளும், அலுவலர்களும் அவனுடைய வார்த்தைகளைக் கேட்டபோது, அரசன் அவனைக் கொலைசெய்யத் தேடினான். ஆனால் உரியா அதைக் கேள்விப்பட்டு பயந்து எகிப்திற்குத் தப்பி ஓடினான். மத் 10:232 நாளாக 16:10எரே 36:26மத் 14:51 இராஜா 19:1-3மத் 10:28மத் 10:39மத் 16:25-26 ஆயினும் யோயாக்கீம் அரசன் அக்போரின் மகன் எல்நாத்தானை வேறுசில மனிதரோடு எகிப்திற்கு அனுப்பினான். 2இராஜா 22:122இராஜா 22:14எரே 36:12எரே 36:25நீதி 29:12சங் 12:8 அவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, யோயாக்கீம் அரசனிடம் கொண்டுபோனார்கள். அரசன் அவனை வாளால் வெட்டி, அவனுடைய உடலை பொதுமக்களை அடக்கம்பண்ணுகிற இடத்தில் எறிந்துவிட்டான். எரே 2:30வெளி 11:71 தெச 2:15அப் 12:1-3எசேக் 19:6எரே 22:19எரே 26:15எரே 36:30
ஆனாலும் சாப்பானின் மகன் அகீக்காம் எரேமியாவுக்குச் சார்பாக இருந்தபடியால், எரேமியா கொலைசெய்யப்படும்படி மக்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படவில்லை. 1 இராஜா 18:42இராஜா 22:12-14எரே 1:18-19எரே 39:14எரே 40:5-72 நாளாக 34:202இராஜா 25:22அப் 23:10