எரேமியா 1

Jeremiah 1

இல்க்கியாவின் மகன் எரேமியாவின் வார்த்தைகள்: இல்க்கியா பென்யமீன் பிரதேசத்தில் உள்ள ஆனதோத் என்ற ஊரில் வசித்த ஆசாரியர்களில் ஒருவன். 1 நாளாக 6:602 நாளாக 36:21எசேக் 1:3எரே 11:21எரே 32:7-9ஆமோ 1:1ஆமோ 7:10ஏசா 1:1 யூதாவின் அரசனாயிருந்த ஆமோனின் மகன் யோசியாவின் ஆட்சிக் காலத்தின் பதின்மூன்றாம் வருடத்தில், யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. 1 இராஜா 13:20ஓசி 1:1எரே 1:11எரே 1:4யோனா 1:1மீகா 1:12 நாளாக 34:1-332இராஜா 21:24 தொடர்ந்து யூதாவின் அரசனாயிருந்த, யோசியாவின் மகன் யோயாக்கீமின் ஆட்சிக்காலம் முழுவதிலும், யூதாவின் அரசனாயிருந்த யோசியாவின் மகன் சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருடம் ஐந்தாம் மாதம் முடியும் வரையும், யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. அப்பொழுதுதான் எருசலேம் மக்கள் நாடுகடத்தப்பட்டார்கள். 2 நாளாக 36:5-82இராஜா 23:34எரே 39:2சகரி 7:51 நாளாக 3:152 நாளாக 36:11-212இராஜா 24:1-92இராஜா 24:17

எரேமியாவின் அழைப்பு

யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது, அவர் என்னிடம், எசேக் 3:16எசேக் 1:3எரே 1:2

“உன் தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கும் முன்பே நான் உன்னை அறிந்தேன் 1, சங் 139:16ஏசா 49:1கலா 1:15-16சங் 71:5-6ரோம 8:29ஏசா 49:5ஏசா 44:22 தீமோ 2:19-21

நீ பிறக்கும் முன்பே எனக்கு ஊழியம் செய்யும்படி நான் உன்னை பிரித்தெடுத்தேன்;

நாடுகளுக்கு இறைவாக்கினனாக உன்னை நியமித்தேன்” என்றார்.

அதற்கு நான், “ஆண்டவராகிய யெகோவாவே, எப்படிப் பேசவேண்டுமென்று எனக்குத் தெரியாது; நான் சிறுபிள்ளை தானே” என்றேன். யாத் 4:10-16யாத் 6:121 இராஜா 3:7-9எரே 32:17யாத் 4:1யாத் 6:30எரே 14:13எரே 4:10

ஆனால் யெகோவா என்னிடம் சொன்னதாவது, “நான் ஒரு சிறுபிள்ளை தானே” என்று நீ சொல்லாதே; நான் உன்னை அனுப்பும் ஒவ்வொருவரிடமும் நீ போய் நான் கட்டளையிடுவதையெல்லாம் சொல்லவேண்டும். எசேக் 3:27மாற் 16:15-16எண் 22:202 நாளாக 18:13எசேக் 3:17-21எசேக் 2:3-5எரே 1:17-18மத் 28:20 நீ அவர்களுக்குப் பயப்படாதே. ஏனெனில் நான் உன்னோடிருக்கிறேன், நான் உன்னைக் காப்பாற்றுவேன் என்று யெகோவா அறிவிக்கிறார். யோசு 1:5யோசு 1:9ஏசா 51:7உபா 31:6லூக் 12:4-5எபி 13:5-6எரே 15:20-21உபா 31:8

அப்பொழுது யெகோவா தமது கரத்தை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம், “இப்பொழுது என் வார்த்தைகளை உன் வாயில் வைத்திருக்கிறேன். லூக் 21:15யாத் 4:11-12லூக் 12:12ஏசா 51:16ஏசா 50:4மத் 10:19எரே 5:14எசேக் 3:10 இதோ பார், நாடுகளுக்கும் அரசுகளுக்கும் மேலாக அவைகளை வேரோடு பிடுங்கவும், இடித்து வீழ்த்தவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் நான் இன்று உன்னை நியமித்திருக்கிறேன்” என்றார். எரே 31:282 கொரி 10:4-5ஏசா 44:26-28எரே 31:4-5எரே 24:6ஆமோ 9:11எசேக் 36:36வெளி 11:3-6

யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது: அவர் என்னை நோக்கி, “எரேமியாவே! நீ காண்பது என்ன?” என்று கேட்டார். ஆமோ 7:8ஆமோ 8:2சகரி 5:2எரே 24:3சகரி 4:2எண் 17:8எசேக் 7:10

நான் அதற்குப் பதிலாக “ஒரு வாதுமை மரக்கிளையைக் காண்கிறேன்” என்றேன்.

அப்பொழுது யெகோவா என்னிடம், “நீ சரியாகக் கண்டிருக்கிறாய், ஏனெனில் நான் என் வார்த்தையை நிறைவேற்றுவதற்காக விழிப்பாயிருக்கிறேன்” என்றார். எசேக் 12:28எசேக் 12:25எசேக் 12:22-23லூக் 10:28ஆமோ 8:2உபா 5:28உபா 18:17உபா 32:35

யெகோவாவின் வார்த்தை திரும்பவும் எனக்கு வந்தது. அவர், “நீ காண்கிறது என்ன?” என்றார். எசேக் 11:3எசேக் 11:72 கொரி 13:1-2எசேக் 24:3-14ஆதி 41:32சகரி 4:2

“ஒரு கொதிக்கும் பானை வடதிசையிலிருந்து சரிவதைக் காண்கிறேன்” என்று நான் பதிலளித்தேன்.

அப்பொழுது யெகோவா என்னிடம், “நாட்டில் வாழும் யாவர்மேலும் வடக்கிலிருந்து பெரும் பயங்கரம் கொதித்தெழும்பும். ஏசா 41:25எரே 10:22எரே 4:6எரே 6:1எசேக் 1:4எரே 31:8எரே 46:20எரே 50:41 அதற்காக நான் வடதிசை அரசுகளின் படைகளையெல்லாம் அழைக்கப் போகிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். எரே 25:9எரே 4:16எரே 43:10எரே 9:11ஏசா 22:7எரே 10:25எரே 39:3உபா 28:49-53

“அவர்களின் அரசர்கள் வந்து

எருசலேமின் நுழைவு வாசல்களில் தங்கள் சிங்காசனத்தை வைப்பார்கள்;

அவர்கள் எருசலேமைச் சுற்றியுள்ள மதில்களுக்கு எதிராகவும்,

யூதாவின் பட்டணங்களுக்கு எதிராகவும் வருவார்கள்.

எனது மக்கள் வேறு தெய்வங்களுக்குத் தூபங்காட்டி, எரே 19:4எரே 7:9அப் 7:41உபா 28:20ஏசா 2:82இராஜா 22:17உபா 31:16ஓசி 11:2

தங்கள் கைகளினால் செய்தவற்றையே 2 வழிபட்டு, என்னைக் கைவிட்டார்கள்.

இந்த கொடிய செயல்களின் நிமித்தம் அவர்களுக்கு

என் நியாயத்தீர்ப்பை வழங்குவேன்.

“ஆதலால் உன்னை ஆயத்தப்படுத்து. எழுந்து நின்று நான் உனக்குக் கட்டளையிடுவதையெல்லாம் அவர்களுக்குச் சொல். அவர்களுக்குப் பயப்படாதே, பயந்தால் அவர்கள் முன்னால் நான் உன்னைத் திகிலடையச் செய்வேன். 1 இராஜா 18:46எரே 1:7-81 பேது 1:13லூக் 12:35எசேக் 3:14-18யாத் 7:2எரே 23:28எசேக் 3:10-11 இன்று நான் உன்னை முழு நாட்டிற்கும் விரோதமாக நிற்கும்படி பாதுகாப்பான பட்டணமாகவும், இரும்புத் தூணாகவும், வெண்கல மதிலாகவும் ஆக்கியிருக்கிறேன். யூதாவின் அரசர்களுக்கும், அதன் அதிகாரிகளுக்கும், ஆசாரியருக்கும், நாட்டு மக்களுக்கும் விரோதமாக நிற்கும்படியாகவே இப்படிச் செய்தேன். ஏசா 50:7எசேக் 3:8-9எரே 15:20எரே 6:27மீகா 3:8-9எரே 34:20-22எரே 36:27-32எரே 37:7 அவர்கள் உனக்கு எதிராகச் சண்டையிடுவார்கள். ஆயினும் அவர்கள் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள், ஏனெனில் நான் உன்னோடிருக்கிறேன். நான் உன்னை தப்புவிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்” என்றார். யோசு 1:9எரே 1:8எரே 20:11சங் 129:2எரே 29:25-32எரே 11:19எரே 15:10-21எரே 26:11-24