எரேமியா 39

Jeremiah 39

யூதா அரசன் சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதத்தில், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரும், அவனுடைய முழு இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் படையெடுத்து திரும்பவும் வந்து, அதை முற்றுகையிட்டனர். எசேக் 24:1-2எரே 52:4-72இராஜா 25:1-12சகரி 8:19 சிதேக்கியா அரசனின் ஆட்சியில் பதினோராம் வருடம், நான்காம் மாதம் ஒன்பதாம் நாளில் பட்டணத்தின் மதில் உடைக்கப்பட்டது. 2இராஜா 25:3-4எசேக் 33:21எரே 5:10எரே 52:6-7மீகா 2:12-13செப்ப 1:10 அப்பொழுது பாபிலோன் அரசனுடைய அதிகாரிகள் வந்து நடுவாசலில் உட்கார்ந்தார்கள். சம்கார் ஊரைச்சேர்ந்த நெர்கல்சரேத்சேரும், நேபோசர்சேகிம் என்ற பிரதான அதிகாரியும், நெர்கல்சரேத்சேர் என்னும் தலைமை அதிகாரியும் பாபிலோன் அரசனின் மற்ற எல்லா அதிகாரிகளும் அங்கு உட்கார்ந்திருந்தார்கள். எரே 21:4எரே 38:17எரே 1:15எரே 39:132இராஜா 17:30 யூதாவின் அரசன் சிதேக்கியாவும், மற்ற எல்லாப் போர்வீரரும் அவர்களைக் கண்டபோது தப்பி ஓடினார்கள். இரவு நேரத்தில் பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர்கள் அரசனுடைய தோட்டத்தின் வழியே, இரண்டு சுவர்களுக்கும் இடையிலிருந்த வாசல் வழியாய் 1 யோர்தான் பள்ளத்தாக்கை நோக்கி ஓடினார்கள். 2 நாளாக 32:5ஆமோ 2:142இராஜா 25:4-7உபா 28:25உபா 32:24-30எசேக் 12:12ஏசா 30:15-16எரே 38:18-20

ஆனால் பாபிலோனியப் படையினர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, எரிகோவின் சமவெளியில் சிதேக்கியாவைப் பிடித்தார்கள். அவர்கள் அவனைக் கைதுசெய்து ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லாவில் இருந்த பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடம் கொண்டுவந்தார்கள். அவன் சிதேக்கியாவுக்குத் தீர்ப்பளித்தான். 2இராஜா 23:33யோசு 5:10எரே 32:4-5எரே 38:18எரே 38:23எரே 52:26-27எரே 52:8-9யோசு 4:13 ரிப்லாவிலே பாபிலோன் அரசன் சிதேக்கியாவின் மகன்களை அவன் கண்களுக்கு முன்பாகவே கொலைசெய்தான். அத்துடன் யூதாவின் எல்லா உயர் அதிகாரிகளையும் கொன்றான். எரே 52:102இராஜா 25:7உபா 28:34எரே 21:7எரே 24:8-10எரே 34:19-212 நாளாக 34:282இராஜா 22:20 அதன் பின்னர் அவன் சிதேக்கியாவின் கண்களைப் பிடுங்கி, வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். எசேக் 12:132இராஜா 25:7நியாயாதி 16:21எரே 32:4-5எரே 52:11சங் 107:10-11சங் 119:8

பாபிலோனியர், அரண்மனைக்கும் மக்களுடைய வீடுகளுக்கும் நெருப்பு வைத்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள். நெகே 1:3எரே 21:10எரே 38:182இராஜா 25:9-10எரே 52:13-14மீகா 3:122 நாளாக 36:19ஆமோ 2:5 மெய்க்காவலாளர் தளபதியான நேபுசராதான், பட்டணத்தில் இருந்த மக்களையும், தன்னிடம் வந்து சேர்ந்தவர்களையும், நாட்டில் மீதியாயிருந்தவர்களையும், பாபிலோனுக்கு நாடுகடத்திச் சென்றான். எரே 40:1ஆதி 37:362இராஜா 25:112இராஜா 25:20எரே 10:18எரே 52:262இராஜா 20:18உபா 4:27 காவல் தளபதி நேபுசராதான் ஒன்றுமே இல்லாத சில ஏழைகளை யூதா நாட்டில் இருக்கவிட்டு, அவர்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்தான். 2இராஜா 25:12எரே 40:7எரே 52:16எசேக் 33:24

இத்தருணத்தில் பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் மெய்க்காவலர் நேபுசராதானிடம் எரேமியாவைக் குறித்துப் பின்வரும் கட்டளைகளைக் கொடுத்தான்: அப் 24:23எரே 15:21எரே 15:11எரே 37:2யோபு 5:19 “நீ அவனை அழைத்துக்கொண்டுபோய்க் கவனமாகப் பராமரி. அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாதே; அவன் கேட்பதையெல்லாம் கொடு” என்றான். நீதி 16:7எரே 40:4நீதி 21:1சங் 105:14-151 பேது 3:12-13அப் 7:10ஆமோ 9:4எரே 24:6 அப்படியே காவலர் தளபதி நேபுசராதானும், பிரதான அதிகாரி நேபுசஸ்பானும் உயர் அதிகாரியான நெர்கல்சரேத்சேரும் பாபிலோன் அரசனின் மற்ற எல்லா அதிகாரிகளும், எரே 39:3எரே 39:9 ஆளனுப்பி காவற்கூட முற்றத்திலிருந்த எரேமியாவை வெளியே கொண்டுவந்தார்கள். அவனைத் தன் வீட்டுக்குக் கொண்டுபோகும்படி, சாப்பானின் பேரனும் அகீக்காமின் மகனுமான கெதலியாவிடம் ஒப்படைத்தார்கள். இதனால் அவன் தன் சொந்த மக்கள் மத்தியில் இருந்தான். எரே 38:282இராஜா 22:122இராஜா 25:22-25எரே 26:24எரே 37:21எரே 38:13எரே 39:15எரே 40:1

காவற்கூட முற்றத்தில் எரேமியா அடைக்கப்பட்டிருந்த வேளையில் யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்தது. அவர் அவனிடம், 2 தீமோ 2:9எரே 32:1-2எரே 36:1-5எரே 37:21எரே 39:14 “நீ போய் எத்தியோப்பியனான எபெத்மெலேக்கிடம், ‘இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இந்தப் பட்டணத்துக்கெதிராக என் வார்த்தைகளை நன்மையினால் அல்ல; பேராபத்தினாலேயே நிறைவேற்றப்போகிறேன். அவ்வேளையில் அவை உன் கண்களுக்கு முன்பாகவே நிறைவேற்றப்படும். தானி 9:12சகரி 1:62 நாளாக 36:21எரே 19:11-12எரே 21:7-10எரே 24:8-10எரே 26:15எரே 26:18 ஆனாலும் அந்த நாளில் உன்னை நான் தப்புவிப்பேன். நீ பயப்படுகிற மனிதரின் கையில் நீ ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று யெகோவா அறிவிக்கிறார். சங் 41:1-2சங் 50:15சங் 91:14-152 சாமு 24:14எரே 1:19ஆதி 15:1எரே 38:92 தீமோ 1:16-18 உன்னைக் காப்பாற்றுவேன். நீ என்னை நம்பினபடியால், வாளினால் சாகமாட்டாய். நான் உன் உயிரைத் தப்புவிப்பேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார்” என்றான். எரே 38:2சங் 34:22எரே 21:9எபே 1:12சங் 84:121 நாளாக 5:20சங் 147:11சங் 146:3-6