தலைவர்களும் தீர்க்கதரிசிகளும் கண்டிக்கப்படுதல்
அப்பொழுது நான் சொன்னதாவது: ஓசி 5:1ஏசா 1:10எரே 5:4-5சங் 82:1-51 கொரி 6:52 நாளாக 19:5-10ஆமோ 4:1உபா 1:13-17
“யாக்கோபின் தலைவர்களே;
இஸ்ரயேல் குடும்பத்தின் ஆளுநர்களே கேளுங்கள்.
நீதியை நிலைநாட்டுவது உங்கள் கடமையல்லவா,
ஆனால் நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையையே நேசிக்கிறீர்கள். எசேக் 22:27நீதி 28:4சங் 53:41 இராஜா 21:201 இராஜா 22:6-82 நாளாக 19:2ரோம 12:92 தீமோ 3:3
என் மக்களின் தோலையும்,
அவர்கள் எலும்புகளிலிருந்து சதையையும் கிழித்து எடுக்கிறீர்கள்.
என் மக்களின் சதையைச் சாப்பிட்டு, சங் 14:4எசேக் 11:3எசேக் 11:6-7செப்ப 3:3
அவர்களின் தோலையெல்லாம் உரித்து,
எலும்புகளைத் துண்டுகளாக நொறுக்குகிறீர்கள்.
சட்டியில் போடும் இறைச்சியைப் போலவும்,
பானையில் போடும் சதையைப் போலவும் அவர்களை வெட்டுகிறீர்கள்.”
ஆனாலும், நாட்கள் வருகின்றன. ஏசா 1:15நீதி 1:28எசேக் 8:18சங் 18:41உபா 31:17-18உபா 32:19-20மத் 7:22ஏசா 3:11
அப்பொழுது நீங்கள் யெகோவாவிடம் கூக்குரலிடுவீர்கள்.
ஆனால் அவர் பதிலளிக்கவே மாட்டார்.
அக்காலத்தில் நீங்கள் செய்த தீமைக்காக
அவர் தமது முகத்தை உங்களுக்கு மறைத்துக்கொள்வார்.
யெகோவா சொல்வது இதுவே: எரே 14:14-15எரே 6:14எசேக் 13:10-16எசேக் 22:25-29ஏசா 9:15-16எரே 23:32எரே 23:9-17எரே 28:15-17
எனது மக்களைத் தவறான வழியில் நடத்துகிற
“பொய்த் தீர்க்கதரிசிகளைக் குறித்துச் சொல்கிறதாவது,
ஒருவன் அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்தால்,
‘சமாதானம்’ என்று பிரசித்தப் படுத்துகிறார்கள்.
அப்படிக் கொடுக்காவிட்டால்,
அவனுக்கு எதிராக யுத்தம் செய்ய ஆயத்தமாகிறார்கள்.
ஆதலால் தரிசனங்கள் அற்ற இரவும், ஏசா 8:20-22ஆமோ 8:9-10ஏசா 29:10ஏசா 59:10எசேக் 13:22-23எரே 13:16எரே 15:9சங் 74:9
குறிபார்க்க முடியாத இருளும் அவர்கள்மேல் வரும்.
பொய்த் தீர்க்கதரிசிகளுக்குச் சூரியன் மறைந்து,
பகலும் அவர்களுக்கு இருண்டுபோகும்.
தரிசனங்கள் காண்பவர்கள் வெட்கமடைவார்கள். ஏசா 44:25சகரி 13:41 சாமு 28:6ஆமோ 8:11எசேக் 24:17ஏசா 47:12-14லேவி 13:451 சாமு 14:37
குறிசொல்பவர்கள் அவமானம் அடைவார்கள்.
இறைவனிடமிருந்து பதில் கிடைக்காதபடியால்,
அவர்கள் எல்லோரும் தங்கள் முகங்களை மூடிக்கொள்வார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
ஆனால் நானோ யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், ஏசா 58:11 கொரி 2:12-131 கொரி 2:4ஏசா 11:2-3அப் 18:9-11அப் 4:8-12அப் 7:54-57எசேக் 16:2
இஸ்ரயேலுக்கு அவன் பாவங்களையும் அறிவிக்கும்படி,
யெகோவாவின் ஆவியானவரால் வல்லமையுடன் நிரப்பப்பட்டிருக்கிறேன்.
அவர் என்னை நீதியினாலும்,
பெலத்தினாலும் நிறைத்திருக்கிறார்.
ஆகவே யாக்கோபு குடும்பத்தின் தலைவர்களே, ஏசா 1:23சங் 58:1-2நீதி 17:15உபா 27:19யாத் 3:16ஓசி 5:1எரே 5:28லேவி 26:15
இஸ்ரயேல் குடும்பத்தின் ஆளுநர்களே,
நீதியை உதாசீனம்பண்ணி,
நியாயமானவற்றையெல்லாம் புரட்டுகிற நீங்கள் இதைக் கேளுங்கள்.
இரத்தம் சிந்துதலினால் சீயோனையும், ஆப 2:9-12எரே 22:13-17மத் 27:25எசேக் 22:25-28யோவா 11:50செப்ப 3:3
கொடுமையினால் எருசலேமையும் கட்டுகிறவர்களே கேளுங்கள்.
உங்கள் தலைவர்கள் இலஞ்சத்திற்காக நியாயந்தீர்க்கின்றார்கள். எரே 6:13ஏசா 1:23மீகா 3:5அப் 8:18-20எரே 7:4தீத் 1:111 பேது 5:2ஏசா 48:2
உங்கள் ஆசாரியர்கள் கூலிக்குக் போதிக்கின்றார்கள்.
உங்கள் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்கிறார்கள்.
ஆயினும் அவர்கள் யெகோவாவிடம் சார்ந்துகொண்டு, “யெகோவா நம் மத்தியில் இல்லையோ?
பேராபத்து நமக்கு உண்டாகாது”
என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.
ஆகையால் இஸ்ரயேல் ஆளுநர்களே, எரே 26:18சங் 79:1மீகா 4:1-2மத் 24:2மீகா 1:6சங் 107:34அப் 6:13-14ஏசா 2:2-3
உங்கள் செயல்களின் நிமித்தம்,
சீயோன் வயலைப்போல உழப்படும், எருசலேம் மண்மேடுகளாகும்,
ஆலயம் அமைந்துள்ள மலை, புல் அடர்ந்த காடாகும்.