எலிகூ பேசுதல்
யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்ததினால், அந்த மூன்று நண்பர்களும் யோபுவுக்கு பதில் சொல்வதை நிறுத்திக்கொண்டார்கள். யோபு 10:7யோபு 33:9யோபு 10:2யோபு 13:15யோபு 27:4-6யோபு 23:7யோபு 29:11-17யோபு 31:1-40 ஆனால் ராமின் குடும்பத்தைச் சேர்ந்த பூசியனான பரகெயேலின் மகன் எலிகூவுக்குக் கோபமூண்டது; ஏனெனில், யோபு இறைவன் நேர்மையானவர் என்று சொல்வதைவிட, தன்னைத்தானே நேர்மையானவன் என்று சொன்னான். ஆதி 22:21எபே 4:26யோபு 27:2யோபு 27:5யோபு 35:2யோபு 40:8யோபு 10:3யோபு 30:21 அத்துடன் யோபுவுக்கு அவனுடைய மூன்று நண்பர்கள் மேலும் கோபம் மூண்டது; ஏனெனில், அவர்கள் யோபுவின் தவறை நிரூபிக்க தகுந்த வழியில்லாமல், அவனைக் கண்டனம் செய்தார்கள். யோபு 8:6யோபு 22:5-30யோபு 24:25அப் 24:13அப் 24:5யோபு 15:34யோபு 25:2-6யோபு 26:2-4 எலிகூ யோபுவுடன் பேசுவதற்கு இதுவரையும் காத்திருந்தான்; ஏனெனில் அவர்கள் எல்லோரும் எலிகூவைவிட வயதில் மூத்தவர்கள். யோபு 32:11-12நீதி 18:13 ஆனாலும் அந்த மூன்று மனிதரும் மேலும் எதையும் சொல்ல முடியாததைக் கண்ட எலிகூவுக்குக் கோபமூண்டது. யாத் 32:19யோபு 32:2
எனவே பூசியனான பரகெயேலின் மகன் எலிகூ பேசத் தொடங்கினான்: யோபு 15:101 தீமோ 5:11 பேது 5:5தீத் 2:61 சாமு 17:28-30யோபு 15:7லேவி 19:32ரோம 13:7
“நான் வயதில் இளையவன்,
நீங்களோ முதியவர்கள்;
அதினால் நான் அறிந்ததைத் துணிந்து
சொல்லப் பயந்திருந்தேன்.
‘முதியோர் பேசட்டும், நீதி 16:31யோபு 12:12எபி 5:121 இராஜா 12:6-8யோபு 8:8-10நீதி 1:1-4சங் 34:11-12
வயது சென்றவர்கள் ஞானத்தைப் போதிக்கட்டும்’ என எண்ணியிருந்தேன்.
மனிதரில் இருக்கும் ஆவியாகிய யோபு 33:4யோபு 38:362 தீமோ 3:16யாக் 1:5நீதி 2:6பிரச 2:261 கொரி 2:10-121 இராஜா 3:12
எல்லாம் வல்லவரின் சுவாசமே அவனுக்கு அறிவாற்றலைக் கொடுக்கிறது.
முதியோர் மட்டுமே ஞானிகளல்ல; மத் 11:251 கொரி 1:26-27பிரச 4:13யோபு 12:201 கொரி 2:7-8யாக் 2:6-7யோவா 7:48எரே 5:5
வயதானவர்கள் மட்டுமே சரியானதை அறிந்தவர்களுமல்ல.
“ஆகவே, நான் சொல்கிறேன்: எனக்குச் செவிகொடுங்கள்; 1 கொரி 7:251 கொரி 7:40
எனக்குத் தெரிந்ததை நானும் சொல்வேன்.
நீங்கள் பேசிமுடியுமட்டும் நான் காத்திருந்து, பிரச 12:9-10யோபு 29:21யோபு 29:23யோபு 32:4யோபு 5:27நீதி 18:17நீதி 28:11
உங்கள் காரணத்தை நான் பொறுத்திருந்து,
உங்களுடைய வாதங்களுக்கு நான் செவிகொடுத்தேன்.
நான் உங்கள் சொல்லைக் கவனமாய்க் கேட்டேன். யோபு 32:31 தீமோ 1:7
ஆனால் உங்களில் ஒருவராகிலும் யோபு பிழையானவன் என நிரூபிக்கவில்லை;
அவனுடைய வாதங்களுக்குப் பதில் சொல்லவுமில்லை.
‘ஞானத்தைக் கண்டுகொண்டோம்; அவனுடைய பிழையை மனிதன் அல்ல, எரே 9:231 கொரி 1:27-291 கொரி 3:18ஏசா 5:211 கொரி 1:19-21எசேக் 28:3ஆதி 14:23ஏசா 48:5
இறைவனே நிரூபிக்கட்டும்’ என்று நீங்கள் சொல்லவேண்டாம்.
யோபு என்னோடு வாதாடவில்லை,
நானும் உங்களின் வாதங்களைக்கொண்டு அவருக்குப் பதிலளிக்கமாட்டேன்.
“அவர்கள் மனங்கலங்கி மேலும் எதுவும் சொல்ல முடியாதிருக்கிறார்கள்; யோபு 29:22யோபு 6:24-25மத் 22:22மத் 22:26மத் 22:34மத் 22:46மத் 7:23
அவர்களுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
இப்பொழுது அவர்கள் மவுனமாகி ஒரு பதிலும் அளிக்க முடியாதிருக்கையில், ஆமோ 5:13யாக் 1:19யோபு 13:5நீதி 17:28
நான் பொறுத்திருக்க வேண்டுமோ?
இப்பொழுது நானும் பேசியே தீருவேன்; யோபு 32:10யோபு 33:12யோபு 35:3-4
நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன்.
பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் உண்டு, சங் 39:3அப் 4:20எசேக் 3:14-27எரே 20:92 கொரி 5:13-14
எனக்குள்ளிருக்கும் ஆவி என்னைப் பேசத் தூண்டுகிறது;
என் உள்ளம், தோல் குடுவையின் திராட்சரசத்தைப்போலவும், மத் 9:17
வெடிக்கப்போகும் புதுத் தோல் குடுவையைப் போலவும் இருக்கிறது.
நான் பேசி ஆறுதலடைய வேண்டும்; யோபு 21:3யோபு 13:13யோபு 13:19யோபு 20:2நீதி 8:6-7
என் உதடுகளைத் திறந்து பதிலளிக்க வேண்டும்.
நான் யாருக்கும் பட்சபாதம் காட்டவோ, லேவி 19:15யோபு 13:82 சாமு 14:172 சாமு 14:20அப் 12:22-23அப் 24:2-3உபா 1:17உபா 16:19
எந்த மனிதனுக்கும் முகஸ்துதி செய்யவோ மாட்டேன்.
நான் முகஸ்துதியில் திறமையுள்ளவனாய் இருந்தால், சங் 12:2-31 தெச 2:5நீதி 29:5கலா 1:10யோபு 17:5
என்னைப் படைத்தவர் விரைவில் என்னை எடுத்துக்கொள்வாராக.